




பத்துமாதம் வயற்றில் சுமந்து
வளர்த்த பெண்ணே உன்னை
 அம்மா என்று அழைக்கிறேன்!!
 என் உடனாய் பிறந்து - பாசமழைப்
 பொழிந்த பெண்ணே உன்னை
 சகோதரி என்று அழைக்கிறேன்!!
 வெள்ளைத் தோல் உன்னழகில் - மயங்கி
 வசீகரித்த பெண்ணே உன்னை
 காதலி என்று அழைக்கிறேன்!!
 அடிமையாய் வந்து எனக்கு - பணிவிடை
 செய்யும் பெண்ணே உன்னை
 மனைவி என்று அழைக்கிறேன்!!
 என்னைவிட அதிகம் படித்து - பொதுவில்
 ஆணிய தவறுகளை சுட்டுவதால்
 புரட்சி பெண்ணே உன்னை
 விபச்சாரி என்று அழைக்கிறேன்!!
 கடைசியில் சொன்னது நிஜமாய்
 போனால்,
 மேலே சொன்னது பொய்யாய்
 போகுமோ!!!!
 
 
 






