Monday, September 24, 2007



காலமெல்லாம் காத்திருப்பு ..
=======================

பத்து மாதம் முடிந்த பின்னும் வெளிவர காத்திருந்தாள்.
பெண் என் தெரிந்ததும் அரளிக்கு காத்திருந்தாள்.

தம்பியுடன் பள்ளி செல்ல தவமாய் காத்திருந்தாள்.
கேள்வி ஞானம் மூலமாய் அறிவுபெற காத்திருந்தாள்.

பிஞ்சான பூ பின் கனியாக காத்திருந்தாள்.
கனியான்பின் திரு மணமாக காத்திருந்தாள்.

ஊரார் குறை சொல்ல தாயாக காத்திருந்தாள்.
பிரசவ வலியிலும் குழந்தை கொஞ்ச காத்திருந்தாள்.

விட்டுச் சென்ற மாமன் வீடு திரும்ப காத்திருந்தாள்.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் சிறப்பு பெற காத்திருந்தாள்.

அயல்நாடு தொலைபேசி அழைப்புக்கு காத்திருந்தாள்.
பேரப்பிள்ளை விளையாட ஊஞ்சலோடு காத்திருந்தாள்.

மகளாகி, தமக்கயாகி ,தாரமாகி, தாயுமாகி, காத்திருந்தவள்,
பாட்டியாகி தள்ளாத வயதினிலே கண்மூட காத்திருக்கிறாள்.


இணையத்து மாமா!.......
===================

அம்மா அடித்தால் அரவணைத்துக் கதை சொல்ல பாட்டி இல்லை
அப்பாவின் கோபத்தை தடுத்து சிரிப்பூட்ட செல்ல தாத்தா இல்லை

விதவிதமாய் சமைத்து ஒளித்து தர அத்தை இல்லை!
வித்தைகள் வாழ்க்கை முறை கத்துத்தர மாமன் இல்லை!

அன்போடு வீட்டுப்பாடம் சொல்லித்தர அக்கா இல்லை!
அடிச்சுப் பிடிச்சு பங்கு போட விளையாட அண்ணன் இல்லை!

ஊசிபோட்டால் வலிக்காது கண்ணுனு சொல்ல சித்தி இல்லை!
வலித்தாலும் ஆண்பிள்ளை அழாது ராசானு சொல்ல சித்தப்பா இல்லை!

விடுமுறை விட்டதும் காத்திருந்து தூக்கிச் செல்ல பெரியம்மா இல்லை!வயல்வெளி வாய்க்காலில் மீன் பிடிக்க கத்துதர பெரியப்பா இல்லை! ..

நீச்சல், சைக்கிள், தமிழ் சொல்லித்தர தமிழ் நண்பன் இல்லை!
மொத்தத்தில் இருப்பதுபோலிருந்தாலும் அன்பு செலுத்த ஆளிங்கில்லை!.

அம்மா சொன்னாள் கவலைப்படாதே எல்லோத்துக்கும் சேர்த்து இருக்கிறான்யா உன் இணையத்து மாமன்,ஈடிணையின்றியே!.

-------------------------------------------------------------..

என் இணைய சகோதரர்களுக்கு இக்கவி சமர்ப்பணம்.!