Monday, February 18, 2008


பாகம் - 5

சனிக்கிழமை விடுமுறையாதலால் மது நிஷாவின் வீட்டுக்கு செல்வது வழக்கம்...குழந்தைகளுக்கு வேண்டியபொருள்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாகச்சென்றாள்..கதவைத்திறந்த நிஷா ஒப்புக்கு உள்ளே வா என்று சொல்லிவிட்டுசெல்ல, ஒருமாதிரியிருந்தது..

குழந்தையுடன் விளையாடிவிட்டு வரும்வரை அவள் சமையலிலே... என்னாச்சு இவளுக்கு.
" ஏய் என்னாச்சு.. நானும் வந்ததிலேருந்து பார்க்கிறேன்.. சரியாயில்லை நீ. ஏன்.."பதிலில்லை..
பின் கை இரண்டையும் பிடித்து அடுத்த அறைக்கு அழைத்து வந்து
"இப்ப நீ சொன்னாதான் உண்டு.."

" என்ன சொல்ல.. இன்மேல் நீ இங்கு வரவேண்டாம் மது.. நானே என்னைப் பார்த்துக்கொள்வேன்..."
" பைத்தியமா உனக்கு..."
" ஆமா . இவ்வளவு நாள் அப்படித்தான் போல. இப்பத்தான் தெளிஞ்சிருக்கேன்.."
" என்ன சொல்ற நீ.."
" ஆமா மது, நீ எனக்காகத்தான் திருமணம் செய்யாமலிருக்கிறாய் என்று ஊர் முழுக்க பேச்சு.."
" ஹஹஹஹ. இவ்வளவுதானா. அதுக்குதான் அம்மணி கோவமா..என் செல்ல நிஷா.." என்று அவளை இழுத்து அணைத்துக்கொள்ள,அவள் விலகி
" உண்மையாகத்தான் சொல்கிறேன் . நீ இனியும் திருமணம் செய்யாவிட்டால் இங்கு நீ வருவதை அனுமதிக்க மாட்டேன்.."
" . அவ்வளவுதானே.. சரிங்க நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளை பாருங்க..அதுவரைக்கும் வரலாம்தானே?.." சிரிப்புடன்..

" . ம். மாப்பிள்ளை ரெடி... நீதான் சரின்னு சொல்லணும்.."

" ஹாஹாஹா.. அட அதுக்குள்ளேயே.."விழுந்து விழுந்து சிரிக்கிறாள் விளையாட்டு என்றெண்ணி..

" சரி யாராம் மாப்பிள்ளை..?"
" ரகு.."அப்படியே அதிர்ச்சியில் மது நிஷாவை முறைக்கிறாள்..
" ஒஹோ . இங்கு வரைக்கும் வந்தாச்சா , விஷயம்...என்ன இதெல்லாம்..." சற்று கோவமாக...

"புரிந்துகொள் மது.. ரகு மிகவும் நல்லவர், நான் விசாரித்தவரையில்.."
" நிஷா.. தயவுசெய்து இனி அதைப்பற்றி யாரும் பேசவேண்டாம் என்னிடம்.. எந்த மாற்றமுமில்லை..."
" அப்போ நானும் தீர்மானமாய் சொல்கிறேன், நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. எனக்கெதுக்கு பழி.."அழுகையாய் வருகிறது மதுவுக்கு...
" நீயுமா என்னைப்புரியாமல்" என்று அவள் மடியில் படுத்துக்கொள்கிறாள்..அன்பாக அவள் தலை வருடியபடியே நாந்தான் முதலில் சந்தோஷப்படுவேன் மது உன் திருமணத்தைப்பார்க்க...
-------------------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்தால் அண்ணா போன் செய்த விவரத்தை அப்பா சொல்கிறார்...கீதாம்மா டாக்டர் சொன்னதாக ரகுவைப்பற்றி கேட்கிறார்.
" என்னம்மா சொல்ற நீ.. உன் விருப்பம் என்ன.. உன் அதிகாரியாமே..."அப்பா.

"எனக்கு இஷ்டமில்லைப்பா.. இத்தோடு விட்ருங்கப்பா.."

" சரி நாங்க பார்த்த மாப்பிள்ளைதான் பிடிக்கல. என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய் மனதில்..."கீதாம்மா கொஞ்சம் வருத்ததுடன்...

" புரிஞ்சுக்கோங்கம்மா. எனக்கு திருமணமே வேண்டாம்..."

" அதுதான் ஏன்.. எங்களுக்கு கடைமை இருக்கே...நீ ஒண்ணும் சம்பாதித்து எங்களைக்காப்பாத்த வேண்டாம்."

" அப்பா..." அழுகிறாள்... சரி விடு கீதா..குழந்தைகிட்ட நான் பேசிக்கிறேன் ..

" என்னமோ போங்க.. அவளுக்கு செல்லம் கொடுத்தே எல்லாம் அவள் இஷ்டப்படி..."மகளை ஆறுதல்படுத்தி மாடிக்கு அழைத்துச்சென்று அமைதியாக , விளக்குகிறார்..

பொறுமையுடன் அவள் கருத்தையும் கேட்கிறார்.. இறுதியில் அவர்கள் வீட்டார் வந்து பார்த்துவிட்டு மட்டும் செல்லட்டும் டாக்டருக்கு கொடுக்கும் மரியாதைக்காக என்று அவளின் அனுமதியும் பெறுகிறார்.
பாகம் -4

வேந்தனுக்கு , அப்பா மதுவுக்கு இவ்வளவு இடம் கொடுப்பது பிடிக்கவில்லை...என்ன விஷயம் என்றாலும் அவளைக்கலந்தாலோசித்து பின்னரே முடிவெடுக்கிறார்...சிலசமயம் அவள் சில முடிவுகளை நிராகரித்தால் அதற்கும் அப்பா ஒத்துபோகிறாரேஎன்று எரிச்சலாய் இருக்கின்றது வேந்தனுக்கு...

தன் அமெரிக்கப்படிப்பு , அனுபவம்,எல்லாம் அவளுக்குப் பின்னால்தானா?.. அவள் என்ன வெறும் M.Com.,, M.B.A தான்...என்ன இது சுத்த பைத்தியக்காரத்தனமாய் இருக்குது..சரி எல்லாம் அப்பா காலம் வரைக்கும் தான்... என்று பொறுத்தார்...இப்படித்தான் ஒருமுறை மதுரையிலுள்ள ஒரு ஃபாக்ட்ரியை மூடுவதன் பொருட்டு வக்கீல் மற்றும் ஆடிட்டர்அனைவரையும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்காக அப்பாவுடன் ஆலோசனை நடத்தும் கூட்டத்திலும் அவளையும் அழைத்தார் அப்பா..

எல்லா வற்றையும் கேட்டுவிட்டு 2 மணிநேரம் கழித்து
" நீ என்னம்மா சொல்ற மது .."
" அய்யா மன்னிக்கணும், அந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது.. அவர்களுக்கு வேறு வேலை தெரியாது...ஆகையால் மனிதாபிமான முறையில் அதை ஒரு தொண்டு நிறுவனமாக மட்டும் கணக்கில் கொண்டு மாற்று தொழில் ஏற்படுத்தும்வறை அதை மூடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.." என்று

அதற்குண்டான அனைத்து புகைப்படங்கள்பேட்டிகள், presentations( மன்னிக்க) எல்லாவத்தையும் விளக்கமாகத் தந்தாள்..அதைப்பார்த்த மாத்திரத்தில் ராமர் அய்யாவும் ,
" சரி இப்போதைக்கு இதனை மூட வேண்டாம் . தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிடுங்கள்.."என்று ஒத்தை வரியில் சொல்லிவிட்டு ,

" நன்றி அனைவருக்கும்.."என்று முடித்துவிட்டார்..வேந்தனுக்கும் மற்ற சகோதரருக்கும் பயங்கர அதிர்ச்சி...கிட்டத்தட்ட 2 மாதமாகசெலவழித்த அனைத்து வேலைகளும் , நேரமும் வீண்...

எல்லாத்துக்கும் காரணம் மது..தோல்வி என்று ஏற்கமுடியாமல் அவளுடைய அணுகுமுறையையும் ஒருகணம் வியந்தார்..எப்படி இத்தனை விவரங்களை ஆர்ப்பாட்டமின்றி விரல்நுனியில் வைத்திருக்கிறாள்..

எல்லோரும் சொல்வதுபோல் அவள் ஒன்றும் தெரியாதவள் அல்ல. என்ன பெண் என்றஒரு மனப்பான்மை , அனுபவக்குறைவு அவளை குறைத்து எடைபோடச்செய்கிறது,.குழப்பமாக யாரையும் தன்னை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் செல்ல நாய்களுடன் வேட்டைக்கு மலைக்கு பொழுதுபோக்க புறப்பட்டார்....அவருடைய உலகமே தனி.

.இயற்கையும், விலங்குகளும் , தனிமையும் ..அவருக்கு பிரியமானவை... அந்த தனிமையேபலவிஷயத்தை கத்துக்கொடுக்கும் குரு அவருக்கு..

.---------------------------------------------------------------------------------

ரகுவின் இறக்கமற்ற வார்த்தைகள் நொடிவிடாமல் மனதை கிழித்துக்கொண்டிருந்தாலும், அழுகையைமறந்து வருடங்கள் பல ஆனதால் மதுவுக்கு கண்ணீரும் கை கொடுக்கவில்லை.....

அசதியில் வந்த தூக்கம், துக்கமாய்தொண்டையையும் , அனைத்தையும் அடைத்தது....ரகுவின் கோபம் புதிதல்ல...

ஆனால் பிரிவென்பது...

அவன் தானே ஆசைப்பட்டான் இப்படி உயரத்துக்கு வரவேண்டுமென்று... M.Com மட்டுமே படித்திருந்த தன்னை, முதல் குழந்தை பிறக்கும்போதே M.B.A.. படிக்கச்செய்து அழகு பார்த்தான்.. பெண்கள் வேலைக்குப்போகணும்என்று விரும்பியவனும் , அதற்கான எல்லா சவுகரியமும் செய்து தந்தவன் ஆரம்பத்தில்...

ஆனால் இவ்வளவு சீக்கிரம் ராமர் அய்யா மதுவின் மேல் உள்ள நம்பிக்கையால் உயர்பதவி கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்...தன் சொந்த மகள் போல் அவளிடம் அனைத்து அலுவல் விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்து சொல்லுவார்..

எஸ்டேட்டுக்கு மதுவுடன் சென்று பழங்குடியினருடன் பழகுவார்.. . தொழலாளர்கள் கவலையை நேரில் கேட்பார்..மதுவும் எளிமை விரும்பி, அவரைப்போல் , அதுவே இருவருக்குள்ளும் நம்பிக்கைஏற்படுத்தியது...

----------------------------------

விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிய மதுவை,

" என்னம்மா ரொம்ப அசதியா.. கொஞ்சம் காஃபி அருந்திவிட்டு படுத்துக்கொள்ளேன்"

" அய்யய்யோ , மன்னிக்கணும் அம்மா...அதிகம் தூங்கிவிட்டேன்.."

" என்னம்மா கண்கள் வீக்கமாயிருக்கு..அதிக அலைச்சல் போல.. சரி தூங்கம்மா.."

" இல்லையம்மா.. பிள்ளைகள் பள்ளி போயாச்சா...சே வெக்கமாயிருக்கு பிள்ளைகளைகூட பாராமல்.."

" அடடே.. நாந்தான் தடுத்தேன்மா..நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம்..."அதற்குள் ரகு

" அம்மா அலுவலகம் செல்கிறேன்" அவளிடம் சொல்லாமல்...இதயமே வெடிப்பதுபோல்....ஏன் ரகு, கொஞ்ச நாள் அம்மாவிடமாவது நடிப்போமே...

அவர்கள் எப்படி இதை தாங்குவார்கள்.. ரகு , நீ என்னைத்தண்டிப்பதாய் எல்லோரையும் , ஏன் உன்னையும் சேர்த்துதண்டிக்கின்றாயே....எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்...சிரித்தமுகத்துடன்..
" அம்மா. உங்க கையால் காஃபி.. பிரமாதம்.. பாருங்க எவ்வளவு ஃபிரஷா ஆயிட்டேன்.."
ஒரு துள்ளலுடன் எழுந்து ஓடும் மதுவை புரியாமல் பார்க்கிறார், விசாலம் அம்மா...குளியலரைக்கு சென்றவள் கண்ணாடியில் முகம் பார்க்கும்போதுதான் தெரிகிறது அததனைசோகமும் முகத்தில் , கண்ணில்....

நேற்று ரகு சொன்னது நினைவுக்கு வருகிறது...

" பிரியாமல் இருக்கணும் என்றால் நீ வேலையைவிட வேண்டும்.. அதற்கு நீ ஒருபோதும்..சம்மதிக்கமாட்டாய்.. ஏனென்றால் என்னைவிட உனக்கு அந்த வேலைதான் முக்கியம்..."கேட்கும்போது சிரிப்புதான் வந்தது...

தூங்குபவனை எழுப்பலாம், துங்குபவன்போல் நடிப்பவனை?..நானே விரும்பினாலும் விடமுடியாத வேலையிது ..உனக்குத்தெரியாதா ரகு...ஒரு காலத்தில், பணத்துக்காக, அப்புரம் பெருமைக்காக, பின், பெரியவரின் அன்புக்காகஎன்று இருந்து, இன்று அவளைமீறிய பொறுப்புகள், ரகசியங்கள் அனைத்தும் அவள் மீது...

அவ்வளவு எளிதல்ல அதனைவிட்டு விலகுவதென்பது..அவளை ஒருகட்டத்தில் பங்குதாரராக நியமிக்க பெரியவர் எடுத்த முயற்சியை தடுக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாள்.. அதிலும் அவர் மனதிலும் கம்பெனியின் மூத்தா ஆடிட்டர்கள் மத்தியிலும் மிகவும் உயர்ந்துவிட்டாள்...மக்களுக்கு இந்த கம்பெனியின் மூலம் சேவைசெய்ய முடிவதே தன் பெரும்பாக்கியமாகக் கருதினாள்..

அதனால் அவளுக்கு அத்தனை வசதிகளையும் கம்பெனியே செய்து தந்தது...இதனோடு ஒன்றிவிட்டதால் தன் உயிர் உள்ளவரை அதனை விட்டு விலகுவதென்பது இயலாத ஒன்று..ரகுவிடம் என்ன பேசினாலும் பிரயோஜனமில்லை.. மேலும் வருத்தமே மிஞ்சும் என்று அமைதிமட்டும்காத்தாள்... அவனுக்கோ அவள் அமைதி கூட அழுத்தமாகத் தோன்றியது....

------------------------------------------------------------------------------------------

காரில் மதுவை இறக்கிவிட்டு, நண்பன் போன் செய்தான் ரகு..

." என்னடா மதுவைப்பற்றியா எல்லா டீடெய்ல்ஸும் ....."

" எல்லாம் விரல் நுனியில்.. ஆனா ஒவ்வொண்ணா தான் தருவேன்.. அதுக்கு விலை அதிகம்.."

" டேய் டேய் என்கிட்டேயெவா.. ம் . உனக்கு இப்ப நல்ல நேரம்..சரி சொல்லு.."
" மது தோழி நிஷாவிடம் பேசிவிட்டேன்.., அப்புரம், நாளை அவர்கள் குடும்ப டாக்டர் எனக்கு பழக்கம்..கோயிலில் அவரை சந்திக்கிறோம் நாம்.."

"ம் . அப்புரம் மதுவுக்கு ஒரு அண்ணன்.. மும்பையில்.. அவரிடமும் பேசச்சொல்லி என் மைத்துனனை அனுப்பியாச்சு.."

" அடேங்கப்பா.. என்னைவிட நீ வேகமா இருக்க.."

" பின்ன இல்லியா.. யான் பெற்ற இன்பம் பெறுக நீயும்...இல்லடா.. நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதித்ததே சந்தோஷம்.."

------------------------------------------------------------------------------------------
டாக்டர் சங்கர் கடவுள் மந்திரத்தை பாட்டாக பாடிக்கொண்டே கோயிலை சுத்தி வருகிறார்...சுந்தரைப்பார்த்துவிடுகிறார்.... அப்போதும் பாட்டைத்தொடர்ந்துகொண்டே கண்களாலும் கைகளாலும்

" இறுங்கோ வாரேன் என்கிறார்... இவர்களும் அவர் பின்னால் செல்ல ரொம்பவே குஷியாகி சத்தமாகப்பாடுகிறார்.

"நமஸ்காரம்.. நான் சங்கர்.. உங்களப்பத்தி சுந்தர் சொல்லியிருக்கிறார்...மிக்க மகிழ்ச்சி..."

"மது ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க அதிர்ஷ்டசாலி...என்ன கல்யாணம் வேண்டாம்னு ஒரே பிடிவாதம்...எல்லாம் இனி நான்பார்த்துக்கிறேன்..உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. கோயில் காரியமெல்லாம் எப்படி."

ரகுவிற்கு பக்தியுண்டு..தலையாட்டிவைத்தான்...அப்ப என்கூட இந்த மந்திரத்தை சொல்லுங்கோ ன்னு அவர் பாட்ட்டுடன் சுத்த ஆரம்பித்துவிட்டார்..

--------------------------------------------------------------------------------------------
பாகம் - 3 தொடர்கிறது
..................................
உணவருந்தி முடித்ததும் தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்
" சார் நான் வீட்டுக்கு போகலாமென்று இருக்கிறேன்.."


" ஓ தாராளமா... நானே உன்னை விட்டுச்செல்கிறேன்.."

" இல்லை .. நான் ஒரு ஆட்டோ வைத்து சென்றுகொள்வேன்.. நன்றி..."

" நோ. நோ... எனக்கொண்ணும் சிரமமில்லை... நானும் அலுவலகம் போகவில்லை.."

பேசி தப்பிக்கவே முடியாது என்று சம்மதித்து இடத்தையும் சொல்கிறாள்..
வீட்டருகே வந்ததும் அதுவரை மெளனம் காத்த ரகு.,.


" மிக்க நன்றி.. நான் உன்னிடம் இருந்து விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்.."

ஒரு புன்னகையை மட்டும் மரியாதைக்காக அளித்துவிட்டு... நன்றி கூறி விடைபெறுகிறாள், தெரு முனையிலேயே...

---------------------------------------------------------------------------­--------

விமானம் சென்னை நிலையத்தில் இறங்கவும், மதுவின் உள்ளம் மகிழ்ச்சியால் பீறிடுகிறது...
1 மாதப்பயணம் முடிந்து எல்லோரையும் சந்திக்கப்போவதால்., முக்கியமாக குழந்தைகளை..
அலுவலக வண்டி வந்துள்ளது... சகல மரியாதையுடன் விடு சேருகிறாள்..
குழந்தைகள், விசாலம் அம்மா, எல்லோரும் , வேலையாட்களுடன் அவளை வரவேற்க..


ரகு மட்டும் மாடியிலிருந்து மரியாதைக்காக கையசைக்கிறான்..
வேலையாட்கள் ஒவ்வொருவரிடமும் அன்பாக விசாரித்துவிட்டு, குழந்தைகளுடன், 1 மணி நேரம் செலவிட்டு
, பின் விசாலம் அம்மாவிடம் பேசுகையில்..,


" ஒருவாய் சாப்பிட்டு படும்மா.. ரொம்ப அசதியில் இருப்பாய்..."

" இல்லம்மா, நான் விமானத்திலேயே சாப்பிட்டுவிட்டேன் "

கட்டாயப்படுத்தி சாப்பாடு எடுத்து வந்து பிடிவாதமாய் ஊட்டிவிடுகிறார்...

"என்ன தவம் செய்தேன் அம்மா " கண்கலங்குகிறாள்..

" சரி சரி.. நீ போய் உன் கணவனைக்கவனி..மீதி நாளைப்பேசலாம்..."கிண்டலாக..

------------------------------------------------

மாடிக்குச்சென்று ரகு இருக்கும் அறைக்கு செல்கிறாள்..

அவன் இவள் வந்தது தெரியாததுபோல் புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான்..
" நல்லா இருக்கீங்களா..?. வேலையெல்லாம் அதிக சுமையில்லையே?..."


புன்னகையோடு இவளே ஆரம்பிக்க..

" ..ம்.. இருக்கு. உன் பிரயாணம், கான்ஃபரன்ஸ் எல்லாம் நல்லபடியா இருந்திருக்கும் என நினைக்கிறேன்.."

". ம்.ம்."

வேறொன்றும் பேச விரும்பவில்லை என்று அவன் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது...

குளித்து உடுப்பு மாற்றி அவள் வரும்போது ரகு பால்கனியில் சிகெரட் புகைத்துகொண்டிருந்தான்..

இவள் போய் நின்றும் திரும்பி கூட பார்க்கவில்லை..

சரி தொந்தரவு செய்ய விரும்பாமல்...இவளும் பூஜயை முடித்துவிட்டு, மிகவும் அசதியாக
இருந்ததால் படுக்கச்சென்றாள்...


" உன்கிட்ட நான் பேசணும்....."

சந்தோஷமாக விருட்டென்று மலர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்தாள்...

" நாம் இருவரும் நல்லமுறையில் பிரியலாம் என்று நினைக்கிறேன்...".

ஒரு நிமிடம் அப்படியே இடி விழுந்ததுபோல் இருந்தது அவளுக்கு...

எவ்வளவு கனவுகளோடு வந்தேன் ரகு.....என்னுடைய கவலையெல்லாம் மறக்கலாம்
என்று நினைத்து வந்த எனக்கு இப்படி ஒரு பரிசா...
அழக்கூட முடியாமல், தோல்வியில் துவண்டு போனாள்..


ரகு தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.....

லேசா லேசா - பாகம் 2
*பகுதி -2 --
---------------
காற்றே என் சுவாசம் வந்தாய். மெதுவாகக்கதவு திறந்தாய் ==================================================

மது ரகுவின் அழைப்புக்கு உள்ளே செல்ல ஆயத்தமாகிறாள்... நேற்று நடந்ததை மனதில் அசை போடுகிறாள்... என்னவோ சொல்லி தப்பிவிட்டாலும், வீடு சேரும் வரை பஸ்ஸில் அதைப்பற்றியே நினைப்பு... " ஏம்மா டிக்கெட் எடுக்கலியா?. செக்கிங் வந்தா எங்களுக்குதான் திட்டு....இன்னாதான் யோசிப்பாய்ங்களோ" அவசரமாக சுய நினைவுக்கு வந்து பணம் கொடுத்தாள், மீதி வாங்காமல்... எவ்வளவு தைரியம் ரகுவுக்கு...

நேரில் எப்படி.. சொல்ல கூடும்.... அதுவும் இவரே முடிவு செய்துட்ட மாதிரி...ஆண் என்கிற திமிர். அதிகாரி என்கிற கர்வம்.. கோவமாய் வருகிறது... ஒரு பெண்ணால் இப்படி சொல்ல முடியுமா?.. அந்த முனீஸ் வேறு விளையாடுகிறான்... சே பெண் என்றால் இவர்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரம்..... இல்லையில்லை, ரகு கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தானே கேட்டார்... இல்லைன்னா இல்லை, ஆமான்னா, ஆமா.. நான் என்ன பெரிய அழகுராணி... என்னைவிட்டால் அவருக்கு வேற பெண்ணே கிடைக்காதா என்ன...

இருபுறமும் சிந்திக்கிறாள், உண்மையை....

இருந்தாலும் இனி தொடர்வது எப்படி , அந்த அலுவலகத்தில் இன்னும் 6 மாதம் காண்ட்ராக்ட் உள்ளதே.. சட்டென்று விலகவும் முடியாதே....அன்ன பதிலுறைக்க, எப்படி மனம் புண்படாமல் சொல்ல, மேலதிகாரியாயிற்றே...

யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது... இதுதான் சாக்கு என்று ஆளாளுக்கு திருமண அறிவுரை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்...சாப்பிட மனமில்லாது கீதாம்மாவிடம் பொய் சாக்கு சொல்லி தூங்கச்சென்றாள்..

-----------------------------------

மறுபடியும் தொலைபேசி அழைப்பு....

" மது உன்னை கூப்பிட்டு 15 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது..."

" மன்னிக்கணும் .. சார்.. இதோ வருகிறேன் சார்..."

" சரி. சீக்கிரம்..."

--------------------------------

கதவை தட்ட... " உள்ளே வரலாம்..." இருக்கையை காண்பித்து அமரச்சொல்கிறார்.. அவர் எழுந்து தான் குடித்துக்கொண்டிருந்த சிகரெட்டைத்தூக்கி அணைத்து ஆஷ் டிரேயில் போடுகிறார்...
" சாரி.. எனக்கு இந்த பழக்கமுண்டு..."
" பரவால்ல சார்...".. நிசப்தம்..
"..ம்.. பிரமோத் கம்பெனிக்கு ஆர்டர் அனுப்பியாச்சா?.."
". இல்ல சார். இன்னிக்கு. அனுப்பிரலாம் .. சார்.."
"..ம்..." "...ம்.. துபாய் ஷிப்மெண்ட் என்னாச்சு..?.."
".. அது இன்னும் 1 வரமாகுமாம் சார்.. LC ரெடி பண்ணிட்ருக்கோம்..."
"..ம்.."
".. விவேகா எண்டர்பிரைஸ்...."
". கிட்டத்தட்ட ரெடி சார்..."..
" என்ன எது கேட்டாலும் முடிக்காத மாதிரி பதில் தாரீங்க... எதுவுமே முடிக்கலயா?.."
". சாரி... சார்... என்கூட உள்ள மல்லிகா 1 வாரம் லீவு...அதான்..."
".. அதனாலயா.., இல்ல, முனீஸ் கூட அரட்டையா?..."

.. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது... ஓஹோ இப்ப புரியுது.. , அவன்கிட்ட பேசுவது தான் குழப்பத்துக்கு காரணமோ....
". வேலையை மட்டும் ஒழுங்கா பாருங்க... நான் மேலதிகாரிக்கு பதில் சொல்லணும்.."
" சரி.. சார்..." லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடலாமான்னு தோணுது...
" சரி நீங்க போகலாம்..." அவள் கதவருகில் செல்லும்போது ,

"..ம்.. மது... நேற்று நான்........".. ஏதோ நினைத்தவராய்....

".. சரி சரி.. நீங்க தொடருங்க... யூ கேரி ஆன்."..

அப்பாடா தொல்லை விட்டது என்றிருந்தது அவளுக்கு...

முனீஸ் வந்தான்..." "என்னம்மா முகம் சும்மா தீபாவளி அதிரசம் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..."

அவனை பார்க்காமலே.., " முனீஸ் , மேனேஜர்.., ரொம்ப கோவமாயிருக்கார்.. இங்க இனி வராதே...ப்ளீஸ்.."

". ஹ . ஹ்.. இங்க பார்ரா... எங்க வேலையத்தான் ஒழுங்கா செய்ரோம்ல... அப்புரம் ஏன் பயப்படணும்.." என்று பக்கத்தில் இருந்த மேஜைமேல் ஏறி குதித்து உட்காரவும், மேனேஜர் வெளியில் வரவும் சரியாக இருந்தது.. மதுவின் முதுகுப்பின் என்பதால் அவள் கவனிக்கவில்லை...

ஆனால் அவன் நெளிந்துகொண்டே மேஜையிலிருந்து இறங்குவதை ஆச்சர்யமா, பார்த்துக்கொண்டே, வேலையில் ஈடுபட,

" உன்னுடைய இடம் எது முனீஸ்.." ரகு...

". சாரி சார்.. ".. மெதுவாக ஓடிவிட்டான்..
"..ம்.."

"..ம்.. மது..."

" சார்..." எழுந்து நிற்கிறாள் , பயத்துடன்...உட்காருமாறு கைகாட்டி... ". மது 11.00 மணிக்கு ஹோட்டல் தாஜ்ல ஒரு மீட்டிங்... ரெடியாயிருங்க.."

"சரி சார்.." எதுவும் சொல்லமுடியாமல்... யோசித்துக்கொண்டிருக்க.. அதற்குள், செக்ரட்ரி, அதற்குண்டான
கோப்புகளைத் தருகிறாள்...அவசரமாக புரட்டிப்பார்க்கிறாள்... வரமுடியாது என்று சொல்ல கூட அவகாசம் இல்லையே...இன்னும் 1 மணிநேரம் இருக்குது.. அதில்பயணம் 30 நிமிடமாகும்...


இதற்குள் போன் வருகிறது நிஷாவிடமிருந்து.... நிஷா அவள் தோழி.. கல்லூரியில் ஒன்றாகப்படித்து, கல்லூரி நண்பனையே மணமுடித்து, பின் அவளையும் 2 குழந்தையும் விட்டு அமெரிக்கா சென்றுவிட்டான்....

அழகுக்காகவே திருமணம் செய்து குழந்தைபெற்றபின் அவள் குண்டாகிவிட்டதாலும், இன்னும் பல கெட்ட பழக்கங்கள் MNC வேலையில் தொற்றிக்கொண்டதாலும் அவளைப்பிரிந்தவன்.. அதிலேயே வெறுப்புற்றுவிட்டாள், மது.. நிஷா யாருமற்ற நிலையில் சாகப்போனவளை திட்டி தடுத்து, அவளுக்காகவே தான் வாழ்வதாக சொல்லி அவளை மீட்டவள் மது...அவள் குழந்தைகளுக்கோ மது என்றால் உயிர்...நிஷாவின் மனநோயை மாற்றி நல்ல மருந்தாக ஊக்கம், கொடுத்து, பழசை மறக்கச்செய்து வேலைக்குப்போகச்செய்தவள் மது....

போன் உறையாடல் கலகலப்பாயிருந்தது.. அதுவும் பிள்ளைகளின் சேட்டைகள் பற்றி... நேரம் போனதே தெரியவில்லை... மறு தொலைபேசியில்...

" மது தயாரா?.. கீழ் தளத்துக்கு வந்துவிடுங்கள்...நான் அங்கு இருப்பேன்.."

". சரி சார்..." அவசரமாக தன்னை தயார் செய்து கொண்டு போகிறாள்.... -

-----------------------------------------------

காரில் ஓட்டுனர் இருக்கையில் ரகு... எப்போதும் டிரைவர் தானே ஓட்டுவார்.. இன்று என்ன புதுசா என்று யோசிக்கையிலேயே, கண்ணாலேயே கட்டளை இடுகிறார் வண்டியில் ஏறும்படி...முன்னாலா, பின்னாலா.. குழப்பம்.. பின்னால் ஏறுவது மரியாதை இல்லை...

முனீஸ் வந்தால் அவன் முன்னால் ஏறினால், நான் பின்னால் இருக்கலாம்.. இப்போதோ வழியில்லை. அன்று முன்னாலேயே பக்குவமாக அமர்கிறாள்... ரகு மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான்..

" ம். காலையிலேயே அம்மணிய மிரட்டுனது , பின்னாளில் சொல்லி சொல்லி அவளிடம் விளையாடலாம்... சிரிக்கலாம்....அடேங்கப்பா என்னா பயம் ..இருந்தாலும் பாவமாயுமிருந்தது அவனுக்கு... அதற்காகவும் அவளிடம் சகஜமாக பேசவேண்டும் என்றும் சந்தர்ப்பம் எடுத்து காரில்... அவள் எங்கு பார்க்க என தெரியாமல் .. ஃபைலை புரட்டிக்கொண்டிருக்க., அப்பப்ப, அவளை ரசித்துகொண்டே வண்டி ஓட்டுகிறான் ரகு... அவளுக்கு பயமாக இருக்குது...

எங்கே மறுபடியும் கேட்டுவிடுவானோ என்று...

" ஃபைலில் எல்லா விவரமும் இருகில்லயா?." அவளை பேசவைப்பதற்காகவும், தன்னை கவனிக்கவும்...

" .. ம்.. ஆமா சார்..." ரகுவைப்பார்த்து பதிலழிக்க...

" உனக்கு டிரைவிங் தெரியுமா.."
" இல்ல சார்.."
" சீக்கிரம் கத்துக்கொள்.."
".ம்.."
" என்ன ..ம்.."
" அது எனக்கு எதுக்கு ன்னு......"
" ம். நான் விருப்பப்படுகிறேன் . நீ கத்துக்கொள்ளணும் என்று ..
சரியா?.." எரிச்சலாக இருக்கிறது அவளுக்கு... இறங்கி ஓடிவிடலாமான்னு தோணுது அவளுக்கு...

இருக்கட்டும் எல்லாத்துக்கும் நேரம் வரும் அப்போது குடுக்கலாம்... இப்ப ஃபைலை பார்ப்போம் என்று மனதை திசை திருப்பினாள்.. சடன் பிரேக் போட்டு வண்டிய நிறுத்தினான் ரகு

... -----------------------------------------------------------------------

விமானம் பயங்கர சத்தத்துடன் லண்டன் ஓடுதளத்தில் தறையிரங்க...

" பயணிகள் கவனத்திற்கு.................................." கொஞ்சம் சோம்பல் முறித்து தயாராக இருக்கிறாள் இறங்க ....

பக்கத்து நபர் இன்னும் குறட்டையில்.. ஏர்போர்ட் வந்ததும் தொலைபேசியெடுத்து ரகுவிற்கு பேச முயல...

" இந்த எண் தற்போது தொடர்பு கொள்ள முடியாது... சிறிது நேரத்துக்குபின் தொடர்பு கொள்ளவும்..." உடனே வீட்டுக்கு போன் போடுகிறாள்.. விசாலம் அம்மா எடுக்கிறார்....

" அம்மா நலமாம்மா.. நான் மது பேசுறேன்.. " " எப்படிம்மா இருக்க?. உன் வரவை தான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கோம்..." " சரிம்மா ரகு இல்லையா..?.."

" இதோ மாடிலதான் குழந்தைகளோடு இருக்கான்.. கூப்பிடவா.." " வேண்டாம் மா..நானே பேசிக்கொள்கிறேன் மா.." ஒரே குழப்பாமாயிருக்கு... ஏன் ரகு போன் கூட எடுக்காமல்... சரி ரொம்ப பிஸி போல தன்னையே சமாதனப்படுத்திக்கொண்டாள்... இன்னும் 12 மணி நேரப்பயணம் இருக்கே.. ஒய்வெடுக்கச்சென்றாள் விடுதியில்... பழைய இனிய ஞாபகமும் தொடர்ந்தது..
. --------------------------------------------------------

" கொஞ்சங்கூட பொறுப்பில்லை இப்படியா குழந்தையுடன் சாலையைக்கடப்பது.." திட்டிக்கொண்டே ரகு..
" ரொம்ப சமயோசிதமா பிரேக் போட்டீங்க சார். மிக்க நன்றி சார்..." முதன்முறையாக தன்னையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசும் மதுவை அச்சர்யமாக, சந்தோஷமாக பார்க்கிறார்...

கொஞ்சம் வெற்றிக்களிப்பு .. அதற்குள் ஹோட்டல் வந்துவிட...மீட்டிங் செல்கிறார்கள்... அதில் ரகு மிக உற்சாகமாகவும் அறிவுபூர்வமாகவும் பணிவாகவும் பேசுவது வியப்பாக உள்ளது.. கடைசியில் அவருக்கே வெற்றியும்.. காண்ட்ராக்ட் கையெழுத்தாகுது.. நேரம் 1. 30... .
"சரி வா சாப்பிடலாம்"

" வேண்டாம் சார்.. நான் அலுவலகம் போய் சாப்பிட்டுக்கொள்கிறேன்...".
" அதுவரையில் நான் பசி தாங்கணுமா..?.."
" இல்ல அப்படி சொல்லல சார்.. நீங்க சாப்பிடுங்க... நான் காத்திருக்கேன்..."
" அது முடியாதே..இன்னிக்கு உன் ராசின்னு நினைக்கிறேன் எல்லாம் ஜெயம்..." புன்னகையுடன்.. அவர் பாட்டுக்கு நடந்து லிப்டின் பொத்தானை அளுத்துகிறார்..
நிறய பேர் மத்தியில் மறுக்க முடியாமல் இவள்... நல்லா மாட்டிக்கொண்டோம்னு மட்டும் புரியுது.... உனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும் ன் கேட்டு ஆர்டர் பண்ணுகிறார்.. அந்த உயர் ரக ஹோட்டலில் கத்தி போர்க், கரண்டி,, எல்லாம் கொண்டு வத்து வைக்க மெதுவாக அழகாக விவரித்து அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார் இவள் எடுக்கும் வேகத்தில் கத்தி பறந்து ரகு அருகில் விழ, அவருக்கோ சிரிப்பு...

ரசிக்கிறார், இவள் செய்யும் வித்தைகளையும் போராட்டத்தையும் , நாடியில் கை ஊன்றியபடி.. வெட்கித்தான் போகிறாள்....உள்ளே கோபமிருந்தாலும்...

எனக்கு இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ." " ம்.." " ஏன்னு கேக்கமாட்டியா...."
" மொதல்ல உன்கூட தனியா வந்து, இப்படி லஞ்ச் சாப்பிடுரது..." சொல்லிவிட்டு அவள் முகத்தைப்பார்க்கிறார் .... அவளோ கரண்டிகொண்டு தட்டில் எரிச்சலாய் கோலம்போடுகிறாள்...

" அடுத்து சந்தோஷம் உனக்குத்தெரியும், இந்த காண்ட்ராக்ட் முடிந்தது.."

"ஆமா சார்.. நீங்க நல்லா , தெளிவா ,அழகா பேசினீங்க. எனக்கு பிடித்திருந்தது.." கொஞ்சம் தைரியமாய்.. சரி பேச்சை மாற்றலாம் என்று அவள்...

" ஹாஹாஹா.... உண்மையாகவா..."

"ஆமா சார்...." ஒன்றும் புரியாமல் ...

" ஹாஹாஹா ..உண்மையா உனக்கு என்னை பிடிச்சிருக்கா.. ஹாஹாஹா.." மாட்டிக்கொண்டாளே என்று.. ".........." இப்போது புரிகிறது அவரின் கில்லாடித்தனம்...

------------------------------------------------தொடரும்.. இப்போதைக்கு லேசா..லேசா..

லேசா லேசா - தொடர் பாகம் 1


அறிமுகம்...- பகுதி 1...தொடர்கிறது.....
------------------------------------------------------------------
" மது கடந்த 6 மாதமா, ஐ அம் வாட்சிங் யூ.. எனக்கு சொல்லணும் னு தோணிச்சு.."
" டேக் யூவர் ஓண் டைம்...நிதானமா சொல்லலாம்.." ஆனாலும் இப்பவே சொல்லமாட்டாள என்ற நப்பாசை..
" மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்த காதல் , கல்யாணம் இதில் விருப்பமில்லை..."


" ஐ யம் நாட் அ ரொமண்டிக் பேர்சன்.. எப்டி சொல்லனு தெரில சார்..ஐ.. ஐ..யம் நாட் த ரை பேர்சன்."
" ஹாஹாஹாஹா. இது தான் உங்க பிராப்ளமா.."


" யார் சொன்னா கல்யாணம் பண்ணிக்க ரொமாண்டிக்கா இருக்கணும்னு.."
"சார். சாரி. ஐ யம் நாட் இன் எ பொசிஷன் டூ எக்ஸ்ப்லெய்ன் யூ.. எனக்கு நேரமாச்சு சார்.."
" நாளை நாம் டிஸ்க்ஸ் பண்ணுவோம் சார்....."


என்று சொல்லிவிட்டு அவள் பதில் எத்ர்பார்க்காமல் வெளியேற முயல,
" எனிவே ஐயம் சாரி...இப்படி , இன்று, இங்கே சொன்னதற்கு..சாரி அகெய்ன்.."சிரிப்புடன் ,தடுமாற்றம்..
"இட்ஸ் ஒக்கே சார்.." அவசரமாக வெளியேறினாள்..


கலக்கமாக இருந்தது அவளுக்கு... எங்கு நடந்தது தவறு... எல்லோருக்கும் தெரியுமே, நான் திருமணம் வேண்டாமென்றிருப்பது.
தன் மேல் தவறில்லை, என சமாதானம் செய்தாலும், மேற்கொண்டு இங்கு வேலையை எப்படி தொடர்வது..


என 1000 குழப்பம்....

ரகுவுக்குத் தெரியும் அவள் உடனே சம்மதம் தரமாட்டாள் என்று.. ஆனால் எப்ப்டியோ சொல்லிவிட்டோம்
என்று மனதில் குஷி.. இனி மேற்கொண்டு காயை எப்ப்டி நகர்த்தலாம் என்று திட்டமிட்டான் புராஜக்ட்
மேனேஜர் ரகு...அவள் முகவரியை விசாரித்தான்...---------------------------------------------------------------------------­------

இதற்கிடையில் முனி என்ற முனீஸ் இவர்களுடன் வேலை பார்க்கிறான்..அவனுக்கும் மதுமேல் ஒரு கண்.
ரொம்ப ஜாலியான பேர்வழிதான்...ஆனால் கொஞ்சம் தன்னலம் ஜாஸ்தி...
" ஹை மது ..நீ கண்டிப்பா நல்லாருக்கணும் இன்னிக்கு . ஏன்னா என் முகத்துல முதலில் முழிச்சிருக்க..."
" குட் மார்னிங் முனி...என்ன வந்ததும் வராததுமாய்..."


" ஹேய் யூ நோ வாட்?.. "
" டேய் சொல்லுபா முதல்ல... ரொம்ப பீடிகை போட்டுட்டு..எனக்கு நெரய வேலையிருக்கு முனி.."
" இங்க பார்ரா.. நாங்கல்லாம் சும்மா இருக்கமாதிரி....சரி நான கேட்ட மாட்டர் என்னாச்சு"


" எது"
" அதான் நீ அத்ர்ஷ்டசாலியா?. இல்லயா?."""
" ஹாஹாஹாஹா.. ஓ. அது...வா... ஹாஹா.."
" என்ன சிரிப்பு.."
" டேய் தாங்கமுடிலடா.. போ. போய் வேலயப்பாரு..."


" ரொம்பதான் சிரிக்கிற.. ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் பீஃல் பண்ணப்போர.."
" சரி சரி. ரொம்ப பீஃலிங்க்ஸ் விடாம..போய் வேலையைப்பாரு...மேனேஜர் கோவமா இருக்கார் இன்னிக்கு"
"அவன் கெடக்கான்...."
" ம். மரியாதை.."


" சரி. அவங்க கெடக்காங்க விடுங்க...இன்னும் 30 நாள் டைம் தாரேன்..அதுக்குள்ள நல்ல முடிவா சொல்லிடு.."
"க்ளுக்.க்ளுக். என வாய்ப்பொத்தி சிரிக்கிறாள்..
" உனக்கு இன்னொண்ணு சொல்ரேன் கேட்டுக்கோ.. அந்த கேரள் சீமாவையும் கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்..


முடிஞ்சா ரெக்கமண்ட் பண்ணு அவகிட்ட... எதுக்கும் நீயும் நல்லா யோசி..
உனக்குதான் பஸ்ட் , அவ உன்னவிட அழகுன்னாலும் ..ப்ப்ரிபஃரன்ஸ்.."
" சரி சரி .. போரேன்... அதுக்காக போன்லாம் பேசவேண்டாம்"


அப்பாடா என்றிருந்தது அவளுக்கு.... வேறு வழியில்லை இவனை பகைத்தால் பெரும் பிரச்சனை..
ஒருவழியா சீட்டில் உட்கார்ந்தவளுக்கு போன்..
" கேன் யூ கம் டு மை ரூம் மது..என் அறைக்கு வர முடியுமா மது..?"
அடுத்த எரிச்சல் என்று திட்டிக்கொண்டே பைஃலுடன் சென்றாள்.

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....
======================================

அறிமுகம்...- பகுதி 1...

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவேயில்லாதது..
---------------------------------------------------------------------------
விமானம் நியூ யார்க் நகரத்தின் மேலெழும்பி பறக்கத்தொடங்கியதும் மதுமிதாவின் எண்ணச்சிறகுகள் விரிக்கத்தொடங்கின..
மேலெழும்பும் போது வரும் காது வலியை மறக்க நினைவுகளை அசை போட்டாள்...


இதே போன்று முதன்முறயாக ரகு என்ற ரகுராமுடன் தேனிலவுக்காக அவள் வந்தது.., பயந்தது..
அதனையே சாக்காக வைத்து அவன் துணையாக அனுசரணையாக இருந்த நிமிடங்கள். மறக்க முடியுமா?
அதன்பின் வந்த எத்தனையோ தனிமைப்பயணங்கள் தராத சுகங்கள் அவை...
பக்கத்தில் அமர்ந்திரூந்த நபர் நல்ல குரட்டை சத்தத்துடன் தூங்க ஆரம்பித்தார்..
இவள் ரகு தன்னிடம் முதன்முதலாக காதல் சொன்னதை எண்ணிப்பார்த்து கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்..


---------------------------------------------------------------------------­------------

ரகு குழந்தைகளுடன் குழந்தையாக தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருந்தான்...
விசாலம் அம்மாவோ குழந்தைகளை நினைத்து பயந்தபடி,
" ரகு என்னப்பா விளையாட்டு...கவனமப்பா...." என்று சொல்லிவிட்டு,
பட்சணங்கள் செய்ய சென்றுவிட்டார்..
வீடே கலகலவென்றிருந்தாலும், மது இல்லாமல் கொஞ்சம் வெரிச்சோடிதானிருந்தது...
விசாலம் அம்மாவுக்கு மது மருமகள் அல்ல மகள்...
"நான் உங்க புள்ளயா, இல்ல மதுவான்னு எனக்கு சந்தேகமாயிருக்குமா" ரகு அம்மாவிடம்..
வீடு மற்றும் வேலையாட்கள் மதுவின் வரவுக்கு தயாராகிகொண்டிருக்கிறார்கள்...


---------------------------------------------------------------------------­----------

வேந்தன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சகல அதன் மற்ற கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான
வேந்தன் அமெரிக்காவில் படிப்பையும் இன்ன பிற வேலைகளையும் பார்த்து அங்கே நிரந்தரமாக இருக்கலாம்
என்ற நிலையில் தந்தையின் கட்டாயத்தின் பேரில் இந்தியா வந்தவர்.... ராமர் அய்யாவின் 4 மகன்களில் மூத்தவர்..அழகானவ்ர்..


வெளிநாட்டுப்பெண்ணுடன் திருமணம், பின் முறிவு,,,எல்லாம் இள வயதில் நடந்து, அதனால், மருமணம் வேண்டாம்
என்றிருப்பவர்...பெண்கள் என்றாலே வெறுப்பு இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பயத்தில் பெண்களை
தன் கீழ் வேலைக்கு வைக்க விரும்பாதவர்...


மதுமிதா வேந்தன் கம்பெனியின் மூத்த அதிகாரி.. நம்பிக்கைக்கு பேர்போனவர் என்பதால் சீக்கிரம் உயர்பதவிக்கு வந்தவர்.
பெரியவருக்கு மிகவும் பிரியமானவள்...தன் மகன்களிடம் சொல்லாத விஷயங்களைக்கூட பெரியவர், மதுவிடமே
கேட்டு முடிவெடுப்பார்..


---------------------------------------------------------------------------­------------

13 வருடங்களுக்கு முன்பு..
ரகு வின் கீழ் மது வேலை பார்த்தாள்... ரகு கண்டிப்பான அதிகாரி... எல்லா விவரமும் விரல் நுனியில்..
இவருக்கும் பெண்களிடம் கொஞ்சம் தூரம் வைப்பது பிடிக்கும்...
திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டவர்....


ஆனால் மது இந்த அலுவலகம் வந்து 1 வருடத்தில் அவளின் சுறு சுறுப்பும், வேலையின்மீதுள்ள பிடிமானமும், ரகுவை
கவர்ந்தது.....விசாரித்ததில், தன் தோழிக்கு ஏற்பட்ட காயத்தில் திருமணம் வேண்டாமென்று இருக்கிறாளாம்.


கடந்த 6 மாதமாக எப்படி சொல்வது என்று டிசைன் டிசைனாக யோசித்தும் முடியவில்லை..
இன்று அவளை மீட்டிங் என சொல்லி வரச்சொல்லியிருந்தான்...
"மே ஐ கம் இன் சார்.."" உள்ளே வரலாமா"
"யெஸ் ப்லீஸ்."


உள்ளே ஒரு பத்திர்க்கையை வைத்து சிரித்துக்கொண்டிருந்தான் ரகு...
அவனே" ஏன் சிரிக்கேன் தெரியுமா"
ஜாலியாக இருப்பதை பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தானிருக்குது...இருந்தாலும் அதிகாரி ஆயிற்றே.
" சொல்லுங்க சார்"


" ஹாஹாஹா..நான் படித்த கதையில் தன் செக்ரட்ரியிடம் காதல் சொல்லத்தெரியாது தவிக்கிறான் நாயகன்.. ஹாஹாஹா."
இவளுக்கு சிரிப்பு வரலை. இருந்தாலும் சிர்த்து வைத்தாள்..
" டூ யூ ஹேவ் எனி ஐடியா.. உனக்கெதாவது தோணுதா"
" யூர் சஜஸ்ஷன்.. உன் எண்ணம்?.."


அய்யோ இது வேரயா?.. சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் வீட்டுக்கு போகலாம் . சரி சொல்லித்தொலைப்போம்.,
" இதிலென்ன சார் பயம்.. ஏதாவது ஒரு பூ வை எடுத்து அவளிடம் " ஐ லவ் யூ.. ஆர் ஐ வாண்ட் டூ மேரி யூ" னு சொல்ல வேண்டியதுதானே"
ஒப்பேத்தினாள்....


உடனே பக்கத்திலுள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து மதுவிடம் அருகில் வந்து நீட்டி.,அவள் எதிர்பார்க்காத நிலையில்
" மது ஐ லவ் யூ.. அண்ட் ஐ வாண்ட் டூ மேரி யூ.. .."
என்ன நடக்குது என்பதே புரியாமல் அதிர்ச்சியுடன், ஆனால் காட்டிக்கொள்ளாமல் ,


" சார் என்ன இது .. நேரமாகுது.. சீக்கிரம் சார்.. . ஷிப்பிங் பத்தி பேசலாம் சார்.."
" மது ஐ மீன் இட்....நான் உன்னை கல்யாணம் செய்ய விடும்புகிறேன்..."
ஹாஹா. சிரித்தாள் அவள்....
" சார் ,ப்லீஸ் பி சீரியஸ்..." அசட்டுச்சிரிப்புடன்ன்.............................


---------------------------------------------------------------------------­----------------------
--
தொடரும்...வாரம்தோரும்...
சோதனை மேல் சோதனை.. அலுவகலகத்தில்
=======================================

இன்று என் அலுவலகத்தில் முக்கியமான நாள்..ஒவ்வொருவரையாக என்
தலைமை அதிகாரி கூப்பிட்டு அனுப்பினார்... அதுதாங்க வருட பணிஆய்வுத்
தீர்ப்பு .(Yearly Performance Evaluation report).
நமக்கு சும்மா கலக்க ஆரம்பிச்சுருச்சு... அறையிலிருந்து வெளியே வருகிறவர்கள்
முகத்தை பார்த்தும் பார்க்காத மாதிரியும் ஒரு லுக் விட்டேன்..


காணோம் . ஒரு எக்ஸ்பிரஷ்னும் காணோம்...சந்தோசமா, வருத்தமா?. ம்கூம்
சரி நம்ப டர்ன் வந்தது.... கூப்பிட்டார்கள்.. நானும் என்னோட
குழும ஜன்னலை மூடிவிட்டு, கொஞ்சம் தண்ணிய குடிச்சுபுட்டு
ரிலக்ஸா போரமாதிரி பிலிம் காட்டிவிட்டு ( மனதுக்குள் ஆயிரம் கேள்வி ..+ பதிலோட)

அதிகாரி அறைக்குள் போனேன்...சிரித்துக்கொண்டே வரவேற்றவர்,
சாரி சாந்தி, லஞ்சுக்குப் பிறகு பார்க்கலாமா என்றார்..அட, இன்னும்
30 நிமிடம் இருக்கின்றதே அதற்கு என்று கேட்க நினைப்பதற்குள்,
இல்ல விலாவாரியாக பேசவேண்டும் என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிபோட்டார். அடப்பாவி, எல்லாருக்கும் 15 நிமிடம்,

என்னிடம் மட்டும் 30 நிமிடத்துக்கு மேலா?. இது நல்லால்ல, தாங்காது
நாட் பேஃர் என்று மனதுக்குள் திட்டினாலும், வாய் நிறைய சிரித்துக்கொண்டு
பரவால்ல பரவால்ல னு பல்லைக்கடித்துக் கொண்டு விடைபெற்றேன்..
நேரே சாப்பிடச்சென்றேன்.. ஒரே டென்ஷன்.. கூல் கூல் னு மனதுக்குள்
சொன்னாலும் மனம் கூலாவா ஆகுது... என்ன ஆர்டர் பண்ணினேன் , என்ன சாப்பிட்டேன்
என்று எனக்கே தெரியாது... இடையில் 2 போன்.. 1 குழந்தையிடமிருந்து..

" ஏன் என்னை ஸ்கூலில் விட்டுட்டுப்போனன்னு" சாரிம்மான்னு சமாதனம்
சொல்லிட்டு வைத்ததும் வூட்டுக்காரர்..அவர் பாட்டைப்படித்து முடித்தார்...
அய்யோ என் பாட்டை கேப்பார் இல்லியா.....
ஒருவழியா சீட்டில் வந்தமர்ந்ததும் , அவரா கூப்பிடட்டும்னு நான் சீன் விட
5 மினிட்ஸ் னு சொல்லிகினே அலங்கார அறைக்கு ( rest room ) சென்றுவிட்டு
15 நிமிடம் கழித்து வருகிறார். ரொம்பதான் பில்டப்...னு மனதில் திட்டிக்கொண்டே,
நான் அசடு வழிய ,சாரி சொல்லிட்டே கம் சாந்தி னு போரார் .

நான் பின் தொடர்கிறேன், பலி ஆடுபோல...
தொடரும்......உள்ளே சென்றதும் நாற்காலி காட்டி உட்காரச்சொன்னார்.. நான் வாயிற்புரம் அருகிலிருக்கும் நாற்காலி, சாரி முக்காலியில் நுனியில் அமர்ந்தேன். ( ரொம்ப மரியாதைதான்..) ரிலக்ஸ் என்கிரார்.. சிரித்து வைத்தேன்( சரிங்கோ, சிக்கிரம் உடைங்கோ சஸ்பென்ஸ னு திட்டிகிட்டே).

ஒரு பேப்பரை நிட்டினார்... பல அடித்தல் திருத்தல்.. பரவால்ல நம்ம மக்கள் ரொம்ப கக்ஷ்டப் பட்டிருக்காங்க நம்மள பத்தி எழுதன்னு புரிஞ்சுது.... அதென்ன அடியில் மார்க்கு தானே?. னு எட்டிப் பார்க்கையில், அவசரமா வாங்கிக்கொண்டார்.. அட ஜீஸஸ்..... ஏதோ 4 என்ற எண் தெரிந்தது... அட அப்போ 40 க்கு மேல் என்று சந்தோஷமாயிடுச்சு.. (" சாந்தீஈஈஈஈஈஈஈஈஈ நீ பாஸாயிட்டேன்னு ஒரு குரல்") கொஞ்சம் முக்காலியில் உள்ளே தள்ளி அமர்ந்தேன் இப்ப ரிலாக்ஸ்டாக...பேச ஆரம்பித்தார். தண்ணி குடித்தார்..

வேணுமான்னு கேட்டார்.. ( தெய்வமே அமிர்தம் குடுத்தாலும் வேண்டாம்) அட சீக்கிரம் அனுப்புங்கையா , இன்னும் மார்க் கன்பர்ம் ஆகலையே...
பத்து கேள்விகள் அதில். ஒவ்வொண்ணும் 1-5 மார்க்...
பத்து கேள்விகளையும் எனக்களிக்கப்பட்ட பதிலையும் நிதானமாக (???)விவரிக்க ஆரம்பித்தார்... ( யாருக்குங்க வேணும்???) கண்ணை மட்டுமல்ல பல்லையும் கட்டுதே!!!!.. ஹார்ட் பீட் எக்குத்தப்பா அடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது...

சிலவற்றிற்கு 3 மார்க். அதுக்கு எனக்கு ரொம்ப ஆறுதல் வேற சொல்ரார்.. ( நான் கேட்டேனா?. இல்ல நான் கேட்டேனா?) இதுக்கு எல்லாருக்குமே 3 மார்க் தான் என்று.. எவ்வளவு நேரம்தான் அசடு வழிய.. நான் பரவால்ல பரவால்லனு சொன்னாலும் விடமாட்டேங்கிறார்..

ஒருவழியா 42 மார்க்.. எனக்கு இப்ப உண்மையிலேயே தூக்கி வாரிப்போடுது.... அய்யோ என்ன இது... நான் முழிக்க, அவர் வியக்க , என் மனசாட்சி ஒத்துக்கொள்ள மறுக்கின்றது... கஷ்டம் வந்தாலும் தகுதியில்லா இன்பம் வந்தாலும் இப்டித்தான்..
ஒருவேளை
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " னு
பழிவாங்கிட்டாங்களோ னு எனகிப்ப நாணமா இருக்கு...

ஏதோ என் அத்ர்ஷ்டம் இந்த வருடம் கஸ்டம்ருகிட்ட அவ்ளோ கஸ்டமில்ல..
கடந்த 4 மாதமா எங்க வேலை செஞ்சேன்.. அப்பப்ப இரவு நேர வேலைக்கு மட்டும் மாட்டேன்னு சொல்லாம போவேன்.. அதுக்காக இப்படியா..

