Wednesday, September 1, 2010
எல்லை எதுவரை?.- சிறுகதை..
Pictures : Thanks to Google..Images
" இன்னிக்கு வரட்டும் இருக்கு.. என்னதான் நெனச்சுட்டிருக்கார் மனசுல.?.."
" ஆரம்பிச்சுட்டியா மா.. விட்டுத்தள்ளுமா.. ஆம்புள ன அப்படித்தான்.. நாம தான் அட்ஜீஸ் பண்ணிட்டு போவோணும்.."
" உனக்கு தெரியாது செல்லம்மா.. உங்கள மாதிரி பெண்கள் இப்படி இளக்காரம் கொடுத்து கொடுத்தே திமிர் ஏறிப்போச்சு.."
" அதுங்காட்டி சொல்லல கண்ணு.. பொண்ணு குழந்த பெத்து வெச்சிருக்கியே..."
" பொண்ணு பெத்தா அடங்கி போகணுமா?.. பார்ட்டி அது இதுன்னு குடிச்சுட்டு வர அப்பாக்கு எங்க போச்சு பொறுப்பு.?"
" சரி சத்தம் போடாத பாப்பா முழிச்சுக்கும்.. " னு வேலையை செய்ய சென்றாள் செல்லம்மா..
--------------------------------------------------------------------------------------
" ஹேய் என்னாதிது ..?. பெட்டியை அடுக்கிட்டு இருக்க?.. "
"...."
" கேக்குறேன்ல.."
" புரியலையா ?.. நான் போறேன்.."
" எங்க உங்க அண்ணன் வீட்டுக்கா.?" அவரே கஷ்டப்பட்டுட்டிருக்கார்.. இல்ல அம்மா வீட்டுக்கா.?"
" நான் ஏன் அங்க போணும்.. எங்கே போறேன்னு போனப்புரம் தெரிஞ்சுக்கோ."
" என்ன மரியாதை குறையுது.?"
" அதுக்கேற்ற மாதிரி நீ நடந்துக்கல..சரி உன்கிட்ட பேசுவது வேஸ்ட்.. " என குழந்தையின் பெட்டியை அடுக்க ஆரம்பித்தாள்..
-----------------------------------------
" செல்லம்மா , இந்தா இந்த மாச சம்பளம்.. செடிக்கு முடிஞ்சா தண்ணி ஊத்து.. பணம் வந்து தருவேன்.."
" ஏம்மா நெசமாத்தான் சொல்லுதியா.?.. ராத்திரி சமாதானம் ஆயிருப்பன்னு நெனச்சேன்.." வருந்தினாள்..
" ஹ,.. விடு செல்லம்மா. எங்க போயிருவா?.. அங்க சுத்தி இங்க சுத்தி திரும்ப இங்கதான வரணும்.?."பேப்பர் எடுத்துக்கொண்டு நிதானமாக உட்கார்ந்தான்..
" ...."
" குட்டிம்மா , இந்த உடுப்ப போட்டுக்க .. நாம ஊருக்கு போறோம்.."
" எங்கம்மா.?.. எனக்கு ஸ்கூல் இருக்கே.."
" அதெல்லாம் அப்புரம் பார்த்துக்கலாம்.. "
" அப்பா வரலியா மா.?"
" இல்ல.. நாம மட்டும்தான் இனி..."
" எனக்கு அப்பா வேணும் .மா..."
" சொன்னா கேட்கமாட்டியா.? "
" அவளை ஏண்டி அதட்டுற ?.. என்மேலுள்ள கோபத்துல... நீ இங்க வாடா செல்லம்.."
" ஒஹ்.. அப்ப சரி.. நீயும் இங்கேயே இரு.. ஆமா , நான் ஏன் ஒவ்வோரு வாட்டியும் உன்னையும் இழுத்துகிட்டு போகணும்..
சரிதான்.. உன் அப்பாவே உன்னை கவனிச்சாத்தான் பொறுப்பு வரும்.." னு சொல்லிட்டு பெட்டியை எடுத்துகிட்டு கிளம்பினாள்..
" ஹேய்.. நில்லு.. என்ன பையித்தியமா.. ?.போறதானா , குழந்தையையும் கூட்டிட்டு போ.. ..என்னால லீவு போட முடியாது.."
" ஒஹ்ஹொ.. அப்ப ரொம்ப வசதியா போச்சு.. அலுவலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்ட்டிக்கும் கூட்டிட்டு போய் பழக்கிடுங்க..குடிக்க .."
"........" உறைத்தது அவனுக்கு, ...
" சொல்லி சொல்லி திருத்தலாம்னு பொறுத்து பொறுத்து பார்த்தால் ஒண்ணும் வேலைக்காவாது..இனி பிள்ளையை சீராட்டி எழுப்புவதிலிருந்து
ஒவ்வோரு உணவா மாற்றி மாற்றி செய்து கொடுத்து , பாடம் எழுத வெச்சு , கத சொல்லி தூங்க வெச்சா , பொறுப்பு கூடுமோ என்னமோ.?.. நான் வரேன்.."
நிதானமாய் எழுந்து வாசல் வரை சென்றவளை ஓடி வந்து கரம் பிடித்து நிப்பாட்டினான்...
" சரி உள்ள வா .. பேசலாம்.."
கையை உதறினாள்...
"எல்லாத்துக்கும் எல்லையுண்டு .. இப்ப எல்லையை தாண்டியாச்சு .. கொஞ்சம்..., அட்லீஸ்ட் ஒரு வாரம் குழந்தையோடு லீவு போட்டு இருந்தால் மட்டுமே திருந்தலாம்...
பேச்சு வார்த்தை பயனளிக்கும்னு தோணலை..ஒரு வாரம் கழித்து வருகிறேன் " என சொல்லிவிட்டு தாண்டி சென்ற ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்..
குழந்தையை பிரிந்த வலி மனதிலிருந்தாலும், இதைவிட வேறு வழியின்றி மனசை கல்லாக்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டாள்...
அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாய் வாசல் வருமுன்...
Subscribe to:
Posts (Atom)