நன்றி : படங்கள் : கூகுள்
இந்த பிளாக் ஆரம்பித்த போது தாய்லாந்து பெண்ணின் புன்னகை படம் போட்டு தந்தவரும், இப்ப அந்த படத்தை மாற்ற சொல்லி புதுப்படம் தந்தமைக்கும்,
தம்பி கண்ணனுக்கு விசேஷ நன்றி..
---------------------------------------------
சின்னவர் " அம்மா ஏன் எப்பா பார்த்தாலும் ஆக்டிவா இருக்கீங்க.?"
ஆமா உனக்கு பொண்ணு வந்து கல்யாணம் பண்ற வரை இப்படித்தான் "
உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."
-----------------------------------------------
நேர்று தான் பள்ளி திறந்த முதல் நாள். புது பள்ளி..
" சரி சொல்லு வகுப்பில் எத்தனை பாய்ஸ் , எத்தனை கேர்ல்ஸ் , பேர் என்ன?.."
" நான் பாய்ஸ் பாக்கவேயில்லை... கேர்ல்ஸ் மட்டும்தான் பேசினாங்க.. ஐ திங் நான் ஹீரோ னு.. ( லீவுல தமிழ்ப்படம் பாக்காதே னு சொன்னா கேட்டாதானே?..படம் பக்கும்போதே அடுத்த சீன் சொல்லிடுவார்.. )
------------------------------
கிண்டர்கார்டன் முடிந்து ஒன்றாம் வகுப்பு.. பல பாஷைகள் ஆரம்பிப்பார்கள்..
"அப்புரம் டீச்சர் என்ன சொன்னாங்க?"
டீச்சர் கேட்டாங்க "பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு"
"சரி நீ எந்த பக்கம் போன?.."
நான் கேட்டேன் , " நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.?"
சிரிச்சு மாளல...,
அப்பாவியா ஏன் சிரிச்சீங்க ?..னு கேட்கிறார்..
------------------------------
போன வாரம் காய்ச்சலுக்கு மருத்துவர் கிட்ட போனதும் , மருத்துவர் அவனிடம்
" எங்கெல்லாம் வலிக்குது"
" தலையில கொஞ்சம் சூடா இருக்கு.."
" அப்புரம்"
" தொண்டையில "
" எப்படி "
" இந்த எல்லோ சன் ( SUN) இருக்குல்ல அந்த மாதிரி ஹாட் ஆ இருக்கு.."
சீரியஸா இருந்த மருத்துவர் விவிசி..
------------------------------
டீச்சர் என்னை குட் பாய் னு சொன்னாங்க.."
" அப்படியா , பரவால்லியே ,. முதல் நாளும் அதுவுமா.? ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க?."
" நான் போய் முதல் சேர் ல உக்காந்தேன்.. அதை ஒரு பெண்ணுக்கு குடுக்க சொல்லிட்டு என்னை இரண்டாவதா உட்கார சொன்னாங்க.
நான் செய்தேன்.. அப்புரம் , முதலில் உட்கார்ந்த பெண்ணுக்கு போரடிச்சுது போல,.. நாந்தான் நாள் முழுக்க பேசி ஃபிரண்ட் ஆனேன்.."
" அவ்வ்வவ்வ்வ்"
----------------------------------------------------