Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.

Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--

Monday, December 6, 2010

இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..



























இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..

இன்று "

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!"


என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவை கெளசல்யா போட்டிருந்தார்..நன்றி..

http://kousalya2010.blogspot.com/
----------

பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சல் கொடுப்பதும் , மிரட்டுவதும் தொடற்கிறது.

எல்லாருக்குமே ஏதோ ஒரு நேரம் மனசு விட்டு பேச ஒரு நல்ல நட்பு வேண்டிதானிருக்கிறது..

குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

ஒரு சகோதரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கூட துணிந்த கதையுண்டு..

அந்த நேரத்தில் " எதைத்தின்னா பித்தம் தெளியும் ' என்ற கதையில் ஆறுதல் தேடி அலையத்தான் செய்யும் மனம்..

அந்த நண்பருக்கு அவரை விட கஷ்டத்தில் இருக்கும் நபர்களை பற்றி எடுத்து சொல்லவேண்டியிருந்தது..



நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

என் நட்புகளை குடும்பத்தோடு அறிமுகம் செய்ய முடிந்தால் மட்டுமே தொடருவேன்..

வருடா வருடம் இந்தியா செல்லும்போது குடும்பத்தோடு சந்திப்பதுமுண்டு...

ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..கெட்டவர்களை கூட நல்லவர்களாய் மாற்றுவதும் கூட சில சமயம்..


இதில் சில கெட்டவரும் இருக்கலாம்.. என்னைப்பொறுத்தவரை 1000ல் ஒண்ணு அப்படி இருக்கும்..

ஆக எல்லோருமே மோசம் என எண்ண வேண்டியதில்லை..

எனக்கு பதிவுலகில் பிரச்னை என்றதும் உதவியதில் பலர் ஆண்கள் தான்..பெண்களுமுண்டென்றாலும்.. ( என் நன்றிகள் )

இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்... ஆக அவர் யாரென்று பெண் பதிவர்களுக்காவது தெரியப்படுத்திடுங்கள்...


அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது நட்பு கூடுதலாய் தேவைப்படலாம்..அனைவருக்குமே..

இதை " மித்ர மை பிரண்ட் " என்ற படம் கூட அழகாக சொல்லியிருக்கும்..


பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் அப்படி கேட்டபோது நான் அவர் அக்கவுண்ட் எண் , வேலை செய்யும் அட்ரஸ் கேட்டேன்.. கொடுத்தார்..

இப்ப கொஞ்ச நேரத்தில் பணம் போடுகிறேன் என்றேன்..

சிறிது நேரங்கழித்து என்ன போட்டாச்சா என்றார்..

இருங்க எங்க வீட்டு பசங்க சென்னையில் தான் பலர் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் உங்க அலுவலகத்துக்கு என்று சொன்னதும் அழ ஆரம்பித்தார்

மன்னிச்சுடுங்க என் வேலை போயிடும் என.. மன்னித்துவிட்டேன்..

எந்த பிரச்னை என்றாலும் துணிவாக பதிவுலக நட்புகளை முக்கியமா பெண்களை நாடுங்கள்..

பெண் பதிவர் சந்திப்பும் அப்பப்ப நடத்திடுங்கள்.. அப்ப பயம் இருக்கும் இத்தகைய ஆண்களுக்கு..

அதுமட்டுமல்ல நாங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்த போது குறிப்பிட்ட ஒரு ஆணின் பெயரை கெடுக்க அவரைப்போலவே சாட் செய்து அதை பெண்கள் எல்லாருக்கும் அனுப்பியும் வைத்தார் ஒரு அனானி..

நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்..அதில் எல்லா பெண்களை பற்றியும் விமர்சிக்கப்பட்டிருந்தது.. பின் அவரை கூப்பிட்டு கேட்டபோது இது அவர் எதிரியின் வேலை என தெளிவுபடுத்தினார்..

ஆக சாட்களை கூட மாற்றி இப்படி அனானி பேரில் அனுப்பி துன்புறுத்துவது ...

பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

அப்பெண் பதிவர் எழுத தொடங்கட்டும் பிரச்னை முடிந்ததும்.

இணையம் மூலம் அறிமுகமான இரு பெண் நட்புகள் தாய்லாந்து வந்ததும் நாங்கள் ஊர் சுற்றிப்பார்த்ததும் நல்ல அனுபவங்கள்.. அதே போல நான் இந்தியா சென்ற போது எங்களை குடும்பத்தோடு கூடன்குளம் மின் நிலையம் அழைத்து சென்று சுற்றிக்காட்டிய முன்பின் அறிமுகமில்லாத நண்பர்..இப்படி பல விஷயங்களை சொல்லலாம்..



கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்...




( மேலேயுள்ள குழந்தைகள் படம் வாசகத்தோடு அளித்த நண்பர் க்கு மனமார்ந்த நன்றிகள்... )




படம் : நன்றி கூகுள்



..

Wednesday, December 1, 2010

மீண்டும் பெண்ணை பலியாக்குதல்...நந்தலாலா...




















படம் அருமையா எடுக்கப்பட்டிருக்கு..

குழந்தை , குமரனின் வலிகள் , அவர்கள் பயணங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , அவர்களின் நிலைகள் , சுவாரஸ்யமானவை..


வித்யாசமான படம்..

குத்துபாட்டு , அடி தடி நம்ப முடியாத பைட்டுகள் , சுவிஸ் பாடல்கள் இல்லாமல் இது போல படங்கள் கருத்தை , வலிகளை சொல்வதாய் பார்க்க நன்றே..


இசையும் கூடுதல் பலம் .

ஆனால் கரு.?

தமிழ் சினிமா யாருக்காக எடுக்கப்பட்டிருக்கோ அதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்...

நான் எழுத நினைத்த விஷயங்களை மிக அழகாக இரு பதிவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால் , ( அதிலும் இவர்கள் ஆண்கள் என்பது மிக முக்கியமான விஷயம் )

அவர்கள் லிங் இங்கே..

அதெப்படி ஒரு பெண்ணின் பார்வையை ( வலிகளை ) எளிதில் சில ஆண்களால் மட்டுமே புரிய முடிகிறது?.

சிலருக்கு புரிந்தாலும் பயம்.. எங்கே ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை விட்டு விலக்கப்படுவார்களோ என.. ( அப்ப அவர் ஆணா னு கேக்கப்டாது )

சிலர் புரியவே மாட்டோம், இதுவே வசதியாகத்தான் இருக்கு.. இந்த பண்பாட்டிலேயே ( பெண் பலியாவதே ) இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் கடத்திடுவோம் னு பிடிவாதமாய்..


என் குடும்பத்தில் இதே போல இரு சகோதரர்கள் ( ஒருவர் அதிகம் படித்தமையால் , இன்னொருவர் விபத்தால் ) இருப்பதால் என்னால் அவர்கள் வலியை மிக எளிதாக புரிய முடிந்தது..

பெரிய சகோதரர் ( சித்தப்பா மகன் ) இன்னும் மருத்துவமனையில்..( விடுதி மாதிரி.. தன்வந்த்ரி ஹோம் ).. அசாம் ஐஐடியில் கைட் ன் அராஜகத்தால் , மூத்த மகன் என்ற வீட்டுப்பொறுப்பால் விட்டுவிட்டும் வர முடியாமல் , வருத்தங்களை மனசுக்குள் அமுக்கி...மனநிலை தவறியது..டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு.. )

வருடா வருடம் சென்று சந்திக்கும்போது அவன் அறைக்குள் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும்போது அப்படி ஒரு பயம் அப்பிக்கொள்ளும்...

அவன் அறையில் தங்கியிருந்த ஒரு வாலிபன் , குழந்தை போல் வந்து என்னை தொட்டு சென்றதும் கட்டில் மீதேறி மகிழ்ச்சியில் குதித்ததும் , உலக வாழ்வே வெறுக்க செய்த நிமிடங்கள் அவை.. விவரிக்க வார்த்தையில்லை...:(((

தம்பி ஒரு விபத்தில் பெங்களூரில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தும் மன நிலை குழந்தையாக மாறிப்போனது.. :(


இவ்வலிகள் எப்போதும் எந்த மனநிலை சரியில்லாதவரை பார்க்கும்போதும் என் சகோ வாய் எண்ண வைக்கும்...


ஏற்கனவே காயப்பட்டதால் கண்ணீர் வரவில்லை.. சகோதரர்கள் நியாபகம் மட்டுமே..

குழந்தை அம்மாவை தேடும் ஒவ்வொரு சொல்லும் வயற்றிலிருந்து தொண்டைக்கு கொண்டு வந்து அமிழ்ந்த வலியை விவரிக்க முடியாது...தான்..

ஏனோ கண்ணீர் வருவதில்லை இபோதெல்லாம்..:)

பாலியல் தொழிலாளியை வைத்து மட்டும் இன்னும் எத்தனை தரம் --------------------?...


வலிகளுக்காக பார்க்கலாம் ...முடிந்தால் ஒரு மனநோயாளியையும் சென்று .


இதோ நான் ரசித்த இரண்டு விமர்சனங்கள்..


Tuesday, November 30, 2010

இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..

































அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அடையாரிலிருந்து பேசினாள் ஷான் என

செல்லமாக முன்னாள் கணவனால் அழைக்கப்படும் ஷாந்தினி.

வழக்கமான விசாரிப்புக்கு பின் ,

" சொல்லு ஷிவா. என்ன தயங்குற .?"

" எனக்கே என் மேல் அவமானமா இருக்கு ஷாந்தினி.."

" ஹேய்.. என்ன இது.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் னு நினைச்சு சொல்லு."

" ம்."

" எ.......ன்...........ன. சொல்லு.?"

" நா.........ன் கீர்த்தி கி.........ட்ட புரோபஸ் பண்ண...............லாம் னு இருக்................கேன்.."

" ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்... ஐம் வெரி ஹேப்பி பார் யு.."

" நிஜமா.?"

" இல்ல பொய்யா..:))"

" அதில்ல ஷான் , என்னமோ உனக்கு துரோகம் செய்ராப்ல தோணுது.."

" என்ன இது.?. நாம பிரிஞ்சு 4 வருஷம் ஆகுது.. இன் ஃபேக்ட். நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தேன்.."

" அம்மா கிட்ட சொல்லவா.?"

" வேண்டாம் ஷிவா. அம்மா பழைய காலத்து ஆள்.. அவங்களால இதை உடனே ஏத்துக்க முடியாது..லீவ் இட் டு மி.."

" சரி நம்ம பையன் கிஷன் கிட்ட.?"

" ஷ்யூர்.. அவன் கிட்ட கண்டிப்பா சொல்லு.. ஹி வில் ஆல்சோ பி வெரி ஹேப்பி.. ஃபார் யூ.."

" ஷான் அதுக்கு முன்னால சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணிறலாம் னு நினைக்கிறேன்.. "

" வாட். " கொஞ்சம் எரிச்சலோடு.

" அதான் , உன் பேர்லயும், கிஷன் பேர்லயும் சொத்துக்கள் வாங்கலாம்னு..." முடிப்பதற்குள் ,

" டோண்ட் பி ரப்பிஷ். ஷிவா.. நீ தேவைக்கும் மேல செய்துட்ட.. உன்னோட அம்மாவை என்கூட வாழ அனுமதிச்சிருக்க..எனக்கு விருப்பமான

இந்த டீச்சிங் புரொபஷன் க்காக இந்த பள்ளி ஆரம்பிச்சு கொடுத்த . உன்னோட அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் இருக்க விருப்பம் உனக்கு..

எனக்கு நம்ம நாட்டுல வாழணும்னு ஆசை.. எல்லாத்துக்கும் அனுமதிச்ச.. அழகான நட்போட பிரிஞ்சோம்..

பிரிஞ்சதிலிருந்து உன் மேல மரியாதை கூடிட்டேதான் இருக்கு.. நம்ம மகனை ஒரு நல்ல தகப்பனா வளர்ப்பதைவிட , ஒரு மிகச்சிறந்த நண்பனா பார்க்கிற..

என்னை விட அதிகமா நீதான் அவன்கிட்ட அமெரிக்காவிலிருந்து தினமும் பேசுற..வழிநடத்துற. லிசன் பண்ற அவன் பிரச்னைகளை... "

" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புரம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"

" ஸ்டாப் இட் ஷிவா.. ஏன் இப்படிலாம் திங்க் பண்ற..?.. நான் செய்வேன் உன் குழந்தைக்கு.. ஏன் நம்ம மகன் செய்வான் . அவனை அப்படித்தானே கொடுக்க சொல்லி பழக்கி வெச்சிருக்கோம்..

ஹி வில் எஞ்சாய் கிவ்விங்.பணம் நமக்குள் எப்பவாவது பிரச்னையா வருமா என்ன.? "


" சரி அம்மா கிட்ட எப்ப சொல்றது.?"

" உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்.. அப்ப இந்தியாவுக்கு கூட்டிட்டு வருவல்ல.. அப்ப சொல்லிக்கலாம். கிஷனோட தம்பி, தங்கைன்னு.. சரியா..?.. "

" உன்னை மாதிரி ஒரு நல்ல மனைவியை இழந்தாலும் , ஒரு நல்ல தோழியா ஆயுசுக்கும் நீ இருப்பன்னு நினைக்கும்போதே என் வாழ்க்கை பூரணமா இருக்கு ஷான்.."

" நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷிவா.. உன்னோட உறவுகளையெல்லாம் எனக்கு கொடுத்தியே.. நம்ம மகனுக்கு ஒரு நல்ல தோழனா , வழிகாட்டியா இருக்கியே.."

" இருந்தாலும் ஒரு கில்டி ஃபீலிங்.. ஷான்."

" நோ..நோ.. நெவர் ஃபீல் லைக் தட்.. உனக்கு துணை அவசியம் னு எனக்கு நல்லா தெரியும்.. உன்னோட முன்னேற்றத்துக்கு அது தேவை.. ஆனா எனக்கு அப்படியில்ல.. தம்பத்யம் எனக்கு

முக்கியமல்ல னு உனக்கும் தெரியும்... சோ.வாட் ஸ்டில் வி ஆர் லிவிங் டுகெதர் அஸ் குட் பிரண்ட்ஸ்.. இனி கீர்த்தியும் என்னோட தங்கைதான்.. விஷ் யு போத் ஆல் த பெஸ்ட் திங்ஸ் இன் லைஃப்...."

" சரி ஷான். பிலீஸ் , கொஞ்சம் பணம் மட்டுமாவது அனுப்பி வைக்கிறேனே.."

" இதப்பாரு . நீதானே சொல்வே, பொன்ணுங்கல்லாம் சொந்த கால் ல நிற்கணும். னு. என்னை அப்படி நிற்க வெச்சுட்டு இப்ப கையேந்த சொல்றியே நீயே.. வேண்டாம் ஷிவா.. ஏதாச்சும் டிரஸ்டுக்கு

அனுப்பி வை. நிறைய பணம் வெச்சிருந்தீன்னா.." சிரித்தாள்..

" உன் மேல மதிப்பும் மரியாதையும் கூடிட்டே இருக்கு ஷான்.. யு ஆர் எ வெரி டிஃப்ரண்ட் பெர்சன்.. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை பெற்று வளர்க்கும் ஆசை வந்துடுச்சு."

" ஐ ஃபீல் ஹானர்ட் ஷிவா..."

" கீர்த்தி என்ன செய்றாங்க.?.. எப்போ கல்யாணம்..?"

" அவங்க ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.. திருமணம் இப்ப இல்ல.. இப்போதைக்கு லிவிங் டுகெதர் மட்டும் .கொஞ்சம் எனக்கு என்மேல பயம்தான். :) "


" எனக்கு உன் மேல அதிகமா நம்பிக்கை இருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல கணவனா இருப்ப னு .. கோ அஹெட்.. "




.


படம் : நன்றி கூகுள்..




.

Monday, November 29, 2010

லிவிங் டுகெதர் வலையுலக புரிதல்



































லிவிங் டுகெதர் பற்றிய அனேக பதிவுகள் வந்தது..

பல புரிதல்கள்.. பல புதிய பார்வைகள்.. புதிதாக கற்றுக்கொண்டவையும் ஏராளம்.

அதைவிட புதிதாக சந்தித்த அறிவுபூர்வமான வலைத்தளங்கள்.. இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என வருந்துமளவுக்கு..

சரி இப்ப என்ன சொல்ல வரே னு கேட்கிறீங்களா.?

பல பதிவுகளை படித்ததுமே அவர்கள் புரிதலை பார்த்து வியப்பும் ,சிரிப்பே வந்தது..:)

சரி போக போக புரிவார்கள் .

பலரின் புரிதல் இங்கே..


லிவிங் டுதெர்னா

1. ஆபாசம் அபச்சாரம் , கலியுகம்..கலாச்சார மீறல்...

2. காமத்துக்கு மட்டுமே.

3. மேல்நாட்டிலிருந்து அழிக்க வந்த ஆயுதம்

4. பணம் படைத்தவருக்கு மட்டுமே..

5. ஜோடி மாத்திகிட்டே இருக்கலாம்..

6. பாலியல் தொழில்..மாதிரி

7. குழந்தைகள் பற்றி அக்கறை இல்லாதவர்கள்..

8. எய்ட்ஸ் வரும்.

9. ஒருத்தனுக்கு ஒருத்தியல்ல../ஒருத்திக்கு ஒருத்தனல்ல.

10. சொந்த பந்தங்களை விட்டு விலகுதல்./விலக்குதல்..

11. மத விரோதம்.. /துரோகம் ..

12. பெண்ணாதிக்கம்..

13. திருமணம் என்பது சடங்கல்ல.. புனிதம்.. மேலே சொன்னவை திருமணத்தில் கிடையாது..






ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ.. முடியல..

இப்படி ஒரு புரிதல் இருப்பதால் தான் அவர்களுக்கு கோபம் வந்துள்ளது என எண்ணியதும் பாவமா இருக்கு..


சிலர் விரைவில் புரியலாம்,.. சிலர் விடாப்பிடியாக நாங்க ஏன் புரியணும்.. அதெல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டோம் னு அடம் பிடிக்கலாம்..முயலுக்கு காலே இல்லைன்னு சொல்லலாம்..

பெண்ணுக்குரிய உரிமைகளையே கொடுக்க மறுக்கும் சில ஆணாதிக்கவாதிகள் , மதவாதிகள் இருக்கும்போது இதுவும் அதிசயமில்லை..

இன்னும் காதல் என்றாலே வெட்டி போடும் சமூகம் நம்மிடையே இருக்கு..

என் குடும்பத்திலேயே இந்த வருடம் தான் முதல் காதல் திருமணம் ( சாதி, மத வேறுபாட்டோடு ) பலத்த எதிர்ப்போடு நடந்துள்ளது...

ஏன் எதிர்க்கிறோம் னு பார்த்தா , நாம அடுத்தவங்கள கிண்டல் அடிச்சிருப்போம்.. இப்ப நம்ம டர்ன் வந்துட்டதே.. தாங்க முடியாதே...அதான் ரொம்ப தோல்வியா நினைப்பது...


நாம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய உளவியல் கூற்று அனேகம் உள்ளது.. குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் , "கற்போம் கற்பிப்போம்.."

---------------------------------------------------


என் குழந்தை சின்னவரிடம் ,

" பெரியவங்க சொன்னா கேட்கணும். அவங்களுக்கு நிறைய தெரியும் , அனுபவம் இருக்கும் இல்லையா.?."

" எனக்கும் நிறைய தெரியும்.. Parts of the Computer , CPU is the brain.. இப்படி எல்லாமே.. அது உங்களுக்கு தெரியுமா?.. "

" அவ்வ்வ்.. இதெல்லாம் யுகேஜி ல கத்துகிட்டியா.. நீ பெரிய ஆளு தாம்பா... "

" இப்ப புரிஞ்சுதா.. அதனால நான் சொல்றதையும் நீங்க கேளுங்க..."

" சரிங்க ஐயா..."

---------------------------------


கோச்சுக்கவா முடியும் குழந்தைகளிடம்?.....



--------------------------

கொஞ்சம் மெச்சூரிட்டி உடையவர்களுக்கு../அடைய விரும்புபவருக்கு மட்டும்...

http://www.psychologytoday.com/blog/sex-dawn/201003/anti-marriage-counseling


Readers with a more open-minded disposition might enjoy this interview with Dr. Perel.



படம் : நன்றி கூகுள்..






..

Sunday, November 28, 2010

பதிவுலக ச (சி )ங்கங்கள்



















நாட்டுல நல்ல மழை பொழிய ,

நாமெல்லாம் அகம் மகிழ ,

நாளெல்லாம் பதிவெழுத ,

நாலு பேரு பின்னூட்ட ,



இப்படியா ஓருலகம்

இணையத்தில் வந்ததய்யா

இதவெச்சு அரசியலில்

இப்போதே புரட்சிசெய்ய


ஆரம்பிப்போம் சங்கத்தினை

ஆளுக்கொரு பங்குபோட்டு

ஆர்ப்பரிப்போம் சிங்கங்களே

ஆட்டோ அனுப்ப மாட்டீகளே..


-------

பெருமதிப்பிறகும் மரியாதைக்கும் உரிய மக்களே , வேற்றுமையில் ஒற்றுமை காண

சங்கங்கள் ஆரம்பிக்க அழைக்கிறோம்...

