Friday, January 23, 2009

நேற்று காணாமால் போன கைப்பை..

நேற்று காணாமால் போன கைப்பை..

வெள்ளிக்கிழமையே வேலை முடிந்து வீடு வந்ததும் அனைவரும் சாப்பிட்டு , வார பொருள்கள் வாங்க கடைகளுக்கு

செல்லலாம் என சென்றோம்.. 8.00 மணிக்கு... எல்லா சாமான்களும் வாங்கிவிட்டு, கொஞ்சம் இலவசமாக நோட்டமும் விட்டு

ஒருவழியா பணம் கட்ட கணவரும் பெரியவனையும் பொறுப்போடு விட்டுவிட்டு, சின்னவன் சேட்டையை கவனிக்க நான்

பொறுப்பெடுத்துக்கொள்ள, என் கைப்பை, சாமான்கள் வண்டியில்...எப்போதும் என் கையில் இருக்கும் அல்லது வண்டியில் என்னுடனே..

இன்று பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு நான் அருகிலேயே நின்றிருந்தேன்..


பின்பு முடிந்ததும் சின்னவரை நான் தூக்கிக்கொள்ள , வண்டியில் என் கைப்பை..

பார்க்கிங் வந்ததும் சின்னவரை காரில் உள்ளே தள்ளி பெல்ட் போட்டு கட்டி வைத்துவிட, பெரியவனும் அப்பாவும் சாமான் எடுத்து வைக்க

நான் பின் காரை ஸ்டார்ட் செய்ய, கிளம்பிவிட்டோம்... நல்ல இருட்டு, மழை வேறு.. அந்த கவனம் தான் மனதில் இருந்தது...

இதுல தமிழ் பாட்டு போடு, ஆங்கிலம்தான் என அப்பாவுக்கும் , பிள்ளைக்கும் விவாதம் வேறு,..

சிறுவனோ பெல்டை அவுத்துவிட்டு என் தலைமுடியை பிடித்துக்கொள்ள நான் கிட்டத்தட்ட 40 அடி உயரத்திலிருந்து சரேலென

காரை கீழே சருக்கில் இறக்க, பிள்ளைகளுக்கு குதூகலம்... கணவரோ கண்டிக்கிறார்..

எப்படியோ பாதி வழியில் வந்ததும் எனக்கான தைராய்ட் மாத்திரை வாங்கினோமே பேக்கில் வைத்தேனா என பார்க்க பையை தேடினால்..

அய்யோ அம்மா, அப்பா, என ஆளாளுக்கு உதறல்..

" என்னது என் கைப்பையை யாரும் எடுத்து வைக்கலையா?.."

கேட்டுக்கொண்டே சடாரென காரை பக்கவாட்டில் ஒடித்து படாரென நிப்பாட்டினேன்..

பையன் பின்னால் திறந்து பார்த்து ஊர்ஜிதம் செய்தான் பை இல்லையென.. சந்தோஷம்...
" சரி நீ டென்ஷனாகாதே .. காரை பத்திராமா ஓட்டு.."

இரு காரை நிப்பாட்டு நான் எதுக்கு பார்க்கிறேன் என் மீண்டும் பார்த்து இல்லை என முடிவு செய்தோம்.

இப்ப திரும்பணும்... எங்க , எப்படி காரை ஒடிப்பது... சாரை சாரை யாய் கார்கள்..

மழை வேறு கொட்டுது...பெரியவன் கண்ணிலிருந்தும்..

" நீ ஏம்மா அழுற?.. போக வேண்டியது போகும்.. என்னுடைய தப்பும்தான்.. நல்ல பாடம்.. விடு.."

கொஞ்சம் வேகமாக போனால் ,

" 60 லேயே போ... 100ல போகாத.."

" 80 தான் அதுக்கு குறைந்து போனால் பின்னால் வருபவர் திட்டிருவார்..."

எப்படியோ ஒருவழியா திரும்பி அந்த பார்க்கிங் செங்குத்து மலைமேல் ஏறி ( நேர்த்திக்கடனோ என்னவோ)

உள்ளே சென்றால் ஒரு வேலையாள் சாமான் வண்டிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்...

வேகமாக மகன் அவரிடம் சென்று விசாரிப்பதுக்குள்ளேயே அவர் பச்சைக்கொடி காண்பித்தார்.. மகன் முகத்தில் சிரிப்பு..

அவர் கூட சென்று அந்த கைப்பையை வாங்கி வந்தான்..

அவ்ர்கள் பையை திறந்து சாமான் சரிபார்க்கச்சொன்னார்கள்.. எனக்கு அவர்கள் முன்னால் பார்ப்பது அவர்களை

சந்தேகிப்பது போலிருக்கலாம்.. இது மீண்டும் கிடைத்த அதிர்ஷ்டம்தானே அதனால் பரவாயில்லை, மிக்க நன்றி என சொன்னேன்.

அதற்குள் மகனுக்கு அவசரம்.. அம்மா பணம் குடுங்க என .. நானே குடுப்பேன் கண்ணே, என சொல்லி பணம் எடுத்து மகனிடம் கொடுத்து

குடுத்ததும் , இருவரும் விழுந்து விழுந்து வணக்கங்களை கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்..

கைப்பையில் உள்ள பர்ஸில்தான் என்னுடைய, வரிச்சீட்டு, எடிஎம் கார்டுகள். , லைசென்ஸ், மருத்துவ அட்டைகள் வீட்டின் அட்டைகள்

இப்படி பலவும்...

தொலைந்தால் போலிஸ், எப் ஐ ஆர், அங்கிங்கு என செம அலைச்சல்.அனுபவித்துள்ளேன்..

( ஏற்கனவே 1 முறை நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது என் கண்முன்னாலே பர்ஸை சுட்டுட்டார்...:-( )

கைப்பை மீண்டும் கிடைத்தது அதிர்ஷ்டமே..

கடவுளுக்கும் அந்த நல்ல மனிதருக்கும் என் நன்றி.

No comments: