Friday, January 23, 2009

தேவை ஒரு தேவதையின் வதை...

(குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கையில், ஹாக்கி மட்டையை வைத்து தெரியாமல் என் காலில் அடித்துவிட,

நான் வலியில் சிறிது கத்த, துடித்துவிட்டது பிஞ்சிக்குழந்தையின் மனசு...

உடனே ஓடிவந்து என் பாதத்தை தூக்கி தன் மேல் வைத்துக்கொண்டு பிஞ்சு விரல்களால் வருடிவிட்டதோடு, முத்தி செய்து,
சாரி சாரி என பலமுறை சொல்லிவிட்டு என் மன வலியை அதிகரித்தது...


என்னுடைய வெள்ளை உடுப்பை போட்டுக்கொண்டு ஒரு பெண் தேவதை போல செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது...)

இந்த தேவதைகள் வைத்து ஒரு கவிதை முயற்சி...


தேவையுந்தன் வதை தேவதையே......


தீவீரவாதியின் வீட்டில் புகுந்து
தீர்க்கமான உன் பார்வையால்
தீர்த்துகட்டிவிடு மனதின் வன்மத்தை
தீபமாய் வளரட்டும் உன்மேல் பாசத்தை
தீயவை தீண்டாமல் தேவதையே அருள்கொடு ..!!!


அரசியல்வாதிக்கொரு அருமருந்தாய்
அன்பைப்பொழிந்திட, லஞ்சம் வாங்கும் கையிலுன்
அழகிய பிஞ்சுப்பாதங்களை கொஞ்சிடக்கொடுத்திடு
அடுத்தவனுக்கு தீமை நினைக்குமுன், உன்பால்முகம்
அறிவுறுத்தி முளையிலேயே அழித்துவிடு...

கலப்படம் செய்பவனுக்கோ உன் கள்ளமில்லா புன்னகை
கலங்கடித்து , கருணை பிறந்திட ஆணையிடு....

வெறிபிடித்தலையும் மனிதம் தோற்றவரிடமும்
வெருப்பு நீக்கிடவே சிரிப்போடு நீ விளையாடிடு ..

ஏற்றத்தாழ்வு பாராட்டி, அடிமைத்தனம் பண்ணுவோரையும்
ஏங்கவைக்க உன் மழலை மொழியில் கவிபாடு...

உயிர்க்குலைக்கும் போருக்கு காரணமானவரை உன்
உமிழ்நீரால் முழுவதுமாய் மனஅழுக்கை கழுவிவிடு...

இடிஅமீன் பரம்பரை என பறைசாற்றுபவரையும் நீ
இருக கட்டியே இன்முகத்தோடு அணைத்துவிடு...

கோபம், காமம் காட்டும் தொலைக்காட்சியை பார்க்கும்போது
குசும்புகளை அதிகமாக்கி கவனத்தை திருப்பிவிடு...

சோர்வாய், பாரமாய் நகரும் நாள்களில், சுறுசுறுப்பாய், பூஞ்
சோலையாய் , கண்சுடரொளியால் நம்பிக்கையை ஊன்றிவிடு...


யாரும் மறுத்திடுவாரோ உன் அன்பை தேவதையே
யாவரும் கேளிராகிட தேவை உந்தன் வதையே...

1 comment:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் குழந்தைகள் முனைந்தால் நடக்காதது ஏதாவது உண்டா.
நல்லதொரு கவிதை.
குழந்தைகள் உலகம் நமக்கு சொர்க்கம்.