Wednesday, February 20, 2008

பாகம்- 7 .சுந்தரி கண்ணால் ஒரு சேதி.....
===================================
அப்பா சொன்னதும் எரிச்சலாய் வந்தது.... நான் ஏதாவது செய்தால் ரகு இன்னும் வேகமாக காரியத்தில்
செயல்படுத்துகின்றாரே.....


" என்னப்பா இது அதுக்குள்ளேயேவா?.."

" இல்லம்மா நாளை நல்ல நாள். அதைவிட்டால் இன்னும் 1 மாதம் ஆகும்...அதான் சரின்னு சொல்லிட்டேன்.."

" சரிப்பா ஆனால் முடிவே பண்ணிவிடாதீர்கள்"
சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவளின் காதுகளில்
ரகுவின் வார்த்தைகள் தொந்தரவு தந்தது...

"நிஷா இனி என் தங்கைதான்"... என்ன நல்ல மனசு..

."நீதான் என் மனைவி, அதில் எந்த மாற்றமுமில்லை.".. என்ன தைரியம்...ஆனாலும் எனக்கு சம்மதமில்லையே...

------------------------------------------------------------------------------------
வீடே கலகலப்பாயிருந்தது... அண்ணா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்தது மதுவுக்கு குதூகலம்..


பெண் பார்க்க வருகிறார்கள் என்பதை மறந்து விளையாடிக்கொண்டிருந்தாள்...
கீதாம்மாவும் அவர் மருமகள் ஷைலஜாவும் மைசூர்பாக் செய்வதில் பிஸியாக இருந்தார்கள்.


அவர்களோடு சமூக ஆர்வலரான எதிர்வீட்டு சீதாம்மாவும் கலந்துகொண்டார்கள்..

அப்பாவும் சூர்யா அண்ணாவும் வீட்டை ஒழுங்குபடுத்தினார்கள்....

முதலில் வந்தது டாக்டர்... வந்ததுமே கலகலப்பாகிவிட்டது வீடு... அடுத்து நிஷா தன் குழந்தைகளுடன்..

வந்ததும் மதுவுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்.. அவளோ ஒரே பிடிவாதம் , சாதரண புடவை போதுமென்று..

" அடி கண்ணே, இதுவும் பெண்ணுக்கு முக்கியமான முதல் நாளோல்லியோ..." சீதாம்மா..

" எனக்குதான் அந்த சந்தர்ப்பம் இல்லை, உன் மூலமாவது நிறைவேத்திக்கிறேன் பா.." நிஷா..

" என்னை என்ன பாடு படுத்தின. ம். இப்ப நீ பட்டுப்புடவை கட்டியே ஆகணும்.. கூட என்ன நகைகளையும்
போட்டுக்கணும்..." மன்னி சைலஜா...


கீதாம்மா புன்னகைத்துக்கொண்டார்.தான் தப்பித்தோம், தன் வேலை சுலபமாயிற்றென்று..

6 மணிக்கு ரகு , சுந்தர் தன் மனைவி , 2 பசங்களுடன், ரகுவின் தங்கை பரமேஸ்வரி, விசாலம் அம்மா, அப்பா.

அனைவரும் வந்ததும் டாக்டர் பாட்டுபாடி வரவேற்றார்...

" அடியே என் கள்ளி, மாப்பிள்ளை ரொம்ப அழகுடி.. உனக்கு வேண்டாம்னா சொல்லு நான் ரெடி." என்று சீதாம்மா

வேறு சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, மற்ற அனைவரும் மாப்பிள்ளையை ஜன்னல் வழியாக பார்க்க போட்டி
போட்டுக்கொண்டிருந்தனர்..அனைவருக்கும் பஜ்ஜி சொஜ்ஜி மைசூர்பாக்குடன் பரிமாறப்பட்டது...


" பெண்ண கூட்டிண்டு வாங்கோ " டாக்டர் சங்கர்...

சுந்தர் நிமிர்ந்து உட்கார்ந்தார்..." நீங்க ஏன் நிமிர்ந்து உக்காருரீங்க.. மாப்பிள்ளை நீங்கன்னு தப்பா நெனச்சுக்கப்போறா.."

எல்லாரும் சிரிக்க, அழகாக அம்சமாக காபி தட்டுடன் மது குனிந்த தலையுடன், அதிக வெட்கத்தோடு
நடை மறந்து, யாரையும் பார்க்கும் சக்தியின்றி , மல்லிகைப்பூக்கள் ஜிமிக்கியோடு போட்டிபோட்டு
தோளிலாட, பட்டுப்புடவை சரசரக்க வருகிறாள்..


நிசப்தம்..பார்த்த மாத்திரத்தில் ரகுவுக்கு, கவிதை தோன்றுகிறது...

"ஆயிரம் முறை அலுவலகத்தில்
வேலை கருத்தோடு பார்த்தாலும் ,
கோபத்தில் நீ முறைத்தாலும் ,
அன்னநடையில் உன் வெட்கத்தாலும்,
புதுஅனுபவத்தின் பயத்தாலும்,
தேவதை உன் அலங்காரத்திலும்
அள்ளிச்செல்கிறாயே என் மனதை கள்ளியே"

மெய்மறந்து புதிதாகப்பார்ப்பவன் போல் மயங்குகிறான்...

காபி கொடுப்பதற்குள் தடுமாறித்தான் போகிறாள் பேதை..விசாலம் அம்மா தன் அருகில் அமரச்செய்கிறார்.
அதற்குள் சின்னஞ்சிறு குழந்தைகள் , மதுவிடம் ஓடிவந்து ,


" ஏன் சாமி மாதிரி இவ்வளவு நகை போட்டிருக்க?.."

" நீ மட்டும் நிறய பூ வெச்சுருக்க".. என்று மடியில் ஏற முயலுகிறது மற்றொன்று..
அவளின் தர்மசங்கடத்தை ரசிக்கிறான் ரகு...


ஷைலஜா , சீதாம்மா, கீதாம்மா , எல்லோருக்கும் ரகுவைபற்றி ரொம்ப திருப்தி..

அதேபோல் " அண்ணா எனக்கு ஒகே" பரமேஸ்வரி..." எனக்கும் தான்" விசாலம் அம்மா.
விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்த மதுவிடம் " என்னம்மா நீ ஏதாவது பேசணுமா" டாக்டர்..


இல்லை என தலையாட்டுகிறாள்..

" பெண்ணை பாட்டுபாட சொல்லணுமா..இல்லாட்டி நான் பாடவா " சிரிக்கிறார்கள் அனைவரும்...

" நீங்க எதாவது பெண்கிட்ட பேசணுமா மாப்பிள்ளை சார்.?." டாக்டர்...சங்கர்.

" பேசணும் , பெண்கிட்ட இல்லை, ஆனால் அவள் அம்மாவிடம்..." ரகு

எல்லோரும் ஆச்சர்யப்பட , கீதாம்மா ரொம்ப வெட்கப்படுகிறார் , மதுவைவிட..

சரி அதுக்குமுன்னால் தட்டு மாத்திக்கொள்ளலாம் என்றதும் தான் விபரீதம் புரிகிறது மதுவுக்கு...

" எதுக்கும் என் பெண்ணிடம் ஒரு வார்த்தை.."மதுவின் அப்பா

" ஹாஹாஹா. மது என் பெண். என் பேச்சை என்று தட்டியிருக்கிறாள்..இல்லம்மா..?.. தட்டை எடுங்க" டாக்டர் சங்கர்.கட்டளையிருகிறார்..

.மது யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்தது.. நல்லபடியாக..

ரகு கீதாம்மாவை தொடர்கிறான்...............................................

-------------------------------------------------------------------------------தொடரும்....