Sunday, July 11, 2010

காஷ்மீரியின் கண்ணீர்
சொர்க்கமாய் படைக்கப்பட்ட காஷ்மீரில் மக்கள் படும் அவஸ்தைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை.

இன்று கொரிய தொலைக்காட்சியில் காஷ்மீர் பற்றிய தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது..

[ போர்ட்டர்கள் பற்றி பார்க்க காணொளி -
http://il.youtube.com/watch?v=rEh0R40PKWk&feature=related ]குடும்பத்தோடு , முக்கியமாக குழந்தைகளோடு பார்க்க முடிந்தது நன்று..நாம் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்கோம் என உணரசெய்கிறது இது போன்ற தொகுப்புகள்..

ஒரே உலகில் தான் எத்தனை ஏற்ற தாழ்வுகள்..?.

இந்த கட்டுரையில் அசார் என்ற மூட்டை தூக்கும் தொழிலாளியைப்பற்றி

காண்பித்தார்கள்.. தன் எடையை விட 4 மடங்கு அதிக எடையை பல

கிலோமீட்டருக்கு அதுவும் மலையில் ஏறி கொண்டு செல்லும் பணி...

அசார் இதை தன் 15 வயதிலிருந்து செய்கிறார் கடந்த 35 வருடமாக..

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தகப்பனாருக்கு கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் கால் இரண்டும் செயலிழக்க, சுமை அசார் மேலும் அவர் தம்பி மேலும் வந்து விழுந்தது.. காஷ்மீரில் அவர் கிராமத்தில் கல் குவாரி வேலை மட்டுமே..

அதனால் குடும்பத்தை காப்பாற்ற கனத்த மனதோடு தம்பியையும்

அழைத்துக்கொண்டு சிம்லா வருகிறார்..

அதன் பின் திருமணம் , 3 குழந்தைகள் எல்லாம் இந்த மூட்டை தூக்கும் தொழில் வைத்தே..

இதற்கிடையில் திருமணம் முடிந்து 10 வருடமாய் சேர்த்த பணத்தில் சிறிய

வீடொன்றை கட்டி முடிக்கவும் தீவீரவாதிகள் வந்து ஒளிந்துகொள்ளவும், அவர் வீட்டை ராணுவம் தாக்கியதில் எல்லாம் மொத்தமாய் அழிந்து போனதும் , பட்ட காலிலேயே கொட்டிய சோகம்...

அழுதழுது பார்த்தாலும் அவர் தான் எழும்பணும்.. பின் ஒரு வருடம் அழுது முடித்து மீண்டும் சுமை தூக்கியாய் வேலை... 3 மாதமொருமுறை சிம்லாவிலிருந்து காஷ்மீர் கிராமத்துக்கு சுமார் 16 மணி நேர பயணத்துக்கு பின் குடும்பத்தாருடன் இணைதல்...

தினமும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம்.. அந்த நேரத்துக்குள் குழந்தைகள்

படிப்பதோ மற்ற வேலைகளோ முடிக்கணும்..

தன் பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதை மிக பெருமையாக நினைக்கிறார்.. தன் கஷ்டமெல்லாம் தன் மகன் படித்து ஒரு வேலைக்கு போனால் சரியாகிவிடும் என சுமக்க முடியாத மூட்டையோடு கண்ணீரோடு பகிர்கிறார்...மலை ஏறி இறங்கி தினமும் கால் வலி.. அதுக்கு வேறு மருந்து செலவு.. ஒரு முறை மலை ஏற வெறும் 30 ரூபாய் கிடைக்கிறது... இப்படி நாளொன்றுக்கு பலமுறை ஏறி மாதம் 6000 ரூபாய் மிச்சப்படுத்துகிறாராம் குடும்பத்துக்கு...

உடம்பில் எலும்பை தவிர வேறெதுவும் இல்லை.. ஆனால் மனம் மட்டும் இறைவனை நம்பி இருப்பதால் அதிக நம்பிக்கையோடு இருக்கு..

அல்லா எனக்காக நிச்சயம் ஒரு நல்வாழ்க்கை வைத்திருப்பார்.. நான்

கஷ்டப்பட்டாலும் என் பிள்ளைகள் கஷ்டப்படாதே.. என்கிற நம்பிக்கையில் தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு சக தொழிலாளிக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.. மிக வயதான தொழிலாளிகளும் அவரோடு பயணம் செய்கின்றனர்.. தன் வேலை முடிந்ததும் அந்த பெரியவர்களுக்கு காலுக்கு மருந்திட்டு மசாஜும் செய்கிறார்..

தன் பெண் குழந்தை மிக நன்றாக படிப்பதாகவும் , ஆனாலும் அடுத்த குடும்பத்துக்கு போகப்போகிற பெண் என்பதால் எதிர்பார்ர்புகள் இல்லாவிட்டாலும், அவள் மீது அதிக பிரியமாய் இருக்கிறார்..

நான் ஏன் இத்தனை கஷ்டப்படணும்னு நினைத்ததில்லை.. ஏன்னா நான் தான் தகப்பன்.. குடும்பத்தலைவன்.. இது அல்லாவின் கட்டளை.. இதைத்தவிர வேறெந்த எண்ணமுமில்லை அவருக்கு..


காஷ்மீர் ஊருக்குள் ராணுவத்தினர் சிலர் மிக நல்ல தோழர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்.. இருப்பினும் காஷ்மீர் பிரச்னைகள் முடிவுக்கு வந்து தன் வம்சாமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என பிராத்திக்கின்றார்..

நாமும் அதைத்தான் செய்ய முடியும் என நினைத்த போது சின்ன சின்ன

விஷயங்களுக்கெல்லாம் அலுத்துக்கொள்ளும் நம் மனதை நினைத்து மிக

வெட்கமாய் இருந்தது...