Tuesday, October 26, 2010

திரில்லர் மலை /தீவு பயணம்.. - 4-------------------------------

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 330 கிமீ தூரம் அமைந்துள்ளது கோ சாங் ( KO CHANG) என்ற தீவு.. , திராட் ( TRAT ) மாநிலத்தில்..சாங் என்றால் யானை என்று அர்த்தம்..

கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் , படகு பயணமும் சேர்த்து.. காரிலேயே படகில் தீவுக்கு செல்லும் வசதி உள்ளது..


கம்போடியாவின் பார்டர் அருகில் அமைந்துள்ள இத்தீவு தாய்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய தீவு புக்கெட் ( Phuket ) க்கு அடுத்ததாக..

வெள்ளி மணற்கடற்கறைகளும், நீர்வீழ்ச்சிகளும், பவளப்பாறைகளும் , மழைக்காடுகளும் பசுமை மாறாமல் காட்டுலாகாத்துறையினரால் மிக அருமையாக பராமர்ரிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாவுக்கு மிக சிறந்த இடம்..

கிட்டத்தட்ட 5000 குடியிருப்புகள்...

ஸ்நார்கெலிங் , ட்ரெக்கிங் , டைவிங் , விரும்பிகளுக்கு ஏதுவான இடம்..யானை மேலே ஆற்றில் பயணம் , காட்டு மரங்கள் பயணம் போன்ற அட்வென்சர் விளையாட்டுகளும்..

http://www.treetopadventurepark.com/

http://www.koh-chang.com/banchangthai/INDEX.HTM


http://www.kohchangbookingandinformation.com/Koh_Chang_elephant_ride_Trek_jungle.asp


திரில் விரும்புபவருக்கு சொர்க்கம்.. ( மலைப்பாதையில் வண்டி ஓட்டுவது மிக ரிஸ்கான விஷயம்.. அதுவும் நாங்க சென்றது இரவு நேரம் , மழையில் )

வழக்கம் போல இரவு நேரம் களை கட்டுது கடற்கரை..பாடல் ஆடலுடன்..

http://www.koh-chang.com/

தங்கும் விடுதிகளின் விலையும் அதிகமில்லை.. .. இணையம் மூலம் முன்பதிவு செய்யலாம்..

அனேக இடங்களில் ரோட்டின் மேலேயே ஆற்றின் நீர் ஓடுகிறது.. அங்கேயே இறங்கி குளிக்கவும் செய்கிறார்கள் .. அத்தனை தெளிவான சுத்தமான நீர்..

275 சதுர கி.மீ உள்ள தீவை சுற்றி பார்க்க மோட்டார் பைக்/சைக்கிள் வாடகைக்கும் எடுக்கலாம்..சில இடங்களில் காரின் சக்கரம் மண்ணில் சிக்கினால் தள்ளவும் வேண்டும்.. ஆங்காங்கே மலை உச்சியில் வியூ பாயிண்ட் வைத்துள்ளார்கள்.. மேகத்துக்கு நடுவே சாரலில் நனைந்தபடி சுற்றியுள்ள இடங்களை பார்ப்பது பிரம்மாண்டம்..கூடவே அதிகளவு கழிப்பிடங்களும் வசதியாக சுத்தமாக உள்ளது..

திரும்பும் வழியில் பத்தயாவில் தங்கி வரலாம்..

அடுத்து சந்தபுரி மாவட்டத்தில் உலக புகழ் மிக்க ஜெம் கற்கள் விற்பனை செய்யும் இடம்.. அனேக இந்தியர்கள் அங்குதான் வாங்குவதுண்டு...

http://www.khulsey.com/jewelry/gems_thailand.html

அங்கேதான் சுமார் 275 வருடம் பழமை வாய்ந்த தேவாலயம் Cathedral of the Immaculate Conception இருக்கின்றது..


http://thailand-cathedral-catholic.blogspot.com/2009/06/immaculate-conception-cathedral.html


அங்கேயே பல நீர்வீழ்ச்சிகளும் ..கட்டணம் வாங்கிக்கொண்டு பராமரிப்பதால் மிக பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளது.

http://www.naturethai.net/National-Park-in-Eastern-Thailand/Namtok-Phlio-National-Park.html

http://www.thailandbethere.com/Provinces/ENG/Files/Chanthaburi/EG_Phlio_Waterfall.htm


அடுத்த முக்கிய இடம் அலையாத்தி காடுகள் , அவை சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகள்...குங் க்ரபேன் பே ( Kung Krabean Bay )

http://www.google.co.th/images?hl=en&biw=1280&bih=834&gbv=2&tbs=isch:1&aq=f&aqi=&oq=&gs_rfai=&q=kung%20krabaen

http://iluvthailand.wordpress.com/2008/01/29/mangrove-forests-at-kung-krabaen-bay/அடுத்து குழந்தைகளுக்கான விளையாடும் இடமான ஒயாசிஸ் சீ வேர்ல்ட்.. டால்பினோடு குளித்து விளையாடி மகிழலாம்..


http://www.laemsing.com/23_oasis_sea_world_laemsing.html


http://www.swimwithdolphinsthailand.com/
எல்லாம் பார்த்து முடித்து வருவதற்கும் , மகனின் பள்ளி தோழர்கள் கூடைப்பந்து போட்டிக்கு வர சொல்லி விடாப்பிடியான அழைப்புகள்

வரவும் சரியாக இருந்தது..என்னமோ இவர் இல்லைன்னா மேட்ச்சே விளையாட முடியாத மாதிரி.. பில்டப்..

உலக மஹா அன்பையும் , ஐஸ் ஸையும் பொழிந்து இன்னும் 1 மணி நேரத்தில் பாங்காக் செல்லணும் என பத்தயாவில் சொல்ல ,

முதன்முறையாக 140 வேகத்தில் வீடு வந்து சேர்ந்து , உடுப்பு , ஷூ எடுத்துக்கொண்டு பள்ளி சென்று விட்டால் ,

" பரவாயில்ல நல்லாத்தான் ஓட்டுறீங்க " னு ஆணாதிக்கத்தோடு பாராட்டிய மகனையும் , அவன் தோழர்களையும் என்ன சொல்ல..?..:)

( பசங்களை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் , " முந்துங்க , முந்துங்க, இன்னும் வேகம் , லேன் மாறுங்க ,

போன்ற பேச்சுகள் இலவசம்... அதுவும் இங்கு மலைப்பகுதியில் கரணம் தப்பினால் மரணம்தான்.. மிகப்பெரிய லாரிகளை/கண்டெய்னர்களை லாவகமாய் கூட ஓட்டும் பெண்கள் அதிகம் இங்கே,.. )


ஆக தாய்லாந்து வந்தால் த்ரில்லோடு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் ... முக்கியமா இம்மக்களின் இனிதான உபசரிப்பும் சேவையும்....


படம் : நன்றி கூகுள்..

------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவு குறித்து , தனிமடலில் பாராட்டிய , நன்றி கூறிய , பல தகவலகள் தந்தவர்களுக்கு என் நன்றிகள்..

பாராட்டுக்காக நான் எழுதவில்லை.. " சகோதரி நாங்க சொல்ல தயங்கியதை நீங்கள் எடுத்துறைத்தமைக்கு நன்றிகள் " போன்ற கடிதங்களுக்கு நன்றி..

அதே போல எதிர்ப்பார்த்த சில திட்டு பின்னூட்டங்களும் , கேள்விகளும்..

இதை விவாதமாக்கி என்னை நிரூபிக்க போட்ட பதிவல்ல , எதிர்வினை மட்டுமே என புரியவும்...

இங்கு யாரையும் திருத்த வேண்டியது என் வேலையல்ல..நமக்கு உபயோகமான/கற்றுக்கொள்ள முக்கிய வேலைகள் இதை விட நிறைய இருக்கிறது..

ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதை சொல்லிச்செல்வோம் அவ்வளவே...


ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பலருக்கும் சமூகத்தின் மீதான அக்கறை கண்டு வியந்தேன்.. முக்கியமா இள வயதினர்... என் நன்றிகள்..


--------------------------------------------------------------------------------------------------------------------

Friday, October 22, 2010

உயி்ர்..மீட்க அவசர உதவி


அவசர உதவி. மீண்டும் ஒரு உயி்ர்..மீட்க வேண்டுமெனில்…


முழு விபரத்துக்கு ,

லிங்க் பார்க்கவும்..

http://www.narsim.in/2010/10/blog-post_22.ஹ்த்ம்ல்


-----------------------------------------


படம் : நன்றி கூகுள்


--

போர்னோ சேவை ஜாக்கி சேகர்..


சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் , துணிந்து களம் இறங்கணும்..

சாக்கடையை சுத்தப்படுத்த நினைத்தால் சந்தனம் தெறிக்காது.. நம் மேல் சாக்கடை தான் தெறிக்கும்..

ஆனாலும் இதுக்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததை துணிந்து குரல் கொடுக்கணும்..

திட்டிதிட்டியே வெறுத்து போவார்கள்..

இணையம் வந்து நான் வாங்காத திட்டுகள் / புரளி/புனைவு இனி ஏதும் இல்லை...:)

இதுவே ஒரு பலமாய் எடுத்துக்கொள்ளணும்..

எனக்கு மட்டும் தப்பாய் தெரியவில்லை , பல பதிவர்களுக்கும் ஆபாசமாகவும் , வக்கிரமாகவும் தெரிந்தது ஜாக்கியின் பதிவுகள்.

இப்படி பதிவு எழுதுபவர்கள் தங்கள் வீட்டு பெண்களையும் அதே போல நிலைமையில் வைத்து ரசிக்க அனுமதிக்கிறார்கள் என்றே சொல்லணும்.,.

எழுதுபவர் மட்டுமல்ல , அதை பார்த்து ரசித்து பின்னூட்டமிடுபவரும் , தன் வீட்டு பெண்களை அனுமதிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..

மாற்றம் கொண்டு வர நினைப்பவர்களின் பதிவை படியுங்கள்.. நம்மால் முடிந்த சிறு கல் எடுத்து வைப்போம்..

மட்டற்ற சுதந்திரம் என்பதற்காக நம் பிள்ளைகளை போர்னோ வலைகளை நாம் பார்க்க விடமாட்டோமே..?.

நல்ல பதிவுகளை எழுதுவோம் , எழுதுபவரை ஊக்கப்படுத்துவோம் ..

பிரபல பதிவராய் இருப்பதை விட நல்ல படைப்பாளியாக இருப்பதே முக்கியம்.

மலர்களை சுற்றும் தேனீக்களை விட மலத்தை சுற்றும் ஈக்கள் அதிகம்தான்.. அதற்காக மலம் பெரிதாகாதே.. ?..

( கீழே உள்ள பதிவை படித்துவிட்டு வயற்றுவலி வந்தால் பதிவர்களே பொறுப்பு..:)) )1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_21.html


ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி2. http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html


பொறுப்பற்ற ஒரு பிரபல பதிவர்3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_9249.html


( போன பதிவில் இன்னும் பல கட்டுரைகள் ஜாக்கிக்கு எதிராக வந்தது ..இங்கே..

http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html.


ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))அதன் பின்னூட்டத்திலேயே ஜாக்கியின் வக்கிர ஆபாச கட்டுரைகளின் லிங் , மற்றும் படங்கள் உள்ளன.. அதை அனுமதிக்கலாமா என கருத்திடுங்கள்..ஜாக்கியின் ஆபாச பதிவுக்கு தொடுப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி.. கண்டிப்பதற்கே பகிரப்படுகிறது.. )

ஜாக்கிக்கு மட்டுமல்ல , வக்கிரமாக எழுதும் அனைவருக்குமே இது ஒரு பாடமாக அமையட்டும்..

பொது இடத்தை கழிப்பிடமாக ஆக்குபவர்களை தடுப்போம்...

இல்லையென்றால் பதிவுலகம் முழுதும் கழிப்பிடமாக மாறும் அவலம் வெகுதொலைவில் இல்லை..

இதுக்கு துணைநின்று துணிவாக தோள்கொடுப்பது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மை...

ஜாக்கி சேகருக்கு ஒரே நேரத்தில் பல்முனையிலிருந்தும் எதிர்ப்பு வந்திருப்பதே நல்லதொரு திருப்பம் பதிவுலகில்...

ஜெய் ஜாக்கி !

( நீண்ட தூர பயணம் இருப்பதால் வந்து வழக்கம்போல நல்ல பதிவுகள் தொடரும்..)..

படம் : நன்றி கூகுள்-----------

Thursday, October 21, 2010

ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))நான்
என்னமோ இவரை லோக்கல் னு சொல்லிட்டேன் னு ரொம்பத்தான் குதிச்சார்..:)

அதுவும் என் சாட் ல நான் பேசியது..

எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..

அதை கேட்க இவருக்கு என்ன உரிமை இருக்கு.?.. இவர் தனிப்பட்ட பேச்சுகளை பொதுவில் போடுவாராமா?..

நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் பதிவர்களே இவரின் வக்கிரம் தாங்க முடியாமல் பதிந்திருப்பதை பகிர்கிறேன் ..:))

( எல்லாத்துக்கும் சேர்த்து அவர்களே அருமையாக விளக்கி கலக்கிவிட்டார்கள் .. :) )

படிப்பதாலோ, படிக்காததாலோ ஒருவர் லோக்கல் ஆயிட முடியாது..

காமராஜர் படிக்காத மேதைதான்.. அவரும் ஜாக்கியின் வக்கிர ஆபாச எழுத்தும் ஒன்றா?..

உடனே முட்டி மோதி வரும் பின்னூட்டங்களை என்ன சொல்ல.?..------------------------------------------------------
1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_19.htmlஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.:)

---------

2. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_20.html

ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

------------------------------

3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_19.html

ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்
4. http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.htmlபிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்
பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,
---------------------------------------ஆதரவு தேடி பகிரவில்லை.. தன்னிலை விளக்கம் மட்டுமே..இதுக்கு http://jackiesekar.blogspot.com/2010/10/100.ஹ்த்ம்ல்

Wednesday, October 20, 2010

தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில் வெள்ள அபாயம்.ஏற்கனவே சில நாட்களாக வரலாறு காணாத வெள்ளம் பல மாவட்டங்களில் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர்..

இந்நிலைமையில் பாங்காக் நகருக்குள் வருடந்தோறும் கறைபுரண்டு செழிப்பாக ஓடும் மிக பிரமாண்டமான " சவ் பிரயா " ஆற்றில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..

அணைகள் நிரம்பி வழிவதால் இன்று மாலை 5 மணிக்கு எல்லாம் திறந்துவிடப்படும் நிலையில் பாங்காக் ஆற்றங்கரையின் அருகில் வசிக்கும் மக்கள் இந்த வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்..என்று அஞ்சப்படுகிறது..

தற்போது 2,333 கன மீ தண்ணீர் திறந்துவிடப்படுவதாகவும் இது 2,830 கன மீ ஆகும்போது நகரம் முழுதும் வெள்ளமயமாகும்..கரையோறம் வாழும் 1,273 குடும்பங்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள்..

40 லட்சம் மணல் பைகள் கொண்டு ஆற்றங்கரையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தூரிதமாக நடந்துகொண்டிருக்கின்றது..


படகு போக்குவரத்து முக்கியமான ஒன்று இங்கே.. நகரத்தின் அதிகப்படியான டிராபிக் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்கான வழி இந்த்தகைய படகு போக்குவரத்து.. இதுவும் நிப்பாட்டப்படும் வெள்ளம் வந்தால்...


( எங்கள் அடுக்ககம் ஆற்றின் கரையில் தான்..
காலையிலேயே இங்கு மழை வேறு.. மீண்டும் மழை வரக்கூடாதே என பிராத்தனை செய்யவேண்டியுள்ளது நிலைமை )


படம் : நன்றி கூகுள்..

சின்ன சின்ன தகவல்கள்,..
குழந்தையின் பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நாள் நேற்று..

உள்ளே சென்றால் நம்ம வீட்டு வாலு ,வரிசையில் ஜிம்னாஸ்டிக் வகுப்புக்கு சென்றார், பின்னால் கையை கட்டிக்கொண்டு..

டாடா காண்பித்தால் கூட கண்ணாலே பேசிவிட்டு புன்னகையை பொத்திவைத்துக்கொண்டு சென்றார்..

அதற்கப்புரமும் 1 மணி நேரம் ஆடிட்டோரியத்தில் பிரின்சிபால் பேச்சு , நம்ம ஃபீட்பேக் , காஃபி நேரம் எல்லாம் முடிந்து

அந்தந்த ஆசிரியரை சந்திக்கும் நேரம்.. அப்பதான் நம்ம கிட்ட குழந்தைகளை ஒப்படைக்கின்றார்கள்..

நாங்கள் பேச ஆரம்பிக்குமுன்பே ஆசிரியர் வருத்தப்பட ஆரம்பிக்கின்றார்..

" கிளாஸ் ஒர்க் எல்லாம் கச்சிதமா செய்வானே.. நீங்க கூட அவன் நோட்புக் பார்த்திருப்பீங்களே.. ஆனா பாருங்க , தேர்வில் தப்பு செய்திருப்பதை..:(( "

"பரவால்ல சார். நான் இந்த தேர்வுகளை பொருட்படுத்துவதில்லை.. தினமும் படிப்பதுதான் மிக முக்கியம் என ஆறுதல் சொல்லவேண்டியதாயிற்று..:)

முக்கியமா பையன் நடவடிக்கை , ஒழுக்கம் எப்படி இருக்கிறது என கேட்டபோது , ஆச்சர்யத்தோடு ( யாரும் இப்படி கேட்டதில்லையாம் ) " மிக கச்சிதம்.. ரொம்பவே ஒழுங்கும் பயமும் கொண்டவன்.." என சொல்லிவிட்டு நிப்பாட்டிவிட்டு சிரித்தார்.. " என்ன விஷயம் " என கேட்டதும், சிரித்துக்கொண்டே,

" சேட்டை செய்வதுக்கும் பெர்மிஷன் கேட்கிறார்.. அதாவது வகுப்பில் ஓட, விளையாட..."

நாங்களும் சிரித்துவிட்டு விளக்கினோம்.. அவன் இதுவரை அமெரிக்கன்/ப்ரிட்டிஷ் பள்ளியில் படித்ததும், அங்கு குழந்தைகள் பின்னால்தான் ஆசிரியர்கள் ஓடணும்.. குழந்தைகள் போக்கிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும் , எவ்வித கட்டுப்பாடுமின்றி இருக்கும்..பெயர் சொல்லி அழைப்பார்கள் ஆசிரியர்களை...:)

இப்ப புதிதாய் கட்டுப்பாடு உள்ள இந்திய பள்ளி என்றதும் சின்னவருக்கு புரியலை..

இருப்பினும் மகிழ்ச்சியாயிருந்தது... எல்லாம் பேசி முடிந்ததுமே ஆசிரியர் கேட்டார், " நீங்க தமிழா.?"

" ஆமா. சார்.. " .

எமக்கு அவர் தமிழ் என முன்பே தெரியும். இருந்தாலும் அதையும் அனுகூலமாக கொண்டு பொதுவில் பேசவேண்டாம் என நினைத்திருந்தோம்..

மதிய உணவில் காய்கறி அதிகம் சேர்த்து இறைச்சி தவிர்க்க சொன்னால் , ஆசிரியரே பரிதாப்பப்படுகிறார்.குழந்தைக்கு ஆதரவாய். என்னத்த சொல்ல..:)

இடையில் வகுப்பு ஆசிரியர் ஓடி வந்து " தயவுசெய்து பெர்ஃபியூம் போட்டு அனுப்பாதீங்க என கேட்டுக்கொண்டார்.. ".

எனக்குமே பிடிக்காதது .. பாவம்தான் ஆசிரியர்களும்.. விதவிதமான மணம் தலைவலி உண்டு பண்ணும்..

சீக்கிய பள்ளி.. தாளாளர் பேசுகையில் " நான் வளர்ந்ததெல்லாம் கிறுஸ்தவ பள்ளியில்.. அவர்கள் என்னை ஒரு நல்ல சீக்கியனாக வளர்த்தெடுக்க உதவினார்கள்.. ஆக நாங்க இக்குழந்தைகளை நல்ல இந்துவாகவும் , இஸ்லாமிய, கிறுத்துவ ,புத்தமதத்தவனாகவும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு உள்ளது " என்றார்..நன்று..

இந்திய பாரம்பர்யத்தை , கலாச்சாரத்தை , பண்பாட்டை கட்டிக்காக்கும் , லாபநோக்கில்லாத நகரின் மிகப்பெரிய பள்ளி என்றால் மிகையாகாது..

மொத்தத்தில் திருப்தியான சந்திப்பு..

-----------------------------------------------------------------------------------------------------------------------

பெரியவருக்கு கணக்கு டியூஷன் வைக்கணுமாம்.. பேரதிர்ச்சி...

ஊரில் உள்ள பிள்ளைக்கெல்லாம் நான் சொல்லி கொடுக்க ரெகமண்டேஷன் வருது.. ( ஏற்கனவே எடுத்துள்ளேன் தோழமைக்காக மட்டும் )

" ஏன் எனக்கு தெரியாத கணக்கா.. சொல்லு உடனே செய்திடலாம்.".. ( பெருமை பெருமை..)

" ஹ. எங்க சாருக்கே தெரியலை .. உங்களால முடியுமா..?"..( சவாலை பாருங்கள்..!! )

BP ஏறியதை சொல்லணுமா..?

Inverse matrix, Det, Cofactors...Algebra .. 10 நிமிடத்தில் படித்துவிட்டு 15 நிமிடத்தில் சொல்லியும் கொடுத்தாச்சு..

ஆனாலும் டியூஷன் போகணுமாம்..( ஒரு மணி நேரத்துக்கு 600-700 ரூபாய்..க்ர்ர்ர்ர்ர்ர்ர்)

இனி வேற வழியில்லை , பக்கத்தில் உள்ள அவன் வகுப்பு பையனை அழைத்து அவனுக்கு ஃப்ரீயா இனி சொல்லி கொடுக்கணும்னு முடிவு செய்திருக்கேன்.. ( என் அண்ணாகிட்ட என் பொறியியல் கல்லூரி வகுப்பு நட்புகள் கணினி கற்க வருவார்கள்.. நான் ஒருநாளும் கற்றதில்லை... வேறென்ன ஈகோதான்.. இப்ப நம்ம பசங்க நம்மகிட்ட காண்பிக்கிறாங்க.:)). )

-------------------------------------------------------------------------------------------------------------

தாய்லாந்து நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம்.. 50 ஆண்டுகள் காணாத தண்ணீர் , சேதம்...:(((

ஆனாலும் அரசும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உடனே சென்று சேவை செய்வதும் மீட்பு பணியில் ஈடுபடுவதும் நெஞ்சை நெகிழ வைக்கிறது...( 24 மணி நேர நேரடி ஒளிபரப்பு)

பல வாகனங்கள் முழுதுமாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும் மூழ்கியும்..

மலைப்பாம்புகள் கார் எஞ்சினில் அடைக்கலம் தேடி கிடப்பதும், வீட்டின் மாடியில் நிற்பவர்களுக்கு பொருள்கள் விநியோகிப்பதும், பார்க்கும்போது த்ரில்லர் படம் போல இருந்தாலும், அச்சூழலில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணிபார்க்கும்போது மிக வலிதருகிறது...


6 வயது குழந்தையிலிருந்து 90 வயதினர் வரை உற்சாகமாக பொருள்களை சேகரிக்க உதவுவதை, சேவை செய்வதை பார்க்கும்போது இம்மக்கள் மீது மதிப்பு பன்மடங்கு உய்ர்கிறது...நாமும் பங்கேற்கணும்னு ஆவல் வருது..

----------------------------------------------------------------------------------------------------------


பதிவுலகின் சலசலப்பும் அராஜகமும் அடங்கி ஓய்ந்தது.. அடாவடித்தனம் இனியும் செல்லுபடியாகாது என நிரூபிக்கப்பட்டுள்ளது...

இந்த களையெடுப்பில் இறுதிவரை துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி.. முக்கியமாய் வினவு தோழர்களுக்கு...


இனி ஒரு ஒழுங்கு வரும் பதிவுலகில்..


---------------------------------------------------------------------------------------------------------


படம் : நன்றி கூகுள்..


Friday, October 8, 2010

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்ச்சி -1கூகுள் பஸ் ல் பகிர்ந்த கருத்துகள் பலரை சென்றடைய இங்கே பகிரப்பட்டுள்ளது..

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்ச்சி கொடுக்கப்படணும்..

இதை அறிவியலே ஒத்துக்கொண்ட ஒன்று..

பலர் அறிய செய்யணும்..

http://technorati.com/lifestyle/article/stop-the-bullying-in-schools/
Edit

Bullying teenagers, especially gay teenagers or ones who are still questioning their identity, is becoming an epidemic.

வால்பையன் . - அடுத்து ஆடு, மாடுன்னு போவாங்க, அதையும் அறிவியல் ஒத்துக்கும், எய்ட்ஸ் மாதிரி புதுசா எதாவது வரப்போவுது பாருங்க!


jmm s - ஏன் இந்த பயம்.

குடுமியிலிருந்து க்ராப் வரும்போதும் , வேட்டியிலிருந்து பேண்ட் கு வரும்போதும் பயந்த மாதிரில்லா இருக்கு..

அறிவியல் ரீதியா ஓரின சேர்க்கையாளர்களின் மூளையானது ஒரே பாலினத்தோடு இணையவே அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது..


இது குறித்து அறிவுபூர்வமான விஷயங்கள் பலவற்றை நாம் தெரிதுகொண்டோமானால் அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும்..jmm s - ஆதரிப்பது என்பது வேறு புரிந்துகொள்ள முயற்சிப்பது வேறு..

பாலியல் தொழிலை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.. அதே போல் ஓரின சேர்க்கையையும்..

ஆனால் அதற்காக அவர்கள் ஒதுக்கப்படவோ, அவமானப்படுத்தப்படவோ கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்..

இதை ஒழிக்க முடியாது என்பதும் உண்மை..jmm s - ..homosexuality is neither a mental illness nor a moral depravity. It is the way a portion of the population expresses human love and sexuality" [2].


jmm s - scientist, Laura S. Allen made a similar discovery in the hypothalamus as well. She found that the anterior commissure (AC) of the hypothalamus was also significantly larger in the homosexual subjects than that of the heterosexuals [2]. Both Swaab's and Allen's results became a standing ground for the biological argument on homosexuality. The very fact that the AC and the SCN are not involved in the regulation of sexual behavior makes it highly unlikely that the size differences results from differences in sexual behavior. Rather the size differences came prenatally during sexual differentiation. The size and shape of the human brain is determined biologically and is impacted minutely, if at all by behavior of any kind.


jmm s - LeVay concluded the "homosexual and heterosexual men differ in the central neuronal mechanisms that control sexual behavior",

jmm s - A number of transsexuals do not like being labeled homosexual. To address this issue, one should distinguish sex from gender identity. A person with male sex who has a female gender identity and is attracted to men would self-classify as a heterosexual because he believes that he is a woman. However, the standard conceptualization of a homosexual is based on biological sex, not gender identity. If this person seeks to look like a woman, then at best he can be made to look more feminine via sex reassignment surgery (SRS) and cross-hormone treatment, not become a woman as in someone with a female sex. This person's legal sex may change, but the biological sex doesn't. Hence, the person described is a homosexual.


jmm s - he believes that he is a woman.

--------


இதுதான் உண்மை..jmm s - [[ Parents of gay teens: accept your children, love and support them, embrace them for who they are. You are their first line of defense and you might make all the difference in saving their lives.]]

Needs a lot of Courage..

Read more: http://technorati.com/lifestyle/article/stop-the-bullying-in-schools/page-2/#ixzz11jgkvm6W


வால்பையன் . - //he believes that he is a woman.//

எல்லா ஹோமோவும் அப்படியல்ல!
வழுகட்டாயமாக ஆண்களை ரேப் செய்யும் ஹோமோக்களும் இருக்குறாங்க!

லிங்க் கொடுத்தா போதுமா, விளைவுகள் என்னான்னு தெரிய வேண்டாமா!?
எனது ப்ளாக்கில் ஓரினசேர்க்கைன்னு டைப் அடிச்சி தேடிப்பாருங்க!


jmm s - வழுகட்டாயமாக ஆண்களை ரேப் செய்யும் ஹோமோக்களும் இருக்குறாங்க!

----------

மிக சரி.. இது ஹோமோவில் மட்டும் இல்லையே இந்த மிருக குணம்..

Sexual abuse/Violence எல்லா வகையினரிடமும் உள்ளது...jmm s - எனது ப்ளாக்கில் ஓரினசேர்க்கைன்னு டைப் அடிச்சி தேடிப்பாருங்க!

--------

படிக்கிறேன்..

முடிந்தா இங்கே பகிர்ந்தால் பலரும் பயனடையலாமே...jmm s - விளைவுகள் என்னான்னு தெரிய வேண்டாமா!?

---------

நிச்சயம் . விளைவுகள் குறித்து நான் ஓ.சேக்கள் அதிகமானால் ஏற்படும் விளைவு குறித்தும் விவாதித்துள்ளேன்..

ஓ.சேக்கள் என ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தடை இருக்க கூடாது என்பதே என் கருத்து...

அவர்கள் அடுத்த பாலினத்தாரை திருமணமும் செய்து வைக்க கூடாது...

இப்படி இரு பக்கமும் யோசிக்க வேண்டியிருக்கு..வால்பையன் . - //ஓ.சேக்கள் என ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தடை இருக்க கூடாது என்பதே என் கருத்து... //

அது அவர்களது விருப்பம்!

ஓரினசேர்க்கை எல்லாரிடமும் உடல் ரீதியான மாறுதல் என்பது தவறான புரிதல், ஹாஸ்டல் போன்ற அதிக சிறுவயது ஆண்கள் கூடியிருக்கும் இடங்களில் உணர்ச்சி வேகம் காரணமாக ஆண்களுக்குள் புணர ஆரம்பிப்பார்கள், பின்னாளில் எதிர்பால் இனக்கவர்ச்சி குறைந்து அவர்கள் ஹோமோக்களாக மாறக்கூடும்!

ஒரினசேர்க்கையை சுயஇன்பத்திற்கு சமமான ஒன்றாக எடுத்து கொள்வது என்றாலும் அதன் விளைவுகளை கருத்தில் கொண்டு, உடல்ரீதியான பிரச்சனை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து!

ஓரினசேர்க்கையை நான் குற்றமாக கருதவில்லை, அறியாமையாக கருதுகிறேன்!, நமது உறுப்பு ஒவ்வொன்றிற்கும் இயற்கை அர்த்தம் வைத்திருக்கிறது, செக்ஸ் விசயத்தில் அதன் பெயரே இனப்பெருக்க உறுப்பு, அதை விட்டு நான் இனப்பெருக்கம் பண்ணமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி!

மனிதனை அழிக்க மனிதனே போதும் போலயே!


jmm s - ஓரினசேர்க்கை எல்லாரிடமும் உடல் ரீதியான மாறுதல் என்பது தவறான புரிதல், ஹாஸ்டல் போன்ற அதிக சிறுவயது ஆண்கள் கூடியிருக்கும் இடங்களில் உணர்ச்சி வேகம் காரணமாக ஆண்களுக்குள் புணர ஆரம்பிப்பார்கள், பின்னாளில் எதிர்பால் இனக்கவர்ச்சி குறைந்து அவர்கள் ஹோமோக்களாக மாறக்கூடும்!


--------------

ஓரளவு சரி.. இதேதான் ராணுவத்திலும் ஏற்படும் காரணம்..இவர்கள் மாறக்கூடும்.. நீங்க சொல்லும் கவுன்சிலிங் இத்தகையவருக்கு சரியே..

ஆனால் இதையும் மீறி எதிர்பாலினம் கிடைக்க வாய்ப்பிருந்தும் ஓ.சே வாக இருக்க விரும்புவது மூளையின் செயல்பாட்டின் காரணமே...

ஆக அவர்களை நாம் கட்டாயப்படுத்தி இனப்பெருக்கம் செய்யவோ இல்லற வாழ்வில் ஈடுபடுத்துவதோ தவறு..என்கிறேன்..jmm s - ஓரினசேர்க்கையை நான் குற்றமாக கருதவில்லை,

-
நன்று.. சரியே.
---------
[[ அறியாமையாக கருதுகிறேன்!, நமது உறுப்பு ஒவ்வொன்றிற்கும் இயற்கை அர்த்தம் வைத்திருக்கிறது, செக்ஸ் விசயத்தில் அதன் பெயரே இனப்பெருக்க உறுப்பு, அதை விட்டு நான் இனப்பெருக்கம் பண்ணமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி! ]]

இனப்பெருக்க உறுப்பு என்பதால் இனப்பெருக்கத்துக்கு அது மட்டும்தான் முக்கியம் என்பதுதான் தவறு..

மனமொத்த பின்பே காமம்.. அதனோடு தொடர்புடைய இனப்பெருக்கம் இருக்கணும்...என்கிறேன்..

ஒசேக்களால் உலக இனமே அழிந்து விடக்கூடிய வாய்ப்புள்ளது என நினைக்க வேண்டாம்...


திருநங்கையை நாம் ஏற்றதுபோல் இவர்களையும் நம்மைப்போல் சாதாரண மனித இனமாக ஏற்கலாம்...


வால்பையன் . - //மனமொத்த பின்பே காமம்.. அதனோடு தொடர்புடைய இனப்பெருக்கம் இருக்கணும்...என்கிறேன்.. //

நாமும் ஒரு மிருகம் என்ற நிலையில் இருந்து யோசிச்சு பாருங்க! மனம் ஒத்த பின்பு காமம் என்பதெல்லாம் காத்தில் பறந்து போயிரும்!, பத்தே நிமிசத்தில் செக்ஸுக்கு ரெடியாகும் அதுவாது முன்பின் பார்த்திராத தொழில்முறை அல்லாத ஆண், பெண் இருக்கிறார்கள்!

திருநங்கைகளும் நாம் இயற்கைக்கு செய்த தவறே, நாமே தப்பு பண்ணிட்டு ஏத்துக்கலைனா எப்படி!, இரண்டு பேரின் ஜீன்களும் கலந்து தான் குழந்தையின் ஜீன்! நாம் உண்ணும் உணவு கூடிய விரைவில் மனித இனத்தை மலடாக்கும் என்பது அறிவியல் கருத்து!, அதற்கு முன் ஆவன செய்ய வேண்டும்!

திருநங்கைகள் குரோம்சோம் குறைபாடு உள்ளவர்கள் என்பது தெரியும் தானே!, அதுவே பரிணாம மாற்றத்தின் படிகட்டு!jmm s - நாமும் ஒரு மிருகம் என்ற நிலையில் இருந்து யோசிச்சு பாருங்க! மனம் ஒத்த பின்பு காமம் என்பதெல்லாம் காத்தில் பறந்து போயிரும்!, பத்தே நிமிசத்தில் செக்ஸுக்கு ரெடியாகும் அதுவாது முன்பின் பார்த்திராத தொழில்முறை அல்லாத ஆண், பெண் இருக்கிறார்கள்!


-------------

சரியே.. ஆனா இவர்கள் இனப்பெருக்கம் செய்ய தயாரா உடனே?..

இனப்பெருக்கம் செய்ய ஒரு பெண் தயாராகணும்னா முதலில் அவளுக்கு அவன் மேல் நம்பிக்கை வரணும்.. ஷாலினி சொன்ன ஆல்பா ஆண்களை தேர்ந்தெடுப்பாள்.. செக்யூர்ட் லைஃப் அமையுமான்னு யோசிப்பா..

ஆனா உடல்பசி சார்ந்த காமத்தை மட்டுமே சொல்வீர்களானால் ஏற்கிறேன்...

அது மிருகத்தை ஒத்ததே...jmm s - திருநங்கைகளும் நாம் இயற்கைக்கு செய்த தவறே, நாமே தப்பு பண்ணிட்டு ஏத்துக்கலைனா எப்படி!, இரண்டு பேரின் ஜீன்களும் கலந்து தான் குழந்தையின் ஜீன்! நாம் உண்ணும் உணவு கூடிய விரைவில் மனித இனத்தை மலடாக்கும் என்பது அறிவியல் கருத்து!, அதற்கு முன் ஆவன செய்ய வேண்டும்!

-----------------------

யோசிக்க வேண்டியது..

ஆனாலும் அதிக பயம் தேவையில்லை .. இதுகுறித்து ஒரு கட்டுரை படித்த நியாபகம்..jmm s - ஓ.சேக்கள் நீங்க சொன்னது போலும் உருவாக காரணம் உண்டு..

சூழலும், ஜெனடிக் முறையும் கூட..

Miscellaneous Correlations

Fraternal birth order. The probability that a man has homosexual preference increases with the number of older brothers he has. Each older brother increases the odds by 1/3 – 1/2. This effect cannot have a genetic basis. Speculations for this effect focus on the mother progressively building antibodies against an unknown male protein, more so with each son.

Finger length ratio. The ratio of the index finger to the 4th finger is higher in women than men. In people with homosexual preference, there is a tendency for the ratio to be lower than in heterosexuals of the same sex. By this criterion, homosexuality is associated with overmasculinization.

Childhood gender non-conformity. Children that fail to conform to standard childhood gender roles (such as ‘tomboy’ girls and effeminate boys) have a higher incidence of adult homosexuality than children that conform to standard gender roles. This kind of study is difficult to do properly (prospectively). The danger of doing this kind of study retrospectively, after sexual preference is already known, is that there will be a biased tendency to selectively recall instances of childhood behaviors that fit the adult outcome.

Otoacoustic emissions (OAE). Our ears actually make sounds, though they are too weak to hear by ear. They have a characteristic frequency, starting in early childhood. The right ear’s OAE is different from the left ear’s, and males differ from females. A UT researcher (Dennis McFadden) is finding that gay males have slightly different OAE frequencies than heterosexual men. The direction of the difference supports an overmasculinization of gay men.

Neuroanatomy

There is a strong temptation to think or hope that a behavioral difference as strong as the difference between homosexual and heterosexual preferences will have a physical manifestation in the brain. There is an increasing number of techniques that can be performed non-invasively on a live person, but many of the most direct assays, and those that can be applied to microscopic regions of the brain, require actual brain material. There are obvious difficulties in obtaining sufficient material for those studies, and work repeating any findings work is rare. Studies have reported the following, but one should not consider any of the patterns as demonstrated beyond reasonable doubt.

Interstitial nucleus of the Anterior Hypothalamus #3. In 1991, Simon LeVay reported a search for sexual preference differences in the size (volume) of 4 brain nuclei in a brain region known as the anterior hypothalamus. Work on rodents had demonstrated that this brain region affected sexual behavior, and work on humans had already identified a male-female difference in tiny regions or ‘nuclei’ of the anterior hypothalamus. LeVay found a difference between heterosexual and gay men in one of these nuclei (#3); the size of INAH3 in gay men was similar to that of (heterosexual) females and smaller than that of heterosexual men.
வால்பையன் . - இனபெருக்கத்தை தடுக்கும் ரப்பரெல்லாம் வந்தது இப்போ!

உடல்பசி, காமம் என்றெல்லாம் எப்படி தனியா பார்க்க முடியுது உங்களால்!
சாப்பிடுறோம், அதற்கான தூண்டுதல் பசி!

அதே போல் தான் இனபெருக்கத்திற்கான தூண்டுதல் காமம் அல்லது உடல்பசி!

மனிதன், இரண்டு காலில் பேசி கொண்டே நடக்கும் மிருகம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!jmm s - மனிதன், இரண்டு காலில் பேசி கொண்டே நடக்கும் மிருகம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!

-----------------
ஆனால் அவை உலகம் அழிவது பற்றியோ ஒசேக்கள் , ஓசோன் ஒட்டைகள் பற்றியோ கவலைப்படுவதில்லையே...

ஏன் நாம் மட்டும்?..

( விலங்கினத்திலும் , பறவைகளிலும் ஒசேக்கள் உண்டு..கூடுதல் விபரத்துக்காக )jmm s - இனபெருக்கத்தை தடுக்கும் ரப்பரெல்லாம் வந்தது இப்போ!

உடல்பசி, காமம் என்றெல்லாம் எப்படி தனியா பார்க்க முடியுது உங்களால்!
சாப்பிடுறோம், அதற்கான தூண்டுதல் பசி!

அதே போல் தான் இனபெருக்கத்திற்கான தூண்டுதல் காமம் அல்லது உடல்பசி!

-----------------------

இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை வால்பையன்..

நான் சொல்வதெல்லாம் விலங்கினம் போல இனப்பெருக்கம் திட்டமிடாமல் நடப்பதில்லை...

ஆக ஓசேக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்துக்காக விரும்பாத துணையோடு இனப்பெருக்கம் செய்ய வேண்டியதில்லை .

உலகில் திருமணமாகாதவர்களே இல்லையா?...

இல்லை ஆகியும் குழந்தை பெறாதவர்கள்.?

ஆக ஒசேக்களை அவர்கள் விருப்பபடி விட்டுவிடுவோம்... என்கிறேன்..

அவர்களுக்கு தேவையான உரிமைகளை வழங்கிடுவோம்..சட்டப்படி திருமணம் நடத்தட்டும்.. அந்த ஒப்பந்தத்தை இருவரும் மதிக்கட்டும்.. இது அரோக்கியமான விஷயம்..

அதே தான் பாலியல் தொழிலாளிகளுக்கும்...என் கருத்தும்...

சில விஷயங்கள் நம் சக்திக்கு மீறி நடப்பவை...இயற்கை விளை( னை)யாட்டு

அதை ஏற்றுகொள்ளணும் என்கிறேன்..jmm s - பாருங்க முன்னேறிய அமெரிக்காவிலேயே ஒசே என்ற கேலி தாங்க முடியாமல் இளைஞன் தற்கொலை செய்துள்ளான்..

எத்தனை ஓசேக்கள் நம்மில் என யாராவது கண்டுபிடிக்க முடியுமா?.. ஆனால் கேலி பேச முடியும்....

(S)He is a Gay / Lesbian என்று யாராவது சொன்னால் , So what என்று கேட்கும் நாகரீகம் அடையணும்...

அது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்...

-----------------------------------------------------------------------------------------

தகவலுக்கு :
http://allpsych.com/journal/homosexuality.htmlhttp://www.homosexinfo.org/Psychiatry/Transgenderism


இங்கு படித்து பார்க்கலாம்..


நன்றி : வால்பையன்..


படம் : நன்றி கூகுள்..

Thursday, October 7, 2010

திட்டோ திட்டு..சிறுகதை...
காலங்காத்தால எழுந்ததும் சுப்ரபாதம் கேட்குதோ இல்லியோ , நடராஜன் சார்வாள் வீட்டிலேருந்து காட்டு கத்தல் கேட்கும்.

வேற ஒண்ணுமில்ல மூத்த பிள்ளையாண்டான் பகத்சிங் மேல அம்புட்டு பாசம்.

அதிலேயும் தினமும் மறக்காம சொல்வது " உனக்கு போய் பகத்சிங் பேர வேச்சேனடா.."

இவன் கேட்டானா அந்த பேரை வைக்க சொல்லி... இல்ல பகத்சிங் மாதிரி வீரத்தை காண்பிக்க சுதந்திர போராட்டம் தான் இருக்கா என்ன?..

இப்படி மனசுக்குள்ளேயே கேள்வியும் கேட்டுக்கொண்டு சிரித்து வைப்பான்..

சில நேரம் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தால் வாந்தி எடுப்பது போல் பாவனை செய்துகொண்டு பின் கட்டில் போய் விழுந்து விழுந்து சிரித்து வைப்பான்..

கூடவே அம்மாவும் , தம்பி , தங்கையும் வந்திடுவதுமுண்டு..

அப்பத்தான் கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் அவனுக்கு.. சத்தமா சிரிக்காதீங்கன்னு நிஜமாவே கோபப்படுவான்..அவர்களிடம்..

என்னடா இவனை புரிஞ்சுக்கவே முடியலை னு அலுத்துகொண்டு செல்வார்கள்..

வழக்கம் போல இன்னிக்கும் ஆரம்பிச்சார் அப்பா..

" டேய் எலக்ட்ரிக் பில் கட்ட சொன்னேனே .. இன்னும் கட்டலியா.?.. நீயெல்லாம் எதுக்குத்தாண்டா இருக்க.. தண்டமா..?"

சத்தம் கேட்டதுமே , முதல் அலாரமாய் போர்வையை விலக்கி மணி பார்த்தான்.. சரிதான் 6.45.. அப்பா மார்க்கெட் க்கு போய்ட்டு வந்துட்டார்..போல..

15 நிமிடம் கழித்து..

" அடேய் , அறிவு இருக்கா உனக்கு.. இன்னிக்கு நேர்காணல் இருக்கே . மறந்துட்டியா?.. "


அட 7 மணி ஆயிடுச்சா.?..என எழுந்து உட்கார்ந்தான் சோம்பல் முறித்துக்கொண்டு...

அடுத்த 15 நிமிடத்தில்....

" ஏண்டா கணினி மேசையில் என்னத்த தான் வெக்கிறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?.."

வெச்சது சின்னவன்.. ஆனா திட்டுவது இவனைத்தான்..

" 7.15 ஆயிடுச்சா..." பல் துலக்க போனான் பகத்சிங்.

" ஏங்க நீங்க கிளம்புங்க . நேரமாச்சு... " அம்மா..

" பெரியவன திட்டினா உனக்கு பொறுக்காதே.. சின்னவன பாரு அவன் வேலைய ஒழுங்கா செய்யுறான்.."

படிக்கும்வரை பெரியவனுக்கும் அளவாதான் இருந்தது திட்டு, இப்ப 3 மாசமா வேலை இல்லாமல் இருப்பதால் திட்டும் கோட்டா கூடிவிட்டது.

சின்னவன் அப்பாவின் முகத்தை நேரா பார்த்தான் ஒருமுறை.. அதாவது "என்னை ஒண்ணும் சொல்ல தேவை இல்லை " என்பது போல..

பெரியவனை திட்டுவது போல சின்னவனை திட்ட முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்...

அதனால் அடக்கி வாசிப்பார்...சின்னவனிடம்...

"ஏண்டா அந்த பைக் துடைத்து வைக்க சொன்னேனே .. ஒரு அப்பாவுக்கு இந்த உதவி கூட செய்ய கூடாதாடா.?.

உங்களுக்காக மாடா உழைக்கிறேனே...%#%^$%&*^%*(^^...... " ஆரம்பித்துவிட்டார். முழு கச்சேரியை...

ஆஹா 7.45 ஆயிடுச்சா... இனி குளிக்க போயிடணும்... னு நினைத்து கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்று பாட ஆரம்பித்தான்..

" நான் இவ்வளவு கத்துறேன்.. அவன் காதுல போட்டுக்காம பாட்டு பாடுறான் பாரு..."

" ஏங்க அந்த புள்ள பதில் பேசினா , எதிர்த்து பேசுறான் னு திட்டுவீங்க.. பேசாட்டியும் திட்டுறீங்க.. என்னமோ போங்க.." அம்மா..

" ஏண்டி எனக்கென்ன ஆசையா.. திட்டிகிட்டே இருக்கணும்னு..அவனுங்க நல்லதுக்குத்தானே சொல்றேன்..எனக்கெதிராவே வளர்த்து வை...

சரி சரி..சாப்பாடை எடுத்து வை..."

குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதி இட்டு வந்தான் பகத்சிங்...

" இந்த பக்திக்கொண்ணும் குறைச்சலில்லை..." சொல்லிட்டே மூக்கில் சிந்தியிருந்த விபூதியை துடைத்தும் விட்டார்.. முகத்தை மறக்காமல் உர்ர்ர் என வைத்துக்கொண்டே..

" டேய் நேர்காணல் நடக்கும் இடத்துக்கு எப்படி போக போற.?."

" பஸ் ல தான் பா."

" ஏன் என்னை கூட்டிட்டு போனா மதிக்க மாட்டாங்களோ.?"

வாந்தி வருவது போல கையை வாயில் வைத்து அடக்கிக்கொண்டான்... வேறு பக்கம் திரும்பி.. தோசை போட வந்த அம்மாவோ தோசை போடாமல்

உள்ளே போய்விட்டார்..சிரித்துக்கொண்டே..

" கெளம்பு டா. சீக்கிரம் . போற வழியில இறக்கி விடுறேன்."

" இல்லப்பா நான் பஸ் ல..." முடிக்குமுன் ,

" ஏய் வெளங்காதவனே.. நேர்காணல் னா சொன்ன நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்னால அங்க இருக்கணும் தெரியுதா?.. என்கூட வர

இஷ்டமில்லன்னா ஆட்டோல யாவது போய் தொலை அப்ப..இந்தா 200 ரூபாய்..."

' 100 ரூபாய் போதும் பா..."

" திரும்பி வர உங்க தாத்தாவா தருவார்..கடனா வெச்சுக்கடா.. சம்பாதிச்சதும் வாங்கிக்கிறேன்..என்னமோ நான் கஞ்சன் மாதிரி ஊரெல்லாம் நினைக்க வெப்பீங்களே...."

