நான் நேசித்த இலங்கை தமிழர்கள்.
பாங்காக்கில் அகதிகளாக வந்திறங்கும் அனேக தமிழர்கள் எங்கள் வீட்டருகில் தங்கிய போது அவர்களின் அருமையான , மரியாதையான் பேச்சுகள் என்னை மிக கவர்ந்தது...
யாராவது வீட்டில் ஒரு ஆள் மட்டும் வெளிநாட்டில் இருந்துகொண்டு இவர்களை எப்படியாவது வெளிநாட்டுக்கு அழைத்துக்கொள்ளும் பொருட்டு, பாஸ்போர்ட் . , விசா இல்லாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டும், போலீஸுக்கு அப்பப்ப அழுதுகொண்டும் வாழவேண்டிய சூழ்நிலை..2 வேளை மட்டுமே சாப்பாடு...அதையும் அருமையாக செய்து பகிர்ந்து சாப்பிடுவார்கள்...
இதில் ஒரு குடும்பம் ரொம்பவே எனக்கு பழக்கம்.. சின்னபெண் 18 வயது இருக்கும் , அம்மா, அண்ணா, தங்கையோடு...இரு பெண்களுக்கும் நான் கட்டாயப்படுத்தி கணிதமும், ஆங்கிலமும் பாடம் எடுத்தேன்..
அருகிலிருந்த இன்னொரு வாலிபன் ஒருமுறை இந்த வாலிப பெண்ணை போலீஸ் பிடித்து செல்ல அவன் பணம் குடுத்து காப்பாற்ற, நன்றியோடு அங்கு பிறந்தது காதல்... 14 வயதில் பிறந்த காதல் பின் 4 வருடம் கழித்து அவன் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் நடந்தது...பாங்காக்கில்..
அவனுக்கு தொழில் திருட்டு பாஸ்போர்ட் செய்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது.. பலநாட்கள் எனக்கு தெரியாது .. பின் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்..
ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் அவனுக்கு வேறு வழியில்லை..அப்பா இல்லை.. 3 சகோதிரி , திருமண வயதில்.. ஒவ்வொன்றாய் கட்டி குடுத்தான் இந்த வருமானத்தில்..கடவுள் பக்தி அதிகம்..
பின் அன்னையை அழைத்து வந்தான் பாங்காக்குக்கு.. அவன் மனைவி என்னை ஆன்டி, என்பதுபோல் அவள் மாமி என்னைவிட 20 வயது மூத்தவரும் என்னை ஆன்டி என்றே அழைப்பார்.. ஏதாவது வருத்தம் என்றால் சிறு குழந்தை போல் என்னிடம் அழ ஆரம்பித்துவிடுவார்..அவர்களது வேதனை சொல்லி மாளாது..
அதேபோல் 10 வாலிப பசங்கள் அருகில் தங்கியிருந்தார்கள்.. நான் பேசுவதில்லை. ஆனால் என் அன்னை என் பேறுகாலத்துக்கு வந்த போது நட்பாகி விட்டார்... என் அன்னைக்காக தேநீர் போட்டு குடுப்பதும் பழக்கம் பேசுவதுமாக அன்னைக்கு பொழுது போயிற்று.. அவர்கள் வெளியில் செல்ல முடியாது வீட்டில்;ஏயே அடைஞ்சு கிடப்பதால் அன்னியார்தான் தோழி...அப்போது அவர்களின் ஒளிசித்திரம் என்ற கொடுமையான போர் வீடியோ கேசட்டுகள் பார்த்து கண்ணீர் வடித்துள்ளோம்...
ஒருமுறை தடுப்பூசி போட்டு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறான். அவர்கள் அனைவரும் மாறி மாறி தூக்கி வைத்துக்கொண்டு, " அக்கா, நீங்க ஓய்வெடுங்கோ, பிள்ளையை நாங்கள் பாத்துக்கொள்வோம்..." என சொல்லிவிட்டு எனக்கு சூடாக தேநீர் போட்டு எடுத்து வந்ததும் ரொட்டிக்கு சம்பல் செய்து தந்ததும் இன்றும் மறக்க முடியாதவை...
வெளியில் செல்வதானால் என் கைகுழந்தையை தூக்கி செல்வார்கள், போலீஸ் பிடிக்காதென்பதால்... மாற்றி மாற்றி என் குழந்தை வெளியில் செல்வான் அவர்களோடு.. அவர்களுக்கும் அவன்தான் பொழுதுபோக்கு..நான் குழந்தையை சாப்பாடு குடுக்கும்போது திட்டினால்கூட பொறுக்கமாட்டார்கள் அன்பு தம்பிகள். கண்ணீர் வந்துவிடும், பாசக்காரர்கள்..அதற்காகவே அவர்கள்முன் திட்ட முடியாது...என்ன செய்தாலும் எனக்கு ஒரு பங்குண்டு அவர்கள் உணவில்..மதியம் ஆனதும் எங்கள் வீட்டு தொலைகாட்சியில் படம் பார்ப்பார்கள்.. கிட்டத்தட்ட ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் இருக்கும்..ஆனால் என் கணவர் வந்ததும் எல்லாம் கப்சிப்...
அடுத்து இன்னொரு குடும்பம்.. அடில் ஒரு பெண்குழந்தை, 3 பசங்களும்...அந்த பெண் குழந்தை என் மகனை குளிப்பாட்டுவதிலிருந்து அவனுடன் விளையாடுவது எல்லாமே அவ்ர்கள் வீட்டில்தான்.. சிலசமயம் சப்பாடு கொடுக்க குழந்தையை அழைக்க சென்றால்,
" நாங்களே தீட்டிட்டோம். அவர் நல்லா சப்பு கொட்டி சாப்பிட்டார்.. எங்க சாப்பாடு அவருக்கு ரொம்ப இஷ்டம்..." என்பார்கள்..
இன்னொரு குடும்பம் 2 பெண் பிள்ளையோடு அன்னை.. அண்ணாவும் அப்பாவும் லண்டனில்..6 மாத காலம் இருந்தார்கள்..என் பிள்ளையை அப்போது காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வேன் காலை 6 மணிக்கு..ஆனால் இவர்கள் வந்தபின், காலையில் வந்து குழந்தையை எடுத்து சென்றுவிடுவார்கள்.. அவன் எழும்பியதும் சாவகாசமாக, குளிப்பாட்டி, சாப்பாடு குட்த்து சும்மா ஒரு மணிநேரம் மட்டும் அமர்த்திவிட்டு, பின் சாயங்காலம் வரை தம்முடனே வைத்து தூங்கப்பண்ணி..அய்யோ ரொம்பவே ஆசையாய் செய்தார்கள்...
இதில் பலர் வெளிநாடு எளிதாக சென்றார்கள், சிலர் மீண்டும் போலீஸில் மாட்டி டிடென்ஷன் சென்டரில்...நிலையில்லாத ஒரு வாழ்க்கை.. சொல்லவியலாத துயரங்கள், பிரிவுகள், பணக்கஷ்டங்கள்... வாழ்க்கையே வெறுத்துவிடும் இவர்கள் கதையை கேட்டால்...ஆனாலும் எப்போதும் கடவுள் நம்பிக்கையோடும் , லட்சியத்தோடும் , வாழ்க்கையில் போராடி வெற்றி பெற கனவுகளோடுமான பயணங்கள் இவர்களுடையது...
திடீரென்று தொலைபேசி அழைப்பு வரும்..
" அக்கா நியாபகமிருக்குதா நான் ரவி பேசுறன்...ஆஸ்திரேலியாவில் இருக்கன்.. சுகமெப்படி..பொடியன் என்ன செய்றார்..அங்கிள கேட்டதா சொல்லுங்கோ.."
இப்படி டென்மார்க்கிலிருந்து, கனடாவிலிருந்து , லண்டனிலிருந்து என அழைப்புகள் எப்போவாவது வரும்...யாரார் எங்கெங்கு இருக்கிறார்களோ... ஆனல் அவர்கள் விட்டுச்சென்ற சோகமும் அன்பும், என்றும் நெஞ்சிலிருப்பதோடன்றி, இலங்கை தமிழர் மீதான மரியாதையை அதிகரித்துச்சென்றுவிட்டார்கள்..
Friday, January 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment