Monday, October 4, 2010
மதமும் மனித உறவுகளும்..2
கடவுள் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை .
எதன் மீது.?
இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட , வியக்கத்தக்க ஒரு சக்தியின் மீது..
ஏன்.?
ஏனெனில் அந்த மஹா சக்திக்கு மட்டுமே எல்லாவற்றின் தலையெழுத்தையும் மாற்றும் வல்லமை இருப்பதாக நம்புவதால்..
ஆக இந்த நம்பிக்கையை பரப்பிட ஒரு நிலையம் , பொது நோக்கத்துக்கான அமைப்பு , நிலையான ஏற்பாடுடைய ஒழுங்கமைப்பு முறை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது தான் ஒவ்வொரு மதமும்.. ஆக ஆரம்பத்தில் ஒரு சின்னமாக ( சூரியன், சந்திரன் , நெருப்பு, ஆறு போல ) ஆரம்பித்த இந்த கடவுள் பக்தி வளர்ந்து உருவம் அற்ற நிலைமைக்கு , அல்லது உருவம் தர இயலா நிலைமைக்கு வந்துள்ளது..
எது எப்படியோ இத்தகைய பக்தியால் மனிதன் தன்னை பற்றியே ஆராய , சிந்தனை செய்ய பின், நல்வழிப்பட பயன்படுத்திக்கொண்டான்.. மொத்ததில் தான் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சமூக சூழலை உருவாக்கினான்.. அவை எப்படி உதவியாய் இருந்தது என ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1. மதம் ஆன்மீக வளர்ச்சிக்கு , ஞான உபதேசத்துக்கும் வித்திடுது..
ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மிக உதவியாய் இருப்பது மதம்தான்..வியக்கத்தக்க ஒரு சக்தி மனித பலத்தினையும்மீறி இருப்பது உறுதிப்படுத்தப்படுவதோடு , நிச்சயமாக்கப்படுகிறது..ஆக ஆன்மீக தேடல் ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவனது வழி வருவோருக்கும் வளர்ச்சிப்பாதையையே அமைத்து தருகின்றது..ஒரு ஆன்மீகவாதியின் நிம்மதியை , மகிழ்ச்சியான வாழ்க்கையை காண்பவர் தாமும் அதே பாதை சென்றால் தனக்கும் அதே நிம்மதி கிடைக்கும் என்பது இதுதான்..
2. உளநலம் சிறப்படைகிறது..
ஒரு மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட நலம் எப்போதும் நல்ல வளர்ச்சியிலேயே உள்ளது...அதனால் அந்த தனிமனிதனை பின்பற்றுவோருக்கும் மன நலம் நன்றாகவே உள்ளது..நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பலம் படுத்தப்படுவதால் /வலுவூட்டப்படுவதால் உள நலத்துக்கு மிக உதவியாய் இருக்கின்றது..ஒருவரின் உள நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும்..
3. மதம் ஒரு நல்ல ஊடகம் , சாதனம் , நட்புக்கு.
எம்மதம் என்றாலும் பிராத்தனைக் கூட்டமோ ,ஒன்று கூடுதலோ ஒரு மிக சிறந்த நட்பு வட்டத்தை ஏற்படுத்தி தருகின்றது..ஒருவரின் பிரச்னை நேரம் பல ஆலோசனைகள் உதவிகள் கேட்காமலேயே தரப்படுகின்றது.. மனிதனின் அத்தியாவசிய தேவைகளை கூட இக்கூட்டம் பகிர்ந்து அளித்து உதவி இன்புறுகிறது... பொது நல சேவைகளை முன்னின்று நடத்தவும் ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கை உடையவராக மாற்றவும் இந்த நட்பு வட்டம் பெரிதும் துணை நிற்கிறது... மனிதனுக்கு செய்வது காண முடியாத அந்த இறை சக்திக்கு செய்வதாய் எண்ணச்செய்து மகிழ்ச்சியை தருகின்றது ....
4. ஆக்கபூர்வமான வேலைகளை ஊக்குவிக்கின்றது..
பிராத்தனை மூலமும் , பாட்டுக்கள் மூலமும், பிராத்தனை கூடங்களை சுத்தப்படுத்தும் செயல்கள் , அலங்காரப்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் பலரது படைப்புத்திறன் வெளிக்கொணரவும் கூட்டவும் முடிகிறது..இசையில் நாட்டமுள்ள ஒருவர் தன் திறனை இலவசமாக மேம்படுட்த்திக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது..இப்படி உருவான இசை அமைப்பாளர்களையும் நாம் அறிவோமே..அதே போல சிறு தொழில்கள் , கற்பித்தல் போன்ற பல நல்ல செயல்களை செய்ய பழக்கப்படுத்துகின்றது.. திறமைசாலிகளை உருவாக்கி சமூகத்துக்கு மிக உபயோகமாய் இருக்கின்றது...
5.மனிதனின் இக்கட்டான நேரத்தில் அவனுக்கு துணிவை தருகிறது
மத நம்பிக்கை ஒருவனின் கெட்ட , துன்பமான நேராத்தில் ஒரு பிடிமானம் தருகின்றது.. அவன் நம்பிக்கை வைக்க ஒரு மதம் தேவைப்படுகின்றது .. அந்த நம்பிக்கையே அவனுக்கு தேவையான ஊக்கத்தையும் , பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியத்தையும் , தெம்பையும் தருகின்றது அவன் சோர்வடைந்துவிடாமல்..எத்தனையோ நீதிக்கதைகளும் , பிரச்னைகளையும் அவைகள் தீர்க்கப்பட்ட விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்கிறான்..மத நட்புகளின் ஆறுதல் , உதவி பெறுகின்றான்.. துணிவோடு எதிர்கொள்கிறான் மீண்டும் இந்த வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறான்..நம்பிக்கையோடு..அதுமட்டுமல்லாது மற்றவருக்கு துன்பம் நேருகையில் தனக்கு கிடைத்த ஆறுதலை , உதவியை திரும்ப அளிக்கின்றான்.. நன்றியோடு..
6. ஆழ்ந்த துக்கத்திலிருப்பவனுக்கு பரிவு தருகின்றது
தனிமையிலிருக்கும் ஒரு மனிதனுக்கும், பல்வேறு கவலையிலிருப்பவனுக்கும் உதவிடுது..தங்களின் மிக நெருங்கிய ஒருவரின் இழப்புக்கு பின் பலரின் மத நம்பிக்கை அதிகரித்துள்ளது.தனிமைப்பட்டிருக்கும்போது ,துன்பம் அடையும் போதும் மதமும் மத வசனங்களும் , பரிவு காட்டி அவர்களை அத்துன்பத்திலிருந்து மீள வழி செய்துள்ளது..பூரண அமைதியை தருகின்றது.. கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தருகின்றது...
7.. ஒருவரின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது..
மனிதனின் உடல்நலம் மத நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு இன்னும் அதிகமாய் மேம்பட உதவுது..ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, வழி முறைகளையோ பின்பற்ற ஆரம்பித்த பின் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிரூப்பதாய் ஆராய்ச்சிகள் சொல்கிறது..உடல் நலமில்லாவிட்டாலும் தம் உடல் விரைவில் நல்லபடியாக தேறும் என்ற நேர்மறை எண்ணம் மத நம்பிக்கையுள்ளவருக்கே அதிகம் இருக்கின்றதாம்...அந்த நேர்மறை எண்ண அலைகளே பலருக்கு ஆச்சர்யமூட்டும் , அதிசயிக்கும் வகையில் நலமும் தந்துள்ளதாம்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆக இப்படி பல்வேறு நலன்கள் மதங்களில் இருப்பதனால் தான் இத்தனை ஆண்டுகள் இன்னும் மதம் அழியாமல் பின்பற்றப்பட்டுவருகின்றது... இல்லையென்றால் இந்நேரம் மதத்தால் ஏற்பட்ட பிரச்னைகளால், போர்களால் எப்பவோ அழிந்து போயிருக்கக்கூடும்..
மதம் பின்பற்றாதவர்களெல்லாம் மோசமானவர்கள் என்று அர்த்தமில்லை..அதே போல மதம் பின்பற்றுபவரெல்லாம் நல்லவர்கள் என்றும் அர்த்தமில்லை.. அது அவரவர் வளர்ப்பு சூழலும் காரணம்..
நாம் இங்கே பார்ப்பது மத நம்பிக்கை உள்ளவனுக்கு மதம் எவ்வாறு உதவியாய் இருக்கிறதென்றே..
அடுத்து மதத்தால் ஏற்படும் நேர்மறை எண்ணம் , ஞானம் பற்றி அலசுவோம்..
----------------------------------------------------------------------------
தொடரும்...
படம் : நன்றி கூகுள்
------------------------
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மடல் இங்கே பகிற்கிறேன் அவரின் அனுமதியோடு..
மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.
--------------------------------------------
வணக்கம் மேடம்
சாந்தி தெரு பதிவு எதேச்சையாக எங்கள் தெருவில் நடந்த சம்பவத்தை நகைச்சுவை கலந்து எழுதிய பதிவு. உங்களை புண்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. முதலில் எனக்கு பதிவுலகில் யாரையும் தெரியாது. தெரிந்தவர் பகலவன் மட்டுமே. அவர் சொல்லித்தான் இப்போதுதான் உங்கள் பெயர் சாந்தி என்பது எனக்கு தெரியும்.
அந்த பதிவு எழுதும் போது சத்தியமாக உங்கள் பெயர் எனக்கு தெரியாதுங்க.
உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.
Really Sorry ....
--
yalini
jmms: இந்த மன்னிப்பை நான் பொதுவில் போடலாமா யாழினி அவர்களே..?.
yalini : சரிங்க..போட்டுக்கோங்க..
--------------------------
சாந்தி (சண்டை) தெரு http://yohannayalini.blogspot.com/2010/09/blog-post_9927.html
என்ற பதிவு பற்றி..
யாழினி உங்க பெருந்தன்மைக்கு என் வாழ்த்துகளும் பாராட்டும்..
நன்றி யாழினி.
யாழினியின் மேலும் பல படைப்புகள்..http://yohannayalini.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)