Friday, January 23, 2009

மறுபடியும் மணக்கட்டும் மறுமணம்..

மறுபடியும் மணக்கட்டும் மறுமணம்..


"ஹஹ.. என்ன ஓய் ஒரு வாரமா ஆளயே காணல...மொத ஆளா வந்துடுவீரே நடைக்கு.."

" ம்."

" என்னவோய் கேட்டுகிட்டே இருக்கேன் பதிலையே காணோம்.. மொகம் வாட்டமா வேற இருக்கு.. பொண்ணு நல்லபடியா வந்துட்டாளா ஊரிலிருந்து..?"

" ஆமா.. ஆனா நல்லபடியா எங்க .. முறிவோடுதான் வந்திருக்கா...."

" அதுக்கேன் ஓய் பயப்படுரீறு?... நான் அப்பவே சொன்னேன் .. ஒரே பொண்ணுன்னு பொத்தி பொத்தி வளர்க்காம , கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டுமா நாலும் தெரிஞ்சு தெய்ரியமா வளக்கணும்னு.... படிப்பில கெட்டியா இருந்தா மட்டும் போதாதுவோய்..."

"ம்."

" சரி இப்ப ஒண்ணும் குடி முழுகிப்போனாப்புல மொகத்த தொங்கப்போட்டுக்காதேயும்... புள்ள வருத்தப்படுவா... தெய்ரியம் சொல்லும்... இல்லாட்டி நான் சொல்றேன் அவளுக்கு.."

" அதுக்கில்லை.. இனி பேரப்பிள்ளை படிப்புமிருக்கே.... வெளிநாட்டில படிச்சவன்..."

" ஓய் . எனக்கொரு யோசனை.....அவ படிப்புக்குதான் அங்கு வேலை ரெடியா இருக்கே... மறுபடியும் அங்கே போய் வேலை பாக்கட்டுமே..."

" தனியா போகிற தைரியமில்லை பா... "

" அட, என் வீட்டிலும் அதே விவாகரத்து பிரச்னை..தான்... பேசாம நாம சம்பந்தியாயிடலாம்...விடும் கவலையை..."

" இது நடக்குமா?.. "

" ஏன் ஓய் நடக்காது...எது நடந்ததோ அது நன்றாய் நடக்கவில்லை.. அதுக்காக இனி நடக்கப்போவது எல்லாமேவா தப்பா நடக்கணும்...இதிலிருந்து வெளிவரணுமோய்..உம்ம மககிட்ட நான் பேசுறேன் ஓய்...நீர் என்கிட்ட விட்டுரும் ..என் பேத்தியும் உம் பேரனுக்கு துணை, ஆச்சு பாரும் ஓய்..."

என சந்தோஷமாக சிரித்தார்...

" சரி மககிட்ட சொல்லி மாமாவுக்கு பட்சணம் எல்லாம் ரெடி பண்ணச்சொல்லும்... இன்னிக்கு சாயங்காலமே நானும் ஆத்துக்காரியும் வந்து பேசி முடிச்சுடலாம்...ஹிஹி.."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சாயங்காலம்

" என்னம்மா இந்த சம்பந்தத்துல ஒனக்கு சம்மதம்தானே?.."

" போங்க மாமா.. என் வாழ்க்கையில் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கீங்க... நான் மாட்டேன் என்பேனா?.. எனக்கு முழு சம்மதம்..."

" அப்படி சொல்லு என் மகராசி...ஆயுசுக்கும் நீங்க இருவரும் சேர்ந்து நல்லபடியா பிள்ளைகளை வளர்த்து மகிழ்ச்சியா இருக்கணும் .. அதுதான் எங்க மகிழ்ச்சியும்...."

" கண்டிப்பா, மாமா... இப்படி ஒரு மறுமணம் அமையும்னு நான் கனவிலும் எதிர்பக்கலே மாமா . வரதட்சணை கொடுமைகளில் எங்களைப்போன்றோருக்கு இதுதான் நல்ல வழி.. உங்களை மாதிரி தைரியமா எல்லா பெண்ணை பெத்தவங்களும் முடிவெடுக்கணும்...."

" ஹஹ.. என் கடமை மா. அது...சரி இரு என் பொண்ணுகிட்ட இந்த சந்தோஷத்தை சொல்லிடுறேன், அவள் வாழ்க்கைத்துணை பற்றி... நல்லவேளை தைரியமா வளர்த்தேன்....

இரு பெண்கள் சேர்ந்து மறுமணம் என்று மனம் மட்டும் இணைந்து வாழப்போகிறீர்கள், ஒருவருக்கொருவர் துணையாக...."


சாதனை செய்த வெற்றியில் பெருமிதம் கொள்ளுகிறார் வரதட்சணையில் அடிபட்ட அந்த தந்தையும்...

No comments: