Thursday, March 24, 2011

எண்ண அலைகள்..- நேர்மறை எண்ணம் வளர்ப்பதெப்படி..? -1




எண்ண அலைவரிசை பற்றி அப்பப்ப ஆர்வமா

படிப்பதுண்டு.. அது குறித்து எழுதணும் என்ற ஆர்வமும்

எப்போதும் உண்டு..

நிதானமாக உட்கார்ந்து எழுதணும். அதற்கான நேரமும்

வாய்ப்பும் இப்பதான் கிடைத்துள்ளது..

எனக்கு எல்லா விஷயமும் தெரியாது,... நானும்

பயணித்து உங்களுக்கு தகவல்கள் அளிக்க போகிறேன்..

சந்தேகம் வந்தால் கேளுங்கள். பதில்

கண்டுபிடிக்கிறேன்.. ஏனெனில் என் ஆர்வம் இதில்

அப்படியானது..

வாருங்கள் பயணிப்போம்..


------------







ஒரு கல்லை நாம் குளத்தில் எறிந்தால் அது எப்படி

அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்குகின்றதோ

அதே போலத்தான் மன அலைகளும்..ஆனால் ஒரு

வித்யாசம் உண்டு இங்கே..

நீரின் அலைகள் ஒரே தளத்தில் பயணிக்கும்.. ஆனால்

மன அலைகளோ ஒரு மையத்திலிருந்து பல்வேறு

திசைகளிலும் பயணிக்கும்...பூமியில் நாம் எப்படி காற்றால்

சூழப்பட்டிருக்கோமோ , அதே போல மன

எண்ணங்களின் கடலால் சூழப்பட்டிருக்கோம்.. ஆக

இந்த எண்ணங்களின் அலைவரிசை பிரயாணப்படும்

போது தூரத்துக்கேற்ப அவைகளின் சக்தி

வேறுபடுவதோடு , எதிர்படும் எல்லாவிதமான

அலைவரிசைகளிலும் முட்டி மோதியே செல்கிறது..

நம்மிடம் வரும் தேவையற்ற எண்ண அலைவரிசைகளும்

கூட எங்கிருந்தோ வரும் மிக சக்திவாய்ந்த

எண்ணங்களின் அலைவரிசையின் வெளிப்பாடே..ஆனால்

நாம் அந்த அலைவரிசையோடு ஒத்து போவது நம்

மனதை பொறுத்ததே.. எத்தனை முயன்றாலும் நாம்

அதை ஏற்காமல் அதை தவிர்க்கவும், விலகிக்கொள்ளவும்

செய்யலாம்..

அதனால்தான் பல நல்ல விஷயங்களை நல்ல நட்புகளை

, ஆன்மீகமோ, நல்லறிஞர் நூல்களோ படிப்பது , அதை

உள்வாங்கிக்கொள்வது , நம் சிந்தனைகளை உயர்வாக

வைத்திருக்க செய்யுது.. எப்படி.?.. நாம் நல்ல

விஷயங்களை மட்டுமே பேச பிரியப்படும்பொழுது , நம்

எண்ணமும் அதே அலைவரிசை உடையவர்களையே

தேடி அலையும்.. ஒத்த அலைவரிசையும்

நல்லெண்ணமும் கிடைக்கும்போது அதை

பற்றிக்கொள்ளும் மனதானது..

இதே தான் தீய சக்திக்கான அலைவரிசையும்..தீய

எண்ணம் கொண்டவரது அலைவரிசை , அல்லது

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரது அலைவரிசை

அதே போன்றவர்களோடு ஒத்துபோவதும் ,

எண்ணங்களை தம்மையறியாமல் பறிமாறி

உள்வாங்கிக்கொள்வதும் நடக்கின்றது..

இதுவும் ஒருவிதமான டெலிபதியே..

அதனால்தான் நாம் எத்தனை உறுதியாக இருக்கவேண்டுமென சொல்வதும் நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள்வதும், நல்லவர்கள் துணையோடு இருப்பதும் மிக அவசியமானது.. என்னதான் கெடுதல் எண்ண எத்தனை பேர் நினைத்தாலும் நாம் நம் மன எண்ணங்களி மிக உறுதியாக நேர்மறையாகவே இருக்க பழகிக்கொண்டாமோனால் நம்மை எந்த கெட்ட அலைவரிசையும் ஒன்றுமே செய்யாது..


ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியுமா? இந்த உலகில்.. நம்மை சுற்றி பொறாமை, வெறுப்பு, கோபம் , பயம் , இயலாமை , என பல விஷயங்கள் எதிர்மறையாக விதிக்க காத்திருக்கு..

அதே சமயம் , அன்பு, இறக்கம் , தாழ்ச்சி, கருணை , அமைதி, சமாதானம் , ஊக்கம், போன்ற பல நல்ல அலைவரிசையுடையவர்களும் இருக்கிறார்கள்..


இப்ப நம்மிடம்தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்க போகிறோம் என.. எப்படி நம்மையே , நம் சிந்தனையையே நாமே மேம்படுத்த பயிற்சி செய்யப்போகிறோம் என..


எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டி , ஒரே புள்ளியில் குவித்து , அதை மாபெரும் சக்தியாக்கி , அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் பற்றியும் காண்போம்..



இன்னும் அலைவரிசை அவைகளின் வகைகள் ( ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா ), குறித்தும் , அவைகளின் பயன்கள்குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..


அடுத்து விலாவாரியாக தொடர்ந்து பயணிப்போம்..





படம் நன்றி : கூகுள்



.