Tuesday, February 19, 2008

பாகம் - 6----என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா..?

பாகம் - 6----என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா..?===================================================

எல்லாரையும் விசாரித்து இவ்வளவு சீக்கிரமாக சம்மதிக்க வைக்கிறாரே என்று வியப்புடன் கூடிய கோவமாய் வருது
மதுவுக்கு... அப்பாவின், நிஷாவின், டாக்டரின், அண்ணாவின், .. யார் வார்த்தையும் தட்ட முடியாது போகவே
கோவம் அதிகமாகுது..


இன்று நேரில் பேசிவிடணும் என்று வந்தவளுக்கு தன் மேஜை மீது பெயரில்லாமல் ரோஜா
பூங்கொத்து இருப்பது கோவத்தை அதிகப்படுத்துது..முன் அனுமதி பெறாமலேயே அவர் அறைக்கு செல்கிறாள்..


" மன்னிக்கணும் சார்.. நான் உங்களிடம் பேசலாமா".. ரகுவை பார்க்காமல் மேஜையைப்பார்த்து பேசுகிறாள்...

புரிந்து கொள்கிறான் ரகு அவள் கோவத்தை, புன்னகையுடன்....

" தாராளமாக....சொல்லுங்க...உட்கார்ந்து பேசலாமே .."

" என்ன நினைத்துக்கொண்டிருக்கீங்க சார். . உங்க மனசில...?...பெண் என்றால் , அதுவும் அதிகாரி என்பதால்...."

பேச முடியாமல் அழுகை வருகிறது அவளுக்கு...அவள் கோவம் ரகுவுக்கு விளையாட்டாய் இருக்கு.. மனதுக்குள் சிரிப்பு..

" எனக்குதான் இஷ்டமில்லைனு சொல்லிட்டேனே.. அப்புரமும் ஏன் இப்படி...".

" உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலயா?.. ஏன் என்னை படுத்துரீங்க... உங்க அதிகாரத்தை பயன்படுத்துரீங்களா...?."

சுரீரென்றது ரகுவுக்கு,,,

" போதும் மது... "

" உங்களை சந்திக்கவே பிடிக்கல.."

" நிப்பாட்டுங்கன்னு......சொன்னேன்..."கொஞ்சம் சத்தமாகவே எழுந்து...

" சார்.. நான்...." கையை காண்பிக்கிறான் போதும் என்று...

" ...ப்போதும்.. எதுவும் சொல்ல வேண்டாம் இனி...எனக்கு ஏன் உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்ல தெரியலை..
ஆனா நீ என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு நினைத்தேன்.. யு ஆர் இன் சம் வே ஸ்பெஷல்.."


" இனி நான் உன்னைத்தொந்தரவு பண்ணவே மாட்டேன்...அது என்னுடைய பூங்கொத்தும் இல்லை..."

அதிர்ச்சியாகவும் , அசிங்கமாகவும் ஆகிவிட்டது மதுவுக்கு.. தன் தவறை உணர்கிறாள்..

" மன்னிக்கணும் சார்..." அவசரமாக வெளியேறுகையில்...

" ஒரு நிமிஷம். மது.. ஆனால் நீ மட்டும் தான் என் மனைவி என்பதில் எந்தவித மாற்றமுமில்லை.."

" மேலும் நிஷா இனி எனக்கும் தங்கைதான்..நம் திருமணம் நடந்தாலும் இல்லாவிட்டாலும்..."

" ஓய்வு எடுத்துக்கொள் .. எல்லா சரியாயிடும்..." என்று சமாதானப்படுத்துவதற்காக புன்னகைக்கிறான் ரகு...

தன் இடத்துக்கு வந்தவளுக்கு ஒரே குழப்பம்.. சே என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன்...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு... சே. சே.. அவமானமாயிருக்கு... அப்போ யாருடைய பூங்கொத்து?

" ஹலோ.. ஒரு நன்றி சொல்ல மாட்டியா, மது...வேலண்டைன்ஸ்டே பூவுக்கு..?""

மிச்சமுள்ள எல்லா கோவத்தையும் சேர்ந்து வாங்கிக் கட்டிக்கொண்டான் முனீஸ்....

--------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு வந்தவளிடம் அப்பா சொல்கிறார் நாளை அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று..
---------------------------------------------------தொடரும் பெண்பார்க்கும் படலம் ...பாகம் - 7 ல்...