Friday, September 21, 2007












ஆயுள் கைதி
============

முகம் பார்த்தாய் முன்னரிவிப்பின்றி.!!
மனதில் நுழைந்தாய் அனுமதியின்றி !!
திருடியும் சென்றாய் மறுப்புமின்றி. !!
வாடிக்கொண்டிருக்கிறேன் பசியுமின்றி !!

விழித்திருக்கிறேன் தூக்கமின்றி !!
காத்திருக்கிறேன் பதிலின்றி. !!
கைதுசெய்வேன் கேள்வியின்றி. !!
மணமுடிப்பேன் பிரச்சனையின்றி.!!!!!

ஆயுளுக்கும் என் அன்பில் திணறி,
மாட்டிக்கொள்வாய் விடுதலையின்றி.!!!!!






எது அழகு.
=========

முற்றம் தொழிக்கும் முத்தம்மா
முகத்தின் வியற்வை அழகம்மா.!

செருப்பு தைக்கும் சின்னப்பா,
சிரிப்பே உனக்கும் அழகப்பா !.

கோவில் சுத்தம் செய்பவரும்,
நாவில் நல்லவை சொல்பவரும்,

செல்வம் செழிக்க இருந்தாலும்,
செழிப்பாய் பகிர்ந்து கொள்பவரும்,

இல்லை என சொல்லாத அன்னையரும்,
கல்வி கருமமாய் தந்த ஆசானும்,
பல்லை கடித்து பணம் சேர்த்து,
பாதுகாக்கும் தந்தையரும்,

விலை மாதுவை காப்பாற்ற,
விலை கொடுக்கும் உடன்பிறப்பும்,

எப்படி வியப்பேன் இந்த அழகை?.
செப்படி தோழி நீ புரிந்தால்.!

புர அழகை பார்ப்பவர் மட்டும்
மறந்தும் அழகாக முடியாது.

பார்ப்பவர் உள்ளத்தில் உள்ளதே,தவிர,
காண்பவர் கண்ணில் வெறும் மாயையடி.!
நெருங்காதே தோழி....( தோழனே! )
==============================

சாதி, சமயம், அந்தஸ்து
பார்த்து பழகும் மனிதருக்கிடையில்,
கோழ் சொல்லும் வீணருக்கிடையில்,
என்ன வேலை என்ன சம்பளம்,
என்ன கார், என்ன வீடு,
என்று ஆராயும் பண்பற்றவரிடமிருந்து,
வித்தியாசமாக, தவமின்றி கிடைத்தாய்
என் தாயான உயிர் தோழி ...( தோழா! )

என் வெற்றிகளை, பாராட்டுகளை,
ஏற்றுக்கொள்ள பலருண்டு.
என் சந்தோக்ஷத்தை பகிர்ந்துகொள்ள,
எனக்கொரு கூடுமுண்டு.
என்னை விமர்சிக்க, சோதிக்க
எனை சுற்றி கூட்டமுண்டு,
கூட இருந்து குழிபரித்த நண்பர்,
என நினைத்த நயவஞ்சகர்கள்,
நாடாமலே இங்குண்டு.

ஆனால் என் கஷ்டங்கள், தோல்விகள்,
பிரச்சனைகள், எதனையும் பகிர்ந்து கொள்ளாமலே,
பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டு,
அன்னமாய் எனை அணைத்தாய் அன்புத் தோழி ...( தோழா! )

ஆசான் , பெற்றோர் கற்றுத்தராததை,
கடல் கடந்த வாழ்வு கற்றுத்தந்தது. பசுமரத்தாணியான மனது,பல விஷயம் புரிந்த போது பாராங்கல்லாகிப்போனது.
பல கஷ்டம் பார்த்த பலமான மனது,உன்னை சில நிமிடம் பார்த்ததும் பலவீனமடைகிறது.
சவால்களை எதிர் நோக்கியிருக்கும் எனக்கு,

உன் கருணையை பாரட்ட முடியாமல்
உன் அன்பை ஏற்க முடியாமல் ,
நீ காயப்படுவாயோ என் கவலைபடுகிறது.

தலைப்பிரசவமும், அடுத்து வந்த
தனிப்பிரசவமும் , கொடுக்காத
வலியையும், கண்ணீரையும்,
என்றோ ஒரு நாள் நடக்கப் போகும்
உன் பிரிவு பற்றி நினைத்த மாத்திரத்தில் கொடுக்கிறதே.

ஆகையால் என் அருமைத் தோழி ,( தோழா! )
என்னை நெருங்காதே.... உன் அன்பால் என்னைக் கொல்லாதே!! கோழையாக்காதே.!!!!!
என்னை விட்டு விலகி நில்.
நான் இப்படியே இருந்து விடுகிறேன்...