எல்லோருக்கும் சம உரிமை..

ஆளாளுக்கு ஒரு சங்கம்.. ( காசா பணமா ?.. )

எனக்கு தெரிந்த கட்சி , சாரி சங்கம் பெயர் சொல்லுகிறேன் . நீங்களும் உங்களுக்கு தெரிந்த பெயர் சொல்லுங்கள்.

1, ஆன்மீக சங்கம்...

2. அதை எதிர்க்கும் சிங்கம்..சாரி சங்கம்.

3. பெண்ணுரிமை சங்கம்..

4. அதை எதிர்க்கும் ஆணாதிக்க சிங்கம்..

5. சினிமா மட்டுமே சங்கம்...

6. ஆபாச சங்கம்.

7. திமுக பதிவர் சங்கம்..

8. அதிமுக பதிவர் சங்கம்..

9. காங்கிரஸ் பதிவர் சங்கம்..

10. விஜயகாந்த் பதிவர் சங்கம்..

11. கட்சி மாறிட்டே இருப்போர் சங்கம்.

12. கலாச்சார சங்கம்.

13. அதை மாற்றுவோர் சங்கம்.

14. அம்மாக்கள் சங்கம்.

15. அப்பாக்கள் சங்கம்.

16.. வாலிபர் சங்கம்.

17. வயதான வாலிபர் சங்கம்..

18. இலக்கியவாதி சங்கம் .

19.அதை எப்போதும் விமர்சிக்கும் சங்கம்..

20. பஸ் , டீவிட்டர் முக புத்தக சங்கம்..

21. பெரியார் சங்கம்.

22. அதை தடுப்போர் சங்கம்..

23. கெட்ட வார்த்தை சங்கம்..

24. என் மதமே பெரிது சங்கம்.

25. எம்மதமும் சம்மதம் சங்கம்..

26. எதில் சேறணும்னு யோசிப்போர் சங்கம்..

27. ஆட்டு மந்தை சங்கம்..

28. நாந்தான் ஆடுமேய்ப்பேன் சங்கம்.

29. சந்திப்பு நடத்தும் சங்கம்..

30. சந்திப்பு முடிந்தபின் சிந்திப்போர் சங்கம்..





இப்போதைக்கு இவ்வளவுதான் நியாபகம் வந்தது.. மற்றதை நீங்க சொல்லுங்க...


( டிஸ்கி : யாரையும் காயப்படுத்த அல்ல.நகைச்சுவைக்கு மட்டுமே.. நிஜமாகவே நல்லது செய்ய நினைப்பவருண்டு.. அதற்கு குழுமம் ஆரம்பித்து அங்கிருந்து நல்ல பல விஷயங்களை தொடங்கலாம்...... )


படம் : நன்றி கூகுள்..




.

Saturday, November 27, 2010

மந்திர புன்னகை...பெண்ணை அவமானப்படுத்தும் படம்..

















நாம சினிமா பார்ப்பதே அரிது.. அதிலும் விமர்சனம் பண்ற ஆளில்லே..

ஆனா பார்த்து தொலைச்சிட்டோம்..



-----------------------------

ஒரு ஆண் எல்லா விதமான கெட்ட பழக்கம் கொண்டிருந்தாலும் , அவனை துரத்தி துரத்தி காதலித்து அவன் நோயை தீர்ப்பாளாம் ஒரு பெண் காதலினால்..

ஏன்.?

ஏன்னா அவள் தமிழ்நாட்டு பெண் அல்லவா?..

ஆனா இதே தவறுகளை செய்யும் ஒரு பெண்ணை இதே போல துரத்தி துரத்தி காதலித்து குணப்படுத்துவானா .?

அத விடுவோம்..

தவறில்லாத பெண் என்றாலே செய்வானா?.
..ஒரு இளிச்சவாயன் கணவன் செய்வானாம் , செய்தும் ஓடிப்போவாளாம்.... :))

காசில்லாமல் கல்யாணமே கேள்விக்குறியாகும் சமூகத்தில் , பெண் தான் ஆணை துரத்தி துரத்தி... ஓடி ஓடி சேவை செய்வாள்.. ஏன்னா அவள்தான் அடிமை.. அவள் மட்டும் தான்...

யோசிக்க கூட மாட்டோம்ல..:))

ஏன்னா தமிழ்நாட்டு ஆண் க்கு உள்ள சினிமா ஃபார்முலா மட்டுமல்ல , நிஜமும் ...:)



முக்கியமான சம்மரீஸ்

1. பாத்து பாத்து துணி துவைத்து போடுகிற கணவன் ,
தன்னை எப்பவும் எதுக்கும் பாராட்டிக்கொண்டே இருக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தான் மிக நேசிக்கும் பிள்ளையை கூட விட்டுட்டு காதலனுடன் ஓடிப்போவாராம் மனைவி..

-- அப்ப தமிழ்நாட்டுல ஒரு மனைவி கூட கணவனோட வாழ முடியாது.:)))


2. பெண் என்பவள் ஆணை சந்தோஷப்படுத்த மட்டுமே பிறந்தவள்..

அவள் பாலியல் தொழிலாளி னா திருமணத்துக்கு ஆசைப்படக்கூடாது.. ஆனா அவன் எல்லா பெண்களிடமும் செல்வான். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும்.. ஆனா அதை பெருமையா சொல்வதற்கு பெயர் "* நேர்மை"*.. அந்த நேர்மைக்காகவே /மட்டுமே அவனை துரத்தி துரத்தி காதலிப்பாள் ..
ஏன்னா அதுக்கு பெயர் தான் அன்பு...:).. இத்தனைக்கும் மிக நல்ல குணமுடையவனை , தன்னை விடாப்பிடியாக காதலிப்பவனை ஒதுக்கிவிட்டு..:))))))))

3. கார் விற்க வருபவன் பெண் உடம்பை பார்த்து கார் வாங்கினால் தப்பேயில்லை.. ஏன்னா பெண் அதுக்கு மட்டும்தானே படைக்கப்பட்டுள்ளாள்..
.?...சோ டேக் இட் ஈஸி சேல்ஸ் பெண்களே..

4.அநாகரீகம் என்பதே நேர்மை.. குடித்துவிட்டு இரவோடு இரவாக காதலி வீட்டுக்கு சென்று எழுப்பி கேள்வி கேட்பதே நேர்மை.. தனக்கு கீழுள்ள இஞ்சீனியர் மனைவிக்கு போன் போட்டு தான் குடிப்பதையும் , தன் நட்புகள் கெட்டவர் என்பதை சொல்வதையும் தாங்கிக்கொள்ளும் பெண் நேர்மை.. அடடா நேர்மைக்கு என்ன ஒரு அற்புதமான விளக்கம்...?:)

5. 500 பேர் கூட படுத்தாலும் ஒருத்தனை மட்டுமே வந்து மருத்துவமனையில் பார்ப்பாள்.. ஏன்னா அவன் சேலை வாங்கி கொடுத்தானாம்... அடடா 499 ஆண்கள் இத்தனை மோசமானவர்களா?.. தெரியாதே.?.

