Friday, January 23, 2009

ஊருக்கு போகலாமா மகனே?...

ஊருக்கு போகலாமா மகனே?...

ஒறவுகள பாத்து கண்குளிற‌
ஒருவருச விடுமுறையில்
ஒன்னையயும் அழைச்சுக்கிட்டு
ஒய்யாரமா போகப்போறேன் !

மாமன் மடி காத்திருக்க..
மறைஞ்சு ஒளிச்சு வெளயாட,
அத்தை சமையல் வாசனையும்,
அதுக்குள்ளே என்ன‌ இழுத்துடுச்சே!..

மச்சான்காரன் நீயும் ஊர்சுத்த
மறுபடியும் வண்டிய சரிசெஞ்சான்
மதினியும் நீ ஊஞ்சலாட,க‌யிற‌
மரத்தில பலகைபோட்டு காத்திருக்கா..!

பட்டணத்து வாழ்க்கையில‌
பாசத்ததான் தொலைச்சுபுட்டே!
பட்டிக்காட்டு சனங்ககிட்ட‌ பாடமும்...
படிச்சுபோட்டு மறு பிறவியெடு..

ஒத்தகுடிசை ஓட்டுவீடு
ஒத்துமையா இருக்காக ‍ ஆனா
ஒப்பனையா வீடிருந்தாலும்
ஒருத்தொருக்கொருத்தர் பேச்சில்ல..

கிழ‌க்கே குற்றாலம் ,பாப‌னாச‌ம்
தெற்கே க‌ன்னியா கும‌ரிகட‌ல்
மேற்கே திருச்செந்தூர், தூத்துகுடி‌
வ‌ட‌க்கே வ‌கைக்கொரு கோவிலென,

மாதமொரு சுற்றுலாவாம்
மாவிலை திருவிழாக்க‌‌ளாம்,
வ‌கைவ‌கையாய் ப‌ல‌கார‌ங்க‌ள்
வ‌ண்டிபோட்டு வரும் கிண்ட‌ல்க‌ள்..

வசதியான வாழ்விருந்தும்
வருத்தம்தான் மிச்சமிங்கு
வயக்காட்டு வசந்தமிங்கு
வந்திடுமா மனம் குளிர்ந்திடுமா?

வீட்டைவிட்டு வெளியிறங்க‌
விசாரிப்புகள் நூறாகும‌ங்கு..
வியாதிவந்து சொன்னாத்தேன்
விபரீதமும் விளங்குமிங்கு...

வாசல்விட்டு இறங்கியதும் குளிர்
வசதியோடு பள்ளி வாகனப்பயணம்...
வலிக்கலையே நெடுந்தூரம் நடந்தபோதும்
வடிவாக உடம்புதனில் உறுதிபெற்றோம்.

படிச்ச பள்ளி,ஆடிய தோட்டம்
ப‌ழ‌கிய‌ ந‌ட்பு, ஓட்டிய‌ சைக்கிள்
நீந்திய ஆறு, ப‌சிதீர்த்த‌ தோப்பு
நிச்ச‌ய‌மா நீயும் பாக்கோணும்.

சுத்த‌மான‌ ம‌னசோட‌ அன்பாய்
சுக‌ம்பேணும் ச‌ன‌ங்க‌விட்டு
போலியாய் இருக்கிற நாட்டுக்கு‍
போக‌ணுமாம்மா னு நீயும் கேக்கோணும்...

No comments: