Wednesday, September 22, 2010
இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 3
இந்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...
2. அதிகாரம் /ஆளுமை..- நீயா ?.. நானா.?..
எனக்கான மதிப்பும் மரியாதையும் நான் அதிகாரம் செய்தால் மட்டுமே கிடைக்கின்றது என்ற ஒரு தவறான புரிதல்..
அன்பாலேயே ஆளுமை செய்ய முடியும்.. ஆனால் அதற்கு மிக அன்பும் பொறுமையும் தேவையாயிற்றே.. என்னால் பொறுமையால்லாம் இருக்க முடியாது..
நான் சொல்வதை உடனே இவர்கள் கேட்டாகணும்..அதற்கு ஒரே வழி அதிகாரம் செய்வது ஆளுமையை கையில் எடுத்துக்கொள்வது.
பள்ளி என்றால் ஒரு குழந்தையின் வித்யாசமான போக்கை வைத்தே கவனிக்கலாம்..பிடிவாதம் , ஆசிரியையிடமே எதிர்த்து/மறுத்து பேசுதல் , கத்துதல் , போன்றவை.
துணை விஷயத்தில் அல்லது அலுவலகம் என்றால் , ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசுமுன்னரே அது தமக்கு பிடிக்கவில்லை என்றோ, தேவையில்லை என்றோ நடக்காது என்றோ எதிர்மறையாக மட்டுமே பேசுவது...
பேசுபவர் நியாயமான கருத்தை சொன்னாலும் கூட அதை மறுப்பதிலே ஒரு ஆனந்தம்..ஒரு வெற்றி.. சில நேரம் அதுவும் வேலைக்காகாவிட்டால் மிரட்டும் தோரணை ஆரம்பமாகும்..
ஏதாவது வைத்து மிரட்டல் விடுவார்கள்.. " அடிப்பேன் " ." கவைனிச்சுக்கிறேன் " போன்ற வார்த்தையோடு..அது தனக்கே ஆபத்தாக முடியும் என புரியாமல்... தன் ஆளுமையை நிரூபிக்க மட்டுமே வீண் நேர விரயம் செய்வார்கள்..
இவர்களின் தொடர் மிரட்டலால் அலுத்து போன அலுவலர்களோ துணையோ, சலிப்புடன் விலகிக்கொள்வார்கள்.. இதனால் இறுதியில் அதிக சந்தேகமும், அதிக பொறாமையும் அதனால் அதிக கோபமும் மட்டுமே விளையும்...
ஆரம்பத்தில் தன்னோடு கூட இருந்து தமக்கு ஆதரவளித்தவர்கள் தன் வீரத்தை மெச்சியவர்கள், விலக விலக , இன்னும் அதிக ஆளுமை காட்ட கூட இருந்தவர்களையே மிரட்ட ஆரம்பிப்பார்கள்..
கிட்டத்தட்ட ஒரு மனநோய் அளவுக்கு அவர்களின் ஆளுமை பாதிக்கப்பட்டிருக்கும்..
வரம்பு மீறிய , முறைகேடான , கெட்டவார்த்தை பேச்சின் மூலமாவது அல்லது வதந்தி கிசுகிசு மூலம் கவன ஈர்ப்பு செய்து பின்பு அந்த ஆளுமையை தக்க வைக்க போராடுவார்கள்...
அவர்களின் சுற்றமும் அப்படியே அமைவது ஆச்சர்யமல்ல..
ஆக அமைதியாக இதை எதிர்கொள்ளும் துணையோ அலுவலரோ , எத்தனை அமைதியானவரானாலும் , பண்புள்ளவரானாலும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் இவரது செயல்களை வெளிக்கொணருவார்..
தண்டனை வழங்கினால் மட்டுமே திருத்த முடியும் என ஆசிரியர்/பெற்றோர் கூட தண்டிப்பதுமுண்டு தாங்க முடியாமல்..
ஆக தாங்க முடியாத ஆளுமை அதிகாரம் எத்தனை பொறுமைசாலியையும் கோபம் கொள்ள செய்யும்...எத்தனை தான் விலகி நின்றாலும்..
அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியர் பெற்றோர் மேலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல் , " இந்த முறை அடங்கி போகிறேன்.. ஆனால் மீண்டும் என் ஆளுமையை நான் காண்பித்தே தீருவேன் " என தன்னையே புரிந்துகொள்ளாமல் தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவதுண்டு..
மற்றொரு வகையினர் உண்டு.. இவர்கள் மென்மையானவர்கள் தான்.. நியாயமானவர்களும்.. பள்ளியிலோ அலுவலகத்திலோ , வீட்டிலோ மிக பொறுமையாக , தாழ்ச்சியோடு அனுசரித்தே போகிறவர்கள்..
இவர்கள் தொடர்ந்து சிலரால் எரிச்சலூட்டப்படும்பொழுது , மட்டுமே தன் ஆளுமையை காண்பிப்பர்.. அதில் வெற்றியும் பெறுவர்..
" என்னடா இவரை ரொம்ப பண்பானவர், அமைதி னு எண்ணினோமே, இப்படி வெகுண்டெழுந்தாரே " னு ஆச்சர்யப்பட வைக்கும் அவரது செயல்கள்..
இது நேர்மறையான ஆளுமை அல்லது அதிகாரம்.. முற்றிலும் ஏற்ககூடியதே.. உதாரணமாய் , எப்பவுமே தன் அம்மா வீட்டுக்கு போக பிரியப்படாத துணை ஒரு முக்கிய விஷயத்துக்காக போகணும் னு சொன்ன போது ஏதாகிலும் முட்டுகட்டை போட்டால் , மிக நிதானமாய் கிளம்பி ஊருக்கு பயணிப்பார்..தன் ஆளுமையை காண்பித்து..
எப்போதும் மனைவி பேச்சை கேட்கும் துணை, திடீரென மனைவி பேச்சை மீறி தன் நண்பரையோ , அல்லது பிடித்த பொழுதுபோக்கவோ செல்வது..
சமத்தா எது கொடுத்தாலும் சாப்பிடும் குழந்தை பிடிவாதமாக ஒருநாள் சாப்பிட மறுப்பது...
இது போன்ற நேரத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தே ஆகணும் புரிந்துகொண்டு... அதுமட்டுமல்ல ஒருவரின் குணத்தை , போக்கினை முழுதுமாக மற்றொருவர் மாற்ற முடியாது என்பதையும் இதனால் புரிந்துகொண்டோமானால் , சகிப்புத்தனமையும் அனுசரிப்பும் வந்துவிடும்..
அதைவிட்டு ஒரளவு நியாயமாக யாருக்கும் தொந்தரவில்லாதவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் நாமும் அதிகாரத்தை கையிலெடுத்தால் அது விபரீதமாக முடியக்கூடும்...
ஆக ஆளுமையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு... ஆனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போதே பாதிப்புகள் அதிகம்...
இதில் சக்தி தேவையற்று வீணடிக்கப்படுகிறது..
இதுபோல் பல்வேறு நாட்டில் பல்வேறு அடிமைத்தனம் மூலம் பார்த்திருப்போம்..
பொதுவா தமிழ்நாட்டில் பெண்ணடிமை, கீழ் சாதி , பணக்காரன் ஏழை இத்யாதி...என்ற வித்யாசம் மூலமும் இதை நடைமுறைப்படுத்தியவர்கள் உண்டு.. இவை இப்ப வெகுவாக குறைந்தும் வருகிறது என்பது நல்ல விஷயம்..
அடுத்து பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..
படம் நன்றி : கூகுள்
Subscribe to:
Posts (Atom)