Monday, August 30, 2010

இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
































" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி


" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்

" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..

" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?..
எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."

" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."


" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."

" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "

" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... "
கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..

--------------------------------------------------------------


" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "

" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."

" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."


------------------------------------------------------------

பல்வேறு
சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..

" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "

கைதட்டல்.


சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
"

கைதட்டல்.


சிறந்த
மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..



பலத்த கைதட்டல்.



பின்
அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,

அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான்
இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..

கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...

ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...

-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்



( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..

அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
..)