6. ரொம்ப ரொம்ப நல்ல மனிதன் , மனைவி சென்றதும் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்வான்... ஏன்னா குழந்தையை விட கவுரத ரொம்ப
முக்கியம்... குழந்தை எப்படி போனா என்ன?.. ஆனா அந்த நல்ல மனுசன் இல்லூஷன்ல வந்து அட்வைஸுவார்...

7. காசு பணம் + கொஞ்சம் அறிவு இருந்தா போதும்.. எல்லாரையும் அடிமைப்படுத்தலாம் , மட்டுமல்ல , இஷ்டப்படி நடந்துக்கலாம்.. நல்லா உடுத்தணும் னு இல்லை.. தொழிலாளி கூட சேர்ந்து குடிக்கலாம்.. தானும் கெட்டு மத்தவனும் கெட்டாதானே நல்லது?..

இதே ஒரு ஏழையென்றால்?.... நோ . நோ.. கேள்விகேக்கப்டாது...மூச்...!!!!!.

1970 க்கு அப்புரம் குடிக்காதவனே இல்லையாம் - வாழ்க டாஸ்மாக்..( விளம்பரமோ ?. ) . வால்க டமில்நாட்.


8. அப்பனும் ஆத்தாவும் விட்டுபோட்டு போனப்புறம் வளர்த்து ஆளாக்கி ஆர்கிடெக்ட் ஆனப்புறம் , " கெழவி செத்து போகட்டும் .. ஏன்னா என்னை பார்த்தா கெழவிக்கு வாழ ஆசை வரும் " னு இன்னாமா பாச டயலாக்...?..

அதே கிழவி என்பவர் இவனை வந்து மருத்துவமனையில் பார்த்து வருந்துவார்...

ஆக மஹா சனங்களே , படிச்சு ஆளாக்கினவுகளை ஒரு காசுக்கு மதிச்சுராதீக...

-- மொத்தத்தில் ஆண் னா அப்படித்தான் இருப்பான்.. பெண் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு அவனுக்கு சேவை செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமும் புண்ணியமும்...இன்ன பிறவும்...:)


தேடுங்க பெண்களே ஊரிலுள்ள அயோக்கியன் ஆனால் நேர்மையா அதை ஒத்துக்கிறவனை., ஆனா பணமுள்ளவன்.... ஏன்னா அதுக்கு மட்டும்தான் படைக்கப்பட்டார்கள் பெண்கள்..


படத்தில்
4 பெண்களையும் இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது..

படத்துல நல்ல விஷயமே இல்லையா?.. இருந்தது.. குழந்தைகளை அழைத்து வீடு கட்டி விளையாடுவது... டெக்னிகல் விஷயம் உழைப்பு இல்லாமல் இருக்குமா?..

ஆனால் என்ன இருந்து என்ன மோசமான கரு எல்லாத்தையும் அழித்திடுதே..



மொத்தத்தில் பணம் இருந்துட்டா என்ன வேணா செய்யலாம் . எப்படி வேணா படம் எடுக்கலாம்..:). ஏன்னா பணத்துக்காக , புகழுக்காக நம்மை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.. நோ ஒர்ரீஸ்... எஞ்சாய்...:)



பிரிவோம் சந்திப்போம் , பார்த்திபன் கனவு திரைப்படத்தினை எடுத்தவர் இவர் என்பதை நம்ப முடியலை...அது நான் ரசித்த படம்..


இன்னொரு மைனஸ் பாயிண்ட் உணர்ச்சியற்ற முகத்தை வைத்துக்கொண்டே நடித்த இயக்குனர்..

கொல்லாதீங்க சாமிகளா !!!.. டமில் மக்கள்ஸ் நாங்க ரொம்ப பாவமில்ல...


பெண் அடிமைத்தனம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தொடர வெச்சிடுவாய்ங்க..
... வாழ்த்துகள் ...அதை பார்த்து சில ஆட்டு மந்தை ஆண்களும் தந்திரமா சந்தோசப்படுவாங்க.

மந்திர புன்னகை...ஆணின் தந்திரபுன்னகை...:)




படம் : நன்றி கூகுள்


.




Wednesday, November 24, 2010

அம்மா புராணம் - 2. ( முதம் மனைவி இருக்கும்போதே இரண்டாம் கல்யாணம் )



































" அக்கா நான் இந்த வாரம் கிளம்பி வருகிறேன்..திருமணம் நடக்குமா?..." பயத்தோடு கேட்டார் மாமா..

என் அம்மாவின் சொந்தக்கார தம்பி அவர்..பொறியாளர்.. கை நிறைய சம்பாத்யம்.. வசதியும்..

திருமணம் முடிந்து 10 வருடம் குழந்தையில்லை.. மனைவியிடம் கோளாறு..

அதுமட்டுமல்ல அந்த காலத்தில் பாருங்க பெண்ணுக்கு அதிக வயதிருந்தாலும் , தன் மத/ஜாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் , மாப்பிள்ளை வயது குறைந்திருந்தாலும்

மணமுடித்துள்ளனர்.. இப்படி பல பேரை பார்த்துள்ளேன்..

அதே தான் இந்த மாமாவின் கதையும்..

அத்தையை பார்த்தால் மாமாவுக்கு அம்மா/அக்கா போல் வயதானவராய் தோன்றுவார்..வியாதியஸ்தரும் கூட..

ஆனால் இருவருமே அன்பான தம்பதிதான்.. சண்டை சச்சரவேதுமில்லை..

ஆனால் மாமாவுக்கு இல்வாழ்க்கை திருப்தியோ இல்லை , குழந்தையின்மை வருத்தமோ , ஏதோ ஒன்று இருந்துள்ளது பல வருடம்..

மனைவியை விவாகரத்து செய்ய பல காரணமிருந்தும் செய்ய மனமில்லை..

ஆனால் மறுமணம் செய்ய மட்டும் அனுமதி பெற்றார் ...

அம்மாவிடம் தன் குறையை சொல்ல , அம்மாவுக்கு தன் சொந்தத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் நியாபகத்துக்கு வந்தது..

அதை மாமாவிடம் சொல்ல , மாமா சம்மதிக்க , அம்மா அப்பெண்ணிடம் பேச , அவரும் விருப்பம் சொல்ல ...

ஆனால் அம்மாவின் சொந்தங்கள் அனைவருமே இதுக்கு எதிர்ப்பு...

மாமா வெளியூரிலிருந்து நெல்லைக்கு வருவதற்குள் அம்மா மற்ற விஷயங்களை ரகசியமாக கவனிக்கணும்...

என்ன அது.?..

அம்மாவின் அந்த அத்தை பெண் ஜாதக பலனால் திருமணம் ஆகாமலேயே இருந்தார் பல வருடம்..

அதற்கான முயற்சி எடுக்க பெற்றோரும் இல்லை..

சகோதர சகோதரிகளுக்கும் முடியவில்லை.. தட்டிக்கொண்டே போனது..

அந்நேரம் அம்மா இந்த மாமாவுக்கு அந்த பெண்ணை முடிக்க பேசியதும் பலத்த எதிர்ப்பு..

( உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா , அம்மாவிடம் . ? . உன்கிட்ட 4 பெண் இருக்கே.. அதை கட்டிக்கொடு.. )

10 வருட வித்யாசம்.. இரண்டாவது திருமணம் வேறு..ஆனால் அந்த அத்தைக்கு ( பெண்ணுக்கு ) மாமாவை கட்டிக்கொள்ள சம்மதம்..

மாமாவின் குணம் அப்படி. யாருக்குமே பிடிக்கும் ..பார்க்க கருப்பு சரத்குமார் போல இருப்பார்..

இப்ப அம்மாவை அந்த பெண்ணை பார்க்கவே அனுமதிக்க மாட்டேனென்கிறார்கள்..

அம்மாவோ அவ்வூரிலுள்ள இன்னோரு மாமா வீட்டுக்கு சென்று ரகசியமாக அப்பெண்ணை வரவழைத்து பேசுகிறார்..அவர்கள் வீட்டிலுள்ளவர் பாதி பேருக்கு கூடதெரியாமல் ரகசியமாக பேசணும்.. அங்கேயும் எதிர்ப்பு..

மாமா வந்தார்கள்.. நெல்லைக்கு..

அப்பெண்ணை ரகசியமாக சொந்தக்கார பெண்ணோடு எப்போதும் செல்லும் கோவிலுக்கு வர வழைத்தார்கள்..அம்மா...

நம்பிக்கைக்குறிய சிலரோடு சென்று கோவிலில் வைத்தே மாமா அத்தை திருமணம் நடந்தது..

திருமண செய்தி பரவியதும் அவ்வளவுதான்...

அம்மா மேல் காவல்துறையில் புகார் செய்துவிட்டனர்..அத்தையின் சகோதரர்..

கூடவே அம்மாவை பிடிக்காத சிலரும் கூட்டாளிகளாக.. :)

காவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர்.." உங்கம்மா பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக தகவல் வந்துள்ளது . விசாரிக்கணும் " என..

நாங்க பயந்துதான் போனோம்.. :)

ஆனால் சொந்தக்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தார் அப்போது.. நெல்லையிலேயே

அம்மா தொலைபேசினார்.. தாங்கள் எல்லாரும் மிக பத்திரமாக காவல் நிலையத்துக்கு சென்று விளக்கமளித்துவிட்டு வந்தாச்சு

பயப்பட வேண்டாம் என..அப்புரம்தான் நிம்மதியானோம்..( முதல் அத்தையின் சம்மத கடிதம் இருந்தது.. அவரிடமும் தொலைபேசினர் காவலர் )

பின் மாமாவும் அத்தையும் எந்த உறவினர் வீட்டிலும் தங்காமல் விடுதியில் தங்கிவிட்டு அக்கம் பக்கம் ஊர்களுக்கு சென்றுவிட்டு

மாமா தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.

முதல் அத்தையும் இரண்டாவது அத்தையும் நட்பாக சில காலம் பிடித்தது..

ஆனால் இரண்டாவது அத்தை மிக நன்றாக சமைப்பதோடு வீட்டையும் நோயாளி அத்தையையும் பார்த்துக்கொண்டதும் குடும்பத்துக்கு திருப்பம் வந்தது..

அதோடு அத்தைக்கு இரண்டு குழந்தை பிறந்தது குடும்பமே மகிழ்ச்சியானது...குழந்தைகள் முதல் அத்தையை "மம்மி" என்றும் இரண்டாவது அத்தையை "அம்மா
" என்றும் அழைப்பார்கள்..

நெல்லைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வருவதோடு சரி.. தன் சகோதரர் வீட்டுக்கு கூட அத்தை செல்லாமல் இருந்தார் சில காலம்..

முதல் அத்தை ஆசிரியராக இருந்ததால் படிப்பெல்லாம் அவர் கவனிப்பார்... பெருமையாக...

இரண்டாவது அத்தை கூட இப்ப ஸ்டைலா உடுத்த , மாற ஆரம்பித்தார்கள்..மாமாவின் பதவிக்கு பொருத்தமாக..

இன்று குழந்தை இருவரும் நன்று படித்து வேலையிலும்... பெற்றோர் மூவரையும் அருமையாக கவனித்துக்கொண்டு..

ஆனால் இன்று அந்த அத்தை மாமா நெல்லைக்கு வந்தால் அம்மாவை சந்திப்பதில்லை.. இடையில் பலரின் குசும்பு வேலைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

இதுதானே உலகம்..?.. ஆனால் அம்மாவுக்கு அந்த மன திருப்தி போதுமே.. அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதே இவரின் வெற்றி..

அதுதானே முக்கியமேயொழிய அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்து தம்மோடு அவர்கள் நட்பாயிருப்பதை விட?..

அம்மாவுக்கு எத்தனை எத்தனை நல்ல நட்புகள் உண்டோ அத்தனைக்கு அத்தனை எதிராளிகளும்...உருவாகினர் ..:)

( சராசரி மனிதர் நட்பில்லாவிட்டாலும் , எதிரிகள் இருக்ககூடாது என்ற கவனத்திலேதானே நல்லது செய்யாமலும், தீமையை கண்டிக்காமலும் செல்கிறார்.? நமக்கெதுக்கு வம்பு என ?.. ) .

ஆக நட்புகள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் மாறி மாறி வந்தது அம்மாவுக்கு..

ஆக அவரது ஒவ்வொரு செயலும் ஒரு போராட்டமாகவே அமையும்..

அதே போல நன்மை செய்தவரெல்லாம் கூட பழி போட்ட காலமும்..

இது இயற்கையின் விதி என எடுத்துக்கொள்வாரேயொழிய அதனால் அவர் காரியம் எதுவும் தடை பட்டு நின்றதேயில்லை...

மிக மிக என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , எதிரி எனப்படுபவர், சண்டையிட்டிருப்பார், அம்மாவை மோசமாக பேசியிருப்பார், ஆனால் அவர் பிள்ளைகளுக்கோ , அவருக்கோ ஒரு பிரச்னை என்றால் எவ்வித மனக்கச்சப்புமின்றி இவர் வலிய சென்று உதவுவார்...அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கினாலும் கூட..

மனதில் வஞ்சம் வைத்து பார்த்ததில்லை.. ஏனெனில் அதை பற்றி நினைக்ககூட அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

She was always on the run to help someone .. She kept moving , occupied, busy always & a very active personality .... Never remained stagnant.. Never worried about comments or complaints..

அவர் எதைக்கண்டும் தன் ஓட்டத்தை உதவியை நிப்பாட்டியதில்லை.. உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வேணும் அவருக்கு..

அம்மாவை யார் திட்டினாலும் எமக்கு கோபம் வரும்.. ஆனா அவர் கண்டுக்கிட்டதேயில்லை..

அதையே தன் வாழ்வின் வெற்றியாக , லட்சியமாக நினைத்திருக்கக்கூடுமோ?..


சொந்தமோ, நட்போ எப்போதும் ஒருபோதும் இருப்பதில்லை. அவரவர் சூழல் மாற , வட்டங்கள் மாற மனிதனும் மாறுவார்கள் என்பதை தெரிந்து வைத்து எமக்கும் கற்றுதந்தார்.. அதை ஏற்க பழக்கினார்...

படம் : நன்றி கூகுள்..

