Thursday, September 2, 2010

கிருஷ்ண ஜெயந்தி - சிறுகதை..



























" தோ பாரு காளி .. எல்லா பாத்திரத்தையும் அலம்பிட்டு தாழ்வாரத்தையும் கூட்டி பெருக்கி கழுவிடு."

" சரிம்மா.."

" ம்ம்மாஆஆஆ"


" யாரது.. கொழந்த சத்தம் கேட்டுது..?"


" ஆமாம்மா.. கொழந்த பாத்துக்குற ஆயவுக்கு சொரம்.. அதான்......" இழுத்தாள்..


" கொழந்த வெச்சுட்டு வேல எப்படி டீ செய்வ.?"

" அதெல்லாம் பயப்படாதம்மா .. பட்டு பட்டுன்னு செஞ்சுடுவேன்ல.."

" சரி கொழந்தய சத்தம் போடக்கூடாதுன்னு சொல்லு.. ஐயா தூங்குறாரு.."

---------------------------------------

" ம்மாஆஆஆ.."

" இருடா. ராசா.. வேல முடிச்சுட்டு பால் தாரேன்.."

" ம்ம்மாஆ..."


" இருன்னு சொன்னேன்ல..."


" ம்மாஆஆஆ.."

" சொன்னா கேக்க மாட்ட..அப்பன மாதிரியே வந்து வாச்சுருக்கு..."

" என்ன சத்தம் காளி..வேல பாக்க வந்தியா இல்ல புள்ளய சீராட்ட வந்தியா.. இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி .. தெரியுமுல்ல..ஐயாவோட வேல பாக்குறவுங்க குழந்தைகலாம் வருது.. பலகாரம் செய்யணும்.. இப்படி இருந்தா எப்படி..?"

" ஒரு நிமிசம் மா.. இத்தோ.." பால் கொடுத்துக்கொண்டிருந்தவள் சட்டென எழுந்தாள்..


" இந்தா இந்த பிஸ்கெட்ட கொடு கொழந்தைகு..."

" நன்றிம்மா.. "

" ஏய் ஏய் .. அங்க கவனி.. கொழந்தைய அதெல்லாம் தொடக்கூடதுன்னு சொல்லு.. பூஜை சாமான்..பகவானுக்கு "


" ஏண்டா இப்படி படுத்துற..?.. சும்மா இருக்க மாட்ட.?"
அம்மாவின் முக கோபத்தை பார்த்ததுமே வீரிட்டு அழுதது குழந்தை..

" ஏய் நல்ல நாள் அதுவுமா ஏன் இப்படி அழுகை சத்தம் ...மொதல்ல எங்கேயாவது போய் விட்டுட்டு வந்து வேலைய செய்யு.."

" இல்லம்மா.. அதுக்கு மருந்து வெச்சிருக்கேன்.. அத கொடுத்தா தூங்கிரும்.."


" என்ன --------- .. செய்து தொல.."



-----------------------------------

" வாங்க வாங்க .. ஏன் இத்தனை நேரம்?.. விருந்தினர் வரதுக்குள்ள வரவேண்டாமா ..?
எல்லாம் தயார்.. நம்ம குட்டி கிருஷ்ணரோட பாதம் தான் படணும் .."

" மருத்துவமனைக்கு போய்ட்டு வரோம் அத்தை.."


" என்னாச்சு ?." ஆவலோடு..

" நிப்பாட்டி வெச்சிருந்த பைக் ல ஏறி விழுந்துட்டான் மா."

" அச்சச்சோ.. "


" நல்லா அடி காலுல.. கட்டு போட்டுட்டு வந்தோம்.. "


" அடப்பாவமே..
"

"இப்ப
குழந்தை கால் தடத்துக்கு என்ன பண்ணுவது.மா.?"


" ஆதான் யோசிக்கிறேன்.. இரு காளி பின்கட்டுல இருக்காளா னு பாக்குறேன்."


" ஏய் காளி.. உன் மகன் எங்கே.. ?"

" இங்கதான இருந்தான்.. நடக்க ஆரம்பிச்சதிலேயிருந்து ஒரு எடத்துல நின்னாதானே." எல்லோரும் தேடினார்கள்..

" தொர .. தொர .." காளி சத்தமாய் அழைத்தாள்..

சத்தம் கேட்டு சாத்தியிருந்த பூஜையறையை திறந்துகொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தான் குழந்தை..

காளியை திட்டுவதற்காக வாயெடுத்தவர், வாயடைத்து நின்றார் ,

வழியெங்கிலும் மாவு கொட்டி பின்கட்டு வரை குழந்தையின் கால்தடம்....கண்டு..


-------------------------
படம் : நன்றி கூகுள்..