Saturday, July 10, 2010

முற்பகல் செய்யின் - சிறுகதை












கனா
கண்டேனடி தோழி .....ரிங் டோன் அலறுது...


" என்ன வேணும்? .."

" ஏங்க எடுத்ததுமே கோபப்படுறீங்க.. ?."

" சரி சொல்லு.. நேரத்த வீணாக்காம.."

" இல்ல இன்னிக்கு என்ன குழம்பு வெக்கணும்னு.."


" இதுக்கெல்லாமா அலுவலுக்கு போன் ?.எதாச்சும் வெய்யேன்.."


" இல்ல நேற்று புளிக்குழம்பு சரியா சாப்பிடல.. பிடிக்கலையோன்னு.."

" ஏதோ பண்ணு .. இதுக்கெல்லாம் போன் போடாத.." வைத்துவிட்டான்..

_________________________________________

கனா
கண்டேனடி ...............


" என்..................................ன...?"

" எங்கண்ணா கிட்ட இருந்து மெயில் வந்திருக்கு.."


" அதுக்கு இப்ப என்ன.? சாயங்காலம் சொன்னா போதாதா.?"

" உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு சந்தோஷமான செய்தி.. அதான் .."

" ஒண்ணும் குடிமுழுகிடாது .. தொந்தரவு பண்ணாதே.. அதான் கணினி உபயோகிக்க
சொல்லி தந்தேன்ல..ஃபார்வர்ட் பண்ணு.."

" இந்த வெளிநாட்டுல வந்து இப்படி யார் கிட்டயேயும் பகிர்ந்துக்க முடியாம
மாட்டிப்பேன் னு தெரிஞ்சா.. சே வந்திருக்கவே மாட்டேன்.. க்ர்ர்ர்ர்.."

" சரி .. சொல்லி தொலை...சீக்கிரம்.."

" ஒண்ணும் வேண்டாம்.. " டொக்...


-------------------------------------------------------------------------------



"உப்பு புளி காரம் சரியா இருக்கான்னாவது சொல்லுங்களேன்.."


" ம்...ம்.." டிவி பார்த்துக்கொண்டே..


டிவியை அணைத்தாள்.. பிடுங்கினான் ரிமோட்டை...

"முக்கியமான நேரம் ...கோல் போட்டுட்டான் பாரு.. ஏன் அணைச்ச.?

"
"சாப்பிடும்போதாவது இந்த சனியனை பார்க்காம இருக்கக்கூடாதா.?. சமையல்ல குற்றம் குறை சொன்னாத்தானே திருத்திக்க முடியும்.."

" ஆமா பெரீய்யயயயயய.. சமையல்..எல்லா பொடியும் எங்கம்மாவும் உங்கம்மாவும்
செய்து தராங்க ஏதோ காய்கறிய போட்டு செய்ற .. அதுக்கு இவ்ளோ பில்டப் ஆ..?"

" உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. செய்து பாருங்க அப்ப புரியும்.."

" கொஞ்சம் ரசம் .போட்டுக்கோங்க... அய்யோ ஏன் கழுவுறீங்க...?"




" மேட்ச் பார்க்க விடுறியா கொஞ்சம்?.."


----------------------------------------------------------



பேப்பர்
வாசித்துக்கொண்டிருந்தவனிடம் .


" ஏங்க மாரியம்மன் கோவில் ல தேங்காய் உடைக்கும் திருவிழாவாம்.. போலாமா..?..
"

பேப்பரை பறித்தாள்..

" கொடு இங்க.."


" கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மொதல்ல.."


" கேளு.."

" மாரியம்மன் கோவில் ல தேங்காய் உடைக்கும் திருவிழாவாம்.. போலாமா..?..
"

" ஏம்மா அதுக்கெல்லாம் நீயே போக கூடாதா.. நான் ரெஸ்ட் எடுக்கணும்... "


" தெரியும் உங்க ரெஸ்ட் என்னன்னு.. ஆங்கில பட டிவிடி வாங்கிட்டு வரும்போதே
நெனச்சேனே.."


-------------------------------------------------------------------------------


" எழும்புங்க.. அய்யோ எழும்புங்களேன்..."

" தூங்க விடுடி.. ஞாயிற்றுக்கிழமையாவது.."

" உங்க பிரண்ட் பொண்ணு அந்த புஜ்ஜூ குட்டிக்கு பொறந்த நாள் இன்னிக்கு. வர சொன்னாங்களே.."

" அதான் கிஃப்ட் வாங்கிட்டல்ல.. நீயே போய்டு.. அவன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. கேட்டா அர்ஜெண்டா ஆபீஸ் விஷயமா போயிருக்கார்னு சொல்லிடு. முடிஞ்சா லஞ்ச் ல ஜாயின் பண்றேன்.."

----------------------------------------------------

" இந்த டூல்ஸ் பாக்ஸ் எங்கே இருக்கு.."

வீட்டு
மாடியில் நின்று கத்துறான்..


" அங்கேயே தான் 3 வது செல்ஃப்ல.."

" கண்டுபிடிக்க முடில.. நீ வந்து எடுத்து கொடு.."


" நான் அத்தகிட்ட பேசிட்டிருக்கேன் ஸ்கைப்புல.. நீங்களும் சீக்கிரம் வாங்க.. வேலை
அப்புரம் பார்த்துக்கலாம்..ஹிஹி."

ஜன்னல் பழுது பார்க்கும் வேலையை முடித்துவிட்டு கீழே வந்தவன் ,

" சரி பசிக்குது சாதம் போடு..."

" எல்லாம் மேசையில இருக்கு பாருங்க.."


" நீ என்ன பண்றே..?"

" இருங்க ஒரு முக்கியமான சமையல் குறிப்பு வாசிச்சுட்டு இருக்கேன்.. அப்புரம்
நானும் ஒரு சின்ன பதிவு போடணும்... பிலீஸ் நீங்களே போட்டுக்கங்க.."


---------------------------------------------------------


கல்யாண
மாலை கொண்டாடும் வேளை.......... அவள் மொபைல் அடிக்குது..

மொத்தமாய் பாடி முடிக்குது..

மீண்டும்
...கல்யாண மாலை..................


" எங்கே போனா இவ.."

" என்னங்க கூப்பிட்டீங்களா... ஒரு 10 நிமிஷம்.. இந்த பதிவை முடிச்சுட்டு வந்து
பேசுறேன்.. நிதானமா..." டொக்..


-----------------------------------------------------------


டிரிங் டிர்ங்.......... காலிங் பெல்...

" கதவு திறந்துதான் இருக்கு... கொஞ்சம் அழுத்தி தள்ளுங்க..."


" ஏன் நீ என்ன பண்ணிட்டு இருக்க..?.. வந்து இந்த சாமான்களை பிடியேன்.."

" பிலீஸ் ங்க.. என்னோட பல நாள் கல்லூரி தோழி ஆன்லைன்ல... ரொம்ப
சுவாரஸ்யமா பேசிட்டிருக்கா.."

" நீ செய்றது கொஞ்சங்கூட நல்லால்லே... "

" ஆமா நீங்களும் பேசுறதில்ல.. என்னையும் பேச விடாதீங்க..நல்லவேளை எனக்கு இணையம் சொல்லி தந்தீங்க.. நல்லா பொழுது போவுதுங்க..."

அடப்பாவமே, புள்ள குட்டி வருவதுக்குள்ள இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கணுமே னு நேரா சென்று அணைத்தான் கணினியையும், மனைவியையும்....


.. -----------------------------------------------