Friday, January 23, 2009

தேவதைகளும் தேவதூதர்களும்

தேவதைகளும் தேவதூதர்களும்

"எல்லோரும் இப்ப தேவலோகத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் " என ஆரம்பமாகிறது 2-6 வயது பிள்ளைகளின் கிறுஸ்மஸ் திருநாள் கொண்டாட்டம்..மகன் படிக்கும் பள்ளியில்..மொத்தம் மேடையில் 100 குழந்தைகள்


எல்லா குழந்தைகளுக்கும் தேவதை போல் இறக்கை கட்டி, தலையில் கிரீடம் , வட்டம் வைத்து சிமிக்கிகள் ஜொலிக்க வெண்ணிற ஆடையில் வெண்பஞ்சு மேகங்கள் சூழ திரை விலகியதும் .......சொல்ல வார்த்தைகள் இல்லை... அந்தப்பிஞ்சுகளின் சிரிப்பும், கண்களில் ஒளிவிடும் நட்சத்திரங்களும், அவர்களின் சின்ன சின்ன குசும்புச்சேட்டைகளும்,

தங்கள் உடுப்புகளை புதிதாக பார்த்துக்கொள்வதும், தலையில் உள்ள கிரீடத்தை, ஏதோ பாரமாக இருப்பதாக கண்ணை உருட்டி பார்ப்பதும்....


விடுமுறை எடுத்து எல்ல பெற்றோரும் தம் மழலையினை காண வந்தார்கள் அனேகமாக...
அதுவரை ஆசிரியர் கைபிடித்து ஒழுங்கா இருந்த சில குழந்தைகள் பெற்றோரை பார்த்ததும், மேடையிலிருந்து " அம்மா, , அப்பா" என கத்துவதும், " ஐ. லவ் யூ " சொல்லுவதும், சில சின்ன குழந்தைகள் மட்டும் "ஓ " வென அழுவதும், நம் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் காட்சி...


குழந்தை ஏசுவின் தகப்பனாக நடித்த பையன் தலையில் கைவைத்து மிக சாவகாசமாக கொட்டாவி விட்டுக்கொண்டது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது..அதேபோல் ராஜா தன் கையிலுள்ள பரிசு பொருளை அப்படியும் இப்படியும் பார்த்துகொண்டதும்...:))



என் மகனும் வந்தார், ஒரு சின்ன அங்கியை போட்டுக்கொண்டு கையில்

ஆட்டுகுட்டி பொம்மையோடு குழந்தை ஏசுவை பார்க்க... அவன் வகுப்பு பசங்களெல்லாம் ஆட்டுமேயர்களாய்...


என்னையும் பார்த்துவிட்டான்... இப்ப பாட்டு சத்தமாய் , தனி குரலில் தொண்டை கிழிய கத்தி பாடுகிறான் உற்சாகமாய்... ஆட்டத்தோடு....பாடல் முடிந்ததும் அங்கிருந்தே அறிவிப்பும் செய்கிறான்.." அம்மா ..போகாதே.. நானும் வாரேன் உங்கூட..."
சொல்லியபடியே கிளம்பவும் தயாரானான்..

(எல்லாம் முடிந்ததும் அவனை பள்ளியில் விட்டுவிட்டு நான் அலுவல் செல்லலாம் என்றால் ஒரே அழுகை..தானும் வருவதாக... ஆளுக்கு முந்தி காரில் ஏறியாச்சு...

அப்புரம் வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு..)
யாருக்கும் தமிழ் தெரியலை... கிட்டத்தட்ட 19 நாட்டு மொழி பேசுபவர்கள்...

புன்னகையும் ஆங்கிலமும் பொதுமொழி...


எல்லா தேவைதைகளும் அவரவர் பெற்றோர் இடுப்பிலும் தோளிலும் அமர்ந்துகொண்டு, வாய்நிறய சாக்லேட் வடித்துகொண்டு .....அந்த சாக்லேட் வாயோடு ஆசிரியருக்கு முத்தம் கொடுத்து விடைபெற்று.... கையில் நிறய கைகொள்ளாத பரிசோடு, வாய்நிறய சிரிப்போடு...கண்கொள்ளா காட்சி...

ஆசிரியர்களையும் அவர்கள் பொறுமையையும் கண்டிப்பா போற்றியாகணும்...

மேடையில் ஒழுங்குபடுத்தி நிற்கவைத்துவிட்டு திரும்புவதற்குள் மாறி மாறி நின்று இஷ்டப்படி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்களும் குழந்தைகள் போலவே தேவதையாக வெள்ளை உடுப்பில்...சில குழந்தைகள் சேட்டை தாங்காமல் தூக்கி வைத்திருந்தார்கள்.. பாவம்...


கேமராக்கள் வெளிச்ச வெள்ளத்தை பாய்த்துகொண்டிருக்க, பாட்டுகள் பலருக்கு நடனத்தை வரவழைக்க..,


உண்மையிலேயே தேவலோகத்தை விட்டு வெளிவர மனசில்லை..அவர்களோடு நாமும் ஒரு குழந்தையானது மிக நல்ல அனுபவம்...
+++++++++++++++++++++++++

No comments: