Wednesday, October 6, 2010

மதமும் மனித உறவுகளும்..3

































மதத்தால் என்னென்ன பலன்கள் என போன பதிவில் பார்த்தோம்..

http://punnagaithesam.blogspot.com/2010/10/2.html

எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே.. அதேதான் மதப்பற்றுக்கும்..

மதப்பற்று மத வெறியாகும் போதுதான் பிரச்னைகள் தலைதூக்குவது..

இதிலும் அதிக பயந்த சுவாபமுள்ளவர்கள் , நல்லது கெட்டதை சிந்தித்து ஆராய முடியாதவர்களே பலியாக்கப்படுகின்றார்கள்

மத பெயரை சொல்லி..

மதம் என்பதை ஒரு நிறுவனம் போலாக்கி வியாபார நோக்குடன் செயல்படுவது..ஆள் சேர்ப்பது..

இப்படி செய்யாவிட்டால் , சேராவிட்டால் பாவம், பழி என பயமுறுத்துவது...

உதாரணத்துக்கு , ஒரு கூட்டத்தினர் சிலர் , " ஏன் பொட்டு வைத்திருக்கிறாய்.. பொட்டை அழித்துவிடு . அது கடவுளுக்கு உகந்ததல்ல "

என பொய் சொல்லி , மிரட்டல் விடுவது..

இதை கேட்கும் சில அப்பாவிகள் குழம்பி போவதுண்டு..

இதை செய்தால் சொர்க்கம் , செய்யாவிட்டால் நரகம் என்றும் பயமுறுத்தியே காரியம் சாதிப்பது..

சில புத்திசாலிகள் , இதுவே நரகம் தான் இதைவிடவா பெரிய நரகம் ஒன்று இருக்க போகிறது என்று சொல்லி தப்பிப்பார்கள்..

ஆக இந்த மாதிரியான புரளிகள் பயன் ஏதும் தராது நீண்ட நாளுக்கு...மக்களை ஏமாற்றமுடியாது..

அடுத்து , மதப்பற்றின் காரணமாய் அதீத நம்பிக்கையால் சிலர் மருத்துவரிடம் கூட செல்ல மாட்டார்கள்..

குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாத பெற்றோரைக்கூட பார்த்துள்ளேன்..

குழந்தை கடும் வயற்றுப்போக்கோ, காய்ச்சலிலோ இருக்கும்போதும் , குழந்தையை கிடத்தி விடிய விடிய ஜெபம் செய்வதும் பாட்டு பாடுவதும், விபூதி பூசுவதும் , பேய் ஓட்டுவதும்...

இவர்களை இவர்களின் செயல்களை பார்த்தாலே கோபம் வரும் .. வரணும் நமக்கு...

கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது நல்லதுதான்.. ஆனால் அதீத நம்பிக்கை மூட நம்பிக்கையாகிவிடும் அபாயம் இருக்கே....

இது எப்படியென்றால் நீச்சல் தெரியாமல் ஆழத்தில் குதித்து கடவுளே காப்பாத்து என்பது போல...

பாவம் கடவுளுக்கு வேற வேலையே இல்லை ..

இத்தகைய மூட நம்பிக்கையைத்தான் வேறோடு களையப்படவேண்டும்...

மருத்துவத்தையும், மருத்துவரையும் படைத்ததும் இறைவந்தான்.. நமக்கு அறிவையும் கொடுத்து நமக்கான பாதையை தேர்ந்தெடுக்க சொன்னதும் அதே இறைவன் தான்...

இறைவன் என்பதே கற்பனை என்றாலும் , ஒருவேளை நிஜம் என்று வைத்துகொண்டால் ,அவனுடைய மக்கள் மேல் அவனுக்கு பாரபட்சம் இருக்க முடியுமா?..

இந்துக்கள் சாமிக்கு படைத்ததை ஒரு கிறுஸ்தவனுக்கு தந்தால் , அதை சாப்பிட்டால் இறைவனுக்கு கோபம் வந்துவிடுமா?..

தீட்டு என்ற ஒன்றை அப்ப ஏன் அந்த இறைவன் படைக்கணும்,.?

சாமிக்கு படைத்ததை அந்த இறைவனுக்கு கொடுத்தால் அவரே வாங்கி உண்ணக்கூடும்.. இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும் .? . பாரபட்சமற்றிருப்பதே முதல் தகுதி அல்லவா?..மத பாகுபாடு மனிதனுக்குத்தான்.. இறைவனுக்கு இருக்க முடியாதே.. கூடாதே..


ஒரு தாயானவளே மற்றொரு குழந்தை மேல் அதே போல பாசம் கட்ட முடியும் போது நம் அனைவரையும் படைத்த இறைவனால் நம் கற்பனைக்கு எட்டாத அளவல்லவா நேசிப்பு இருக்கும்..?

ஆனால் நம் மக்கள் / மத பரப்பிகள் பலர் இறைவனை ஒரு ஹீரோவாகத்தான்

காண்பித்தார்களே தவிர , எல்லா மனிதரையும் , அவர் எப்படியிருந்தாலும் நேசிக்க கூடிய நல்லவராக அல்ல..

அதனால்தான் வந்தது குழப்பம்..

அடுத்து இறைவன் பெயரால் நடக்கும் போர்கள்...ஏதோ ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அதை திரித்து தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு ,

அப்பாவிகளை அந்தபோரில் ஈடுபடுத்தி அதை புனிதப்போர் என பெயரிட்டு... !!!!.


நாம் கவனிக்க வேண்டியதெல்லாம் , உலகின் மிகச்சிறந்த சேவைகளும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன...

அதே போல் உலகின் மிகக்கொடிய செயல்களும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன...


நாம் அனைவருமே பிறக்கும்போது மிருகத்துக்குண்டான அனைத்து குணநலன்களோடும் தான் பிறக்கிறோம்.. எப்படி பட்டை தீட்டப்படுகிறோம் என்பதில்தான் நாம் வித்தியாசப்படுகின்றோம்.. அதுக்கு மதம் ஒரு நல்வழிகாட்டி அவ்வளவே..

மதத்தின் கடமை , தனி மனிதனை சுற்றப்படுத்தி அவனின் மிக சிறந்த குணங்களான , அன்பு , கருணை , பகிர்தல், உதவுதல், இரக்கப்படுதல் , போன்ற

அனைத்து நற்குணங்களையும் வெளிக்கொணர்வதாக இருக்கவேண்டும்...

மொத்தத்தில் தனி மனித ஒழுக்கத்தினை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்..

விவேகானந்தரின் என்ன சொல்கிறார்?..

அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.



இதை நாம் இயற்கை சீற்றத்தின் போதும் சுனாமி , பூகம்பம் , எரிமலை ,புயல் , வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற பல அழிவுகளின் போதும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மனிதன் இன்னொரு மூலையில் இருக்கும் சக மனிதனுக்கு மதத்தின் பெயரால் செய்த உதவிகளின் போது உணர்ந்துள்ளோம்...ஆக மனிதாபிமானம் இல்லாத மனிதனில்லை..

மாறாக சில இடங்களில் என்ன நடக்குது.?

மதத்தின் பெயரால் , மனிதனையே தற்கொலை குண்டுகளாக மாற்றி, அழிவை நோக்கி ஆக்ரோஷமாக வழிநடத்தப்படுகிறான்..அவனின் சிந்திக்கும் திறன் முழுவதையுமே இழக்க வைக்கப்படுகிறான்...

அடுத்து மதத்தில் இணைந்திருப்பதால் நாம் மெளனியாகத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்ற ஒரு தப்பான அபிப்ராயம்.

தப்புகள் நடந்தால் நமக்கெதுக்கு வம்பெல்லாம்.. எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்,.. அவர் தண்டிப்பார் என கண்டுகொள்ளாமல் செல்வது ,

பொறுத்து போவது , தியாகம் செய்வது..., குற்றவாளி என தெரிந்தும் மன்னித்து விடுவது...

இது ஒதுங்குதல் , பிரச்னைகளையே புறக்கணித்தல்... இவர்கள் என்ன சொல்லி தப்பிப்பார்கள் தெரியுமா?.

" எல்லாம் அவன் செயல்.." .." நம்ம கையில என்ன இருக்கு..? " ... " எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்குத்தான் நடத்துவார் கடவுள் ." என..

இவை மத பார்வையில் ஓரளவு தவறல்ல என்றாலும் இதன் பாதிப்புகள் சமுதாயத்தில் அதிகம் இருக்கும்..

இறைவனால் எல்லாம் செய்ய முடியும் என்றால் சட்டம் எதற்கு, அரசாங்கம் எதற்கு, நாம் உழைப்பது எதற்கு.?

கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பது வேறு.. கடவுள் மீது கண்மூடித்தனமான பக்தி செலுத்துவது வேறு..

இப்படி மதத்தையும் சட்டம் ஒழுங்கையும் போட்டு குழப்பிக்கொள்வர் சிலர்..

பல்லாண்டுக்கு முன் ஒரு மதத்தில் பல தார திருமணம் சரி என சொல்லப்பட்டிருக்கும்..

அதற்கும் சில வலுவான காரணங்களும் உண்டு என்பதையும் நாம் அறிந்துள்ளோம்..

ஆனால் அதையே இன்னும் பிடித்துக்கொண்டிருந்து பொறுத்துக்கொண்டிருந்தால்..?

எந்த ஒரு மதமும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளரணும்.. அதுதான் மக்களை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தவும் ஒரு சுமூக சூழலை உருவாக்கவும் முடியும்..


கிறுஸ்தவ மதங்களிலும் ஆரம்பத்தில் கருத்தடை செய்துகொள்ளக்கூடாது என சட்டம் இருந்தது..

அதனால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்த பின் இப்ப அந்த தடை நீக்கப்பட்டிருக்கு,..

இதுபோல லெஸ்பியன் , கே திருமணங்கள் , பாலியல் சார்ந்த விஷயங்கள் என பல விஷயங்களை மதம் ஆராயணும்...

மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதன் அல்ல... கடவுளுக்கும் மதம் கிடையாது..:)



மதத்தால் இங்கு யாருக்கும் பிரச்னையில்லை.. மத சம்பந்தப்பட்ட வாழ்க்கை முறையில் தான் பிரச்னை...

ஆக அதிகமாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் மதத்தினை காப்பாற்ற வேண்டி நடவடிக்கை எடுக்கணும்..

------------------

தொடரும்..


படம் : நன்றி கூகுள்..