சின்னவன் முறைத்தான்.. இப்ப அண்ணனையும் , அம்மாவையும் சேர்த்து...அண்ணனை திட்டிய கோபத்தில் சின்னவன் சாப்பிடாமலேயே போனான்..

----------------------------------------------------

நேர்காணல் முடிந்து சோகமா வீடு வந்தான் ..

" சரி விடுப்பா ..அவங்களுக்கு கொடுத்து வைக்கல உன்னை வேலையில் சேர்க்க.." அம்மா.

" இல்லம்மா வேலை கிடைச்சுடுச்சு..சென்னைக்கு போகணும் "

அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி... " நெசமாவாப்பா..?" அம்மா


" அப்புரம் ஏன் அண்ணா , வருத்தம்.. ஜாலியா கொண்டாடிடுவோம்..." சின்னவன் கணினி விட்டு எழுந்து வந்தான்...

" இல்லடா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...அப்பா பத்தி"

" என்னண்ணா.இனி அவர் தொல்லை உனக்கு இருக்காது ..திட்டமாட்டார்.. தப்பிச்சுட்ட.எஞ்சாய்..."

" இல்லடா... அதான் என் கவலை.. நம்ம அப்பா ரொம்ப நேர்மையானவர் டா. அதிக பாசக்காரரும்.. சின்ன வயதிலேயே தன்னோட அம்மாவை இழந்து

அப்பாவோட கண்டிப்பிலே வளர்ந்து அத்தைமார் இருவரையும் கரை சேர்த்த அயர்ச்சி அவருக்கு... ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்டா..வாழ்க்கையில்...

இப்ப இவர் பதவியிலும் நேர்மையா இருப்பதால் பல தொந்தரவுகள்.. அந்த எரிச்சலையெல்லாம் தான் கோபம் போல என்னிடம் கொட்டி தீர்ப்பார்..

சர்க்கரை வியாதி வேறு அப்பாவுக்கு..அதனால் அவர் என்னை திட்டும் ஒவ்வொரு முறையும் எனக்கு அவர் மேல் பரிதாபமாய்தான் இருக்கும்..

இனி அவர் என்னை திட்ட முடியாதே.. தயவுசெய்து எனக்கு பதிலா அந்த திட்டுகளை நீ வாங்கிக்குவியா டா தம்பி.?.. அதுமட்டும் இல்லடா, அப்பா கிட்ட

திட்டு வாங்கி வாங்கி யார் திட்டினாலும் சிரித்துக்கொண்டு சகிச்சு போகும் பழக்கம் வந்தது.. அதனாலேயே எனக்கு நிறைய நட்புகளும்..தெரியுமா டா..".

சிரித்துக்கொண்டே சொன்னான்...

கேட்டுக்கொண்டிருந்த அம்மா, தம்பி, தங்கை மூவர் கண்ணிலும் கண்ணீர்...

பேச வார்த்தையின்றி மெளனமாயினர்.. சின்னவன் மட்டும் அண்ணா கை பிடித்து சம்மதம் சொல்லிவிட்டு


" அண்ணா நீ உண்மையிலேயே வித்யாசமான வீரன் பகத்சிங் தான் ணா.பொறுத்து போவதும் ஏற்றுக்கொள்வதும் வீரம்தான் ன்னு நிரூபிச்சுட்ட..."

சொல்லிவிட்டு அழுகையை மறைக்க உள்ளே சென்றான்..

வீடு அமைதியானது...


உள்ளே நுழைந்தார் அப்பா..

" என்ன எழவு வீடு மாதிரி இருக்கு... இன்னிக்கும் உன் மகன் பல்பு வாங்கிட்டானா ..?" கிண்டலோடு வண்டியை நிப்பாட்டினார்...

அம்மா, தம்பி, தங்கையிடம் " ஏதும் சொல்லாதீங்க " என கண் காட்டிவிட்டு , கடைசி முறையாக அப்பாவிடம் ஆசையாக திட்டு வாங்க தயாரானான் பகத்சிங்..படம் : நன்றி கூகுள்

Wednesday, October 6, 2010

மதமும் மனித உறவுகளும்..3

மதத்தால் என்னென்ன பலன்கள் என போன பதிவில் பார்த்தோம்..

http://punnagaithesam.blogspot.com/2010/10/2.html

எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே.. அதேதான் மதப்பற்றுக்கும்..

மதப்பற்று மத வெறியாகும் போதுதான் பிரச்னைகள் தலைதூக்குவது..

இதிலும் அதிக பயந்த சுவாபமுள்ளவர்கள் , நல்லது கெட்டதை சிந்தித்து ஆராய முடியாதவர்களே பலியாக்கப்படுகின்றார்கள்

மத பெயரை சொல்லி..

மதம் என்பதை ஒரு நிறுவனம் போலாக்கி வியாபார நோக்குடன் செயல்படுவது..ஆள் சேர்ப்பது..

இப்படி செய்யாவிட்டால் , சேராவிட்டால் பாவம், பழி என பயமுறுத்துவது...

உதாரணத்துக்கு , ஒரு கூட்டத்தினர் சிலர் , " ஏன் பொட்டு வைத்திருக்கிறாய்.. பொட்டை அழித்துவிடு . அது கடவுளுக்கு உகந்ததல்ல "

என பொய் சொல்லி , மிரட்டல் விடுவது..

இதை கேட்கும் சில அப்பாவிகள் குழம்பி போவதுண்டு..

இதை செய்தால் சொர்க்கம் , செய்யாவிட்டால் நரகம் என்றும் பயமுறுத்தியே காரியம் சாதிப்பது..

சில புத்திசாலிகள் , இதுவே நரகம் தான் இதைவிடவா பெரிய நரகம் ஒன்று இருக்க போகிறது என்று சொல்லி தப்பிப்பார்கள்..

ஆக இந்த மாதிரியான புரளிகள் பயன் ஏதும் தராது நீண்ட நாளுக்கு...மக்களை ஏமாற்றமுடியாது..

அடுத்து , மதப்பற்றின் காரணமாய் அதீத நம்பிக்கையால் சிலர் மருத்துவரிடம் கூட செல்ல மாட்டார்கள்..

குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாத பெற்றோரைக்கூட பார்த்துள்ளேன்..

குழந்தை கடும் வயற்றுப்போக்கோ, காய்ச்சலிலோ இருக்கும்போதும் , குழந்தையை கிடத்தி விடிய விடிய ஜெபம் செய்வதும் பாட்டு பாடுவதும், விபூதி பூசுவதும் , பேய் ஓட்டுவதும்...

இவர்களை இவர்களின் செயல்களை பார்த்தாலே கோபம் வரும் .. வரணும் நமக்கு...

கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது நல்லதுதான்.. ஆனால் அதீத நம்பிக்கை மூட நம்பிக்கையாகிவிடும் அபாயம் இருக்கே....

இது எப்படியென்றால் நீச்சல் தெரியாமல் ஆழத்தில் குதித்து கடவுளே காப்பாத்து என்பது போல...

பாவம் கடவுளுக்கு வேற வேலையே இல்லை ..

இத்தகைய மூட நம்பிக்கையைத்தான் வேறோடு களையப்படவேண்டும்...

மருத்துவத்தையும், மருத்துவரையும் படைத்ததும் இறைவந்தான்.. நமக்கு அறிவையும் கொடுத்து நமக்கான பாதையை தேர்ந்தெடுக்க சொன்னதும் அதே இறைவன் தான்...

இறைவன் என்பதே கற்பனை என்றாலும் , ஒருவேளை நிஜம் என்று வைத்துகொண்டால் ,அவனுடைய மக்கள் மேல் அவனுக்கு பாரபட்சம் இருக்க முடியுமா?..

இந்துக்கள் சாமிக்கு படைத்ததை ஒரு கிறுஸ்தவனுக்கு தந்தால் , அதை சாப்பிட்டால் இறைவனுக்கு கோபம் வந்துவிடுமா?..

தீட்டு என்ற ஒன்றை அப்ப ஏன் அந்த இறைவன் படைக்கணும்,.?

சாமிக்கு படைத்ததை அந்த இறைவனுக்கு கொடுத்தால் அவரே வாங்கி உண்ணக்கூடும்.. இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும் .? . பாரபட்சமற்றிருப்பதே முதல் தகுதி அல்லவா?..மத பாகுபாடு மனிதனுக்குத்தான்.. இறைவனுக்கு இருக்க முடியாதே.. கூடாதே..


