Monday, December 3, 2007

சர்வதேச ஊனமுற்றோர் தினம் .
----------------------------------------
ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்

உன் ஊனமுற்ற கால்களால்
தவழ்ந்து நீ நடப்பதை இங்கே

உடம்பில் ஊனமானாலும்
கவலையின்றிதைரியமாக
உன் பணியை செய்யும் நீ எங்கே??
அனைத்துமிருந்தும் குறைபடும் நான் எங்கே?

ஊனமுற்றவர்க்கு இரக்கம் மட்டும் படாமல்
அவர்தம் தேவையை சரிசெய்வதும் எம்பங்கே!!

எதுலும் குறை குற்றம் பார்ப்போர் இவரிடம்
நமக்கிடைத்த ஆசீர்வாதத்தை உணர முடியும் அங்கே

ஊனம் என்பது உடம்பில் மட்டும் இல்லை
மனதில் இருந்தால் அதுதான் பெரும் தொல்லை
பெரியோர் அனுபவத்தில் தந்திட்ட ஒவ்வொரு சொல்லை
மனிதநேயம் கொண்டு வாழும் வாழ்க்கையே இன்பத்தின் எல்லை!
யுத்தம் எமது வருத்தம்!
=====================
நித்தம் ஒரு போராட்டம்,

புத்தம் புது பிரச்சனைகள்,
சத்தமில்லா அழுகைகள்,
ரத்தம் உறையும் காட்சிகள்,
இத்தனையும் இனிய இலங்கையிலே..

பெத்தவர் ஒருபக்கம் வருந்திடவே,
மத்தவர் உறவினரானாராம்,
எத்தனை வசதிகள் வெளிநாட்டிலிருந்தும்,
அத்தனை தாய் மண்ணுக்கீடாகுமா?

பெற்றுக்கொண்டது போதாதென்போர்,
செத்துப்பிழைத்த அவரிடமிருந்து,
ஒத்துக்கொள்வோம் அவர் வாழ்க்கை கடினத்தை..
கத்துக்கொள்வோம் வாழ்க்கை பயணத்தை!..

---------சமர்ப்பணம் என் இனிய இலங்கைத்தமிழ் தோழர்,தோழியருக்கு!.
வெட்கி வேதனைப்பட்டு அவர் வலியுணர்கிறேன். =========================================
படிப்பை பற்றி பேசிய போது தம்பி வெட்கப்பட,.

ரொம்ப வெட்கப்படாதே பின் அழைத்துச்செல்வர்
கூத்தாண்டவர் கோவிலுக்கே கூவாகத்திருவிழாவுக்கு
என நான் கூற அவன் சிரிக்க !ஒரு கணம் எனை மறந்தேன்.

பின்னிரவு தான் வலியுணர்ந்தேன் தூக்கமின்றி..
நகைச்சுவை என நினைத்து பேசிடலாம் அச்சமின்றி.
வெளிநாட்டில் எவரும் அவரை நினைப்பதில்லை துச்சமாக
நானோ என் பிள்ளையோ பிறந்துணர்ந்திருக்கலாம் மிச்சத்தை.
எவர் உறைப்பர் அவர் சலுகை, தேவை, துயரத்தின் உச்சத்தை???
மன்னிப்பாயா கடவுளே?. இவ்வாழ்க்கையில் நீர் எனக்களித்த பிச்சையை!!!..

இக்கவிதை அத்தோழர்களுக்கு சமர்ப்பணம்.
நட்பு புரிந்தும் புரியாத போது..
=========================
அன்பாய் சில நேரம், நகைச்சுவையாய் பல விஷயம்,

அதிகாரமாய் விவாதிப்பு,இவற்றில் தெரியாத உன் நட்பு,
அதிக காரமாய் உன் கோபத்தில் ஆழமாய் தெரிகிறதே!.
வியக்கிறேன் நான்...

அருகிருந்தும் , அடிக்கடி பேசிக்கொண்டும்,
அடிவிழாத குறையாக உளரும்போதும் தேடாத என் நட்பு,
உன் பிரிவில் தேடுகிறதே !. உன் நலம் பற்றி எண்ணுகிறதே!
வியக்கிறாய் நீ..

நல்ல நட்பில் புரிதல் இல்லையெனின், பிரிதல் நலம் என நீ நினைத்தாய்..

நல்ல நட்பு பிரிந்தாலும், புரிதல் தரும், தூய்மையான அன்பு, என்கிறேன் நான்.
--
கடைக்குட்டியின் கதை (3) - இதென்ன புது சோதனை!! ==============================================
மருத்துவரை சந்திக்க கேள்விகளோடு மகன் கிளம்ப

35 வயதுக்குமேல் குழந்தைபேறுக்கு பரிசோதனை பரிந்துறைக்க
( டொளன் சிண்ட்ரோம் பரிசோதனை )
உருவமில்லாத கருவாயினும் உணர்ச்சியுண்டு என நான் மறுக்க,
மூளை வளர்ச்சி குறைய வாய்ப்பதிகமென மருத்துவர் விளக்க,
எதுவாயினும் படைப்பவன் தருவான் அதற்கான தெம்பு என முடித்தேன்..

மிகுந்த உற்சாகமாய் வந்த கணவரும் மகனும் கலக்கமாய்,
கலகலப்பை தொலைத்துவிட்டு கலங்கிய கண்களுமாய்,
அட! இது ஒரு சின்ன விஷயம் இது வேதனையா?
நம் கடவுள் நம்பிக்கைக்கு வந்த சோதனை மட்டுமே என அவர்களை திருப்திபடுத்தி முடித்துவிட்டாலும், என் குழப்பம் ஆரம்பித்தது..

RH -ve , ஜெஸ்டேஷனல் டயாப்டீஸ், அதிக வயது,வேலைப்பழுவின் சுமை என பலவிருந்தாலும், வயற்றில் ஒரு அதிசய சுமை, ஆனந்தப்பட்டேன். அம்மாமேல் கை போட்டு ,கால் போட்டு கோழிக்குஞ்சாய் தூங்கும் மகன், தனியே எனை படுக்கவிட்டு அன்று முதல் தனிமையிலவன்,
அவன் நினைப்பில் ,அரவணைப்பின்றி தூக்கத்தை நான் தொலைத்தேன்.

------------மருத்துவ பரிசோதனை பற்றி தவரேதும் இல்லை.. எனக்கு அந்த கருவில் ஊசியை செலுத்தி அதனை வலிக்கச்செய்வதற்கு பதில் ஆயுசுக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்த்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்....
----------உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்,..............
தாய்லாந்தில் கார்த்திகை - (லாய் க்ரதோங்-loy kratong)
லாய் க்ரதோங் ஒரு முக்கியமான திருவிழா .வருடாவருடம் , பன்னிரண்டாம் மாதம் முழு நிலவன்று கொண்டாடுவர்.
அந்திசாயும் வேளையில் அனைத்து மக்களும் க்ரதங்கை யும், அதில் மெழுகுவத்தியும், ஊது பத்தியும் மலர்களால் அலங்கரித்து, மனதில் வேண்டுதலுடன் அதை ஆறு, அல்லது, குழம், இவற்றில் பணம் வைத்து விட்டு ,விட்டு வருவர்... லாய் க்ரதோங் - என்றால் , லாய் - மிதப்பது ..க்ரதோங் - வாழை இலையால் தாமரை வடிவில் செய்யப்பட்டது.
கேள்வியும் பதிலும்..
================
தினம் ஒரு கனவு!. வேளைக்கொரு கேள்வி!.

இரவு படுக்குமுன் பரமனிடம், சில பல்லவி!

வீட்டை அலங்கரிக்க , கைவளை ,கால்கொலுசு பூட்ட,
பூச்சூட ஒரு பெண் தேவதை கேட்டு நான் மன்றாட!,

கிரிக்கெட், கால்பந்து, விளையாட ,சண்டைபோட ,
நீச்சலடிக்க அம்மாவிடம் கலாட்டா பண்ண தம்பியை அவன் கேட்க!,

மன்றாடி முடிந்ததும் சந்தேகமாய் கேட்கிறானய்யா ஒரு கேள்வி.?..
இருவர் ஜெபத்திலும் இறைவன் யாருக்கு சாய்ப்பான் செவி?
மடியில் அமர்த்தி குழந்தையிடம் தான் கேட்பான் இறைவன் முதலில்...!!

அப்படியென்றால் வீணாக நீங்கள் வேண்டாது,
கலராக குழந்தை கேளுங்கள் , நான் கறுப்பென
பள்ளியில் பட்ட கஷ்டம் தம்பி பட வேண்டாமே
என மடக்குகின்றான் என் பதிலில்..!!

பெற்றோரைவிட படைத்தவனையே நம்பு ஜெபம் மூலம், என் வளர்த்துவிட்டேனே கடவுளே பதில் உண்டு உன்னிடம்..

என உறங்கச்செல்கையில் அம்மா பிளீஸ் இன்னொரு கேள்வி?
தம்பிவந்ததும் யாரை துளியாவது அதிகம் நேசிப்பீர்கள்?
குழந்தைக்கே ஏன் நமக்கும் இன்றும் அன்பில் உள்ள போட்டி குணம்..

நீதானடா செல்லம், என இப்போதைக்கு சொல்லி வைத்தேன்,
கடைக்குட்டி விவரம் அறிந்து இக்கேள்வியை கேட்கும் வரை...

-------முதல் குழந்தையின் கேள்விகளுக்கு விடை சரியா?., அல்லது, நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் சொல்லுங்கள்,