ஆயுத்தயா- 1350-1767 ( அயோத்தியா)ஆயுத்தயா என்ற நகரம் மன்னர் யு-தாங் என்பவரால் 1350 ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது..இது தான் தாய்லாந்தின் பழைய தலைநகராகும். இதனை சியாம் என்றும் அழைப்பர்.இந்த நகரத்துக்கு ராமாயணத்தில் வரும் ராமர் பிறப்பிடமானஇந்தியாவில் உள்ள அயோத்தியா எனும் இடமே மூலகாரணமாய் விளங்குகிறது...
1767 ம் ஆண்டு பர்மா படையினரால் அழிக்கப்பட்டு , பின் வரலாற்றுச் சிறப்பிடமாக இன்றுவரையிலும் யுனெஸ்கோ வால் கருதப்பட்டு, அரசுத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இது தற்போதைய தலைநகரமான பாங்காக்கிலிருந்து, 85 கி.மீ வடக்கே அமைந்துள்ளது..இது தாய்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார , வரலாற்று சுற்றுலாத் தளமாகும்..இதனுடைய முழு பெயர் ஃபிர நகோன் சி அயுத்தயா.முக்கியமான சொள ஃபிரயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது..
அயுத்தயா என்பதற்கு " வெல்லமுடியாத நகரம் " என்றொருபொருளும் உண்டாம்.இங்கு இன்னும் பழைய பிரசித்தி பெற்ற கோவில்கள் பராமரிக்கப்பட்டுள்ளன.
வாட் பிரா சி சன்பேட் என்பதுதான் மிகப்பெரிய கோவில். இதில் நிறைய தூண்கள் உண்டு..இதுதான் பழையஅரண்மனை பூஜை, விசேஷங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டது..இதில் 340 கிலோ தங்கத்திலான ,16 மீட்டர் உயரமான புத்தர் சிலைமுன்பு இருந்ததாகவும், அதனை தீவைத்து பர்மாவினர், எடுத்துகொண்டதாகவும் வரலாறு கூறுகிறது..
விஹார்ன் பிர மொங்கோல் போபிடாஹ் வில் பெரிய வெண்கல புத்தர் சிலை உள்ளது..
வாட் தம்மிகரட் டிலும், இன்றும் கோவிலும் பூஜைகளும் நடைபெறுகிறது.. மேலும் அதிசயமாகசுவரிலிருந்து பெரிய மரம் ஒன்று வளர்ந்து வருவது அதிசயமானதும்.
வாட் ரட்சபுரானா வில் நிறைய தங்கச்சிலைகள் இருந்ததாகவும், கலை வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தனவாம்.இதனுள் உள்ளே உள்ள படிக்கட்டு வழி சென்றால் இன்னும் பழங்கால ஓவியங்களை காணலாம்.
வாட் பிரா மஹாதட் ஒரு மாபெரும் கோவில். இதில் புத்தரின் சிலையில் உள்ள தலையை சுற்றி மரம் வளர்ந்திருப்பதை காணலாம்.
வாட் பிர ராம் ல் இருந்து ஆயுத்தயாவின் இடங்கள் முழுவதையும் காணலாம்.பிர சேடி சி சூரியோதாய் , வெள்ளை மற்றும் தங்க நிற தூண்கள் நிறைந்தவை.. இவை முன்னாள்,அரசியாரின் நினைவுக்காக கட்டப்பட்டது..தோட்டத்துடன் அழகாக காட்சியளிக்கிறது..
வாட் பு காவ் தாங் பெரிய வெள்ளை தூண்களால் கட்டப்பட்டுள்ளது. அதனுள் பெரிய உருவிலான சிரித்தபடி இருக்கும் புத்தர் சிலை உள்ளது.
வாட் சியுங் தா, வாட் நா பிரா மெரு, வாட் ப நான் சேர்ங் போன்றவையும் சிறியதும் , பெரியதுமாக பல புத்தர் சிலைகள் கொண்டவை.
வாட் யாய் செய் மொங்கோன் ஒரு பெரிய கோவில், படுத்தபடி இருக்கும் புத்தர் சிலை பிரசித்தம்.