Thursday, April 30, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 11

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 11
விரைந்து மருத்துவமனைக்கு வந்தவளை , அந்த பெரிய மருத்துவமனையில் அவ்வளவு எளிதாக உள்ளே விடாமல் ஆயிரம் கேள்விக்கணைகள்..
அதற்குள் ராஜ் விரைந்து வந்தார்... தன் அத்தானுக்கு சிறுநீரக கோளாறு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஐசியு வில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்லி உள்ளே அழைத்து சென்றான்...
பக்கத்து அறையில் அவர் அக்கா..
நல்ல நாளில் பேச மாட்டாரே.. இப்ப ஆறுதலுக்கு பெண்கள் யாருமில்லை...என்ன செய்வது ஒரே குழப்பம் மலருக்கு..
கணவன் பின்னாலேயே சென்று அமைதியாக நின்றாள்..
" பிள்ளைகள் எங்கே..?" மெதுவாக கேட்டாள்..
" அவர்கள் இருவரும் வீட்டில்..." ராஜ் பதில் சொன்னார்.. பிள்ஸ் டூ படிக்கும் பெண்ணும் , 5 ம் வகுப்பு படிக்கும் பையனும்..
" அப்ப நான் வேணா அவர்களை கவனித்துக்கொள்ளட்டுமா?.. புவனாவுக்கு வேறு தேர்வு நேரமாச்சே...?"
இப்பத்தான் அவளின் கரிசனமான அக்கறை கண்டு அக்கா கொஞ்சமாய் நிமிர்ந்து பார்த்தார்..
அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு அவளின் கை பிடித்தாள் மலர்.
" ஒண்ணும் கவலைப்படாதீங்க அண்ணி.. அண்ணாவுக்கு எல்லாம் சரியாகும்.. நான் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன்..இவர் உங்ககூட இருப்பார்."
அக்காவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...எதுவும் பேச முடியாமல்..
கண்ணாடி வழியே ஐசியு வில் இருக்கும் அந்த மஹா பெரிய தொழிலதிபரை பார்த்துவிட்டு உடனே புறப்பட்டாள் அக்கா வீட்டுக்கு..
கூட வருவதாய் சொன்ன ராஜிடமும்,
" அதான் அக்கா வீட்டு ஓட்டுனர் இருக்காரே.. நான் போய் குழந்தைகளை கவனிக்கிறேன்.. நீங்க இங்க இருந்து பெரிய மருத்துவர் வந்ததும் விபரம் கேளுங்கள்..
அக்காவையும் ஏதாவது சாப்பிட சொல்லுங்கள்...எதை பற்றியும் கவலை வேண்டாம்..."
ஆச்சர்யமாய் பார்க்கிறான் ராஜ்... " இவளுக்கு மனதில் எந்த வஞ்சனையும் கிடையாதா?...யார் என்றாலும் இறக்கப்படும் குணம் மட்டும்தானா?..
தன்னுடைய அலைச்சல், அசதி எதுவுமே பெரிதில்லையா இவளுக்கு?.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுநாள் குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு அப்படியே அலுவலகம் வந்து சுதிரிடம் எல்லாம் சொல்லிவிட்டு, வேலையில் மும்முரமாக இறங்கினாள்..
முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம்...
அப்பப்ப மருத்துவமனைக்கு போன் செய்து அக்காவை சாப்பிட சொல்லியும் அத்தான் பற்றி விசாரித்துக்கொண்டும், தன் பெற்றோரிடம் தகவல் சொல்லிக்கொண்டும்..
இந்த சூழ்நிலையில் தன் தம்பி நீண்ட நாள் கனவாக ஜெர்மன் போவதற்கான விசாவோடு மகிழ்ச்சியோடு அவனும்...
மனசுக்குள் மகிழ்வாக இருந்தாலும், பெற்றோருக்கு இனி தான் மட்டுமே ஆதரவு அடுத்த ஒரு வருடம் என நினைக்கும்போது, கொஞ்சம் சங்கடமும்..
ஒரு பக்கம் அசதியாக இருந்தாலும் எல்லாத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்கிற தைரியமும் ..
யோசனையில் இருக்கும்போதே சுதிர் வந்தான்..
" மலர், நான் தேர்தல் செய்திகளை கவர் பண்ண எல்லா மாவட்டங்களுக்கும் விசிட் செய்வேன்.. நீங்க உடனே செய்திகளை அப்டேட் பண்ணிடுங்க இங்கிருந்து.."
"ம். சரி ."
"நம்ம முருகன் இருக்காரில்லையா .. அவரையும் , தேவைப்பட்டா தற்காலிகமா யாரையாவது துணைக்குப்போட்டுக்கொண்டு செய்யுங்க..
நீங்களே ஒருத்தராய் செய்யவேண்டாம்.."
" இல்லை சுதிர்.. இன்னொரு ஆள்கிட்ட இதை விளக்குவதற்குள் நானே செஞ்சிடுவேன்.. என்ன எனக்குத்தேவை கணினியும் தொலைபேசியும்...அது எப்பவும் என்கூடவே இருக்குமே.."
" சரி நளினா மேடம் கதை என்னாச்சு.?" எப்ப வருது?."
" அவர்கள் தன் மகனின் தொழிற்சாலைக்கு இடம் பார்த்துக்கொண்டிருப்பதில் பிஸி..."
" சரி அடுத்த முறை போகும்போது நானும் வருகிறேன்.. மற்றபடி அந்தப்பெண்கள் மூவரும் நல்மதானே.?"
புன்னகையோடு இப்ப சுதிரை பார்த்த பார்வையில் அசடு வழிந்தான்....
" சார் என்ன விஷயம்..?"
" ஹேய்ய்ய்ய்ய்,.. சும்ம சொன்னேம்பா...நீங்க வேற... அதில் ஒருவரை அன்று மின்சார அலுவலகத்தில் பார்த்தேன்.. ரொம்ப நன்றி சொன்னாள்..."
" ஒஹ்ஹோ டிராக் இப்படி போகுதா...?" சிரித்தாள் மலர்.
" அய்யோ கடவுளே.. நீங்க ஏதாவது கற்பனை பண்ணாதீங்க..."
" அதுக்கில்லை சுதிர், அந்த மூவரில் ஒருவரைத்தான் தன் மகனுக்கு முடிக்க இருக்கிறார் நளினா..."
" ஆனா மூவருமில்லையே..." என சொல்லிவிட்டு ஓடிவிட்டான்...
கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் மலர்.. ஆனாலும் அவன் நல்லெண்ணத்தை கண்டு உள்ளூர மகிழ்ந்தாள்...
-------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவமனைக்கு சென்றதும் மிக சோகமாக கணவரும் , அக்காவும்...
அக்கா இவளை பார்த்ததுமே, கட்டி பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்..
எப்பவுமே பட்டு சேலையும் கழுத்து நிரம்ப நகைகளுமாய் இருப்பவர், சாதாரண நூல் சேலையில் நெற்றி நிறைய
விபூதியோடு தாலியோடு மட்டும்...
கண்களாலேயே கேட்டாள் என்னாச்சு என்று.?
அவளை மட்டும் வெளியே அழைத்து சென்று,
" அத்தானுக்கு டயாலிஸ் செய்வது அதிக நாள் பிரயோசனமில்லையாம்..
கண்டிப்பாக சிறுநீரகம் மாற்றியே ஆகணுமாம்..."
இடி விழுந்தது போல இருந்தது...
எப்படிப்பட்ட நல்ல மனிதர்...ஏழைகளுக்கு என்றால் அள்ளி அள்ளி உதவுபவர்.
யாரிடமும் அதிர்ந்து பேசாதவர்...
அடுத்த வாரம் முழுதும் பேப்பரில் விளம்பரம் கொடுப்பதும், தமக்குத்தெரிந்தவரிடம் எல்லாம் கேட்டுப்பார்ப்பதுமாய் இருந்தார்கள்..
உறவுகள் எல்லாருக்குமே பயம் தன் சிறுநீரகத்தை தானம் வழங்க..
பணத்துக்காக வந்த சிலரும் பொருத்தமாயில்லை என மருத்துவர் சொல்ல...
----------------------------------------------------------------------------------------------------------------------தன் மகன் நாளை வெளிநாட்டில் இருந்து வருகிறான் என்றதும் மனம் கொள்ளா மகிழ்ச்சி நளினாவுக்கு...
முடிந்தால் தான் பார்த்து வைத்திருக்கும் பெண்ணொருத்தியையும் விமான நிலையத்துக்கு துணைக்கு கூட்டி வருவதாகவும் சொல்லிவைத்தாள்..
மலருக்கு போன் செய்து தான் பார்த்திருக்கும் தொழிற்சாலை இடம் பத்தியும் , மகன் வந்ததுமே உதவியாளர்
தயாராக இருக்க வேண்டுமெனவும் தாழ்மையோடு கேட்டுக்கொண்டார்...
ஆனால் அன்று தான் மலருக்கு அலுவலில் ஏகப்பட்ட வேலை...சுதிர் வேறு இல்லை.
சாயங்காலம் கிளம்பும்போது முதலாளி வந்தார்..
" இந்த மாதம் முழுதும் இரவு நேரமும் வேலை செய்ய வேண்டியிருக்கும் .. சம்பளம் எல்லாருக்கும் இரு மடங்கு..தெரியுமோ.?"
ரொம்ப தாராள மனது மாதிரி...
" சாரி சார்.. எனக்கு வீட்டில் பொறுப்புகள் அதிகம் இப்ப.. என்னால முடியாது..."
" ஹஹஹா.. அது சரி அதுக்காக உடனே வேறு ஆளை பார்க்கவா நாங்க உனக்கு பயிற்சி கொடுத்திருக்கோம்..?"
" நினைத்த நேரம் வாகன்ம், பாதுகாப்பு, பணச்செலவு, ஆட்பலம் னு தண்ணியா செலவு செய்ததெல்லாம் எதுக்கு... ?.. இப்படி இக்கட்டான நேரத்தில் வேலை செய்யத்தான்.. புரியுதா.?"
மிரட்டும் தோரணையில்....
" சாரி சார். என்னால முடியாது.. ஆனா வீட்டிலிருந்தே பார்ப்பேன்..இல்லை நான் ராஜினாமா பண்ணுவேன் கட்டாயப்படுத்தினா... "
" எவ்வளவு தைரியமா முடியாது னு சொல்ற.?" அவள் தோள் மேல் கை வைத்து,
" இத பாரும்மா, நீ அனுசரித்தால் உன்னை எங்கேயோ கொண்டுபோய்டுவேன்...உனக்கு திறமையிருக்கு..." வழிந்தார்..
" சார் கையை எடுங்க..." அழுத்தமாக.
" " ஹிஹிஹி.."
" கை எடுங்க.."
" இரண்டு கையையும் இப்ப தோளில்...
" கைய எடுடா.."
" என்னடி பேச்சு மரியாதை இல்லாம...?. என் பலம் தெரியாம பேசுறியா.?.." அப்பவும் விகார சிரிப்போடு..
இதுக்குமேல் பொறுத்துக்கொள்ளாமல்,
அவர் தோள்மேலேயே மலர் கைவைத்து கால் முட்டை மடக்கி வயற்றுக்கு கீழே பலமாய் ஒரு குத்து விட்டாள்...
" அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. " என மிகப்பெரிய அலரலுடன், வயற்றைப்பிடித்துக்கொண்டு அப்படியே கீழே உட்கார்ந்தார் தரையில்...
இடுப்பில் கைவைத்து , தலையை அசைத்தயோசித்து எரிச்சலோடு, உடனே முருகனுக்கு போன் செய்து ஓட்டுனரையும்
மாடிக்கு வரச்சொல்லி அவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல சொன்னாள்..
தரையில் வலியால் துடித்துக்கொண்டிருந்தவரிடம்,
" பெண் என்றால் எதுக்கும் தயாராய் இருப்பாள்னு நினைச்சேயில்லை..?.. ஆனா இப்படி இதுக்கும் தயாராயிருப்பாள்னு நீ கனவிலும் நினைச்சுருக்க மாட்டேயில்லை..?"
கையிரண்டையும் தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு ஒரு புயலாய் புறப்பட்டாள்...-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, April 29, 2009

ஒதுக்கப்பட்ட கல் பாகம் - 9-10

குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தவளிடம் பேச முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றான்...


வார்த்தைகளை கூட மென்மையாக பேசியே பழக்கமில்லாதவனால் எப்படி கீழிறிங்கி உடனே பேசிவிட முடியும்?..

அன்பை கூட அதிகாரமாய் காட்டித்தான் பழக்கம் அவனுக்கு...தன் அன்னை, அக்கா இருவரை தவிர வேறு பெண்களிடம் இறங்கி பேசியவனில்லை...

தான் தோல்வி கண்டது போல் காட்டிக்கொள்ளவும் கூடாது...

ஆனால் அவளின் இந்த தீர்மானத்தை வளர விடவும் கூடாது...

அவளாக பேசுவாள் அதனைத்தொடர்ந்து நாம் கொஞ்சம் விளக்கலாம் என்றிருந்தான்...

மணிக்கட்டில் கைகடிகாரத்தை மாட்டிக்கொண்டே, தெளிவான புன்னகையுடன்,

" ராஜ், நான் இன்றைக்கு வர தாமதமாகலாம்... வேலைக்கார பாட்டி சமைத்து வைப்பார்...ஏதேனும் தேவையென்றால் தொலைபேசுங்கள்.."

என்று சர்வ சாதாரணமாய் சொல்கிறாள்... அதில் அலட்சியமில்லை.. அக்கறை இருக்கு ...

கோபமில்லை... கவனிப்பும் இருக்கு...சரி இப்போதைக்கு பேச முடியாது என்று எண்ணி தலையை மட்டும் ஆட்டினான்...

------------------------------
-------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் கழிந்தது.. எந்த வித நெருக்கமும் , வெறுப்பும் இல்லாமல்.. அதே நிலையில்...ஆனால் அவளோ புத்தகமும் கையுமாய்...முன்பு தொலைக்காட்சியாவது ஒன்றாய் அமர்ந்து பார்ப்பாள்..இப்ப அதுவும் இல்லை.

கேட்பதற்கு மட்டும் மரியாதையான பதிலோடு...எல்லா வேலைகளையும் எப்போதும்போல செய்துகொண்டு

பிரச்னை குறித்து பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்,

" அதை பற்றி பேச வேண்டாமே ராஜ்...எனக்கு கொஞ்ச நாட்கள் அவகாசம் வேண்டும் .. நாம் இப்படியே இருப்போமே...

நான் சொல்வதுதான் சரி என சொல்லவில்லை.. ஆனால் அதே சமயம் ஒரு குழப்பமான சிந்தனையில் இதை பேச விரும்பவில்லை..

கொஞ்ச நாள் கடத்தி பார்ப்போம்..." என விடுகதையாய் ஒரு புதிர் போடுகிறாளே தவிர, தீர்மானமாய் இருப்பதுபோல ஒரு பயம் தருகிறது..


வலிய சென்று அவள் கை பிடித்தாலும் நாசூக்காக தவிர்க்கிறாள்..

இரவின் தனிமை இன்னும் கொடுமையாய் ...அவனுக்கு.


------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்துக்கு சென்று முக்கிய தொலைபேசி அழைப்புகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டு கணினி முன்பு அமர்ந்தவளிடம் சுதிர் தயக்கத்துடன் வந்தான்..

எப்பவும் ஜாலியாக பேசுபவன், முகத்தில் சிரிப்பின்றி..

" வா சுதிர் உட்கார்... என்ன சேதி.. தேர்தல் வருதே ரொம்ப பிஸியா நீ.?.."

" ம்."

" சரி என்னாச்சு உன் கல்யாண விஷயம்... எனக்கெல்லாம் சொல்லமாட்டியா என்ன.?.. உங்கம்ம கிட்ட பெஎசி கூட நாளாச்சே.. சொல்லு.."

"ம்."

" அட என்ன ?.. நான் என்ன கேட்டாலும் ம். ம். னு பதில் சொல்ற. என்னாச்சு.?" னு பார்வையை கணினி விட்டு அவனிடம்..சிரிப்போடு...


" இல்ல .. நான் பேசக்கூடாதுதான்.. ஆனா.. "

" என்ன சுதிர்.. என்ன இது.. தெளிவா சொல்லுங்க என்கிட்ட என்ன தயக்கம்..? காஃபி போடவா... உனக்கும் சேர்த்து?."

" இல்ல எனக்கு வேண்டாம்.. "

" சரி அப்ப சொல்லு .." அவள் எழுந்து சென்று காஃபி தயாரித்துக்கொண்டே..

" ராஜ் அண்ணா பேசினார்..."

காஃபியோடு சட்டென்று திரும்பினாள்.ஆச்சர்யமாய்.....பார்வையிலேயே விழி உயர்த்தி என்ன என்று கேட்டாள்...

" என்னாச்சு உங்க இருவருக்குமிடையில்?.. தப்பா நினைக்காதீங்க மலர்.. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் நபரில் அவரும் ஒருவர்..."

" என்ன சொன்னார்...?.. " நேரடியாக கேட்டாள்..

" அவருக்கு பிடிக்காட்டி வேலையை விட்ருங்களேன் மலர்...இது ஒண்ணும்..." சொல்லி முடிக்குமுன்பே கையால் சைகை காட்டி நிப்பாட்டினாள்..

பின் சிறிது நேரம் அமைதியாக காஃபியை குடித்து முடித்தாள்..

" மன்னிக்கவும் சுதிர்.. அது பற்றி நான் யாரிடமும் பேசுவதாயில்லை... மேலும் பிரச்னை ஒண்ணும் பெரிசா இல்லை... பேசுமளவுக்கு.." சாந்தமாய் பேசினாள்...புன்னகையோடே..

" எது எப்படியோ மலர்.. நல்ல முடிவா மட்டுமே இருக்கட்டும்.. இத பற்றி பேசுவது நாகரீகமில்லை னு எனக்கு தெரிந்தாலும், நீங்க இருவரும்

நல்லா இருக்கணும்னு மட்டும் நினைக்கிறேன்.. தப்பா எடுக்காதீங்க..நான் அப்புரமா வாரேன்.." னு எழுந்து சென்றுவிட,

ஏன் இவர் சுதிர் கிட்ட எல்லாம் சொல்லணும் னு கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் அதை குறித்து அவர் வேதனைப்பட்டிருப்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது...

சரி இன்று இதுபற்றி ஏதாவது பேசினால் கொஞ்சம் நிதானமாய் பேசலாம் என நினைத்துக்கொண்டாள்..

நளினாவிடம் இருந்து அழைப்பு...அவள் மகனுக்கு தமிழ்நாட்டில் ஆரம்பிக்க போகும் தொழிற்சாலைக்கு ஈடுபாட்டோடு வேலை செய்ய தைரியமாக ஒரு பெண் உதவியாளர் தேவை என்றும்,

தனக்குத்தெரிந்த பெண் யாராவது இருந்தால் சொல்லவோ அல்லது அவர்கள் பத்திரிக்கையில் விளம்பரம் தரவோ வேண்டும் என கேட்டுக்கொண்டாள்..

அடுத்த மாதம் தன் மகன் இதற்காக வெளிநாட்டில் இருந்து அவசரமாக வருவதாகவும்...


யாரை சொல்லலாம் என அதை பற்றி எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அம்மாவிடம் இருந்து அழைப்பு..' என்னம்மா பிரச்னை உங்களுக்குள்" என கேட்டு.

போனை வாங்கி அப்பா வேறு அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்...எல்லோருக்குமே நல்லவர்தான் ராஜ்...

தான் எப்போதும் விட்டுகொடுத்ததில்லையே ...ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கைத்தொடணும்..?

கொஞ்சம் எரிச்சலாகவே வந்தது...ஒரு பக்கம் பாவமாயும்...

இப்படி மனதில் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே, நேரமானதும் சுதிர் கிளம்பியதும் தெரியாது வேலை மும்மரத்தில் இருந்தவளை

முதலாளியின் இருமல் சத்தம் நிமிர்ந்து உட்காரச்செய்தது...

உள்ளே நுழைந்தவருக்கு மரியாதை நிமித்தம் எழுந்தவளை உட்கார சொல்லிவிட்டு அவரும் உட்கார்ந்தார்...

வேலை பற்றி விசாரித்துவிட்டு,

" ம். என்னமோ பிரச்னைன்னு கேள்விப்பட்டேன்...ஒண்ணுக்கும் கவலப்படாத.. நான் இருக்கேன்... " னு பொடி வெச்சு பேசினார்...வழிசலுடன்...

இவள் முகத்தை சுருக்குவது கண்டு,

" ம் .. சுதிர் பேசியபோதே வந்தேன்.. எல்லாத்தையும் கேட்டேன்.." பல்லிளித்தார்...

இந்த ஆளுக்கு என்ன பதில் சொல்வது.. இல்லை சொல்லாமல் போவதா?..

" ஒஹ்ஹ்.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.. சார்... "னு சொல்லிட்டு கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் மேற்கொண்டு பேசாமல்..


அசடு வழிய சிரிது நேரம் கழித்து அவர் செல்ல,


இனியும் தனியே அங்கே இருப்பது சரியில்லை என விரைந்து வீட்டுக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி..

அழைத்தாள் கணவனை ...

அவன் மிகப்பெரிய மருத்துவமனையில் இருப்பதாக சொன்னதும் தூக்கி வாரிப்போட்டது...

விபரம் கேட்டுக்கொண்டு உடனே ஆட்டோ பிடித்து விரைந்தாள் அங்கு...
ஒதுக்கப்பட்ட கல் - பாகம் -9


விடியும்போது இருவரும் இருவேறு சிந்தனைகளோடே எழுந்தனர்...

காலை காஃபியை தயாரித்து அவன் செய்தித்தாள் படிக்கும்போது அவன் முன் மேசையில் வைத்தாள்.

முந்தினம் அவள் பேசிய வார்த்தைகளில் மாறியிருந்தான் எனினும், விட்டுக்கொடுப்பதாயில்லை அவன்..

அவளோ சில காலமாவது அவனுக்கு புரிந்துணர்வு வரும் வரையிலும் அல்லது புரிந்து கொள்ள முயர்சிக்க முனையும் வரையிலாவது

பெற்றோருடன் சில காலம் தங்குவது என முடிவோடிருந்தாள்...


" உன்னிடம் சில விஷயம் பேசணும்.."

திரும்பிப்பார்த்தவள்,

" சமையல் முடிந்ததும் வருகிறேன் ... பேசுவோமே , நிதானமாக..." என்று சொல்லி சென்றவளை,

" அது முக்கியமில்லை.. எனக்கு முக்கியமாக ஒன்று தெரியணும்..."

" என்ன " என்பதுபோல் விழிகளை சுருக்கினாள்.

" நீ இந்த வேலையை விட்டுவிட்டால் நாம் சந்தோஷமாயிருக்கலாம் என நினைக்கிறேன்..வேலையை விடணும் கண்டிப்பாக.."

பதில் சொல்ல வாயை திறந்தவள், கையிலிர்ந்த துண்டில் கையை துடைத்துக்கொண்டு,

சொல்ல வந்ததை சொல்லாமல் அப்படியே சமையலரைக்கு தொடர்ந்தாள்..

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவன், கத்தினான்...

" என்ன நான் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கிறேன்... மதிக்காமல் , ஒன்றுமே சொல்லாமல் போறாயே?..?"

முகத்தை மட்டும் எட்டிப்பார்த்தவள்,

" வேலையை விட முடியாது ...மன்னிக்கவும்"

வேகமாய் எழுந்து வந்தவன்,

" என்ன ஒரு திமிரான பதில் இது...?"


" கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் சொல்ல வேண்டிய விதத்தில் பதில் இருக்குமே..."

" சரி இப்ப சொல்.. வேலையை விடுவியா மாட்டியா?.. இறுதியாக..?"

" இப்போதைக்கு விடுவதாயில்லை..." என அவள் சொல்லிமுடிக்குமுன்னே பளார் என அறைந்தான்...

அறைந்த கன்னத்தை அப்படியே பிடித்துக்கொண்டு அடுப்பினை அணைத்துவிட்டு அதிர்ச்சியில் சுவரோடு சாய்ந்து நின்றாள்..

கண்ணீர் மட்டும் சொல் பேச்சு கேளாமல் மடை திறந்த வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது...

காலிங் பெல் அடித்ததோ, பால்காரன் வந்து பால் தந்ததோ, தொலைபேசி மணி அடித்ததோ, எதுவும் ஏறவில்லை...

சில மணித்துளிகள்...

வழிந்ஹ கண்ணீரை துடைத்துக்கொண்டு, ஒப்பனை அறை சென்று குளிர்ந்த நீரை நன்றாக முகத்தில் தெளித்துக்கொண்டு, கண்ணாடியில்

தன் முகத்தை ஒரு வித வெறுமையோடு பார்த்துக்கொண்டு, பால்கனியில் உள்ள நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

அதற்குள் அடுத்த தொலைபேசி அழைப்பு ...

நிதானமாக எடுத்தவள்,

" மலர், நலம்தானே?.. இன்றைக்கு ஒர் முக்கியமான வேலை எனக்கு எங்கள் பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள்.. அது விஷயமாக

அலைச்சல் இருக்கு .. நாம் நாளை சந்திப்போமா?.."

" அய்யோ என்னாச்சு?" நாற்காலி விட்டு எழுந்தாள்.

" ஹ என்னத்தம்மா சொல்ல... கணவர் கட்டாயத்தால் இந்த தொழிலுக்கு வந்தவள்... நல்ல வீடு வாசல் னு சமாதித்தாள்.. குழந்தை இல்லை..

இப்ப கணவன் வேறொரு பெண்ணை மணம் முடிக்க போகிறான் என்றதும் இப்படி.. இன்னும் அவனையெல்லாம் ஒரு ஆண்பிள்ளைன்னு இவளும் நம்பிகிட்டு..

எப்படியோ வாழ்க்கையில் யார் மேலாவது ஒரு பிடிமானம் வைத்துவிடுகிறார்கள் தன்னிலையோ உண்மையோ அறியாமல்.. எவ்வளவோ அறிவுறை தைரியம்

எல்லாம் சொல்லிருக்கேன்.. எல்லாம் தலை ஆட்டிவிட்டு, இப்ப திடீர்னு ....இவங்களை போல உள்ள பெண்களை திருத்தவே முடியாதும்மா.."

பேசி முடித்ததும் , பக்கத்தில் உள்ள செடிகளுக்கு அதே நினைவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருந்தாள்..

ஆண் சார்ந்த சமுதாயமாகவே இருப்பதால்தானோ இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆண்டாண்டு காலமாய் ஊறிப்போய்விட்டதோ?..

நாமே எல்லாத்துக்கும் மறைமுகமாக அனுமதிக்கின்றோமோ?..

அலுவலகம் கிளம்பியவன், தூரத்திலிருந்தே,


" கிளம்புறேன்.. தொலைபேசி மின்சார ரசீதுகள் இருக்கா?.."

பதிலில்லை..

" சரி சாரி.. என்னை ரொம்ப கோபப்படுத்திட்ட நீ.." என்றான் வேண்டாவெருப்பாக...

" எனக்கு கோபமேதுமில்லை இப்ப.. ஆனா நீங்க சொல்வதுதான் சரி " என்றாள்..

" என்ன வேலையை விடப்போகிறாயா?.."

" இல்லை.. நாம் பிரிந்தேவிடலாம் ..நேற்று நீங்க சொன்னதுபோல்... காலை வரை எனக்கு அந்த எண்ணம் இல்லை...

ஆனால் இனியும் ஒரு புரிதல் இல்லாமல் நீடிப்பதில் அர்த்தமில்லைதான்...

நீங்கள் அடித்தது எனக்கு வலியில்லை.. ஆனால் அந்த எண்ணம் எப்படி வந்தது...?. நான் திருப்பி அடிக்க முடியாது என்பதாலா?.."

தெளிவாக கோபமே இல்லாமல் மிக நிதானமாக அவள் கேட்டதும் அரண்டு விட்டான்...

சரிசெய்து கொண்டிருந்த கழுத்துப்பட்டையை அவிழ்த்துவிட்டான்...

" என்ன சொல்ற நீ.. தெரியாமல் நடந்தது அது.. அதை பெரிது படுத்தாதே... அதான் சாரி சொல்லிட்டேன்ல.."

" இல்ல ராஜ்... நான் யோசித்து பார்த்தேன்.. நான் உங்களுக்கு தகுதியில்லை... உங்களை கவனித்து உங்கள் பேச்சை மட்டும் கேட்பதுபோலான பெண்கள்

நிறய பேர் இருக்கிறார்கள்... என்னுடைய வளர்ப்பு அப்படியானதில்லை.. எனக்கு சிந்திக்க பழக்கப்படுத்தியிருக்கிறார் நாத்ஹிகரான என் அப்பா...

அன்பாய் இருக்க சொல்லியே இறக்கப்படும்படியும் வளர்த்துவிட்டார் அம்மா..."

" கணவனுக்கு பணிவிடை செய்வது மட்டுமே சொர்க்கத்தை அடையும் வழி என இன்னும் நினைக்கும் அப்பாவிகள் பலர் இருக்கின்றார்கள்.. அவர்களை

நீங்கள் அடித்தாலும் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள்... உங்க மேல் தவறில்லை. உங்க குடும்ப வளர்ப்பு அப்படி..நான் உடனே செல்ல மட்டேன்..

நல்ல நண்பர்களாய் பிரிவோம் .. சரியா..?" புன்னகையோடு தீர்க்கமாய் பேசியது கேட்டு அதிர்ந்தான்...


நெருங்கி வந்து அவன் கைகளை பிடித்தாள்

" எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை ராஜ்... அலுவலகம் போய்ட்டு வாங்க நிதானமாக பேசுவோம்... நான் எப்பவும் உங்களுக்கு ஒரு நல்ல தோழி.."

அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தான் சோபாவில்...

தன் மாற்று உடைகளையும் துண்டையும் எடுத்துகொண்டு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் குளிக்க சென்றாள் குளிர்ந்த நீரில்...


-----------------------------------------------------------------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் பாகம் - 8ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே நளினா கதை சொல்லிக்கொண்டிருந்தாள்..

மூவரில் ஒருத்தி அதிர்ஷ்டசாலி என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்து கதை கேட்டாள் மலர்..

" ஆமாம்மா. மூவரில் ஒருத்தியைத்தான் என் மகனுக்கு மணம் முடிக்க போகிறேன்..அதற்காக அவர்களை தயார்படுத்திக்கொண்டும் இருக்கிறேன்.. எனக்கு பின்னால் அவர்கள் நான் செய்துவந்த அனைத்து சேவைகளையும் தொடரணும்...வாழ்க்கையில் பல அடிகளை , ஏமாற்றங்களை, வலிகளை தாங்கியவர்கள்.. அதனாலே இவர்களை தேர்ந்தெடுத்தேன்..."

" உங்க மகன் வெளிநாட்டில் .. அப்ப இவங்க எப்படி இங்க ..?"

" ஆமா .. அவன் இப்போது வேலை பார்ப்பது ஒரு பெரிய அராபிய ஷேக்கிடம்தான்... கொஞ்ச நாள் நன்றாக சம்பாதித்துவிட்டு இங்கு வந்தே தொழில் தொடங்கும் எண்ணம்.அதில் முழுக்க முழுக்க ஆதரவற்றவருக்கே வேலை...

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் , அவன் முதலாளியும் இத்தகைய சேவையில் மகிழ்ச்சியோடிருக்கிறார், மேலும் உதவ.."


"அவன் பிறப்பால் இந்து... வளர்ந்தது கிறிஸ்துவ பள்ளி, கல்லூரியில்... வேலை பார்ப்பது இஸ்லாமியரிடத்தில்..ஹஹ..அவன் யோகம் எல்லாமே அவனுக்கு நல்லவர்களாய் அமைந்தது...மேலும் ஆண் என்பதாலும்...." என அவள் சொல்லும்போதே அவள் பெண் என்பதால் அடைந்த வேதனை இன்னும் அவள் மனதில் ஆழமாய் பதிந்திருப்பது தெரிந்தது...

" ச‌ரி ஒரு க‌டின‌மான‌ கேள்வி.. பிடிக்காவிட்டால் ப‌தில் வேண்டாம் .. வ‌ருத்தினாலும் ம‌ன்னியுங்க‌ள்.."

" ப‌ர‌வாயில்லை கேள்.என்ன‌ பெரிதாக‌ கேட்டுவிட‌ப்போகிறாய்.. நீ?... எல்லா அறுவ‌றுப்புக‌ளையும், கேலி கிண்ட‌லையும் ஏமாற்ற‌ங்க‌ளையும் பார்த்தவ‌ள் நான்.. இதுக்கு மேலும் என்னை யாரும் காய‌ப்ப‌டுத்திட‌ முடியாது என்ன‌ள‌வில்..

கோவிலுக்கு சென்றால் என் முக‌த்தின் மீதே காரித்துப்பிய பெண்கள் உண்டு.., அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் என் வாடிக்கையாள‌ர் என‌ தெரியாம‌லே..ச‌ரி நீ கேட்க‌ வ‌ந்த‌தை கேள்..." சிரித்தாள்" இல்லை, இன்னும் இந்த‌ தொழில் செய்கிறீர்க‌ளா என்ன‌?.."

" ம். என்ன‌ ப‌தில் சொல்ல‌..இப்போது என் மீதான‌ பார்வையே வேறு.. இந்த‌ தொழிலை பொறுத்த‌ வ‌ரை வ‌ய‌சுக்குத்தான் ம‌திப்பு.. ஆனாலும் துணை தேடி வ‌ருப‌வ‌ர்க‌ளும் உண்டு... அவ‌ர்க‌ள் எங்க‌ளைப்போன்ற‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ளையே விரும்புவார்க‌ள்...கூடவே அழைத்துச்செண்று அவர்களுக்கு பணிபுரிய மட்டுமே உபயோகிப்பவர்களும் உண்டு.. இதில் சிலர் ம்அனைவியை இழந்தவர்கள், அல்லது மனைவியால் கவனிக்கப்படாதவர்கள்..

ஆனாலும் நானே இதை 2 வ‌ருட‌ம் முன்பு நிப்பாட்டிவிட்டேன்.. அத‌ற்கு கார‌ண‌ம் ஒரு தொழில‌திப‌ர்...அவ‌ரை ச‌ந்தித்த‌தே நில‌த்த‌க‌றாரில்தான்..அவ‌ருடைய‌ தொழிற்சாலையை ஒட்டிய‌ நில‌ம் விலைக்கு வ‌ந்த‌போது ப‌ல‌த்த‌ போட்டி..ஆனால் நான் இதை ந‌ல்லெண்ண‌த்துக்கு வாங்குகின்றேன் என்ற‌தும் விட்டுக்கொடுத்த‌ மாம‌னித‌ர்.. அதில் ஏற்ப‌ட்ட‌ ப‌ழ‌க்க‌மே காத‌லாய் மாறிய‌து..காதல் என்று கூட சொல்ல முடியாது .. சிறந்த நட்பு..." என‌ சொல்லும்போதே வெட்க‌ப்ப‌ட்டாள் ந‌ளினா.


என் உட‌ம்பையே பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ருள், முத‌ன்முத‌லாக‌ ம‌ன‌தை மட்டுமே பார்த்த‌ ம‌ஹான் அவ‌ர்..

வாய் திற‌ந்து 4 வார்த்தை தொட‌ர்ந்து பேசிட‌மாட்டார்..அவ‌ர் க‌ண்க‌ளிலேயே குடியிருக்கும் அத்த‌னை இர‌க்க‌ம்..நாங்க‌ள் இருவ‌ரும் ச‌ந்திப்ப‌து என்னை சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் கூட‌ தெரியாது..

ஏனெனில் அவ‌ர் மிக‌ப்பெரிய‌ புள்ளி இங்கு...அவ‌ருக்கு என்னால் எந்த‌ பிர‌ச்னையும் வ‌ர‌க்கூடாது என‌ மிக‌ க‌வ‌ன‌மாக‌ இருப்பேன்..

நாங்க‌ள் இருவ‌ரும் ச‌ந்தித்துக்கொண்டால் என்ன‌ பேசுவோம் என‌ நினைக்கிறாய்..?.. "


" ம். சொல்லுங்க‌ள்.." புன்ன‌கைத்தாள் ம‌ல‌ர்..


" இல‌க்கிய‌ம் பேசுவோம்..ஆத‌ர‌வ‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி உத‌வ‌லாம் என‌ பேசுவோம்..என‌க்கான‌ தைரிய‌த்தை த‌ருவார் அவ‌ர்...மறுபடியும் புதிதாய் இவ்வுலகில் பிறந்த உணர்வை தந்தவர் அவர்..கசக்கி பிழிந்து தூக்கி எறியப்பட்ட வாசனையற்ற மலரான என்னை மீண்டும் மணம் பரப்பும் மலராக மாற்றியவர்.. ஆண்கள் மேலே வெறுப்போடு இருந்த நான் இப்படிப்பட்ட சிலரையும் சந்தித்தது நான் செய்த பாக்கியம் மா."

" யார் என‌ நான் அறிய‌லாமா.?.. அப்படி ஒரு நல்ல மனிதரை தெரிந்துகொள்ளும் ஆவல்தான்.."

புன்ன‌கைத்தாள் ந‌ளினா..." இல்லைம்மா.. அது ம‌ட்டும் தெய்வீக‌மாக‌ இருக்க‌ட்டும்.. என் ம‌ன‌தினுள்ளே.. ஆனால் தேவைப்ப‌ட்டால் சொல்லுகிறேன்.உலகத்தில் நம்மை எந்த எதிர்பார்ப்பும் இல்லாது யாராவது நேசித்தால் அதுதான் மிகப்பெரிய அதிர்ஷ்டம் .. நான் அனுபவித்துவிட்டேன் மா,.." என்றாள் புதிரோடு...

இன்றாவ‌து சீக்கிர‌ம் திரும்பிட‌ணும் என‌ அவ‌ளிட‌ம் விடைபெற்றுக்கொண்டு ம‌ல‌ர் வேக‌மாய் வீடு வ‌ந்து சேர்ந்தாள், வ‌ழியிலேயே கொஞ்ச‌ம் காய்க‌றியையும் வாங்கிக்கொண்டு...

நுழைவிலேயே வெளிநாட்டு கார் நிற்கிறது..

அடுக்க‌க‌ம் மாடியில் நுழையும்போதே வேக‌மாய் வெளிவ‌ருகிறார், க‌ண‌வ‌னின் அக்கா..கோடீஸ்வரி... ப‌ய‌த்தோடே ம‌ரியாதைக்காக‌ சிரித்து வைத்தாள்..

ஆனால் அதை அல‌ட்சிய‌மாக‌ முக‌த்தை சுழித்துக்கொண்டு இடிப்ப‌துபோல் இற‌ங்கி சென்றாள் நாத்த‌னார்..

உள்ளே நுழைந்த‌துமே,


" இன்னிக்கு என்ன‌ காவ‌ல் நிலைய‌த்தில் அம்ம‌ணிக்கு வேலையோ?.. " கோப‌மாக‌ செய்தித்தாளை எடுத்துப்போட்டான் முக‌த்தில்.


எடுத்து பார்த்த‌வ‌ள் அதிர்ந்தாள்.. ந‌ளினாவோடு அருகில் தானும் நிற்ப‌துபோல் . பழி வாங்கிவிட்டான் "உண்மை இன்றே "பத்திரிக்கைக்காரன்.. ..( மன்னிக்கவும் உண்மை என்ற பத்திரிக்கை இருப்பதால்)


ஒஹ்ஹ் அதுதான் அக்கா விரைவாக‌ வ‌ந்து ப‌ற்ற‌ வைத்துவிட்டு சென்றாளோ.. எல்லாம் புரிந்த‌து.. ஆனால் எடுத்து சொன்னால் கேட்க‌க்கூடிய‌ ம‌ன‌நிலையில் அவ‌னில்லை..


" நான் ந‌ளினாவின் பெண்க‌ளை காப்பாற்றிட‌ உத‌வி செய்ய‌ போனேன்..."


" போதும் நிப்பாட்டு.. என‌க்கு எந்த‌ விள‌க்க‌மும் தேவையில்லை...இனி நான்தான் முடிவு செய்ய‌ணும்...உங்கூட‌ வாழ‌ணுமா வேண்டாமா னு..எங்க‌ வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ளை எதிர்த்துகொண்டு உன்னை திரும‌ண‌ம் செய்த‌மைக்கு நல்ல‌ பாட‌ம் என‌க்கு.."அதிர்ச்சியுற்றாள் ம‌ல‌ர்.. அக்கா‌ பேச்சை கேட்டு ஆர‌ம்ப‌த்தில் இருந்தே குழ‌ப்ப‌ம்.. விருப்ப‌மில்லாவிட்டாலும் துர‌த்தி துர‌த்தி காத‌லித்து எல்லார் ச‌ம்ம‌த‌த்தையும் பெற்று க‌ர‌ம் பிடித்த‌வ‌ன் இன்று அப்ப‌டியே மாறிப்போன‌தென்ன‌?..


த‌ன்னை மீறி வ‌டிந்த‌ க‌ண்ணீரை துடைத்துக்கொண்டு, குளித்துவிட்டு உடை மாற்ற‌ சென்றாள்..


" சாப்பிடுறீங்க‌ளா?.. "

ப‌திலேயில்லை..அவ‌ளும் சாப்பிட‌ பிடிக்காம‌ல், கொஞ்ச‌ம் பாலை ம‌ட்டும் அருந்திவிட்டு , வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு , கணவனுக்காக பூஜையறையில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு , புத்த‌க‌ம் எடுத்துக்கொண்டு ப‌டுக்க‌ சென்றாள்..

வேக‌மாய் வ‌ந்த‌வ‌ன் த‌லைய‌ணை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்றுவிட்டான்...

அப்போது அவ‌னின் கோப‌த்தின் வேக‌ம் வ‌ருத்த‌ம‌ளித்த‌து... ச‌ரி என்ன‌ இருந்தாலும் அவ‌னின் ந‌ல்ல‌ குண‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றை அசைபோட்டுக்கொண்டு, ஈகோ பார்க்காம‌ல் பேசிட‌லாம் என‌ நினைத்து

அவ‌ன் அறைக்கு வ‌லிய‌ சென்றாள்...மெதுவாக கதவை தட்டி, சம்மதம் வாங்கி உள்ளே சென்றாள்...க‌ண்டுகொள்ள‌வேயில்லை அவ‌ன்..கணினியில் மும்முரமாய் இருந்தான்..

எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து என‌ த‌ய‌க்க‌ம் அவ‌ளுக்கு..

" அக்கா வ‌ந்தாங்க‌ போல‌..?"


" " பதிலில்லை

" என்ன‌ விஷ‌ய‌மாம்..?"

" உன‌க்குத்தேவையில்லை. நீ போகலாம்.." க‌டின‌மாக‌ வ‌ருது..


" நிஜ‌மாத்தான் சொல்றீங்க‌ளா , பிரிவ‌து ப‌ற்றி?"


" ஆமா, என் குடும்பத்தில் இதெல்லாம் ப‌ழ‌க்க‌மில்லை.. இப்ப‌டி செய்தி பேப்ப‌ரில்வ‌ருவ‌து..நாங்க‌ யோசிக்க‌ணும்.."

புதிதாக ‌" நாங்க‌ " னு த‌ன்னை த‌னியே விட்டு சொல்லுகிறார்...

இனி இப்ப‌ பேசி பிர‌யோச‌ன‌மில்லை என‌ நினைத்து வெளியேறிய‌வ‌ள், சிறிது யோச‌னைக்கு பின், தைரிய‌மாக‌ உள்ளே வ‌ந்து,


" ஆனா ஒண்ணு, நீங்க‌ தான் என்னை அதிக‌மாக‌ இழ‌ப்பீர்க‌ள் உங்க‌ளை நான் இழ‌ப்ப‌தைவிட‌...என்னை அவ்வ‌ளவு சீக்கிர‌ம் ம‌ற‌ந்துவிடுவீர்க‌ளா?..என்ன‌?.
......................................என்னாலும் முடியாது.." மேலும் க‌ண்ணீர் வ‌ர‌, சொல்லிவிட்டு வேக‌மாய் திரும்பிவிட்டாள்..

அவ‌ள் சொல்லிவிட்டு போன‌தும், அவ‌ளின் வார்த்தைக‌ள் அவ‌னை குடைய‌ ஆர‌ம்பித்த‌து...என்ன‌தான் கோப‌த்தில் சொன்னாலும், எவ்வ‌ள‌வு பெரிய‌ உண்மையை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.. ம‌ற்ற‌ பெண்க‌ளைப்போல் ச‌வாலாக‌ எடுத்துக்கொள்ளாம‌ல், ஈகோ இல்லாம‌ல், த‌ன் நேசிப்பையும் வெளிப்ப‌டுத்திவிட்டு..?

உள்ளூர‌ ம‌கிழ்ந்தான், அவ‌ளை புரிந்துகொள்ளாம‌லேயே..ஆனாலுமமிதை வைத்து அவளை வழிக்கொணரலாம் என்றும் நினைத்தான்.

அவ‌னை ம‌கிழ்வித்த‌வ‌ள், அவ‌ன் சொன்ன‌ வார்த்தைக‌ளின் வீரிய‌த்தை குறித்து நினைத்து த‌லைய‌ணையை ந‌னைத்தாள்...அவ‌ளின் க‌வ‌லையெல்லாம் பெற்றோருக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்ப‌தாக‌வே இருந்த‌து..


மனதினுள் நளினாவின் வரிகள் ஓடின...

" உலகத்தில் நம்மை எந்த எதிர்பார்ப்பும் இல்லாது யாராவது நேசித்தால் அதுதான் மிகப்பெரிய அதிர்ஷ்டம்."


விடியும்போது இருவ‌ரும் எதிர்பாராத‌ , முரண்பாடான முடிவோடு எழுந்த‌ன‌ர்..

ஒதுக்கப்பட்ட கல்..பாகம் 5-7

ஒதுக்கப்பட்ட கல்..பாகம் -7


திரும்பி படுத்துக்கொண்ட கணவனின் செயல் புரியவைத்தது, அவனுக்கு இதிலேதும் அறிந்துகொள்ள கூட விருப்பமேயில்லை என்று..

தானும் இனி அதுபற்றி ஏதும் பகிர்ந்துகொள்வதில்லை என தீர்மானித்தாள் மலர்..அதுவும் அவனுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று மட்டுமே.

மறுநாள் காலையிலேயே நளினாவிடமிருந்து அழைப்பு..

தான் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு செல்வதாகவும், தேவைப்பட்டால் அங்கு வந்து சந்திக்குமாறும்...விவரம் கேட்பதற்குள் வைத்துவிட்டார்.

காவல் நிலையத்துக்கு செல்வது மலருக்கு புதிதில்லை என்றாலும், இதுவரை துறை அதிகாரிகளை சந்திப்பதற்காகவோ,

ஏதாவது முக்கிய கேஸ் சம்பந்தப்பட்ட பேட்டிக்காக மட்டுமே சென்றிருக்கிறாள்...

இப்போது முதல் முறையாக ஒரு பாலியல் தொழிலாளி விஷயமாக செல்வது பற்றி...?...


யோசிக்கிறாள்.. தன் மனதில் எந்த கபடமோ, கசடோ இல்லையென்றாலும், உலகத்துக்கு புரிய வைப்பது அவ்வளவு

எளிதல்லவே...என்ன விஷயமோ, எத்தனை பெண்களோ?.. அதை பற்றி அவளால் கற்பனை பண்ணக்கூட சங்கடமாயிருந்தது..

நேராக அலுவல் சென்று சுதிரிடம் சொல்லிவிட்டு அழைத்துச்செல்லலாம் என நினைத்து விரைந்தாள்...

ஆனால் முதலாளியிடம் வசமாக மாட்டிக்கொண்டாள்... வேறு வழியின்றி இத்தகவலையும் சுதிரை அழைத்து செல்ல அனுமதியும் கோர

வேண்டியிருந்தது...

" அடடே.. அப்ப நானும் வரலாம் போல.."

கிண்டலடித்தார், தன் சுயரூபத்தை காவிப்பற்கள் மூலமாய் அகோரமாய்..காண்பித்து..

மலரிடம் இருந்து பதிலேதும் இல்லாததால்,

" நல்ல செய்தி.. விட்டுடாதே.. முடிந்தால் அந்த பெண்களையும் படம் பிடித்து, அழகிகள் கைது என்றோ, பட்டப்பகலில், ராணிகள் கைது என்றோ கொட்ட எழுத்தில்

வருமாறு தயார் செய் .. நான் வந்து பார்க்கிறேன்..."

அழுகின முட்டைகளை எடுத்து அவர் மேல் அபிஷேகம் பண்ணுவதாய் ஒரு நிமிடம் கற்பனை பண்ணினாள் மலர்.

தன்னை மீறி சிரிப்பும் வந்தது அவர் முகத்தில் முட்டை வடிவதை பார்த்து...

" என்ன நான் சொன்னது சிரிப்பாயிருக்கா..?.. ம். அப்படித்தான் இந்த வேலைக்கு எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ளும்

பக்குவம் தேவை... அது உனக்கு வந்துவிட்டதே.." என்றார் ஏதோ அவார்ட் கொடுப்பது போல..

" அட கிறுக்கு முதலாளியே, உன் வீட்டு பெண்களை அப்படி படம் எடுத்து போட்டால் நீ எளிதாக எடுத்துக்கொள்வியோ என்னமோ"

என எண்ணிவிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் அவர் அருகில் இருந்தால் தனக்கு வருகிற கோபத்தில் எதுவும் நடந்திடுமோ என அஞ்சி,

மேஜையில் உள்ள தாள்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு காப்பி எடுக்க சென்றாள் அடுத்த அறைக்கு..

சுதிரிடம் , சிக்கிரம் கிளம்பு என கண்ஜாடை காண்பித்துவிட்டு , தப்பித்ததுபோல் வெளியேறினாள் அலுவலிலிருந்து..

------------------------------
---------------------------------------------------------

அந்த ஜன நெருக்கடியான சந்து பொந்துகளில் நுழைந்து காவல் நிலையத்தை அடைவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது...

வெளியிலேயே நின்று கொண்டு நளினாவுக்கு தொலைபேசினாள்..

மணி ஒலித்ததே தவிர எடுத்த பாடில்லை..

சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று மெதுவாக சென்றவளை, தடுத்து கைநீட்டினார் வாயிலில் நின்ற காவலர்..

வணக்கம் சொல்லிவிட்டு, கழுத்தில் தொங்கவிட்டிருந்த பிரஸ் என்ற அடையாள அட்டையினை காண்பித்தாள்..

காத்திருக்க சொல்லிவிட்டு அனுமதி வாங்கி வர செல்வதுபோல் சென்றார் ..அவர் போகிற போக்கிலேயே தெரிந்தது அனுமதி கிடைக்காதென்று..

திரும்பி வந்து இப்போது போக முடியாது எனவும், உள்ளே இருப்பவர் புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் உயர் அதிகாரி

எனவும் மறுத்துவிட, அந்த அதிகாரியையாவது தான் நேரில் காண மீண்டும் அனுமதி கோரினாள் மலர்.

அதை அவர் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.. அவரும் ஏதோ அவசரத்திலோ பயத்திலோ இருந்தார்..

வேப்ப மரத்தடியில் நின்றவள் , எரிச்சலோடு , சரி எதற்கும் தன் முதலாளிக்கு தொலைபேசிடலாம் என எண்ணியவாறு, எண்களை அழுத்தியவள்,

க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்................ என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் ..

புது மாடல் ஹோண்டா காரும் அதிலிருந்து வக்கீல் ஒருவரும் கூட இருவரும் இறங்கி வந்தார்கள்...

வந்ததும் காவலர் அவரை ஏதும் கேட்காமல் உள்ளே விட்டார்.

அடுத்த சில நொடிகளில், ஒரு மோட்டார் பைக்கும் அதிலிருந்து கேமரா சகிதமாக இருவர் வந்தனர்..

மோட்டார் பைக்கை நிப்பாட்டு முன்னரே பின்னால் அமர்ந்திருந்தவர் குதித்து கேமராவை அவசரமாக சரிசெய்துகொண்டு ஓடி வந்தார்..

வந்ததுமே காவலர் கையில் ஏதோ திணித்தார்... கூர்ந்து கவனிப்பதற்குள், அவரும் உள்ளே நுழைந்தார்...

அதற்குள் உள்ளே பலத்த சத்தம் கேட்டது... சில மெல்லிய அழுகுரல்கள்..

நளினாவின் சத்தம் இப்போது ஓங்கி ஒலித்தது... பக்கவாட்டில் போய் மலர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்,

காவலரின் " அங்கெல்லாம் போகாதீங்கம்மா " என்ற சத்தத்தையும் மீறி...


உள்ளே இருந்து இன்னொரு காவலர் வந்து வெளியே இருந்தவரிடம் ஒதுங்கிபோய் ஏதோ பேசி தாள்கள் கொடுக்க, அந்த சில நேர

இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு, சட்டென்று உள்ளே நுழைந்தாள் மலர்...

அங்கே நளினா, போட்டோகிராபரோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள்....யாரையும் போட்டோ எடுக்கக்கூடாது என..

வக்கீல் தலமைக்காவலரோடு பேசிக்கொண்டிருந்தார்.. 4 பெண்கள்.. அதில் ஒருவரை ஏற்கனவே நளினா வீட்டில் சந்தித்தவள்தான்.

எல்லாம் 16-18 வயதுக்குள்ளான சிறுமிகளாய்த்தான் இருக்கணும்...


நளினா மிகுந்த வருத்ததோடு அழுதாள்..


" பாரும்மா மலர், கைத்தொழில் கற்றுத்தரும் கல்லூரிக்கு சென்ற இப்பெண்களை பிடித்துகொண்டு வந்துள்ளார்கள்..யாரோ வேண்டாதவனின் வேலை... இப்படி வேறு தொந்தரவு பண்றாங்களே.."

தலைமைக்கவலரிடம் சென்று மலர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , அவர் சம்மதம் சொல்லுமுன்னே, அந்த போட்டோ கிராபரிடம் சென்று

சத்தம் போட்டாள்.. விபரம் கேட்டாள்.. எந்த பிரஸ், யார் நடத்துகிறார்கள், தகவல் கொடுத்தது யார் என பலவும்...

" உண்மை" என்கிற பத்திரிக்கையில் இருந்து வருவதாக, சொன்னதும், வெகுண்டு எழுந்தாள்.. நேற்று முளைத்த பத்திரிக்கைக்கு எல்லாம் யார்

அனுமதி கொடுப்பது...

தன் இரு கைகளையும் அப்பெண்கள் முன்னால் விரித்து இனி ஏதும் படம் எடுக்கக்கூடாது, மீறி எடுத்தால் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்

என எச்சரித்தாள்.

" உங்களுக்கென்ன வந்தது.. என்ன வேணுமோ வாங்கிட்டு போங்கம்மா.. எங்க பத்திரிக்கையை நடத்துவது யார்னு தெரியுமுல்ல.?" என கொஞ்சம் அலட்சியமாக மிரட்டி பார்த்தான் பெண்தானே என்று..

அதற்குள் சுதிர் வந்து தடுத்து தன் முதலாளியின் பலத்தையும் , தங்கள் பத்திரிக்கையின் பிரபலத்தையும், ஆளும் கட்சியில் முதலாளிக்கு இருக்கும் அதிகாரத்தையும் கொஞ்சம் கோபத்தோடு தெரிவித்தான்..

"எனக்கு தெரிந்த பிரமுகர்கள் யாரும் இன்று ஊரில் இல்லம்மா.. இப்படி நடக்கும்னு தெரியாதே...என்னை வேணா இவனுங்க படம் பிடிச்சுக்கட்டும்..

இந்த பிஞ்சுகளை படம் பிடிக்க அனுமதிக்கவே மட்டேன்.. அதுக பாட்டுக்கு ஒழுங்கா காலேஜுக்கு போனதுக..."


அரற்றிக்கொண்டேயிருந்தாள் நளினா...


தலைமைக்கவலரிடம் மலர் வேகமாய் பேசவும், ... அவர் அவர்களை கைது செய்த ஏட்டிடம் கத்தினார்..மேலும் இதுக்கு ஒத்தூதிய காவலரையும் கண்டித்தார்..

"என்னிடம் கேட்காமல் எந்த பத்திரிக்கைக்கும் செய்தி தராதீர்கள்... டிபார்ட்மெண்ட்டுக்கே உங்களால் கெட்ட பேர் வருதே "என வருத்தப்பட்டார்..

இனிமேல் இதுபோன்ற சில்லரைத்தனமாக நடக்கக்கூடாது எனவும் கண்டித்தார்...


வக்கீல் ஒருவழியாக அவர்களை பிரச்னையின்றி மீட்டதும், வெளியே வந்த நளினா , வக்கீலிடம் விடைபெற்றுக்கொண்டு அவளுடைய டாடா சுமோவில் ஏறப்போனவள்

மலரையும் தன்கூடவே வரச்சொன்னாள்... அந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் மறைத்துக்கொண்டு காரில் ஏற முயற்சிக்க, மீண்டும் பிளாஷ் அடித்தது கேமராவில்.

சுதிருக்கு இப்போது பயங்கர கோபம் வந்தது... " ரஸ்கல்" என கத்திக்கொண்டே ,கையையும் உயர்த்திக்கொண்டே அவனை குத்துவது போல வேகமாய் போனான்..

அதற்குள் பக்கத்தில் இருந்தவன் கேமராவை அவனிடமிருந்து பிடுங்கி சுதிரிடம் தந்துவிட அதை வாங்கி மட மடவென்று அழித்தான்

பின் எச்சரிக்கையும் விடுத்து வந்தான்.,. நா கூசும் வார்த்தைகளையும் சொல்லிவிட்டு..


மலருக்கே கூச்சமாய் இருந்தது.. " சுதிர் நீ எப்படி இப்படி பேசுற.. நான் பார்த்ததேயில்லை உன்னை இப்படி கோபப்பட்டு..?"

" எனக்கும் பழக்கமில்லை மலர்.. ஆனா இவனுங்க மாதிரி ஆளுங்க கிட்ட இப்படி பேசினாத்தான் அடங்குவாங்க..என்ன தைரியம் இருந்தா இவ்வளவு

சொல்லியும் படம் எடுப்பாங்க.. இதெல்லாம் ஒரு பொழப்பா,?.. சே..அக்கா தங்கச்சிய பார்த்ததேயில்லையா இந்த பசங்க.. ?.மனிதாபிமானமே கிடையாதா?... " என

நிஜமாகவே அப்பெண்களுக்காக அவன் வருந்தியபோது அவன் மேல் மலருக்கு அதிக மதிப்பு உண்டாயிற்று...

நால்வரில் 3 பேர் பேரழகிகள்.. ஒருத்தி மட்டுமே சுமார்..

ஒருத்தருக்கொருத்தர் கூட முகம் பார்த்து பேசாமல், நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. முடிந்தவரை நளினாவின் பின் மறைய எத்தனித்தார்கள்...


" சுதிர், இருந்தாலும் அடிக்கும் அளவிற்கு தைரியம் இருக்கா என்ன உனக்கு..?"

" ஏன் இல்லாமல் .. நான் கராத்தேல்லாம் கற்றுதான் வைத்திருக்கிறேன்.. கொஞ்சம் பாக்ஸிங்கும்.கூட..ஆனா இதுக்கு தேவைப்படும்னு நினைக்கல மலர்.."

நளினா மட்டுமின்றி அந்தப்பெண்களும் மிகுந்த நன்றியுணர்வோடு கைகூப்பினார்கள்..கண்ணீரோடு..அப்போதும்கூட ஏறெடுத்து பார்க்கவில்லை மூவரும்..

அதிலிருந்தே நளினாவின் வளர்ப்பையும், பாதுகாப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது மலரால்...
சுதிர் , அதை ஏதும் எதிர்பார்க்காதவனாய் ,எதையும் பெரிது படுத்தாது ,

" அடுத்தமுறை கவனமா இருங்க . கைது பண்ணினால் , கொஞ்சம் எதிர்ப்பு காட்ட பழகுங்க.. கத்தி கூச்சலிடுங்க பொது இடம் என்றால்..நீங்கதான் தப்பு பண்ணலையே.. அப்புரம் ஏன் பயப்படணும்?. "

என யாருடைய முகத்தையும் பார்க்காது பொதுவாக சொல்லிவிட்டு,


சுதிர் சென்று காரில் உட்கார்ந்து கொள்ள , பின்தொடர்ந்த மலர்..நளினாவின் காரிலேயே ஏறிக்கொண்டாள்..

" வீட்டு வேலைக்கென சொல்லி அழைத்துவரப்பட்ட பிள்ளைகள்மா இந்தப்பெண்கள்.. தவறான பாதையில் தள்ளப்பட முயல,

அவர்களை நான் காப்பாற்றி , வீட்டிலிருந்தே படித்து +2 பாஸ் பண்ணிவிட்டு பின் தொழில் ஏதாவது கற்றுக்கொள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் .

ம். இன்னும் இப்படி எத்தனை பெண்களோ , எங்கே மாட்டினார்களோ , யார் கண்டா .ம்..?" என பெருமூச்சு விட்டாள் நளினா..

பயணத்தின் இடையிலேயே கல்லூரிக்கு சென்று முதல்வரையும் சந்தித்து ,இனி அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு தருமாறும் கேட்டுக்கொண்டு அப்பெண்களை கல்லூரியிலேயே இறக்கியும் விட்டார்.

அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சுதிர், வைத்த கண் வாங்காமல் நீல நிற சுடிதார் போட்ட பெண்ணை மட்டும் சந்தேக கண்ணோடு பார்த்துக்கொண்டிருந்தான்..

அதை கவனித்த மலர், சைகையாலயே " என்ன " என கேட்டாள்...

" ஒண்ணுமில்லை... "

" ஹேய்..... என்ன விஷய்ம?. " என கிண்டலடித்தாள் மெதுவாக...

" அட.. அவளைப்பார்த்தால் என் சித்தி பெண்ணின் ஜாடை இருக்குது...அதான் சொல்வேனுல்ல பெங்களூர் தங்கை பற்றி..அவளை மாதிரியே இருக்கிராள்..."

" ம். அதானே பார்த்தேன்..." மெலிதாக புன்னகைத்தாள் மலர்.


மலருடன் மட்டும் பயணத்தை தொடர்ந்தாள்.நளினா...அவள் காரில்...

அப்போதுதான் ஒரு உண்மையையும் மலரிடம் தயங்கியபடியே சொன்னாள்...

"இந்த நால்வரில் ஒருத்திக்கு குழந்தை உண்டு என உனக்குத்தான் தெரியுமே.மா ....வீட்டிலேயே சந்தித்துள்ளாய்..

ஆனா மற்ற மூவரும் நான் நடத்தும் அனாதைக்குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்து வேலையோடு, படிக்கவும் அனுப்புகிறேன்...

இந்த மூவரில் ஒருத்தி மிக கொடுத்து வைத்தவள்..தெரியுமா...?"என சொல்லிவிட்டு மலரைப்பார்த்து புன்னகைத்தாள்..


" என்ன சொல்றீங்க.. எனக்கொண்ணும் பு..ரி..ய...லை..யே.." என புருவத்தை சுருக்கிக்கொண்டு ஆச்சர்யமாக கவனித்தாள் நளினாவின் கண்களில் உள்ள மகிழ்ச்சியை..

" புரியலையா....? " சரி சொல்றேன்....முதலில் ஏதாவது நல்ல உணவு விடுதிக்கு சென்று கொஞ்சமாய் சாப்பிடலாம் .. இன்று என் செலவு ..மறுக்கக்கூடாது தயவுசெய்து "என சொல்லிவிட்டு, அருகில் இருந்த அன்னபூர்ணா வுக்கு

சென்று அனைவருக்கும் தேவையானதை ஆர்டர் பண்ணிவிட்டு மலரிடம் மட்டும் மெதுவாக பேச ஆரம்பித்தாள்...மீண்டும் மலர்ச்சியோடு..


அவள் சொல்ல ஆரம்பித்ததும் , ஒவ்வொருமுறையும் நிமிர்ந்து உட்கார்ந்தாள் மலர்..மிக ஆச்சர்யத்துடனும், மகிழ்ச்சியுடனும்..நம்பமுடியாதவளாய்...ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 6

போன் வந்ததும் முகத்தில் தாங்க முடியாத மலர்ச்சி நளினிக்கு...

அருமை மகனிடம் தொலை பேசும்போது பூரிப்படைகிறாள்...

கண்ணே, என்றும் செல்லம், என்றும், தங்கம் என மட்டுமே காதில் ஒலிக்கிறது...

தேக்கி வைத்த பாசமனைத்தும் விடுபட்ட வெள்ளமாய் பாய்கிறது, சுற்றம் பற்றி ஏதுவும் நினைப்பின்றி...

மலர் கையிலுள்ள கடிகாரத்தை பார்த்து நேரமாகிக்கொண்டிருப்பதை உணர்கிறாள்...

நளினி தொலைபேசி முடித்ததும், இருவருமாய் கிளம்பும்போதே காரில் மகனைப்பற்றிய விவரங்களை மிக பெருமையோடு

சொல்லிக்கொண்டே வந்ததில் தூரம் போனதே தெரியவில்லை...

பிள்ளையார் கோயில் நிறுத்தம் வந்ததும்தான் உரைக்கிறது...

" இங்கேயே நிப்பாட்டுங்கள்..மா.. என் வீட்டுக்கு நேர் பேரூந்து நிற்கும்... எளிதாய் சென்றுவிடுவேன்..நீங்கள் தொடருங்கள்..பயணத்தை இந்த வழியில்..."

" இல்லையம்மா, இருட்டப்போகின்றது வீட்டிலேயே விடுகிறேன்.. சிரமமொன்றுமில்லை .."

" நான் தினமும் வீடு திரும்பும் வேளைதான் .. எனக்கு பழக்கமான இடம்தான் கவலை வேண்டாம் மா." என மென்மையாக

மறுத்து விடைபெற்றுவிட்டு, பையினுள் காசு எடுக்க நினைத்தவளின் பார்வையில் அகப்பட்டது மொபைல்...

அட , என்ன இது ஒரு போன், எஸ்.எம்.எஸ் கூட வரலியேன்னு பார்த்தா சார்ஜ் இல்லையா, இல்லை அணைக்கப்பட்டிருந்ததா?..

ஆன் செய்து பார்த்தால், 3 மிஸ்ட் கால் கணவரிடமிருந்து...

உடனே தொடர்பு கொண்டாள்.. ரிங் போகுது ஆனா பதிலில்லை...

பரக்க பரக்க ஆட்டோ பிடித்தே வீடு வந்து சேர்ந்தாள்...பஸ்ஸுக்கு கூட காத்திராமல்..

திறந்தே இருந்த வீட்டில் பக்கவாட்டு பால்கனியில் அம்மா நின்றுகொண்டிருந்தாள்..

இவர் ஏன் இங்கே?.. யோசித்தவளாய், செருப்பைக்கூட அவசரமாய் கழற்றிவிட்டு, சோபாவில் கைப்பையை வீசிவிட்டு

" அம்மா, எப்ப வந்தே..?" என்றாள் பின்பக்கமாய்..

" என்னம்மா , எங்கே இருக்கே, என்ன ஆச்சுன்னு ஒரு தகவல் சொல்லக்கூடாதா..?"

" ஏன்மா என்னாச்சு..?.. அப்பாக்கு ஒண்ணுமில்லையே?.. " பதறுகிறாள்..

" இல்லம்மா உன்னைப்பத்தித்தான் மாப்பிள்ளை கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்...போ உள்ளே போய் அவரை சமாதானப்படுத்து.."

" சரி நீ ஏன் வந்தே அத சொல்லும்மா..?"

" உன்னை தொலைபேசியில் அடைய முடியாமல், என்னிடம் வருந்தினார்... தம்பி வேற பெங்களூர் போயிருக்கானா, அதான் நான் வந்தேன்.."

" ச்.. ச்.. என்னம்மா.. அதுக்கு ஏன் நீ வரணும், அப்பாவை அந்த நிலைமையில் விட்டுட்டு?..என் மொபைல் ஆஃப் ஆயிருந்தது... அதுவும் மதியம் பேசினப்புரம்தான்..."

எரிச்சலாய் வந்தது மலருக்கு... சின்ன விஷயத்துக்கு போய் பெற்றோரை தொந்தரவு படுத்தியுள்ளாரே...

"ஏன்மா, காமக்கதை ஏதும் எழுதறியா என்ன நீ..?"

அதிர்ச்சியாக இருந்தது மலருக்கு....

" என்னம்மா சொல்ற..?.. யார் சொன்னா?. உனக்கு...?.. " கோபமே வந்தது இப்போது...

" எழுதலைன்னா சரி விடு...கேக்கல மா.."

" அம்மா, என்ன சொன்னார் இவர்... சொல்லு..?"

" விடும்மா.. போய் முகம் அலம்பிட்டு வரியா?.. வத்தகுழம்பு கொண்டு வந்தேன்... பொரிச்ச வடாம், அப்பளம் போட்டு சாப்பிடு..."

"அம்மா. பேச்சை மாத்தாதே.. சொல்லு என்ன சொல்லி இங்க வரவழைச்சார் உன்னை?.."

" ஏம்மா ஒண்ணும் இல்லாத விஷயத்தை பெரிது படுத்தற?.. நான் ஒரு முட்டாள்.. வந்ததும் வராததுமாய் இத போய் கேப்பேனா..உன்னிடம்.?"

நேரே கணவர் அறைக்குள் சென்றாள்...

" என் தொலைபேசி ஆஃப் செய்யப்பட்டிருந்தது .. நான் கவனிக்கலை.. ஆனால் மதியம் பேசிட்டுதானே வைத்தேன்.. சொல்லிட்டு தானே சென்றேன்..?"

" அது ஆஃப் னு யாருக்கு தெரியும்?."

" சரி அதுக்காக அம்மாகிட்ட நான் காமக்கதை எழுதுறேன்ன்னு சொன்னீங்களா?.. அப்பா முடியாம இருக்கார்னு தெரிஞ்சும் வர வெச்சீங்களா?"

" நான் உன் தம்பிகிட்ட பேச தான் போன் போட்டேன்..அவங்க பயந்து வந்துட்டாங்க.."

" ஓஹோ.. பதறுகிற அளவுக்கு பேசிருக்கீங்க... காமக்கதை எழுதுறேன்னு வேற பொய்...என்னை தண்டிக்க என்னுடைய வீக்நெஸ்ஸை பயன்படுத்துறீங்க..

அப்படித்தானே?..."

" சரி வந்ததும் வராததுமாய் ஏன் பிரச்னை பண்ற...பசிக்குது சாப்பாடு போடு.."

" பிரச்னை நாண் பண்றேனா?.. ஓஹ்.. சரி... நான் கிளம்புறேன் அம்மா கூட.. " என தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள் பையில்.

" ஏய் என்ன பண்ற.. சின்ன விஷயத்தை பெரிசு பண்ற நீ... அப்புரம் வருந்துவ..."

" ஹ.. ஒண்ணும் இல்லாததுக்கு என் பெற்றோருக்கு போன் பண்ணி அவர்களை வயதான காலத்தில் கலங்கடிப்பது உங்களுக்கு சின்ன விஷயம்னா,

இனி அந்த பயமே தேவையில்லை உங்களுக்கு... அவர்களை நான் பாத்துக்குறேன்.."

வெளியில் இருந்து இதையெல்லாம் கேட்டும் தான் தான் தப்பு செய்துவிட்டோமோ என வருந்திக்கொண்டிருந்தார் அம்மா..

கதவை திறந்து வெளியில் வந்த மருமகனிடம்,

" நீங்க வாங்க சாப்பிட... மலர் கொஞ்சம் நேரம் ஆனா சரியாயிடுவா மாப்பிள்ளை . அவ கோபமும் , குணமும் தெரிஞ்சதுதானே?.." என்றார் அன்போடு, அத்தனையையும் அடக்கிக்கொண்டு..விட்டுக்கொடுக்காமல்..

தலையிட விரும்பாமலும்...

அவர் சாப்பிட உட்கார்ந்ததும், மலர் வந்தாள் பையை சோஃபாவில் வைத்து விட்டு தட்டு எடுத்து வந்து தனக்கும் போட்டுக்கொண்டு சோஃபாவிலேயே தட்டோடு அமர்ந்தாள்,

கணவர் அருகில் அமர்ந்து சாப்பிட பிடிக்காதவளாய் , கோபத்தோடு...

" என்னம்மா பழக்கம் இது.. அப்பாக்கு இது பிடிக்காதே... ஒருநாளூம் நம் வீட்டில் இப்படி உட்காரமாட்டியே.?"

" ஆமாம்மா.. அப்பாவுக்கு பிடிக்காது, அண்ணா, தம்பிக்கு பிடிக்காது, கணவனுக்கு பிடிக்காதுன்னு காலம் காலமாய் அவர்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்யும் அடிமைகள் நாம்."

" அதுக்கு சொல்லல மா.. நல்ல பழக்கமும் இல்லையே.."சரி கொஞ்சம் பொறியல் வெச்சுக்கோ.." இனி அவளீடம் இப்ப எதும் பேசக்கூடாது என எண்ணிணார்.

சாப்பிட்டு முடித்ததும்,

" நான் ஆட்டோ பிடிச்சு விட்டால் போய்க்குவேன் மா..நீ வரவேண்டாம்.."

" இல்ல, நீ தனியா போகவேண்டாம் ராத்திரியில்... நான் 1 வாரம் அங்கதான் இருப்பேன்... என் வேலைக்கும் அது பக்கம்தான்.. அப்பாவையும் பார்த்த மாதிரி இருக்கும். நிம்மதி தேவை எனக்கு.."

" நான் போய் அத்தையை டிராப் பண்றேன்..." மெதுவாக சொன்னான்..

"ஒண்ணும் தேவையில்லை.. இன்னும் அப்பாவையும் குழப்பவா அங்கு போய்... காமக்கதை எழுதுறேனா?:" நேராக கண்கள் பார்த்து கேட்டாள்..

நல்ல கோபம் இருக்கு என புரிந்தவன் தன் அவசர புத்தியால் ஏற்பட்ட தப்பை புரிந்தான்...

இருப்பினும் மாமியார் முன், மன்னிப்பு கோர ஈகோ தடுக்குது...பிடிவாதக்காரி, இதுக்கு மேலேயும் வெடித்தாலும் வெடிப்பாள்...

காரை எடுக்க அவன் கீழே சென்றபோது அம்மாவும், மலரிடம் எடுத்து சொன்னார்,

" சரி கோபத்துல சொல்றதையெல்லாம் மனசுல வெச்சுகிட்டா குடும்பம் எப்படி நடத்த முடியும்..? ஆணுக்கு எப்பவும் அவசர புத்தில ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்வாங்கதான்..

வாய்ல இருந்து வாரது தானே தவிர, உள்ளத்துல இருந்து வாரது இல்லயேம்மா.. பொறுத்து போம்மா..."

" அம்மா , இது உன்னோட காலம் மாதிரி இல்லம்மா.. எது சொன்னாலும் அடங்கி ஒடுங்கி போறதுக்கு... நாங்களும் 4 எடத்துக்கு போறோம்...

4 மனுஷாளை சந்திக்கிறோம்... எங்களுக்கும் எரிச்சல், கோபம் எல்லாம் வருது... அதுக்காக நாங்களும் எங்க கோபத்தை வார்த்தையில் காட்டினா?."

"ம் . இன்னும் கோபம் தீரல போல... " மனசுக்குள் நினைத்தவள் சரி கொஞ்ச நேரம் போகட்டும் என பேச்சை திசை திருப்பி,

தம்பிக்கு வரன் வீட்டார் வருவதை பற்றி சொன்னாள்...மலரும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டாள்...

காரிலேயும் மருமகனிடம் அதை பகிர்ந்து கொண்டு அவர் அபிப்ராயத்தையும் கேட்டார் அம்மா...

அவரும் மிக உற்சாகமாய் கலந்துகொள்ளவே, மலருக்கு என்னவோ போலிருந்தது...யோசிப்போடு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள்..

வீடு வந்ததும், அம்மா இறங்கிவிட்டு, கதவை அடைத்தவளாய், கார் ஜன்னல் வழியே,

" சரி இன்னிக்கு நீ வீட்டுக்கு போ.. நாளைக்கு பேசிக்கொள்ளலாம்.. அப்பாவுக்கு இப்படி நீ தனியா வருவது பிடிக்காது.." என்றார்..

கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது மலருக்கு.. அதற்கும் மீறி அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..பேச வாயெடுத்தவளை, கையால் அழுத்தி பிடித்து தடுத்து,

" சொல்றேன்ல மா.." என்று கண்ணாலேயே அதட்டினார் அம்மா...

" சரி நீங்க கிளம்புங்க மாப்பிள்ளை " என்று சிரித்தபடி வழியனுப்பினாள்..

வீடு வந்தும் எதுவும் பேசவில்லை..மலர்.. மிக அசதியில் உடுப்பு மாத்திக்கொண்டு படுக்க சென்றுவிட்டாள்..

எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு ,மெதுவாக பூனை போல வந்தவன், சமாதானப்படுத்தும் விதமாய்,

கட்டிலில் உட்கார்ந்து கொண்டே, " காலை பிடித்து விடவா, ரொம்ப அலைச்சலா?.."

என்றதும் உதறிவிட்டாள்.. " நீங்க எப்படி என் அம்மாகிட்ட " என்று பேச வந்தவளின் வாயை பொத்தினான்...

" கோடி மன்னிப்புகள்.. என்னென்ன தண்டனை கொடுக்கப்போறியோ கொடுக்கலாம் .. ஆனா அதுக்கு முன்னால " என்றவன்,

கால் பிடிக்கத்தொடங்கியதும், எப்போதும் அவனின் ஊடலை ரசிப்பவளால் இன்று , பாலியல் தொழிலாளிகளுக்கு இப்படியொரு அன்பு கிடைக்குமா நம் கணவரிடம் கிடைப்பதுப்போல, என

அவர்களின் வேதனையை எண்ணி வருந்தியவள், அவர்கள் வாழ்க்கைக்கு கண்டிப்பாக ஏதாவது தன்னால் இயன்ற அளவுக்கு செய்யணும் என எண்ணிக்கொண்டாள்...

தனக்கு கிடைத்துள்ள அன்பான வாழ்க்கை , மனிதர்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லையோ என ஒருவித குற்ற உணர்ச்சி கொண்டாள்...

" என்னாச்சு மலர்.. நான் பேசிக்கொண்டே இருக்கேன்.. பதிலேயில்லை.. இன்னுமா கோபம்.."

" இல்லை..இல்லை.." என்று அவனோடு தன் எண்ண ஓட்டத்தை முழுவதுமாக பகிர்ந்துகொண்டாள்..

அணைத்திருந்த கைகளை மெதுவாக விடுவித்துக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டான் கண்களை மூடி......எதையும் கேட்க விரும்பாதவனாய்...


-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 5


தோட்டத்தில் உள்ளே சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போதே ரோஜா, மல்லிகையின் வாசனை மூக்கைத்துளைத்தது...

மெதுவாக குனிந்து ஒருமல்லிகை மொட்டினை முகர்ந்து பார்த்தாள் மலர்...

அதை கவனித்த நளினா,

" என்னம்மா உனக்கும் பூ என்றால் ரொம்ப ஆசையா..?"

" இரும்மா.. பறித்து வைத்துள்ள பூக்கூடையிலிருந்து எடுத்து வரச்சொல்கிறேன் "
என்று நகர்ந்தாள் மலர் தடுக்குமுன்...

அதேபோல் ஒரு தட்டு நிறய பூக்களை பரப்பிக்கொண்டு கொஞ்சம் நாறோடு வந்து வாகாய் மேட்டில் அமர்ந்துவிட்டு

தன்னையும் அருகில் உட்காரச்சொன்னாள்... கைகளோ விரைவாக பூக்களை தொடுக்க ஆரம்பித்தது..

அதையும் அதிசயமாக பார்த்தாள் மலர்..

" ம். அதெல்லாம் ஒரு காலம்... சின்ன வயதில், தினமும் எங்கள் தெருவில் அரும்பு விற்று செல்வான்.. அதை வாங்கி யார் சீக்கிரம் , அழகாக, நெருக்கமாக

தொடுப்பது என்று என் தெரு குமரிகளுக்கிடையே பெரிய போட்டியே நடக்கும்...அப்ப பழகினதுதான் இதெல்லாம்..."

" இந்த காலத்துப்பிள்ளைகளுக்கு இதெல்லாம் தேவையே இல்லாமல் போய்விட்டது இல்லையா..?.. அதுவும் நல்லதுதான்.
."

" என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சித்தார்கள் என்று சொன்னேனே..இரவெல்லாம் குழந்தை பசியால் அழும்.. அதுக்கு புட்டிப்பாலை திணிப்பார்கள்..

நானோ இங்கு பால் கட்டி அவஸ்தை படுவேன்... குழந்தையின் அழுகுரல் எனக்கு கேட்காமல் பார்த்துக்கொண்டாலும், ஒரு தாய்க்கு தெரியாதா குழந்தையின் பசி..?

அடுத்த 2 மாதங்களில் குழந்தை மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்பட்டது...பகலில் யாருக்கும் தெரியாமல் பால் கொடுத்தாலும், இரவில் துக்கிச்சென்றுவிடுவார்கள்..

எனக்கு அங்குள்ள வேலையாட்களின் கரிசனம் கொஞ்சம் கிடைத்தது... நான் படும் பாட்டை காண சகிக்காமல், சின்னத்தாய் என்றொரு வீட்டு வேலையாள்,

எப்படியாவது குழந்தையை தூக்கிக்கொண்டு என் அண்ணாவிடம் போகச்சொன்னார்...எனக்கோ மாமா வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை... அங்கு அண்ணியாரின் ஆதிக்கம் ..

ஏற்கனவே அண்ணாவும் அம்மாவும் அடிமைகள் போலே...இதில் நான் வேறு அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை..

அப்போதுதான் மாட்டுத்தொழுவத்தை கவனித்துக்கொள்ளும் ராஜூ என்ற 22 வயதுள்ளவன், என்னிடம்,


" அம்மா வேறு வழியில்லையென்றால் என் கூட வாங்க எங்க ஊருக்கு... குழந்தை ஒரு வருடம் முடியும்வரை அங்கு இருக்கலாம்.. நானும் ஏதாவது ஒரு வேலை தேடிக்கொள்வேன்...

பின்பு நீங்களும் ஒரு வேலை தேடிக்கொண்டு சமாளிக்கலாம்..
." என்றான்..

நான் அப்போதிருந்த நிலைமையில் இப்படி ஒருவன் வழி சொன்னதே தெய்வத்தின் அனுகூலம் என்றே நினைத்தேன்... எப்படியோ தப்பித்தால் போதும் என நினைத்தேன்...இதற்கிடையில் எனக்கு இவர்களெல்லாம்

உதவிடுவார்களோ என அஞ்சி, என்னை விஷம் வைத்து கொல்லவும் துணிந்தார் மூத்த தாரம்... ஆனால் கணவருக்குதான் அதில் உடன்பாடில்லை..

இதையெல்லாம் அறிந்து கொண்டு நான் தப்பிப்பதற்கான முயற்சியை தூரிதப்படுத்தினேன்...ஒரு பையில் எனக்கும் குழந்தைக்கும் தேவையான சாமன்களை தயாராக வைத்திருந்தேன்...

10, 000 ரூபாய் பணம்... எடுத்துக்கொண்டு, நள்ளிரவில் ஓர்நாள் , ராஜூவுடன் ஆட்டோவில் , ரயிலில், பேரூந்தில் என மிக சிரமப்பட்டு, அவனுடைய சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தோம்...வனுடைய பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்தோம்.. ராஜூ வேலை தேடி அலைந்தான்...

பெரிதாக ஒண்ணும் கிடைக்கவில்லை... இருந்த பணம் செலவழிந்தது...கடைசியில் இருந்தது என்னுடைய தாலிக்கொடி ...

அதையும் விற்று செல்வழித்தோம், சாப்பாடுக்கும், குழந்தைக்கும்... அப்போதுதான் தவறு செய்துவிட்டோமோ, என என்னையே நான் நொந்து கொண்டேன்...

இருந்தாலும், ராஜுவும் அவன் பாட்டியும் அந்த கஷ்டத்திலும் என்னை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள்..

ராஜுவுக்குத்தான் அந்த குளிர் பிடிக்காமல் அடிக்கடி ஆஸ்மாவில் கஷ்டப்பட்டார்...குழந்தையும் 1 வயது முடிந்து நடக்க ஆரம்பித்தது..

நான் வேலைக்கு செல்ல தீர்மானித்தேன்... இதற்கிடையில் 3 மாத வீட்டு வாடகை பாக்கி...முதலாளி அழைப்பதாக சொன்னதும் சென்றேன்..

என்னுடைய நிலைமையை கூறி ஏதாவது வேலை போட்டுத்தந்தால் அதை வைத்து பிழைத்துக்கொள்வோம் என சொன்னேன்..

ஆனால் அப்படி ஏதும் இல்லையென்றும், நான் சம்மதித்தால் அவருக்கு உதவியாக இருக்கலாம் என்றும் மறைமுகமாகவே பேசினார்...

தான் கட்டாயப்படுத்தவில்லையென்றும், எனக்கு தேவையான பாதுகாப்பை தருவதாகவும் கூறினார்...

முதலில் கேட்டதும் அவன் முகத்திலேயே காறி உமிழலாம் என்று நினைத்து வேகமாக வந்துவிட்டு, அடுப்படியில் புகைக்கிடையே அழுது தொலைத்தேன்..

அடுத்த நேர உணவுக்கும் குழந்தையின் பாலுக்கும் வழியில்லை...எங்கு வேலை கேட்டு சென்றாலும், என் திறமையை நம்புகிறார்களோ இல்லையோ,

என் இளமைக்குத்தான் விலை பேசினார்கள்...

தற்கொலைதான் வழியென்றாலும் இப்போது என்னையும் நம்பி 3 ஜீவன்கள்... எந்த வேலைக்கு போனாலும் எனக்கு இந்த கொடுமை
என் வறுமையோடு தொடரப்போகிறது என்பது உறுதியானது...

வறுமைக்கு எல்லாம் விலைபோகும் அவலத்தை உணர்ந்தேன் அப்போதுதான்...


அந்த 3 ஜீவன்களையும் கொன்றுவிட்டு நானும் சாவதற்கான தைரியத்தையாவது கடவுள் எனக்குத் தந்திருக்கலாம்...

வேறு வழியேயில்லை... சகதியை பூசிக்கொள்ள சம்மதித்தேன்.. ஆனால் எந்த சகதியை தேர்ந்தெடுப்பது என்றுதான் யோசனை..

பேரப்பிள்ளைகள் எடுத்தும் ஆசை தீராத வீட்டு முதலாளியிடமே சென்றேன்.. என்னைத்தோட்டத்துக்கு அனுப்பிவிட்டு, பின் தொடர்ந்தார் யாருக்கும் தெரியாத படி


பார்த்துக்கொண்டார்... கடமையாக செய்துவிட்டு கை நிறய பணம்.. கண்ணீருடன் வீடு வந்தேன்...

எல்லாத்தையும் ராஜூவிடம் சொல்லி அழுதேன்.. அவனும் அழுதான் தன் இயலாமையை எண்ணி...தான் தோற்றுவிட்டதாக அரற்றினான்..

நாந்தான் அவனுக்கு தைரியம் சொன்னேன்... பாட்டிக்கு மட்டும் தெரியாமல் பார்த்துக்கொள்.. அந்த உசிரு தாங்காது....என்று.."

எப்படியும் குழந்தையை மட்டும் நல்ல முறையில் வளர்த்துவிடணும் என முடிவு செய்தோம்...

நன்றாக அனுபவித்த முதலாளி, சலிப்படைந்து பின் பணம் குறைக்க ஆரம்பித்தார்.. ஆனால் வேறு வழியும் காட்டினார்...

இப்போதுதான் மிக வருத்தம் , அய்யோ இதுவே என் தொழிலாகிடுமோ என்கிற பயம்...

இதற்கிடையில் பாட்டியின் மரணம்வேறு..

ராஜூவுக்கு மருத்துவ செலவுக்கே அதிக பணம் தேவையாயிருந்தது... அவனோ குற்ற உணர்ச்சியில் குன்றிக்கொண்டிருந்தான்..

நாந்தான் அவனை பிடித்து தைரியம் சொல்வேன்.." ராஜூ நீயும் என்னை விட்டு போய் விடாதே.. இந்த உலகத்தில் எனக்கு , என்

பிள்ளைக்கு சொந்தம் னு சொல்லிக்க நீ மட்டும்தான் இருக்க.... உன்னை சாக விடமட்டேன்... "

அதுவே அவனுக்கு ஒரு வேகம் கொடுத்திருக்கணும்.. அவன் கவனம் முழுதும் இப்ப குழந்தையின் மேல்..

கிடைத்த பணத்தை வைத்து ஒரு பெட்டிக்கடை போட்டோம்.. ஆனாலும் என் தொழிலும் தொடர்ந்தது...ஒரு வெறியில்.....

குழந்தைக்கு 4 வயதாகும் போது ஊட்டி கான்வெண்டில் சேர்த்து படிக்க வைக்க நினைத்தேன்...பாதிரியாரிடம்..

ஆனால் அங்கெல்லாம் எளிதில் இடம் கிடைப்பதில்லை... அதற்கும் தேவையானவர்களை சந்தித்து கொடுக்க வேண்டியதை

கொடுத்து குழந்தையை பள்ளியில் சேர்த்ததும்தான் ஏதோ பெரிய காரியத்தை முதன்முதலாக சாதித்துவிட்டது போன்ற

மகிழ்ச்சி எங்கள் இருவருக்கும்... என் நிலைமை தெரிந்தே அந்த பாதிரியாரும் மிக நல்ல முறையில் குழந்தையை கவனித்துக்கொண்டார்கள்..


ராஜுவின் கடையும் செழிக்கத்தொடங்கியது... திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் எனக்காக, குழந்தைக்காக

செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தான்...ஏழ்மையில் கூட நல்லவர்களும் இருக்கிறார்கள் என உணர்த்திய மஹான் அவன்...
---------------------------------------------------------------------

பாற்கடல் பாங்காக்கில்...தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு பற்றிய சிலைவடிவம் உள்ளது...

வண்ணமயமான சிலைகளோடு, பார்ப்பவர் மனம் மயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது...


suvarnabhumi-airport1.jpg

படத்தில் காணுவது தேவர்களும் அசுரர்களும் வாசுகிப்பாம்பை மந்தர மலையில் கட்டி ( மேரு மலை ) இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்..நடுவில் விஷ்ணு , கீழேஆமையும்...turtle.jpg..


Suvarnabhumi_Airport,_Bangkok.jpg
-----------------------------
devarkal.jpg
asuraas.jpg


churning milk1.jpgairport1.jpg
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம்.
நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை
அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால்
அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது


இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது,
அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.
அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள்.
மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ரம்பித்தார்கள்.


படத்தில் காணுவது தேவர்களும் அசுரர்களும் நாக தலவனின் இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்..

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும்
நாசம்.
நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை
அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால்
அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது


இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது,
அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.
அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள்.
மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ரம்பித்தார்கள்.

புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன.
அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை
க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த
கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும்
தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்)
வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக்
பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா
ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன.
அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை
க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த
கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும்
தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்)
வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக்
பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா
ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE

Thursday, April 16, 2009

தவறி உடைந்த பொம்மை - குட்டி கதை...கோடை விடுமுறைக்கு பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் என்றதும் லஷ்மியம்மாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி.. அவர்களுக்குக்கான அறையை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவதிலும், பிடித்த பலகாரங்கள் செய்வதும், ஊர் சுற்றிப்பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதுமாய் இருந்தார்.. பட்டணத்தில் படிக்கும் பிள்ளைகள் இந்த கிராமத்தில் , ஆறு , வயல்வரப்பு,தோப்பு, மாட்டுவண்டி பயணம் என பலவற்றையும் ரசிப்பதைக்கண்டு அவரும் குழந்தையாவார்.. டில்லியில் பெரிய உத்யோகத்தில் மகன் . கூடவே வந்து தங்கும்படி அழைத்தபோதெல்லாம் அந்த சிறை வாழ்க்கையை தவிர்த்து வந்தார்கள் இருவருமே...சில நாட்கள் மட்டுமே பேருக்கு சென்று தங்குவதுண்டு.. வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டடும் ஓடி சென்று பேரப்பிள்ளைகளை முத்தமிட்டு அனைவரையும் உள்ளே அழைத்து வந்தார்.. 8, 6ம் வயதான குழந்தைகள் இருவரும் வீடு , தோட்டம் என விளையாட ஆரம்பித்தனர்.. வீட்டுக்குள் விளையாடும்போது மட்டும் மிக அன்பாக சொல்லி பார்த்தார், சீழே விழுந்து காயப்படுவீர்கள், மேலும் முக்கிய பொருள்கள் தவறிவிழுந்து உடையலாம் எனவும்.. குழந்தைகளோ கேட்பதாயில்லை... சிரித்து மழுப்பி மீண்டும் அப்படியே விளையாடுகிறார்கள்.. வீட்டுக்குள்ளேயே ஓடி ஓடி விளையாட்டு...அப்படி விளையாடிக்கொண்டிருக்கையிலேயே சுவர் முக்கில் வைத்திருந்த பழங்கால பொம்மை ஒன்று தவறி விழுந்து உடைந்தது.. மருமகள் வந்து இருவரையும் திட்டி விட்டு விழுந்த துண்டுகளை அகற்றிவிட்டு சென்றுவிட்டார்...மகனும் தன் பங்குக்கு திட்டி விட்டு சென்றார்...லஷ்மியம்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. திட்டு வாங்கிய குழந்தைகளை மார்போடு அணைத்து ஆறுதல் சொல்ல மட்டுமே முடிந்தது...லீவை மகிழ்வாக கொண்டாட வந்த குழந்தைகளை என்ன சொல்ல..? விடுமுறை முடிந்து கிளம்பும் நாள் வந்தது... அம்மாவிடம் வந்து பேசிக்கொண்டிருந்தபோது, " ராஜா, மறக்காமல் அடுத்த முறை வரும்போது அதே பொம்மை ஒன்றை வாங்கிவந்துவிடு " என சொல்லவும் மகன் அதிர்ந்தார்.. " என்னம்மா சொல்றீங்க..? மிஞ்சிப்போனால் 100 ரூபாய் இருக்குமா , அந்த பொம்மை... அதுக்கு போய்?.. நான் பணம் எவ்வளவு வேணா தருகிறேன், எனக்கு நேரமில்லை அம்மா, நீங்களே வாங்கிடுங்க..." என்று தன் பணப்பையை திறந்தான்.. இதை கவனித்துக்கொண்டிருந்த அப்பா உடனே அருகில் வந்து அவன் கையை பிடித்து, அந்த பணப்பையை மூடச்செய்து, " அம்மா சொன்னது புரியவில்லையா ராஜா?.. தவறி விழுந்து உடைந்தது பொம்மை மட்டுமில்லையப்பா..தவறியது பலவும்.. நீயே யோசித்துப்பார் " என்றார் " ம். புரியலையே..." என்றான் நெற்றியை சுருக்கிக்கொண்டு.. " நீ சொன்னியே நேரமில்லை என்று, அதுதான்... உன் குழந்தைகள் மிக அன்பானவர்கள்.. அதிலொன்றும் குறையில்லை.. ஆனால் அவர்களுக்கு செலவிட உங்கள் இருவருக்கும்தான் நேரமில்லை போல.. நீ குழந்தையாய் இருக்கும்போது செய்யாதே என அன்பாக ஒரு முறை சொன்னால்போதும் , உடனே அதை செய்ய மாட்டாய்.. அது எப்படி வந்தது அந்த பழக்கம்?.. நாங்கள் இருவரும் உனக்கு பொறுமையோடு , விளக்கமாய் எடுத்து சொல்லி செலவழித்த நேரம் தான் முக்கிய காரணி...கட்டளையாக சொன்னதேயில்லை எதையும்.. வீட்டுக்குள் விளையாடாதீர்கள் என சொல்லி சொல்லி அலுத்துப்போனார் உன் அம்மா... ஆனால் பிள்ளைகள் கேட்பதாயில்லை...ஏன் என யோசித்தால், அவர்களுக்கு கட்டளையோ, திட்டு வாங்கியோ பழக்கமாகிவிட்டது போல தோன்றுகிறது... உடைத்தால் மிஞ்சி மிஞ்சி திட்டுவாங்க, பரவாயில்லை, என போக்கு வந்துவிட்டது.. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையை தவறவிட்டார்கள்... அந்த அக்கறையைத்தான் உன் அம்மா வாங்கித்தர சொல்கிறார்..பொம்மையை அல்ல.. இப்ப புரியுதா ?" என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிரிப்போடு.. " அ..............ம்.............
..............மா என்னை மன்னியுங்கள். அவசர யுகத்தில் முக்கியமானதை இழக்க இருந்தேன்...வெட்கப்படுகிறேன்.. இனி நேரம் செலவழிப்பேன்.. " என காலில் வந்து விழுந்தான் மகன்..

அவனை அப்படியே எடுத்து முதுகில் தட்டியவர்,

" கவலைப்படாதேப்பா, உன் மனைவியும் பெரிய உத்யோகத்தில் இருப்பதால், உங்களிருவருக்குமே நேரமில்லைதான் அன்பாய் பேசிட.. குழந்தைகள், பாவம்தான்.. பொறுமையாய் எடுத்து சொல்ல ஆளில்லை..

நானும் உன் அப்பாவும் சீக்கிரமே உன்னுடன் வந்து ஒரு 6 மாத காலம் தங்கியிருந்து சில பழக்கவழக்கத்தை சொல்லித்தரலாம் என நினைக்கிறோம்"

என்றதும், மருமகளும் பேரப்பிள்ளைகளும் லஷ்மியம்மாவை வந்து அணைத்துக்கொண்டார்கள்...

தவறியது உருவாக ஆரம்பித்தது..