Saturday, August 28, 2010
உதவியே உபத்திரமாய் மாறியதுண்டா?..அனுபவங்கள்
We must accept finite disappointment, but we must never lose infinite hope. - Martin Luther King, Jr.
அப்பதான் இரண்டாவது குழந்தை பிறந்து 4 மாதம்..
பெரியவனும் அவன் நண்பனும் பள்ளி முடிந்ததும் வேகமாய் வந்து குழந்தையை போட்டி போட்டு கொஞ்சுவார்கள்.
பெரியவன் 4 ம் வகுப்பும் அவன் நண்பன் 5ம் வகுப்பும்..
அவன் நண்பனோ ஒரே பிள்ளை.. ஆக அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப இஷ்டம் . தினம் வந்திடுவான்..
அப்ப்டி ஒருநாள் பள்ளி முடிந்ததும் நண்பன் என் மகனிடம் , "வா கடைக்கு சென்று மிட்டாய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம்" னு சொல்ல என் மகனோ,
" அம்மா தேடுவாங்க.. திட்டுவாங்க "
" பக்கத்தில்தானே. லாபியில் பையை வைத்துவிட்டு , ஓடி போய் வாங்கி வருவோம்."
மறுக்க முடியாமல் சென்றுள்ளான் இவனும். அங்கே சென்றதும் நண்பன் ஒரு பிஸ்கட் எடுத்து கால்சட்டைக்குள் போட்டானாம்.
அதை கையும் களவுமாய் கடைக்காரன் பிடித்துவிட்டான். கூட சென்ற என் மகனையும் பிடித்து வைத்துவிட்டு எனக்கும் அவன் வீட்டுக்கும் தகவல் வந்தது.
அங்கே சென்றதும், " உங்க பையன் ஒன்றும் செய்யலை. அவன் நண்பந்தான் பிடிபட்டான் " என்றார்கள். "நீங்கள் உங்க குழந்தையை அழைத்து செல்லலாம் ..அந்த பையன் எங்க முதலாளி வரும்வரை இருக்கணும்.."
யார் செய்தா என்ன?.. இருவருமே என் குழந்தைகள் போலத்தானே .. வித்யாசம் ஏதுமில்லையே என் மனதில்.. மென்மையா அந்த பையனிடம் விசாரித்தேன்.. " நான் எடுத்தது உண்மைதான். ஆனால் விளையாட்டுக்குத்தான் அப்படி செய்தேன் " என அழுதான்.
அதைப்பார்த்து அன்னையும் அழ, எனக்கு மிகவும் பரிதாபமாக போய்விட்டது. ஒரு பிஸ்கட் வாங்க முடியாத நிலைமையில் இங்கு யாருமே இல்லை என சொல்லலாம்.
சொல்லப்போனால் அந்த பிஸ்கட் எல்லாம் குழந்தைகள் உண்ண கட்டாயப்படுத்தணும்.. அப்படி சாக்லேட் , பிஸ்கெட் என வெறுக்குமளவுக்கு அவரவர் வீட்டில் இருக்கும்.
ஆனா சிறு குழந்தைகளுக்கு திருட்டும் ஒரு விளையாட்டு.. அதிலுள்ள சீரியஸ்நெஸ் , பாதிப்பு புரிவதில்லை.
அதற்குள்ளே அந்த பையனின் தகப்பனார் எனக்கு போன் செய்து . " என் மனைவிக்கு தாய் பாஷை தெரியாது.. தயவுசெய்து உதவிடுங்கள் " என்றார்.
" இதிலென்ன இருக்கு.. கண்டிப்பா இருப்பேன். கவலைப்படாதீங்க " னு சொல்லிட்டு காத்திருந்தோம்.
இதனிடையில் வீட்டில் 4 மாத குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த வேலையாள் வீடு திரும்பும் வேளை. அவள் டையப்பர் போடாமல் குழந்தையை கீழே என்கிட்ட வந்து கொடுத்துவிட்டு சென்றாள்.
அந்தக்கடையின் உள்ளே வைத்தே அழுத குழந்தைக்கு பாலும் கொடுத்தேன்..
ஏனெனில் அந்த பையனின் அம்மா ஒரே அழுகை பயத்தில்..தன் பிள்ளையை கைது செய்வார்களோ என.. " அட அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.. னு நான் தைரியம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்..
(இதற்கிடையில் நம் தமிழ்ப்பெண் ஒருத்தி கூட இருந்து இத்தனையையும் கவனித்துக்கொண்டே இருந்தாள். அப்பப்ப தொலைபேசி மூலம் மற்றவர்களுக்கும் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டும் இருந்துள்ளாள். அதை பின்பு சொல்கிறேன். )
பின்பு காவலர் வந்தனர்.. அழும் பையனை ஒருவர் அணைத்துக்கொண்டார் , சிரித்துக்கொண்டே..
காவலர் மட்டுமல்ல இங்கு அனைவருமே குழந்தைகள் மேல் பாசம் கொண்டவர்கள்.. குழந்தைகளை கொண்டாடும் நாடு இது..
அதற்குள் அந்த பையனின் தகப்பன் வந்துவிட்டார்.. வந்ததும் எனக்கு நன்றி சொல்வார் என பார்த்தால் , யார் யாருக்கோ போன் போட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
கடைசியில் 35 பாட் ( தாய்லாந்து பணம் ) பிஸ்கட்டுக்கு 4000 பாட் பைன் கட்ட முடிவானது.. அந்த நேரம் பார்த்து என் கணவரும் வர, அந்த பையனின் அப்பா , என் கணவரிடம், " நாம் இருவரும் சேர்ந்து இந்த தொகையை கட்டிவிடுவோம்" என சொல்ல.
ஏதும் கேட்காமல் என் கணவரும் 2000 பாட் கொடுத்துவிட , எனக்கோ அதிக கோபம்.. " ஏன் கொடுத்தீங்க " னு நான் கேட்க , " பிரச்னையை வளர்க்க கூடாது . விட்டுத்தள்ளு .. " னு எளிதா சொல்ல..
" என்ன சொல்றீங்க நீங்க.. பணம் பெரிதல்ல.. ஆனா நம்ம பையன் செய்த குற்றம் போல ஆனதே.. அதைவிட அந்த மனிதர் நான் இத்தனை நேரம் அவர் மனைவிக்கு துணையாக நின்றதுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை.. " என நடந்ததனைத்தையும் விளக்கினேன் கணவருக்கு..
அப்பதான் தவறு செய்ததை உணர்ந்தார். உடனே போன் போட்டார் அவருக்கு.. அவர் மனைவி எடுத்ததும் என்னை பேச சொன்னார். " நான் நினைத்திருந்தால் என் மகனை உடனே அழைத்து வந்திருக்க முடியுமே.. உங்க பையனையும் என் மகனாய் நினைத்ததனால் மட்டுமே அங்கே நின்றேன், பச்சக்குழந்தையை வைத்துக்கொண்டு..தயவுசெய்து இனி யாரையும் இப்படி புண்படுத்திவிடாதீர்கள் "
உடனே அவர் அழுதார்.. தான் செய்தது தவறுதான் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணவர் போன் பிடுங்கி , " நீங்க கடைக்காரரிடம் என் மகனுக்கு ஆதரவாய் பேசியதால்தான் பைன் கட்ட வேண்டிய சூழல்.. " னு அப்படியே என் மேல் பழியை போட்டார்.
உடனே என் கணவர் போன் வாங்கி " என் மனைவிக்கு தேவையா .? நீங்க ஏன் உங்க மனைவிக்கு தாய் தெரியாது உதவுங்கன்னு கெஞ்சினீங்க.? அதெல்லாம் தெரியாமல் எப்படி என்னிடம் 2000 பாட் கேட்டீர்கள் ?." என விளக்கம் கேட்டதும்,
இறுதியில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு , அந்த 2000 பாட் உடனே அனுப்பி வைப்பதாகவும் தயவுசெய்து அடுக்ககத்தில் யாரிடமும் தன் மகன் திருடி மாட்டிக்கொண்டதை சொல்லிவிடாதீர்கள் எனவும் கெஞ்சினார்..
உடனே நான் அவர் மனைவியிடம் போன் கொடுக்க சொல்லி , " இப்பவும் உங்க பையன் என் மகன் போலத்தான். அவன் மேல் எந்த தப்பும் பெரிதாய் எனக்கு தெரியலை.. குழந்தை அவன்.. ஆனா பெரியவங்க நீங்க செய்தது என்னால் மன்னித்தாலும் மறக்க முடியாது..தயவுசெய்து உங்க பாவப்பட்ட பணத்தை அனுப்பிடாதீங்க.. அதை கோவில் உண்டியலில் போட்டிடுங்க . அபிஷேக் எப்பவும் போல் என் வீட்டுக்கு வரலாம் " னு சொல்லி வைத்தேன்..
இத்தோடு முடிந்ததா?. அந்த தமிழ்ப்பெண் அடுக்ககத்தில் உள்ள எல்லாரிடமும் என் பையன் திருடி மாட்டி, நாங்க பைன் கட்டிய விபரத்தை சொல்லியுள்ளார்.
என் மனது கஷ்டப்படும் னு யாரும் கேட்கலை. ஆனால் இந்த தமிழ்ப்பெண் காலை கணவன் அலுவலகம் சென்றதும் வீடு வீடாய் சென்று ஒவ்வோரு வீட்டின் கதையையும் கேட்டு அடுத்த வீட்டுக்கு பறிமாறுவதே வேலை..
இப்படியே இங்குள்ள அனைவரையும் அழகாக பிரித்துவிட்டு அவள் மட்டும் எல்லோர் வீட்டுக்கும் நல்லவளாய் இருந்துள்ளாள். நான் வேலைக்கு செல்வதால் எனக்கு இது பற்றி ஏதும் தெரியாமல் இருந்தேன்.பல மாதம்.
நான் யார் வீட்டுக்கும் செல்வதில்லை.. என் வீட்டுக்கு கதை பேச என இதுவரை யாரும் வந்ததில்லை..15 வருடத்தில்..
அப்பவும் அந்த தமிழ்ப்பெண் மாசமாய் இருக்கிறாள் என்று சில பலகாரமும் பழங்களும் வாங்கிக்கொண்டு பார்க்க சென்றேன். அப்ப அவள் இல்லாததால் பக்கத்து வீட்டு தமிழ் பெண்ணிடம் கொடுத்து கொடுக்க சொன்னபோது , அவர்கள் மெதுவாக விசாரித்தார்கள்...மகன் திருட்டு பற்றி..
அதிர்ச்சியானேன்.. அப்படியே அழகான ஒரு கதை.. சரி வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என விட்டுவிட்டேன். அப்புரம் மெதுவா ஒவ்வொருத்தரிடமா விசாரிக்கும்போது எல்லோரிடமும் என் மகனைப்பற்றி பொய் சொல்லியிருந்தாள்
எல்லோர் வீட்டு கதையும் முக்கியமா பிள்ளைகள் பற்றி சொன்னதும் எல்லோருக்கும் வருத்தம்,.
அதற்குள் பிரசவத்துக்கு ஊருக்கும் சென்றுவிட்டாள்.. ஒருநாள் கட்டாயத்தின்பேரில் அவள் வீட்டுக்கு சென்று அவள் கணவனிடம் இது பற்றி மென்மையாக எடுத்து சொன்னோம். நல்ல மனிதர்.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாய் சொன்னார். ( அவர்தான் அந்தோணி பற்றி நான் எழுதியதும் உடனே வீல் சேருக்கு 5000 ரூபாய் அனுப்பி வைத்தார்..முதலில் )
அப்புரம் மொத்தமா எல்லாரிடமும் சொன்னேன், இந்த கதை பேசும் பழக்கத்தை தயவுசெய்து விடுங்கள்.. வெளிநாட்டில் தனியே இருக்கோம் முடிந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்போம் னு சொல்லி , இரு விழாக்கள் எடுத்து நடத்தினேன் ..
ஒன்று குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி.. மற்றொன்று பெண்களுக்கான ஸ்மார்ட் மம் போட்டி.. அப்புரம் முழுதுமாக நான் உண்டு என் வேலையுண்டு என ஒதுங்கிக்கொண்டேன்..
எத்தனை அடிபட்டாலும் உதவும் பழக்கத்தை விடப்போவதில்லை.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.. தவறு செய்கிறவர்கள் செய்துகொண்டே இருக்கட்டும்.. அதையும் தாங்க பழகிக்கணும்.. ..
நல்லவர்கள் பலரும் உலகில் இருக்காங்க என்ற நம்பிக்கையோடு நல்லவற்றை செய்வதை தொடரத்தான் வேணும்... அது மட்டுமே மனசுக்கு இதம்...
“I don't at all like knowing what people say of me behind my back. It makes me far too conceited.” Julchen Oscar Wilde quotes
It is necessary to help others, not only in our prayers, but in our daily lives. If we find we cannot help others, the least we can do is to desist from harming them.
Dalai Lama
Subscribe to:
Posts (Atom)