புலம்பித் தவிக்கிரேன் மனதுக்குள்...அவரோ அடுத்த புராஜக்ட் பத்தி விவரித்துகொண்டே போகிறார்...உடனே சபதம் எடுக்கிரேன்." சே , இந்த வருடம் என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி இந்த மார்க்குகளை உண்மை என நிரூபிப்பேன்.."அவர் சொல்கிறார், நாளை நம் முதலாளி மீட்டிங் வைத்துள்ளார்.. நீ விரும்பும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்று... கேள்வியா எனக்கா.. ஹாஹா. என்ன நினைத்தார்கள் என்னை..

அவ்வளவு தைரியசாலியா நான்?
"கேள்வி ஒண்ணுமில்லை நான் செல்லலாமா "னு ஓட ரெடியா இருக்கும் போது சிட் சிட் , புரமோஷன் என்று ஸ்லோமோஷனில் சொல்கிறார்...

அதுதான் வேண்டாம்னு இருக்கேனே ( ஊர் சுற்ற முடியாமல்...+ வேலைப்பழு அதிகம்.) . எனக்கு எந்த தனிப்பட்ட தேவையும் இல்லை சார் னு ஆளைவிட்டாப் போதும்னு ஓடி வந்துட்டேன் நாரதர் மாதிரி....சீட்டுக்கு வந்தும் படபடப்பு அடங்கலை...
போட்டேன் வூட்டுக்காரருக்கு போனை... வருட ஆய்வுல கவுத்துட்டாங்க ன்னேன். அப்டியா அதான் தெரிந்த விசயமே ன்னார். முழு விவரம் கேட்டபின், பிளீஸ் எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமான்னு என்கிட்டேயே கேக்கிறார்...என்ன தைரியம் ???

வெச்சுட்டேன் போனை.. என் இமேஜ் என்னாரது....
ஒண்ணுமே புரியல உலகத்துல....என்னவோ நடக்குது......மர்மமாயிருக்குது...
அதனால் இந்த வருடம் ஒழுங்கா வேலை செய்யலாம்னு இருக்கேன்.....
யாரங்கே சிரிக்கிரது??????????

பள்ளியில் முதல் நாள்
====================


இன்று டேனியை பள்ளியில் சேர்த்திடும் முதல் நாள்..ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், மற்றும் பயத்துடன் நுந்தைய நாள் தூக்கம் வரவில்லை.... யூனிவெர்சிட்டி தேர்வுக்கு கூட இவ்வளவு பயந்ததில்லை...
என்றும் 9 மணிவரை தூங்கும் குழந்தையை( 2 1/2 வயது) இன்று 6 மணிக்கு எழுப்பி சாப்பிட வைத்தால், தூங்குது...குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் தோழில் தூங்குது...


ஒருவழியா , பெரியவனை 6.30 மணி பள்ளி வாகனத்துக்கு கீழே அனுப்பிவிட்டு , நங்கள் 7 மணிக்கு கீழே வந்தால் பெரியவன் இன்னும் இருக்கான்.. என்னப்பா போகலையான்னு கேட்டால், அம்மா பிளீஸ் நானும் வருகிரேன், தம்பியை பள்ளியில் அனுப்ப என்கிறான்...எனக்கு வந்த எரிச்சலில், ஏன் உன் பிரமண்ட்ஸையும் கூப்பிடலாமே என்றேன்... குட் ஐடியா அம்மா, கூப்பிடவா என்கிறான்... உடனே மேலதிகாரியிடம்( வூட்டுகாரர் தாங்க) " ஏங்க கொஞ்சம் இவனை பாருங்கன்னு சொல்லி முடிப்பதற்குள், ஆள் லிப்டுக்குள் மாயம்... ( அப்பா உதவுரமாதிரி அம்மா உதவுரதில்லை போல..)..
ஒருவ‌ழியா ப‌ள்ளி சென்றபோது, ஏக‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள், பெற்றோர் தோழில் ம‌ல‌ர்ந்த‌ப‌டி...ஒவ்வொன்றும் ஒரு வித‌மான‌ பொம்மைக‌ளாய்..பிஞ்சு கை, கால்க‌ளுட‌ன்,புன்னைகைத்துக்கொண்டு...


8.30 பெல் அடித்த‌வுட‌ன், ப‌ல‌ பெற்றோர், குழ‌ந்தையை ம‌ட்டும் விட்டு செல்ல‌, ஒரே அழுகை ச‌த்த‌ம் ஆர‌ம்பித்த‌து..என் கண்கள் மற்ற பிள்ளைகளைப்பார்த்து கலங்க ஆரம்பித்தது...ரெடியா காகித்தத்தை ( டிஷ்யூ)கையில தருகிறார் என்ற வீட்டுக்காரர்.. ( இதுக்கொண்ணும் குரைச்சலில்லை , சினிமா பார்க்கும்போதும் இப்டித்தான்...) என் பைய‌ன் ப‌ற்றி ப‌ய‌ந்திருந்த‌ எங்க‌ளுக்கு ஆச்ச‌ர்ய‌ம் . விளையாட‌ ஆர‌ம்பித்துவிட்டான்...அதிக‌ நாள், க‌ழித்து, பிற‌ந்த‌தாலோ, இல்லை, வேலைக்காரி வைத்து வ‌ள‌ர்ப்ப‌தாலோ, அடிக்கடி சுகவீனமடைவதாலோ ,அதிக‌ செல்ல‌ம் கொடுத்து விட்டோம்....

அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து போட்டோ அல்லாம் எடுத்து முடிந்ததும் என் க‌ண‌வ‌ர், ச‌ரி நீ ஆபீஸ் கிள‌ம்ப‌ல‌யா, என‌க்கு நேர‌மாச்சு என்று கூசாம‌ல் சொல்கிறார்... முரைப்ப‌தை த‌விர‌ வேரொன்றும் செய்ய‌ முடிய‌ல‌...எப்ப‌டி விட்டுச்செல்வ‌து, குழ‌ந்தையை?.. தெரியாத‌ ஆள்க‌ள், பாஷை, இட‌ம்.....குழ‌ந்தை எப்ப‌டி குழ‌ம்பிப்போவான்....எப்ப‌டித்தான் சில‌ பெற்றோர்க‌ள் விட்டுச்செல்கிறார்க‌ளோ?

5 நிமிட‌த்துக்கொருமுறை அம்மா இருக்க‌ங்களான்னு செக் ப‌ண்ணுகிற‌ன்.க‌ல‌ர் ப‌ண்ண‌வும், பேஸ்ட் ப‌ண்ண‌வும், பாட்டுப்பாட‌வும் சொல்லித்த‌ந்தார்க‌ள்.. இடையிடையே விளையாட்டு...ப‌கிர்ந்துகொள்ள‌ இன்னும் ப‌ழ‌க்க‌ப்ப‌ட‌வில்லை... ச‌ண்டை பிடித்தான்... அடுத்த‌ குழ‌ந்தையை தூக்கி நான் ச‌மாதான‌ம் செய்தேன்.. சாரி சொல் என்றால், தெளிவாக‌ " சாரி சொல்ல‌ மாட்டேன் " என்கிறான்...
என‌க்கே இன்னும் ப‌சுமையாக நினைவிருக்கிற‌து, என்னுடைய‌ பேபி கிளாஸ் விஜ‌ய‌மும் , ஆசிரியை தொடையில் கிள்ளி என்னை உட்காரச்செய்ததும்...... ஆனால் அந்த‌ளவு மோச‌மில்லை, இன்று...


இப்ப‌டியாக அவன் வரலாற்றில் முக்கிய தினம் நல்லபடியாக கழிந்தது...( இன்னும் நாளைக்கு,மற்றும் வரும் நாட்கள் என்ன பாடு படுத்தப்போகிறானோ???? )

போட்டியிடும் வரட்டு கெளரவமும் ,பாசமும்..( முதல் கதை)


வாழ்க்கையின் யதார்த்தம்.. ------------------------------------------------
பள்ளி விடுமுரை வரப்போகுது, குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்..
குழந்தைகளுக்கு மட்டுமா, குமரிக்கும் தான்...வீட்டில் வெச்ச பேரென்னவோ லக்ஷ்மிகுமாரி, ஆனா நம்ம ராசா கூப்பிடுரதென்னவோ குமரிதான், அதாவது மனைவி எப்பவும் இளமை அவருக்கு..
இந்த மன்மத ராசாவுக்குதான் உள்ளுக்குள்ள ஒரே வருத்தமா போச்சு.. பொண்டாட்டி ஊருக்கு போனா சாந்தோசமா இருக்கிரவரில்லை நம்ம ராசா... ஆனாலும் வெளில காண்பிச்சுக்க மாட்டார்....
கிளம்புராங்கன்னதும் மூட் அவுட்..
"ஏனுங்க டெல்லியிலிருந்து சென்னைக்கு போக பிளைட் டிக்கெட் எடுத்தாச்சா"
" அதெல்லாம் நான் பாத்துக்கரேன்.. நீ மத்த வேலையைப் பாரு."..
" ஆமாங்க , ஷாப்பிங் போகணும்"
" ஏன் ஒவ்வொரு வாட்டியும் பொதி சுமக்கிர கழுதை மாதிரி இப்படி அள்ளிகிட்டு போர?. அங்கேயே எல்லாம் கிடைக்குது இப்ப..பாத்து செலவு பண்ணு.."
" இல்ல இந்த வாட்டி அண்ணி , அதான் உங்க அக்கா , நல்ல ஹேண்ட் பேக்,
அப்புரம் செருப்புகள், அலங்காரப் பொருள்கள் வாங்கி வரச் சொல்லிருக்காங்க..
இங்க தான் விலை மலிவு.."
" என்னவோ பண்ணுங்க.. ஏதோ கம்பெனிகாரன் இலவசமா டிக்கெட்
தாரான் , அத வெச்சு ஜாலியா போனமா, வந்தமான்னு இல்லாம.. நல்லவேளை நான் உன்கூட வரல.
மனுசன் தனியா இருப்பானேன்னு அக்கறையில்லை.. எல்லா லீவுக்கும் போயாகணுமா"
" ஹாஹா.. நீங்க வரலைன்னுதான் நானே கிளம்புரேன்... அங்கயுமா வந்து ? கொஞ்சம் நிம்மதியா 10 நாள்.."
" என்ன ரொம்ப அலுத்துக்கிர?..போ . போ... நான் 10 நாள் நிம்மதியா இருப்பேன்.."
ஒரு அசட்டுச் சிரிப்புடன், தன் ஷாப்பிங் லிஸ்டில் ஐக்கியமானாள்...
ஊர் கிளம்பும் முதல் நாள் வந்தது...
" ஏங்க கொஞ்சம் இந்த சாமானெல்லாம் பெட்டியில் மட்டும் அடுக்கிவிடுங்களேன், நீங்கதான் நல்லா செய்வீங்க"
" ஏன் உனக்கென்னவாம்" சொல்லிக்கொண்டே சென்றார். சரி இன்னிக்கு விட்டா அம்மணி இன்னும் 10 நாள் ஆகும்..
சந்தோசப்படுத்திருவோம்னு குஷியா அடுக்கச்சென்ற நேரம் பார்த்தா
பக்கத்து பிளாட் நவீன் உள்ளே வரணும்...????
" அண்ணா, உள்ளே வரலாமா?. என்ன சாம்பார் வாசனை மூக்கைத்தூக்குது?.. "
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்,, அய்யோ போனா வரமாட்டான், வந்தா சாப்டாம போமாட்டான்..
ஒருவேலையும் முடியாதே...
" ஏ , வாப்பா, என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்"
" ஆமா , அதிருக்கட்டும், அண்ணி ஊருக்கு போராங்களாமே,
அதான் இத அம்மாவுக்கு குடுத்து விடலாம்னு "
அப்படியே ஒரு சொல்லமுடியாத ?? பார்வை குமரியைப் பார்த்தார் ராசா...இருக்கிர
பார்சல் பத்தாது...இன்னும் எத்தனை பேருக்கு சொல்லீருக்கீங்க மேடம் ?? ங்கிர மாதிரி..
" அது வந்துங்க , அன்னிக்கு பார்டியில, நான் ஊருக்கு போரேன்னு எல்லார்கிட்டயும்
வழியனுப்பிட்டு வந்துட்டேன் .. நான் வேர சங்கத் தலைவியா, அதான்....
என்று சொல்லிவிட்டு, சமையலரைக்குள் தப்பித்துவிட்டாள்..
ஆமா இவ பெருசா இங்கிலாந்து மகாராணி போரா!! னு மனதுக்குள்
திட்டிக்கொண்டு, புன்னகைத்தார்...
அரதப்பழசான ஜோக்குகளையும், தன் பிளாக் புகழையும், தேவையில்லாத
உலகச்சந்தை பற்றியும், சலிக்காமல் நவீன் சொல்ல, கொட்டாவியுடன்
, டிவி சேனலை மாற்றிகொண்டே கேட்டார் ராசா...
இரவு படுக்கும் வரை பெட்டி அடுக்கவில்லை.. கோபம் வந்துவிட்டது குமரிக்கு..
"10 நாளைக்கு நீங்க பட்டினிதான் .. நான் ஒண்ணுமே செய்து வெக்கல உங்களுக்கு..."
அடபாவமே, நானா காரணம், உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா???
சரி சரி , நான் உதவுரேன் னு சொல்ல சொல்ல அழுதுகொண்டே சென்றுவிட்டாள்..
இனி அவள சமாதானப்படுத்தி, பெட்டிய அடுக்கி, ??? நடக்கிற காரியமா???
ரோசம் , ஏமாற்றம் கொண்ட ராசா, அப்படியே கட்டிலில் சாஞ்சுட்டார்...
கோவத்தோடே மறுநாளும் விடிந்தது... இவரோ லீவு போட்டு ,வழியனுப்ப ஒரு பந்தா பண்ணலாம்னா
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுராங்க அம்மணி...தானே போய்க்கொள்வதாய்..
" அப்புரம் ஏன் லீவு போடச்சொன்ன என்னய?"
" ம். அது அப்போ.. இப்போ நாங்களே போய்க்குவோம்..ரொம்ப நன்றிங்க"
இதுக்கு மேல் பிள்ளைகள் முன்னால் மரியாதை இழப்பது அவ்ளோ நல்லாருக்காதுன்னு,
" சரி, டிரைவர் அனுப்புரேன், "
' " அய்யோ உங்களுக்கெதுக்கு அவ்வளவு சிரமம்.. நன்றி.." அம்மணி கலங்கிய கண்களுடன்...
சிலசமயம் இந்த பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது...
10 நாள் ஊருக்கு போக என்னா பில்டப் தாங்க முடிலயே..னு நினைக்கும்போதே வழியனுப்ப தோழிகளோட, கணவன்மாரும்
மேடம் ஒண்ணும் கவலைப்படாதீங்க, செடி, நாயெல்லாம் எங்க பொறுப்பு...
அப்புரம் அந்த ஆனந்த் பவன்ல
" இருக்கு இருக்கு ஞாபகமிருக்கு"..னு சொல்லிகிட்டே,
அவள் டாக்ஸியில் செல்ல ராசாவை ஒரு குற்றவாளியைப்போல பார்த்துவிட்டு செல்கின்றனர்...
கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணி என்னாச்சுனு விசாரிக்கலாமென்றால், பதிலில்லை.
ஏர்போர்ட்டில் எல்லாம் முடிந்த பின், அவளிடமிருந்து போன்..அதுவும் மிஸ்ட் கால் மட்டுமே..
அவசர அவசரமாய், பாத்ரூமிலிருந்து வெளி வந்தவன்,
"சொல்லும்மா என்னாச்சு?. லக்கேஜ் எல்லாம் ஒகே யா?."
" ம்"
" டாக்ஸில பத்திராமா போய் சேர்ந்தீங்களோன்னு பயந்துட்டிருந்தேன்"
"ம்"
" பிள்ளைகள் நல்லா பாத்துக்க"
"ம்" கொஞ்சம் லேசா அவள் மனதில் ஏதோ
" ஏம்பா நல்லா செலவு பண்ணு என்ன?. யோசி....க்க்..காதே" ராசாவுக்கு தொண்டையில் ஏதோ...
போனை கூர்ந்து கவனிக்கிறாள்.கலக்கமாக.
"ம்..சரி குளிர்பெட்டியில் எல்லாம் தேதி போட்டு வெச்சுருக்கேன்.. ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுங்க"
" ஏன் இதெல்லாம் பண்ணின?.. சொல்லக்கூடாதா மொதல்லே?." அவர்..
" வேளைக்கு மாத்திரை சாப்பிடுங்க ..ம்க் ம்க் ..ம்க்.." விசும்பலுடன்..
"ஏய் என்ன அழுவுரயா என்ன?"
"ம்..ம்..ம்.. இல்ல.ம்ம்.."
" அட என்னம்மா நீ. . இரு நான் வரட்டுமா. இன்னும் நேரமிருக்கே???"
"....ம்கூம்....."
பிள்ளைகள் இருவரும் ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்கிறார்கள்..
" ஏய் . கண்ணதுடைச்சுக்கோ.. பசங்க பார்க்கப்போராங்க"
" ..ம் ... நான் திரும்பி வந்துடவா?"
" அட லூசு மாதிரி .. எப்பவும் ....." என்றவன் பல்லைக்கடித்துக்கொண்டான், அடுத்த சண்டையிலிருந்து தப்பிக்க.... ---------------------------------------------------------------------------
வலி நிவாரணி...
===============

எண்ணாது விண்ணப்பங்கள் போட்டு
எதிர்பார்த்து காத்துகிடந்தபோது
எதிர்பாராவிதமாய் வருகிறது உனது
எண்ணங்கள் மடலில் வாழ்த்துக்களாய்...


வேலை கிடைத்து பின் ,
வேதனையோடு உறவுகள் , நட்புகள் விட்டு
வேதாளக்கூட்டத்தில் சிக்கி ,
வேரருந்த போதிலே நலம் வருடியது உன்
வேடமில்லாத தொலைபேசி அழைப்பு வசந்தமாய்.......


இயந்திர வாழ்க்கையில்
இடைவெளியில்லாது அசதிமட்டுமே
இருந்த நிலையில் நித்திரை எனும் திரையில்,
இனிய நினைவுகளாய் வருடுகிறாய் மயிலிராகாய்....


விடுமுறை கிடைத்த நிமிடம் முதல்,
விரைவாய் ஊர் வந்து உனை பார்க்கும் வரை,
விடுதியில் பட்ட கஷ்டமெல்லாம் ஓடி மறைகிறது ,
விளையாட்டாய் தண்ணீர் ஊற்றும் உன் புன்னகையில்
விஷமாய் ஏறுது காதல் காட்டாற்று வெள்ளமாய்.......


அனைத்துமாய் மனதில் இருந்துவிட்டு ,
அன்பரே , வலிநிவாரணி மட்டுமே நான் ,
அன்னைபோல் சுகமான வலி தருவாள் ஒருத்தியென ,
அகப்படாமல் ,என் காதலை தடுக்கிறாயே,
அடியே வலிக்கவில்லையா உனக்கு நடிப்பதற்கு.....?
அதிகாரமாய் வலி தரவா நீ உண்மை சொல்வதற்கு..?


மெல்லத் திறந்தது காதல்.... (சிறுகதை)

சாந்தி

மருத்துவ கல்லூரி மாணவருக்கு பிரிவு நாள்...
உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள் சினேகா... இருக்காதா, ஐந்து வருட காதல் இன்று வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கும் நாள்...
கல்லூரியின் நுழைந்த முதல் மாதத்திலேயே கவர்ந்தவன் அர்விந்த். அவனுடைய சிரித்த முகமும், உதவும் குணமும் யாரையும் கவர்ந்திடும்.... படிப்பில் இருவருக்கும் போட்டி..... ஆனால் பெரிய அழகனில்லை.. ஆனால் கலைகளிலே, அழகிலே சினேகாவுக்கு இணைகூட யாருமில்லை. எப்போதும் முதல் பரிசு அவளுக்குத்தான் நாட்டியத்தில்... அவளுக்கு ரசிகனானான் அர்விந்த்.
எதிர்பாராது ஆடும்போது மயங்கி இவள் விழ, மருத்துவனாய் மட்டுமன்றி, மனத்துக்குள் காதலனாயும் துடித்துப் போனான். அவனுடைய விசேஷ கவனிப்பு அறியாதவள் போல் அவளும் காதல் பிடியில் சிக்குண்டாள்.... அதன்பிறகு இருவருடைய நடவடிக்கையும் மற்றவருக்கு அத்துப்படி... அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்பதைக் கண்களாலேயே இவள் அறிவாள்.. இவளுக்கு எந்த விஷயம் பேசினால் பிடிக்கும் என்பதும் அவள் எண்ணங்கள் என்ன என்பதும் அவன் அறிவான்..
ஆனால் மனத்துக்குள் மட்டும் ஒரு சொல்ல முடியாத பயமா, தயக்கமா, இல்லை இது வெறும் ஈர்ப்பா, என்று இனம் புரியாத கேள்விகளால் இருவரும் தாமதித்தார்கள்.... பேசக்கூட பயந்தார்கள்.. கல்லூரி விழாவென்றால் அழையா விருந்தாளியாய் இவளுக்கு உதவிட அவனிருப்பான்.... அனடமி வகுப்பு, பிற விசேஷ வகுப்புகள் முடிந்து நேரமாகிவிட்டால், அவள் பத்திரமாய் ஹாஸ்டல் செல்ல நண்பர்களுடன் வலுக்கட்டாயமாய் இவன் செல்வான்...
அஸைன்மெண்டுக்கு தேவையான புத்தகங்களை எங்கிருந்தாவது இவளுக்காகக் கொண்டுவந்து தருவான்.. ஆனால் அவள் தோழி மூலமே எல்லாம் .. நேரிடையாக அல்ல... கல்லூரிச் சுற்றுலாவின்போது சொல்லிவிடுவானோ என்று அவள் பயந்த பயம்தான் எத்தனை...?
இப்படியே மற்றவர் கிண்டல், கேலிக்கு அப்பப்ப சிறிதளவு ஆளானாலும், எப்படியும் படிப்பு முடிவதற்குள் காதல் தெரிந்துவிடும் என்று இன்றுவரை இருவரும் தள்ளிப் போட்டனர்.
ஆனாலும் மனத்துக்குள் லட்சம் கனவுகள், அவன் தன் காதலை, எப்போது, எப்படி சொல்வான், வெட்கப்படுவானா?.. அல்லது வெட்கப்பட வைப்பானா? மலர் தருவானா? அங்கு வார்த்தைகளுக்கு இடமுண்டா?.. அல்லது மொளனம்தான் பறைசாற்றுமா?.... நான் மயங்குவேனா என் வாழ்நாளில் அந்த இனிய பொழுதில்..... இப்படி கனவுகளுடன் அவள் காத்திருக்க..., விழா முடிந்து 1000 கனவுகளுடன், அர்விந்த் கூப்பிடுவான், பேசுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றம்...
அவன் எப்போதும் போல் நண்பர், நண்பிகளுடன் சிரித்துப் பேசி அரட்டையடிக்க, இவளுக்குக் கோபம், ஏமாற்றம் தலைக்கேறுகிறது..... அதிர்ந்து பேசிக்கூட பழக்கமில்லாதவள்... விழிகளில் நீர் முட்டுகிறது..... கல்லூரியில் உள்ள பலர் இவளின் காதலுக்காக ஏங்கியிருக்கையில் இவளோ, அவனுக்காக மட்டுமே ஏங்கி தவமிருக்க , துடிக்கச் செய்கிறானே..!
தோழிகள், 'பொறுமையாயிருப்பா' என்று சொல்லச் சொல்ல பொங்குது இவள் மனம்.. காதலும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்...அதன் வலி.. நேரே சொல்கிறாள், அவன் இருக்குமிடத்திற்கு..... இவள் வந்ததும், பைக்கில், சுவரில் உட்கார்ந்திருந்த, எல்லோரும் ஆச்சர்யமாய் எழுந்து நிற்க....
ஒரு நிமிடம் பதற்றமாய், என்ன சொல்ல, எப்படி அவனை அழைக்க என்று தெரியாமல் விழிக்க, அவனே கிட்ட வந்தான்... அவன் வரவும், "உங்க..... கூட.... ஒரு ஐந்து நிமிடம்..... தனியா.... பேச... லாமா...." என்று திக்கித் திணற.., அதற்குள் இந்த பாழாய்ப்போன கண்ணீர் அசிங்கமாய் வந்து தொலைக்கிறதே.. அதற்குள் தோழர்களெல்லாம், 'போ, போ' என்று இவனை விரட்ட... பக்கத்தில் ஒரு மரத்தடியில் யாருக்கும் கேட்காதபடி இடமாக பார்த்துக்கொண்டு ஆரம்பித்தாள், இல்லையில்லை கொட்டித் தீர்த்தாள்...
"ரொம்ப சந்தோஷம் .. நல்லா நிரூபிச்சிட்டீங்க உங்க ஆண் பலத்தை.... இத்தனை நாள் காதல்னு நினைச்சு ஏமாந்தது நான் மட்டும்தான்... உங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு.... உங்களையும் யாரும் குறை சொல்ல முடியாதபடி நல்லா நடிச்சுட்டீங்க.. நான் தான் படிச்ச பைத்தியக்காரி.... இத்தனை நாள் நீங்க நடந்துகிட்டது காதல் நாடகம்னு என்னால நம்ப முடியாத அதிர்ச்சி எனக்கு... இன்னும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கோங்க, இந்த ராட்சஸி மாதிரி சண்டைபோடுற பெண்ணைக் கைபிடிக்கலயேன்னு.... ஒரு பத்ரகாளி வாழ்க்கைத் துணையா வரலயேன்னு... நானும் நிம்மதியா போகிறேன், ஒரு கோழையைக் காதலனா நினைச்சு வாழ்ந்ததை எண்ணி ஏமாந்தவளாய்...." பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு...
"எனக்கு இப்ப பல சந்தேகம் வருதுடா" என்றவள் நிறுத்தினாள், விம்மி விம்மி அழுவதற்கு.....
ஒன்றும் செய்ய இயலாதவனாய் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான், சற்றும் எதிர்பார்க்காததால்.. காதலைச் சொல்ல தனக்கு அருகதை இல்லை என்றே எண்ணியிருந்தவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறாள்.
"சாரி.. உங்க மரியாதையைக் குறைக்கக்கூட எனக்கு இனி தகுதியில்லை.... உங்களுக்கென்ன, இனி நல்ல வரதட்சணையோட அழகான பெண் வருவாள்.... பெரிய வீட்டுக்கு மாப்பிள்ளையாய்ச் செல்வீர்கள்... கல்லூரிக் காதலெல்லாம் வெறும் விளையாட்டுதானே?" என்று இடைவெளியின்றி பேசினாள் கண்ணீருடன்...
"ஒரு நிமிஷம்...", "பிளீஸ்..", "சினேகா..", "வெயிட்.." என்று இவன் சொல்லச் சொல்ல, எதையும் காது குடுத்துக் கேட்க விரும்பாதவளாய்த் தன் கோபத்துக்கு மட்டும் அர்த்தத்தைப் புரிய வைப்பதிலேயே குறியாயிருந்தாள்...
"நீங்க என்னைக் காதலித்தது உண்மையா, நடிப்பா, விளையாட்டான்னு எனக்குத் தெரியாது அர்விந்த்... ஆனா ஒரு பெண்ணுக்கு அரிதாக, ஒரு முறை மட்டுமே வரும் காதல் எனக்கு உங்களிடம் மட்டுமே வந்ததுனு இப்ப, இந்த நேரத்துல சொல்ல வேண்டியிருக்கேன்னு நினைச்சு வெட்கப்படுகிறேன்... இருந்தாலும் என் மனச் சுமையை இறக்கிவிட்டேன் என்ற மனதிருப்தியுடன் செல்கிறேன்... இனி, மறக்க முயற்சி செய்வேன், கஷ்டம்தான்.. இருந்தாலும்....." என்று மேற்கொண்டு ஏதும் பேசமுடியாது அழுதுகொண்டே ஓடிவிட்டாள்...
அவனிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல்.... ஏதும் செய்ய திராணியற்றவனாய், சந்தோஷம், துக்கம், அதிர்ச்சி, இவை யாவும் சேர்ந்து கொடுத்த உணர்வுகளில், அவளைக் கூப்பிடக்கூட வார்த்தைகளின்றி.... அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் போவது தெரிந்து கலவரமாய், நண்பர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டு ஆளுக்கொரு கேள்வி கேட்க, இவன் கையைத் தலையில் வைத்து அப்படியே உட்கார்ந்தான்..... பைக்கின்மேல்...
=============================================


5 நாள் கழித்து அவள் பெட்டிகளுடன், ஹாஸ்டலைக் காலி செய்துகொண்டு தோழி ரேணுவுடன் ரயில் நிலையம் வர, நண்பர்களுடன், புது தெம்புடன், நம்ம ஹீரோ அர்விந்த் காத்திருந்தார்...
"ஏ, அங்க பாருடா, சினேகா வந்தாச்சு" என்கிறார் நண்பர்...
"சரிடா, நீங்கல்லாம் இங்க இருங்க, தேவைன்னா நான் கூப்பிடும்போது வாங்க" சொல்லிவிட்டு கூட்டத்தில் நுழைகிறான் அர்விந்த்..
சினேகாவும் தோழியும் பெட்டியை உள்ளே ஏற்ற முயலுகையில், "சினேகா..." பார்த்துவிட்டு பதிலேதும் கூறாமல்
"சினேகா, நான் உன்கூட பேசணும்..."
" "
".. சினேகா , வெயிட்...பெட்டிய அப்புறம் ஏத்திக்கலாம்.. மொதல்ல நான் பேசணும்.." சத்தம் அதட்டலாக மாறுது...
"எனக்கு நேரமாச்சு.. மத்தவங்களையும் நாம தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கோம்.. வழிவிடுங்க" என்று, பெட்டியைத் தூக்கி அவள் உள்ளே ஏற, படக்கென்று பெட்டியைப் பிடுங்கிக்கொள்கிறான்...
"எதுவானாலும் வெளியில் சென்று பேசிக்கொள்ளலாம்.. நீ இந்த ரயிலில் செல்லவில்லை" அதிகார தொனியில்.... அர்விந்த்..
"சாரி, ரேணு, உன் தோழியை அழைத்துச் செல்கிறேன், என் வீட்டுக்கு.. போனதும் உன்னிடம் பேசுவாள்.." என்று அவளைப் போகச் சொல்லிவிட்டான். அர்விந்தை இப்படி பார்த்ததே இல்லை ரேணு.. புரிந்துகொள்கிறாள்...
"அர்விந்த், என் வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.. என்ன இது முட்டாள்தனமான பிடிவாதம்.. பிஹேவ் யுவர்செல்ப்ஃ".. அவள்.
"சாரி சினேகா..." என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று பெட்டியுடன் நடந்தான்... அவள் பின்தொடர்வதை அப்பப்போ உறுதி செய்துகொண்டு..
"அர்விந்த், அர்விந்த் ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்..பிளீஸ் ..." கத்திக்கொண்டே அவள்...
அதற்குள் நண்பர்கள் அருகில் வந்து பெட்டியை வாங்கிக்கொள்ள, அர்விந்த் இன்னும் கொஞ்சம் தைரியமாக,
"அன்னிக்கு, ஒரு நிமிஷம்னு நான் சொல்லச் சொல்ல, கெஞ்சக் கெஞ்ச, நீ பாட்டுக்குப் போற???" நண்பர்கள் மத்தியில் சொன்னதும் அவனை, அவன் வேகத்தை, கோவத்தைத் தடுக்க முடியாது தோற்றவளாய்க் கண்களை மட்டும் மூடிக்கொண்டாள்..... எல்லாம் தன் பலம் மீறி நடப்பதாய் உணர்ந்தாள்.... உள்ளுக்குள் மட்டும் இனம்புரியாத ஒரு சின்ன சந்தோஷம்..... அதை மீறுது ஊருக்கு போகமுடியாத தோல்வியின் வருத்தம்... நண்பர்கள் மத்தியில் வெட்கம்.....
பாகம்- 3- தனிமையிலே இனிமை காண முடியுமா? -
=============================================


"சினேகா நீ என்கூட பைக்கில் வாரீயா, இல்லாட்டி கால் டாக்ஸில வரயா?"
"டேய் , மச்சி என்னடா பேசுறான் இவன்...? ஏய் அர்விந்த், அவ எப்படி தனியா...? கெளம்பு, கெளம்பு, நீ அவளோட போற"னு சொல்ரான் வெங்கெட்...
"டேய் என் பைக்".. அர்விந்த்
"ஒண்ணும் பண்ண மாட்டோ ம்.. என்ன மிஞ்சி போனா, கொஞ்சம் பெட்ரோல், extra fittings எடுப்போம்.. சரியா.. ரொம்ப முக்கியம்... போ...டா" முறைக்கிறான், ஹமீத்.
"சரி, இப்ப ஏன் உங்க வீட்டுக்கு போறோம் , அர்விந்த்... நான் ஊருக்குப் போகணும்" சின்ன பிள்ளையாய், பிடிவாதத்துடன்...அவள்.. "சினேகா, இது ரயில் நிலையம்.. இங்க வெச்சு ஒண்ணும் பேசவோ, சண்டை போடவோ, அல்லது நீ கத்தவோ முடியாது... அதுக்காகத்தான், என் வீட்டுக்கு.. சரியா?
அங்கு என் அம்மா மட்டும்தான் இருப்பாங்க... நீ ரயிலை மிஸ் பண்ணிட்டதா சொல்லிக்கலாம்...சரி... ஏறு மா வண்டில.."
முதன்முறையாக "மா" போட்டு உரிமையா பேசவும், மனமோ தடம் புரள்கின்றது..
இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "சரி நீங்க முன்னால ஏறுங்க"னு சொல்லிட்டு பின்னால் ஏறுகிறாள்...
முன் கதவைத் திறந்தவன், ஏதோ நினைத்தவனாக" முடியாது நான் பின்னால்தான் ஏறுவேன்.... கோழைங்கதான் முன்னால" என்று சொல்லிவிட்டு , பின்னால் வந்து மரியாதையாகவே தள்ளி அமர்கிறான்....
அதற்குள், விவேக் மாதிரி எப்பவும் கல்லூரியில் காமெடி பண்ணும் சுருளி, ஜன்னல் பக்கம் வந்து, "வாழ்த்துக்கள் சினேகா.. சட்டய பிடித்து மாப்பிள்ள கிட்ட நல்லா 4 கேள்வி கேட்ட கட்சீ நாள்..." என்றதும்,
"டேய், அடங்க மாட்டீயா நீ, மாம்ஸ், இவன அள்ளிட்டுப் போங்கடா.. வருவல்ல அரியர்ஸ் கிளியர் பண்ண, மவனே அப்போ வெச்சுக்கறேன் ஒன்ன..." சிரிப்பு வந்தாலும் சிரிக்காத மாதிரி சீரியஸ்ஸா முகத்த கஷ்டப்பட்டு வெச்சுக்கிறான்... அர்விந்த்.
"மாம்ஸ், ஹேப்பி லா..........ங் ஜெர்னி டா" கத்தி சிரிக்கிறான் வெங்கிட்...
"டேய். போ டா... போ........டா..அப்படியே டிக்கெட்டை கேன்ஸல் பண்ணீருங்கடா.." பல்லைக் கடிக்கிறான்....அர்விந்த்.
டாக்ஸி கிளம்பியது... மொளனம், பல விதமான கேள்விகளைக் கிளப்பியது இருவருக்குள்ளும்.. ஆனால் அவனுக்கு மட்டும் "புராஜெக்ட் காதல்" வெற்றிக் களிப்பு... "எதாவது சாப்பிடுறயா?" அன்பொழுகக் கேட்டான்... பதிலில்லை..
"ஏதாவது சாப்பிடுறீங்களான்னு கேட்டேன், மேடம்..."
ஒரு பெருமூச்சுவிட்டு முறைத்துப் பார்த்துவிட்டு, திரும்பிக்கொள்கிறாள்....
சிக்னலில் வண்டி நிற்கிறது.....மொளனம் கனக்கிறது....
"ஐ ய ம் சாரி..." மெதுவாக அவன்...
பதிலில்லை, ஏன் ஒரு முறைப்பு கூட இப்போ இல்லை.. அவளிடம்..
"சினேகா..." மெல்லியதாக பயத்துடன் கூப்பிடுகிறான்...
பதிலேயில்லை....
இப்போது உண்மையிலேயே பயப்பட ஆரம்பிச்சுட்டான்...
ஒருவேளை நாம அவளைக் கூட்டி வந்த முறை அவளுக்குப் பிடிக்கலயோ?
"நான் எங்க வீட்டுக்கு போன் பண்ணனும்.." திரும்பாமலே சொல்கிறாள்..
"இந்தா இதுல பண்ணு பா" அவன்.. முறைத்துவிட்டு, என்ன சொல்ல, எப்படி சொல்லனு யோசிச்சுட்டு, எண்களை அழுத்துகிறாள்..
"அப்பா, நான்தான் பா '" என்பதற்குள் கட் ஆகிறது...
"அடடா சார்ஜ் போச்சே...." அவள்
"பிளீஸ்.. இதுல பேசு..." கை படாமல் கஷ்டப்பட்டு மொபைலை வாங்கிக்கொள்ளும்போது..
கீழே விழுகிறது... இருவரும் ஒரே நேரமா அதை எடுக்க முயலணும்...???
முட்டிக்கொள்கிறார்கள் முதன்முறையாக....
அவளுக்கு வெட்கம்.. அவனுக்கோ, கேக்கணுமா????
மொபைலை சீட்டில், நடுவில் நல்ல பிள்ளையாய் வைக்கிறான்...
அவள் கவனமாக எடுத்துக்கொள்கிறாள்....
"அப்பா, சினேகா பேசுறேன்.. ரயில மிஸ் பண்ணிட்டேன் பா..."
"சரிம்மா .. பரவாயில்லை..... நானே ஒரு மணிநேரம் கழித்துப் பேசலாம்னு நினைத்தேன்... ஆமா., இது யாரு நம்பர்...?" - அப்பா...
"அது வந்துப்பா... நான் மிஸ் பண்ணியதும் என் கிளாஸ்மேட், வேறு ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய வந்தவன், எனக்கு மொபைல் தந்து உதவினான்.. என் மொபைலில் சார்ஜ் இல்லை பா."
"சரி. சரி. கவனம்..மா.." மறுபடியும் அப்பா..... அதற்குள் வீடு வந்துவிடுகிறது...
வந்ததும் வெடிச் சத்தம் காதைத் துளைக்குது....
இவளுக்கோ வெடி என்றாலே அலர்ஜி... அப்படியே காதையும் கண்களையும் மூடிக்கொள்கிறாள்... பயப்படுகிறாள் ரொம்பவே. அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டு உதவ ஆசை.. ஆனால் கிட்ட போக முடியாதே...
"ஏய் சந்துரு, நிப்பாட்டு டா.. " அவன்..
என் அக்கா பையன்.. பேரு சந்துரு..
"ஓ . இவுங்கதான் உன்னோட ஆன்டியா?.." குழந்தை வெட்கப்படுது...
"உள்ளே வா" என்று அழைத்தவன் பின்னால் சென்றவளுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது...
=============================================


செடிகளுடன் கூடிய நீளமான நுழைவு வாயிலில் சுமார் 100 அடி தாண்டி வீட்டின் முகப்பில் நாலைந்து பேர், குறிப்பாக, பெண்கள் நிற்கிறார்கள்...காலை உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தவள், பின் தயங்கி காம்பவுண்ட் சுவர் பின்பக்கம் ஒதுங்குகிறாள், பயத்துடன்.
பிறகு.. "என்ன இது அர்விந்த்?.. என்ன விளையாட்டு இது..?" முதன்முறையாக கோபமாக அவன் கண்களைப் பார்த்து நேராகக் கேட்கிறாள்...
"ஒண்ணுமில்ல உள்ளே வா.."
"நோ.. நான் வரமாட்டேன்.. நீ என் கிட்ட பொய் சொல்லீட்ட... நான் உன்னைத் திட்டினதுக்கு நீ என்னைப் பழி வாங்கிறயா... ஊரைக் கூட்டி..?" அழுகிறாள் அவள்..
பயந்துவிட்டான் இவன்.. சூழ்நிலை இறுக்கமாகிறது...
"இல்லடா, சாரிடா, பிளீஸ்.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில... நான் உன்கிட்ட டாக்ஸிலேயே சொல்லணும்னு நினைச்சேன் பா.. ஆனா நீ ஒத்துக்க மாட்டியோன்னு பயந்தேன் பா.. சாரிமா. ரியலி வெரி சாரி.." சமாதானப்படுத்துகிறான்.
"பி.....ளீ......ஸ், கம் இன் சைட்.. ஒருத்தரும் உன்கிட்ட ஒண்ணும் பேசாம நான் பாத்துகிறேன்.. பிளீஸ்.." முதன் முறையாக சினேகாவின் கையை அவளிடம் கேட்காமல் படக்கென்று பிடித்துக் கெஞ்சுகிறான்...
"நோ..... நோ. வே.. அர்விந்த், எங்க வீட்டுக்கு இந்த ஆர்ப்பாட்டம் தெரிஞ்சா, அப்பா கொன்னு போடுவார்.." கையை விடுவிக்கிறாள்.
நான் ஆட்டோ பிடிச்சு என் தோழி வீட்டுக்குப் போய்க்கிறேன்..... ஐ.. ஹேட் யூ பாஃர் திஸ்..." கையை உதறிவிட்டு அழுகிறாள்...
அதற்குள், அர்விந்த் அக்காவும் அத்தானும் வெளியே வருகிறார்கள். கலகலப்பானவர்கள்... அத்தான் ஒரு பெட்டியை வாங்கிக்கொள்கிறார்..
"என்னம்மா, என்னாச்சு, உள்ளே போய் சண்டை போட்டுக்கலாமே, நாங்களும் ரசிப்போமில்லயா?.." - அக்கா.
பதிலேதும் சொல்ல முடியாமல், உதட்டைக் கடித்துக்கொண்டே, குனிந்து வழியும் கண்ணீரை வெட்கத்துடன் துடைக்கிறாள்..
"எல்லாம் தம்பி சொல்லிட்டான், உள்ள வாம்மா.." என்று, கைபிடித்து அழைத்துச் செல்கிறார் வருங்கால நாத்தனார்..
செல்லும்போதே இவளை ரசித்துவிட்டு, நடந்துகொண்டே, "ம். மாட்டினாலும் மாட்டின ரம்பை கிட்டதான் பா" என்று தம்பிய கிண்டலடிக்க,
"உன் தம்பி புத்திசா.......லி டீ.. என்ன மாதிரியா?.." சைக்கிள் கேப்ல தன் பங்குக்கு பீஃலிங்ஸ் விடுறார் அத்தான்..
கோபம் தணியாவிட்டாலும், சினேகா கொஞ்சம் நிதானத்துக்கு வருகிறாள், மரியாதைக்காக...
அர்விந்த் அம்மா அருகில் வந்து ஆரத்தி எடுக்கிறார்...
உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்....
மறுபடி கண்ணீர் வருகிறது இவளுக்கு... ஆனால் இந்த முறை ஆனந்தக் கண்ணீரும்....
அர்விந்த் அம்மா விரல்களால் அவள் கண்னீரை துடைத்துவிட்டு, அவள் தலையைத் தன் தோள் மேல் சாய்த்து அவளைத் தாங்கிக்கொள்கிறார்..... விட்டால் மயங்கிவிடுவாள் போலிருக்கிறாள்.. ஜூஸ் குடிக்க வைக்கிறார் வாசலிலேயே... மறுக்கமுடியாமல் மடக் மடக் என்று குடிக்கிறாள்... 'மெதுவாம்மா..' என்று சொல்லித் தடவி விட்டு உள்ளே அழைத்துச்செல்கிறார்கள்...
அங்கு இருக்கு அதிர்ச்சி - 2....
=============================================


அவள் வீட்டின் முதல் வாசலில் நுழையுமுன், மறக்காமல், எல்லோரும், "வலது கால் முதலில்" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்... இவளுக்கு வலது கால் எது என்று மறந்து விடுகிற அளவு குழம்பிப் போயிருக்கிறாள்... காலை மாத்தி மாத்தி வைக்க முயல, எல்லோரும் சிரிக்க, நாத்தனார் உதவுகிறார்.. "இதுக்கெல்லாம் சேர்த்து பின்னால வசூல் இருக்குமா" என்று நாத்தனார் சொல்ல எல்லோரும் சிரிக்க, உள்ளே நுழைந்ததும் வெட்கத்துடன், பயத்துடன் மெதுவாகப் பார்வையைச் சுற்றவிட்டவள், அப்பா, சோபாவில் அமர்ந்து, அர்விந்த் அப்பாகூட பேசிக்கொண்டிருப்பதும், அம்மா சமையலறை வாயிலில் பெண்களுடன் நிற்பதும் தெரிகிறது...
ஒரு நொடி ஆச்சர்யமும் அதிர்ச்சியுமுற்றவள், மொத்த பலமிழந்து, "அம்மா..." என்று ஓடிச் சென்று விழுகையில், இடையில் அப்பா எழுந்து வந்து தாங்கிக்கொள்கிறார் தன் செல்ல மகளை.... நன்றாக அழட்டும் என்று தன் மேல் சாய்த்து வருடுகிறார்... மகள் அழுவதைப் பார்த்தும், நீண்ட நாள் பிரிவு, மெலிந்த உடல் பார்த்து, பெற்றோரும் கண் கலங்குகிறார்கள்.... கலகலப்பாயிருந்த வீடு மெளனமானது.... பல நிமிடம்...
மெளனத்தை உடைக்க அர்விந்த், சினேகா கோவத்தில் கல்லூரியில் சொன்ன வார்த்தைகளை வைத்து விளையாட ஆரம்பித்தான்..
"அம்மா , பாத்தீங்களா, அம்மா உங்க ராட்சஸி மருமகளை.."
"டேய், நீதாண்டா ராட்சஸன்.. இத்தினி நாளா என்கிட்ட கூட சொல்லாம..." - அம்மா..
"அக்கா நீ அடிக்கடி திட்டுவியே, உனக்கொரு பத்ரகாளிதான் பெண்டாட்டியா வருவான்னு, ப.லி.ச்.சி.ரு.ச்.சு பாத்தி...யா?.." சோகமா முகத்தை வைத்துக்கொண்டு..
"வாயக் கழுவுடா... நானே வருத்தமாயிருக்கேன், சண்டை போடுற மாதிரி தம்பி மனைவி வரலயேன்னு..." - அக்கா..
"அம்மா, அப்பா, என்ன செய்வீங்களோ தெரியாது, மறுபடி வெளிநாட்டுக்கு நாங்க போறதுக்குள்ள எங்களோட இந்த 2 மாத லீவுக்குள் கல்யாணத்தை வைத்துவிடுங்கள்.. இன்னிக்கே நான் ஷாப்பிங்ல புகுந்து விளையாடப் போறேன்.." சந்தோஷமாய் அக்கா ஏன் மாமா, உங்க மருமகன் ஒண்ணும் கோழையில்லையே" அர்விந்த், சினேகா அப்பாவிடம்...
"என் மனத்தையே நீங்களும் உங்க நண்பர்களும் மாற்றி 4 நாட்களில் இங்கே கூட்டி வந்தீர்களே, நீங்க கோழையா? யார் சொன்னது?.." ஒன்றும் தெரியாதவர் போல்.. சினேகாவின் அப்பா...
"அதிகமா வரதட்சணை வாங்கி, பெரிய வீட்டுக்கு மாப்பிள்ளையா போவேன்னு சொன்னியே சினேகா, இவங்களோட அழகான பெண்ணைத்தான் கட்டிக்கப் போறேன்.." மாமியார் வெட்கப்பட, அவர் கையை எடுத்து... சொல்கிறான் அர்விந்த்.
"அ.....ப்.....பா...போதும்.. நிப்பாட்ட சொல்லுங்க அவரை..." கெஞ்சி, கொஞ்சி அப்பாவின் நெஞ்சில் முகம் மறைக்கிறாள் மகள்..
=============================================


அதற்குள் பல பைக்குகளின் சத்தம் வாயிலில்... அர்விந்த் வாசலை நோக்கிச் செல்ல,
"சரிம்மா, நீ போய் முகம் அலம்பி, கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு வாம்மா.. பூ வைக்கும் படலம், கீழே நீ வந்ததும்...." மாமியார்.. அர்விந்த் அறையைக் காட்டி மாடிக்குச் செல்லும்படி சொல்கிறார்..... விட்டால்போதும் என்று தப்பித்து ஓடுகிறாள் சினேகா வெட்கத்துடன்... உள்ளே சென்றதும் தான் தெரிகிறது அது அர்விந்த் அறை என்று....
புன்சிரிப்புடன் ஒவ்வொன்றாக பார்க்கிறாள்... ஏதாவது சேட்டை பண்ணலாமான்னு. கதவை மெல்லத் தாளிடுகிறாள்....
=============================================


"வந்தாச்சா வானர வாலுங்களெல்லாம்" அக்கா
"அக்கா , பிளீஸ் மரியாதை கொஞ்சம் தாக்கா".
"ஏன்டா... தொடர்ந்தாப்புல 5 நிமிடம் உன்னிடம் பேச முடியுதா..."
"சரி சரி சினேகா எங்க...?" அர்விந்த் கண்கள் தேடுகின்றன...
"அவள் சேலை மாத்த மாடிக்கு போயிருக்காள்." அக்கா.
"எ..ன்..னா...து............ என் ரூமுக்கா? யாரைக் கேட்டுக்கிட்டு.. அய்யோ.. கவுத்திட்டீங்க போங்க..."
தலையில் கைவைத்து ஓடுகிறான் 4 கால் பாய்ச்சலில், 4 படிகளைத் தாண்டி ஒவ்வோர் காலிலும்..
யாரும் நிப்பாட்டுமுன் சினேகாவின் அம்மா சொல்கிறார்...
"தம்பி போகட்டும். போய் என் மகளை சமாதனப்படுத்தட்டும்.. அவளை அமைதிப்படுத்துவது எளிதல்ல"
===========================================கதவை தட்டி திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்து தன் அலமாரியில், உள்ளவற்றைச் சரிபார்க்கிறான்..
அவள் கையில் இவனுடைய ஆல்பம், மற்றும் டைரி...
"சினேகா, அடுத்தவங்க டைரிய படிக்கக் கூடாது, குடுத்துவிடு.."
பின்னால் வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்கிறாள்...
இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது பக்குவமாய் வாங்கிடணும்னு நினைக்கிறான்.
"சினேகா உன்னிடம் ஒண்ணு சொல்லணும்" சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு...
"நல்லா ஏமாத்திட்டீங்க என்னை, இனி என்ன சொல்லப் போறீங்க?.." கிண்டலாக..சினேகா..
"சொல்லட்டா.." அவன்..
"..ம்..." ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள், கேட்க விரும்பாதவளாய்..
"சொல்லிருவேன்.." அவன்..
"...ம்..." ("சொல்லித் தொலை" --மனதுக்குள்..)
"சினே....கா..ஆ..ஆ........... ஐ லவ் யூ ....டா..."' கைகளை இரண்டையும் விரித்துக் கண்களால் வாவென அழைக்கிறான்...
அனைத்து உணர்ச்சிகளும் உச்சந்தலையில் ஒன்றுசேர ஓவென்று அழுதபடி கையிலுள்ளதைக் கீழே போட்டபடி அப்படியே கட்டிலில் உட்காருகிறாள்....
"இதுக்குதானடா இ..த்..த..னை நாள்................................, இந்தச் சொல்லுக்குத்தானே..........." மறுபடியும் பேச முடியாமல்..... அவனைப் பார்க்கவும் முடியாமல்..
அருகில் வந்து மென்மையாக அணைக்கிறான்.....
தடுக்கிறாள்.. விலகி ஓட,
"கிட்ட வராதே, அர்விந்த், நோ"
சொல்லச் சொல்ல முன்னேறுகிறான்...
"அர்விந்த், நோ" பலமாக..
இதற்கு மேல் அவள் போக வழியில்லை.. கத்துகிறாள்..
"அர்விந்த், நோ, பிளீஸ், கிவ் மி சம் டைம்... லீவ் மி அலோன்....பிளீஸ்.."
"நோ"..
"நோ, விடுங்க" மேலும் மறுக்க இயலாமல்.....
கதவு தட்டும் சத்தம் கேட்கிறது....
=================================================


முடிவு -1

விடுங்க..", "விடுங்க.."
தோழிகள் கதவைத் தட்டி உள்ளே வந்து,
"ஏய் சினேகா, என்னாச்சு? எழுந்திரு... இன்னிக்குக் கடைசி நாள், ஞாபகமிருக்கா?..
"என்ன பகல் கனவா டீ"
"ஏய் , உனக்கு பொக்கே வந்திருக்கு... ஹாஹா, அதுவும் இதயம் வடிவில் ஹாஹா.."
தோழிகள் கலாய்க்கிறார்கள்.... பொக்கே எடுத்துப் பார்க்கிறாள், பேரெதுவும் இல்லை.. குழம்பிக்கொண்டிருக்கும் போதே போன் வருகிறது....
"குட் மார்னிங். சினேகா....சாரி இன்னிக்கு உன் நாட்டியத்தைப் பார்க்க நான் வரமுடியாது.. ஆனால் முக்கியமானவங்க வருவாங்க... அப்புறம் என் பொக்கே கிடைச்சுதா?" அர்விந்த்..
"ஓ. சரி.. ஆமா. இல்லை.. நன்றி..." குழம்புகிறாள்...
"சாரி.. யார் வாராங்கன்னு சொன்னீங்க..."
"ஹாஹாஹா" சிரிக்கிறான் அவன்..
"சொல்லுங்க..."
"ம்.. உன் மாமியார். அதான் எங்க அம்மா.. ஹாஹா"னு சொல்லிட்டு போனை கட் பண்ணுகிறான்... பெருமூச்சு விடுகிறாள்...
கடைசிவரை நீ சொல்லமாட்டியா அர்விந்த்.....??????
அர்விந்த் சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.....................முடிவு-2


கதவு தட்டும் சத்தம் கேட்கிறது....
இருவரும் பதற்றமாய்...
"என்னம்மா இன்னுமா சேலை கட்டுகிறாய், அல்லது தம்பி சொல்லித் தருகிறானா" அக்கா கலாட்டாவாய்..
"அக்கா, நான் கீழே போகிறேன், ஆனா, என் அறையில் எதுவும் இவளை நோண்ட விடாதே" அர்விந்த்.
சினேகாவைப் புதுப்பெண்ணாய் அலங்கரித்து, தேவதையாய் மாடிப் படியில் அழைத்து வருகையில் சொக்கித்தான் போகிறான் அர்விந்த்...
எல்லோரும் அவளையே பார்க்கிறார்கள் என்றதும், வெட்கம் பிடுங்கித் தின்ன, எங்கு பார்ப்பது என்று தவித்துத்தான் போகிறாள்., பின் தரையை மட்டும் பார்க்க..
தன்னை ஒரு முறையாவது பார்த்திட மாட்டாளா "நீ ரொம்ப அழகா இருக்க"னு சொல்லிட மாட்டோ மானு ஏங்குகிறான் அர்விந்த்...
பூச்சூடும் படலம் நடக்கிறது... அவள் தலையில் இவ்வளவு பூ வைத்தால் அந்தப் பூவுக்கு வலிக்குமேன்னு இவன் வருத்தப்பட்டு "போதும் விடுங்க.. பா..வம் சினேகா" என்று சொல்லவும், மாட்டிக்கொண்டான் எல்லோரது கிண்டலிலும்..." அவளுக்காக நீ பிள்ளை பெத்துக்குவாய் போல" என்று எல்லோரும் திட்ட,
"சரி எல்லாம் நல்லபடியாய் நடந்தது... சினேகாவுடன் கிளம்புறோம்" அப்பா..
"அய்யயோ .. சினேகாவைக் கூட்டிப் போக வேண்டாம்னு சொல்லுங்கம்மா.., அக்கா நீயும்..பிளீ........ஸ்...." அர்விந்த்.
"மாமா, 5 வருடமா ஒன்றாகப் படித்தும் நாங்க சரியாகூட பேசிக்கல... சினேகா கூட நிறைய பேசணும்" அர்விந்த்.
"என்னம்மா சொல்ற நீ" சினேகாவிடம் அப்பா..
"நான் உங்ககூட வருகிறேன் பா" வேண்டுமென்றே அவள், கிண்டலாக.. சிரிப்புடன்..
உடனே பக்கத்தில் உள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து வந்து சினேகா முன் மண்டியிட்டு, சத்தமாக, "சினேகா நான் உன்னை விரும்புகிறேன்... வில்.. யூ.. மேரி மீ..... பிளீஸ்.. ஸ்டே நவ்... என்கூடவே இரு..."
வெட்கப்படாமல் பாடிவிட்டு, அவளை மறுபடியும் வெட்கப்பட வைக்கிறான்...
"சரி.. சரி. தம்பி, சினேகா ஒரு வாரம் இங்கு தங்கட்டும்.. அடுத்த வாரம் ஊருக்கு வாருங்கள் அனைவரும்..." அப்பா..
"டேய் , எங்க ட்ரீட் என்னாச்சு... காரியம் முடிந்ததும் மறந்துடுவீங்களே எங்களை.." நண்பர்கள்..
"சரி சரி.. எல்லாரும் சினேகாவோட ஊருக்குப் போய்க் கொண்டாடுவோம். சரியா.. இப்ப எங்களைக் கொஞ்சம் தனியா விடுங்க பிளீஸ்.." யாருடைய அனுமதியும் எதிர்பார்க்காமல் அர்விந்த், சினேகாவின் கைப்பிடித்து இழுத்துச் செல்கிறான் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு... முதன்முதலாக காதல் கதை பேச....
"ஏய்..", "தம்பி..", "டேய்..", "மாப்பிள்ள..", "அர்விந்த்" என்ற எந்தக் குரலும் காதில் விழாமல்.........


---------------------------------முற்றும்.--------------------
=================================================