அம்மா புராணம் - 1 துணிவு படிக்க

அம்மா செய்துவைத்த மறுமணம் படிக்க





.

Tuesday, November 23, 2010

அம்மா புராணம் - 1. ( துணிவு )














































புரட்சி திருமணம் : 1


" நான் குடும்பத்தோடதான் தற்கொலை செய்யணும்." அழுதுகொண்டே வந்தார் எங்க சொந்தக்கார பெண்.. அம்மாவுக்கு அக்கா முறை..

கணவனை இழந்தவர்.. சொத்துக்கள் உண்டு.. ஆனால் கிராமம்...பொறுப்பில்லாத மூத்த மகன்..

வந்தவரை சாப்பிட வைத்து சாவகாசமாய் சமையல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டே பேசுகிறார் அம்மா..

எங்க வீடு முன்னறையிலேதான் அம்மா காய்கறி நறுக்குவார். அங்கேதான் தொலைபேசுவார்.. எல்லாமே அங்கேதான்..

ஆக மிக அலங்காரமெல்லாம் காண முடியாது..

என் தோழிகளின் வீடெல்லாம் மிக நேர்த்தியாக இருப்பதுபோல் ஏன் நம்ம வீடும் அப்படி இருக்கலாமே னு நினைப்பேன்..

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவமே கிடையாது..

யார் வேணுமானால் எளிதாக அம்மாவை அணுகி பேசும்படியான வசதிகளை மட்டுமே கொண்டது..


அம்மாவோட அப்பா பெரிய காம்பவுண்ட் வீட்டில் 12 வீடுகள் கட்டும்போதும் அம்மாதான் கணக்குப்பிள்ளையாம்..

சில நேரம் செங்கல்கள் கூட வேலையாளோட சுமந்ததுண்டாம், ஆள் குறைவாய் இருந்தபோது..

பாட்டிக்கு பிள்ளை பெறுவதே வேலை.. அம்மாவுக்கு கீழ் 5 குழந்தைகள் .. ( இறந்தது தனி கணக்கு ) .

ஆக அம்மாதான் ஆண்பிள்ளை மாதிரி தாத்தாவுக்கு...அதோடு மாடுகள், கோழி , நாய் வளர்ப்பு, தோட்டம், வயல் வேலை, மாட்டுவண்டி,

என வீடு நிறைய ஆட்கள் விலங்குகளோடு வளர்ந்தவர்..எப்பவும் தானியங்கள் நெல், உளுந்து என காயும் மாடியில் முற்றத்தில்..


அதிலும் எங்க வீட்டு முற்றத்தின் வாசப்படிகளில்தான் அதிகம் அம்மா உட்கார்ந்திருப்பார்.... எதிர் வீட்டு மிகப்பெரிய வேப்பமரமும் அதன் சுகமான குளிர்ந்த காற்றும் ,

எங்க வீட்டு மாமரம் , அசோக மரம் , முருங்கை நிழலுக்கடியில்...

மிக சுகம் தரும்..

" என்ன பிரச்னை " என விசாரித்தார் அம்மா..

" திரும்பவும் அந்த பெண்கிட்ட பேசியிருக்கான் என் மகன்.. அவனை வெட்டுவேன் னு அலையுறாங்க அந்த சாதிக்காரங்க.."

" வேலை வெட்டி இல்லன்னா இப்படித்தான்.. சரி எங்க இருக்கான் உன் மகன்.?"

" தெரிஞ்சவங்க வீட்டில்..."

"என்ன முடிவு செய்திருக்க .?"

" அந்த தாழையூத்து பெண்ணை பேசி முடிச்சு வெச்சிருக்கேன்..அவங்க இவனுக்கு வேலையும் வாங்கி தருவாங்க.. பெண்ணுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்.. அதனால வரன் அமையல... இவன் சம்மதிக்க மாட்டேங்கிறான்.. காதலிச்ச அந்த பெண்ணைதான் கட்டுவேன் னு சொல்றான்..

அந்த சாதிக்காரங்க இவனை கொலையே செய்திருவாங்க..எத்தனை நாள் இப்படி திரிவான்?.."

" சரி கிளம்பு.. "

" எங்க.?"

" தாழையூத்துக்கு முதல்ல போறோம்.. சம்பந்தம் பேசிட்டு.. அவனை கூட்டிட்டு நாளைக்கு கல்யாணத்த முடிச்சிரலாம்.. "

" நெசமாத்தான் சொல்றியா .?"

சென்றார்கள் . அண்ணாவோடு இரவு வந்தார்கள்..கூடி கூடி பேசினார்கள்..

விடிந்ததும்தான் தெரிந்தது அன்று எங்க வீட்டில் வைத்தே கல்யாணம் என்று..

அக்கா ,சின்ன அண்னாவிடமும் என்னிடமும் , அம்மா, அந்த அண்ணனை காண்பித்து ,

" இவன் வெளியே எங்காவது போகணும்னு சொன்னா போக விடக்கூடாது.. இந்த ரூம் விட்டு வெளியே அனுப்ப கூடாது , பாத்ரூம் தவிர.."

" எப்படீம்மா .?"

" நாங்க போய் தாலி வாங்கிட்டு சீக்கிரம் வந்திருவோம்.. .."

நானும் அக்காவும் , சின்ன அண்ணாவும் காவல்...

பெரிய அண்ணா, அப்பா எல்லாரும் சாப்பாடுக்கு சொல்ல போனார்கள்...

அண்ணி மாடியை தயார் செய்தார்.. தம்பதிகளுக்கு..

ஒரு பதினோரு மணியளவில் , அந்த அண்ணன் மெதுவா முன்னறைக்கு வந்தார்கள்..

அப்படியே முற்றம் வந்தார்கள்.. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம்..

" அண்ணே உள்ள வாங்க.." சின்ன அண்ணா.

" இருல.. வாரேன்.. மாங்கா நல்லா காய்ச்சிருக்கே.. "

சொல்லிக்கொண்டே இருந்தவர் தப்பி ஓடினார் பின் தெரு வழியாக..

அண்ணா துரத்திக்கொண்டு பின்னால் ஓட ,

அவரை தொடர்ந்து அக்காவும் ஓட ,

சிலர் வேடிக்கை பார்த்ததும் ,

அக்கா சம்யோசிதமாக , திருடன் , திருடன் , " என கத்த ,

மூன்றாம் தெருவிலுள்ளவர்கள் கூட ஓடி சென்று அண்ணாவை பிடித்தார்கள்..

அடி விழுமுன் , சின்ன அண்ணா விபரம் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தார்..

இப்ப எல்லா கதவையும் பூட்டி வைத்தோம்..பூட்டு போட்டு..:)

அம்மா வந்ததும் , கேள்விப்பட்டதும் , அந்த அண்ணாவை திட்டோ திட்டுன்னு அப்படி திட்டினார்கள் .

" ஒன்ணு செய். இப்பவே இங்கேயே உங்கம்மாவுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிட்டு நீயும் செத்துப்போ.. உன்னால தான் அவளுக்கு எத்தனை நாள் பிரச்னை..

கணவனும் இல்லை.. நீயும் தறுதலை..உனக்கு காதல் ஒரு கேடு..அம்மாவை காப்பாத்த வழியில்லை.. இதுல..%&*^&%^(%^(&**% " அப்படி இப்படின்னு..

அந்தம்மா அழ, அந்த அண்ணன் வெட்கி தலை குனிய....கொஞ்சம் நேரம் சோகமானது அந்த சீன்...

மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தாழையூத்துக்கு சென்று பெண் அழைத்து வந்தார்கள்...

கூடவே சொந்தங்களும்.. எல்லாருக்கும் மாடியில் சாப்பாடு..

எங்களுக்கு தெரிந்த ஒரு பாதிரியார் அழைத்து ஆசீர்வதித்து , குத்துவிளக்கேற்றி திருமணம் நடந்தது வீட்டிலேயே சாமி படம் முன்பு..

சில பெரிய மனிதர்கள் சாட்சியோடு..

அப்புறம் அன்று எங்க வீட்டிலேயே மணமக்கள் தங்கினர் மாடியில்..

3 ஆண் குழந்தைகள் பெற்று , நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள்...இன்று..

இப்ப நினைத்து பார்த்தாலும் என்னால் நம்பவே முடியாது..

எப்படி ஒரே இரவுக்குள் அம்மாவால் அத்தனை காரியத்தையும் , அலைச்சலையும் அலுப்பின்றி செய்ய முடிந்தது..?

அதிலும் ரொம்ப ஆச்சாரமான இந்துக்களுக்கு , கோவிலில் சென்று கூட திருமணம் செய்யாமல் , அப்பவே , பெரியவர்கள் அழைத்து ,

புரட்சி திருமணம் செய்தார்கள் என்று.. ?.

உணவோ, உறக்கமோ எப்போதும் பெரிதாகவே தோன்றாது அவருக்கு..

எந்த நேரத்திலும் கூட சென்று உதவ தயாராயிருப்பார்.. எம்மையும் சில நேரம் , கிராமத்திலிருந்து வருபவர்கள் கூட பள்ளிகளுக்கு அனுப்புவார் அட்மிஷன் விஷயமென்றால்.. .எரிச்சலா இருக்கும்.. ஆனால் ஒருபோதும் மறுக்கவே முடியாது அம்மாவின் கட்டளைக்கு..

அதே போல மருத்துவமனைக்கும்.. எனக்கு அந்த வாடையே மயக்கம் தரும்.. ஆனா மாமாவிடம் அறிமுகப்படுத்த நான் கூட போவேன்.. விருப்பமேயில்லாமல்..

அம்மாவை திட்டிக்கொண்டே.. :).. அதிலும் கடைசியா பிறந்து தொலைச்சா அவ்வளவுதான்.. எல்லாருக்கும் எடுபிடி நாமதான்..:)

இதுல எனக்கும் சின்ன அக்காவுக்கும் அக்ரிமெண்ட் உண்டு..

அவளுக்கு வேண்டிய வெளி வேலைகள் நான் செய்து தரணும் வாங்கிக்கொடுக்கணும்.. அவள் எனக்கு இஸ்தரி போடுவது , படம் வரைந்து தருவது னு ஒப்பந்தம்..

இதில் வேற எங்க வீட்டில்தான் அந்த காலத்தில் தொலைபேசி இருந்தது..( இன்னும் சிலர் வீட்டில் ஆனா அனுமதி கிடையாது மற்றவருக்கு ) .. ஊர் முழுக்க எண் கொடுத்து வெச்சிருப்பாங்க.. யாருக்காவது தொலைபேசி அழைப்பு வந்தால் நாந்தான் ஓடி போய் சொல்லணும்..சில டிப்ஸ் மாதிரி பரிசும் கிடைக்கும்தான்.. :)

அதே போல செய்தித்தாள் பரிமாறலும்.. " ஏய் பொடிசு " னு எதிர் வீட்டு அங்கிள் கூப்பிட்டா " பேப்பர் வந்தாச்சா " னு அர்த்தம்,...

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லையென்பதால் என் மீது பிரியமும்.. விசேஷ கவனிப்பு உண்டு எனக்கு... அதனாலேயே அவங்க மகனுக்கும் எனக்கும் சண்டை வரும்..

அதனால எனக்கு உடம்பு சரியில்லாட்டி தெருவில் பலர் வந்து விசாரிப்பார்கள்.( எடுபிடியாச்சே ) . பெருமையாயிருக்கும்..:)

அதுவும் சரியா முழுப்பரிட்சையோடு ஏதாச்சும் ஒண்ணு வரும்.. அம்மை , டைபாய்டு , கை உடைத்தது.. என தொடர்ந்து 3 வருடம் தேர்வுக்கு போகவில்லை..

ஒருமுறை இப்படித்தான் எடுபிடி வேலையில் தவறு நடந்தது....ரொம்ப காமெடியா போச்சு... அது என்னன்னு கேட்கிறீங்களா?.. அடுத்த பதிவில்.....அதோடு இன்னொரு புரட்சி திருமணமும்...

முக்கியமா போலித்தனமற்றவராய் தன் சொந்தங்களை அக்கம் பக்கமுள்ளவர்களை அவர்கள் கஷ்டங்களை புரிந்து நேசித்தார்..

அதனால் அவருக்கு அலங்காரம் தேவையற்றதாய் இருந்திருக்கும் எதிலும்..

ஏற்கனவே அவர் செய்துவைத்த விதவை மறுமணம் பற்றி படிக்க

விதவை மறுமணம்





படம் : நன்றி கூகுள்..

Monday, November 22, 2010

கோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.

லிவிங்-டுகெதர்











































மனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..

சில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..

சிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.

சிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...

சிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..

சிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .

இவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...



திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..

இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..

பாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..

ஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..


அதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..

ஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக

, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..

எதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..

ஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..


என்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..

திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..

ஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..


இப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..

ஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..

பிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...

சில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....


இப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..

காதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..

வாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...


அதைக்கொண்டே முடிவுகளும் எடுக்கின்றார்கள்:..

இத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..

ஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.?.

பிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட?..

சில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட?..


எல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..

ஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..


எனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.

ஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..

முதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..


அடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்

அடுத்து சில அபார்ஷன்கள்..

உடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..


அப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..

வீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...

அப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அனுமதி..

இப்படி எத்தனை எத்தனை கதைகள்? .வெளியில் சொல்ல முடியாமல்?..தெரியாமல்..?

ஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..

இது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..



விவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..

முக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..?


ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..


திருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..

மற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் ???" என்பதாய் கேள்வி..


இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...

இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..

நிஜம்..

பெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..

இதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே?.. " ********* " , " ***********" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே?.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே ?..

இதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..


இவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..

மேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .


படிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன ?..

அப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்காலில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..

அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..


லிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது " ****** " த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.?

காதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா?.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...

சில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..

எல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா?..


ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...

இத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..

இருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..

லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...

அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..

முக்கிய காரணிகள் ,

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

இக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...


நிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...


அதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..

புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..

தனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே " **** , ****** " என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)

பாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா ?.. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே..? பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா?.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...!!

வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...



மாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...

சில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .

" காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. "

நன்றி : http://www.sishri.org/kaaman.html

----------------


பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.

ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.


http://www.eegarai.net/-f15/-t7337.htm?theme_id=13515


படம் : நன்றி கூகுள்.