நடிப்பு
======

உன்னை நான் வெறுப்பதுபோல் நடிக்கிறேன்.
என்னை நீ அப்படியாவது வெறுக்க வேண்டும்.

வெறுத்து நல்ல கவி படைப்பாய்,
காதல் மறந்து அறிவை பெருக்குவாய்,
கனவினின்று விழித்தெழுவாய்.,
நிழலிலிருந்து நிஜமுணர்வாய்.,
நீ வாழ்ந்து பிறரை வாழ வைப்பாய்.

என்னுள் இன்னும் காதல் இருந்தாலும்,
நீ வாழ்க்கையை காதலிக்கும் வரை ,
என் வாழ்வில் இந்த காதலை ,
நடிப்பேன் வெறுப்பது போல்..

என்னால் உன்னை ஒரு குழந்தை போல் ஆக்கி,
என்பின்னால் ஓடி வர செய்ய முடியும்.
அதுவா காதல்?, வேண்டாம் எனக்கு அது !

உன்னை ஒரு வீரனாக்கி உன்
பின்னால் உலகம் ஓடி வரச்செய்வேன்.
அதுதான் என் காதலின் வெற்றி.

அப்போது நீ சொல்வாய், என் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண்ணின் வெறுப்பு இருந்தது என்று.
சிரித்துக் கொள்வேன், இல்லையடா, அதுஎன் காதல் என்று.

சிலருக்கு காதல் வெறும் நடிப்பு, விளையாட்டு,
எனக்கோ உன்னிடம் நடிப்பதே காதல்.

புரிந்து கொள்ள வேண்டாம் நீ,
புரிந்தால் தோற்று விடுவோம் நாம்!

இந்த சுகமான வலி மட்டும் போதும்,
என் நடிப்புக்கு பரிசாக........








தாய்மை


========



பள்ளி திரும்பிய மகனிடம் கேட்டேன்,
இன்று எப்படி என்று?


not bad என்றான்.
விளயாட்டு?



interesting என்றான்.
படிப்பு ?



so boring என்றான்.
வந்தது எரிச்சல் அடக்கிக் கொண்டேன்.



நண்பர் ?.
oh shit என்றான்.



விட்டேன் ஒர் அரை.
அம்மா என்றான்.



அணைத்துக் கொண்டேன் ,
மகனயும், மொழியையும் சேர்த்து ,
தாயல்லவா அவள்.





















காட்டிக் கொடுக்கும் கண்கள்!
==========================

எனக்கு உன் மேல் அன்பு இல்லை
என ஆயிரம் முறை கை எழுதினாலும்,

உன்னிடம் காதல் இல்லை
என உதடுகள் மறுதலித்தாலும்,

கனவிலும் உன்னை பார்ப்பதை தவிர்ப்பேன்,
காட்டிக் கொடுக்கும் என் கண்கள்
காலமெலாம் என்னிடம் இருக்கும் வரை..






கவலைப்படாதே சகோதரா.!!
==========================

ம்மா செய்த இனிப்புகளை ,
சையுடன் எடுத்து வந்து,

டைவெளியின்றி சாப்பிட்டு,
டிணையின்றி ருசித்துவிட்டு,

வகையோடு சவாலயும்,
ரார் வியக்கச் செய்திடலாம்.

ண்ணம் எதிலும் உண்பதிலே,
ற்றம் கொண்டு ருசிப்பதிலே,

யம் இதிலே எதற்காக,

ல்லிபிச்சாண்டி சொல்லாமல்,
டிடுவான் பயம் கொள்ளாமல்,

வை கூட அசந்திடுவாள்,
தே குண்டாய் ஆனதற்கு.!!!!!


காதல் விடுதலை.

================

காத்திருக்க வேண்டாம்,

காசு செலவழிக்க வேண்டாம்,

பாடல் கேட்க வேண்டாம்,

பாத்துருக வேண்டாம்,

வேலை ஒழுங்கா நடக்கும்,

இனி வேஷம் தேவை இல்லை..

நண்பர் குழுவில் கலந்தே,

சில நல்ல விஷயம் அறிவேன்.

மறந்து போன உறவுகளை,

மனதில் மீண்டும் சுமப்பேன்.

என்னாச்சுன்னு யோசிக்கிறீங்க!.

எதுக்காச்சுன்னு பேசிக்கிறீங்க!.

ஒண்ணுமில்ல காதல் முடிஞ்சிருச்சி!.

ஒருவழியா விடுதலை கிடைச்சாச்சு!..