ஒரு தாயானவளே மற்றொரு குழந்தை மேல் அதே போல பாசம் கட்ட முடியும் போது நம் அனைவரையும் படைத்த இறைவனால் நம் கற்பனைக்கு எட்டாத அளவல்லவா நேசிப்பு இருக்கும்..?

ஆனால் நம் மக்கள் / மத பரப்பிகள் பலர் இறைவனை ஒரு ஹீரோவாகத்தான்

காண்பித்தார்களே தவிர , எல்லா மனிதரையும் , அவர் எப்படியிருந்தாலும் நேசிக்க கூடிய நல்லவராக அல்ல..

அதனால்தான் வந்தது குழப்பம்..

அடுத்து இறைவன் பெயரால் நடக்கும் போர்கள்...ஏதோ ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அதை திரித்து தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு ,

அப்பாவிகளை அந்தபோரில் ஈடுபடுத்தி அதை புனிதப்போர் என பெயரிட்டு... !!!!.


நாம் கவனிக்க வேண்டியதெல்லாம் , உலகின் மிகச்சிறந்த சேவைகளும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன...

அதே போல் உலகின் மிகக்கொடிய செயல்களும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன...


நாம் அனைவருமே பிறக்கும்போது மிருகத்துக்குண்டான அனைத்து குணநலன்களோடும் தான் பிறக்கிறோம்.. எப்படி பட்டை தீட்டப்படுகிறோம் என்பதில்தான் நாம் வித்தியாசப்படுகின்றோம்.. அதுக்கு மதம் ஒரு நல்வழிகாட்டி அவ்வளவே..

மதத்தின் கடமை , தனி மனிதனை சுற்றப்படுத்தி அவனின் மிக சிறந்த குணங்களான , அன்பு , கருணை , பகிர்தல், உதவுதல், இரக்கப்படுதல் , போன்ற

அனைத்து நற்குணங்களையும் வெளிக்கொணர்வதாக இருக்கவேண்டும்...

மொத்தத்தில் தனி மனித ஒழுக்கத்தினை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்..

விவேகானந்தரின் என்ன சொல்கிறார்?..

அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.இதை நாம் இயற்கை சீற்றத்தின் போதும் சுனாமி , பூகம்பம் , எரிமலை ,புயல் , வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற பல அழிவுகளின் போதும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மனிதன் இன்னொரு மூலையில் இருக்கும் சக மனிதனுக்கு மதத்தின் பெயரால் செய்த உதவிகளின் போது உணர்ந்துள்ளோம்...ஆக மனிதாபிமானம் இல்லாத மனிதனில்லை..

மாறாக சில இடங்களில் என்ன நடக்குது.?

மதத்தின் பெயரால் , மனிதனையே தற்கொலை குண்டுகளாக மாற்றி, அழிவை நோக்கி ஆக்ரோஷமாக வழிநடத்தப்படுகிறான்..அவனின் சிந்திக்கும் திறன் முழுவதையுமே இழக்க வைக்கப்படுகிறான்...

அடுத்து மதத்தில் இணைந்திருப்பதால் நாம் மெளனியாகத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்ற ஒரு தப்பான அபிப்ராயம்.

தப்புகள் நடந்தால் நமக்கெதுக்கு வம்பெல்லாம்.. எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்,.. அவர் தண்டிப்பார் என கண்டுகொள்ளாமல் செல்வது ,

பொறுத்து போவது , தியாகம் செய்வது..., குற்றவாளி என தெரிந்தும் மன்னித்து விடுவது...

இது ஒதுங்குதல் , பிரச்னைகளையே புறக்கணித்தல்... இவர்கள் என்ன சொல்லி தப்பிப்பார்கள் தெரியுமா?.

" எல்லாம் அவன் செயல்.." .." நம்ம கையில என்ன இருக்கு..? " ... " எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்குத்தான் நடத்துவார் கடவுள் ." என..

இவை மத பார்வையில் ஓரளவு தவறல்ல என்றாலும் இதன் பாதிப்புகள் சமுதாயத்தில் அதிகம் இருக்கும்..

இறைவனால் எல்லாம் செய்ய முடியும் என்றால் சட்டம் எதற்கு, அரசாங்கம் எதற்கு, நாம் உழைப்பது எதற்கு.?

கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பது வேறு.. கடவுள் மீது கண்மூடித்தனமான பக்தி செலுத்துவது வேறு..

இப்படி மதத்தையும் சட்டம் ஒழுங்கையும் போட்டு குழப்பிக்கொள்வர் சிலர்..

பல்லாண்டுக்கு முன் ஒரு மதத்தில் பல தார திருமணம் சரி என சொல்லப்பட்டிருக்கும்..

அதற்கும் சில வலுவான காரணங்களும் உண்டு என்பதையும் நாம் அறிந்துள்ளோம்..

ஆனால் அதையே இன்னும் பிடித்துக்கொண்டிருந்து பொறுத்துக்கொண்டிருந்தால்..?

எந்த ஒரு மதமும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளரணும்.. அதுதான் மக்களை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தவும் ஒரு சுமூக சூழலை உருவாக்கவும் முடியும்..


கிறுஸ்தவ மதங்களிலும் ஆரம்பத்தில் கருத்தடை செய்துகொள்ளக்கூடாது என சட்டம் இருந்தது..

அதனால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்த பின் இப்ப அந்த தடை நீக்கப்பட்டிருக்கு,..

இதுபோல லெஸ்பியன் , கே திருமணங்கள் , பாலியல் சார்ந்த விஷயங்கள் என பல விஷயங்களை மதம் ஆராயணும்...

மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதன் அல்ல... கடவுளுக்கும் மதம் கிடையாது..:)மதத்தால் இங்கு யாருக்கும் பிரச்னையில்லை.. மத சம்பந்தப்பட்ட வாழ்க்கை முறையில் தான் பிரச்னை...

ஆக அதிகமாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் மதத்தினை காப்பாற்ற வேண்டி நடவடிக்கை எடுக்கணும்..

------------------

தொடரும்..


படம் : நன்றி கூகுள்..

Monday, October 4, 2010

மதமும் மனித உறவுகளும்..2
கடவுள் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை .

எதன் மீது.?

இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட , வியக்கத்தக்க ஒரு சக்தியின் மீது..


ஏன்.?

ஏனெனில் அந்த மஹா சக்திக்கு மட்டுமே எல்லாவற்றின் தலையெழுத்தையும் மாற்றும் வல்லமை இருப்பதாக நம்புவதால்..


ஆக இந்த நம்பிக்கையை பரப்பிட ஒரு நிலையம் , பொது நோக்கத்துக்கான அமைப்பு , நிலையான ஏற்பாடுடைய ஒழுங்கமைப்பு முறை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது தான் ஒவ்வொரு மதமும்..
ஆக ஆரம்பத்தில் ஒரு சின்னமாக ( சூரியன், சந்திரன் , நெருப்பு, ஆறு போல ) ஆரம்பித்த இந்த கடவுள் பக்தி வளர்ந்து உருவம் அற்ற நிலைமைக்கு , அல்லது உருவம் தர இயலா நிலைமைக்கு வந்துள்ளது..

எது எப்படியோ இத்தகைய பக்தியால் மனிதன் தன்னை பற்றியே ஆராய , சிந்தனை செய்ய பின், நல்வழிப்பட பயன்படுத்திக்கொண்டான்.. மொத்ததில் தான் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சமூக சூழலை உருவாக்கினான்..
அவை எப்படி உதவியாய் இருந்தது என ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

1. மதம் ஆன்மீக வளர்ச்சிக்கு , ஞான உபதேசத்துக்கும் வித்திடுது..


ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மிக உதவியாய் இருப்பது மதம்தான்..வியக்கத்தக்க ஒரு சக்தி மனித பலத்தினையும்மீறி இருப்பது உறுதிப்படுத்தப்படுவதோடு , நிச்சயமாக்கப்படுகிறது..ஆக ஆன்மீக தேடல் ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவனது வழி வருவோருக்கும் வளர்ச்சிப்பாதையையே அமைத்து தருகின்றது..ஒரு ஆன்மீகவாதியின் நிம்மதியை , மகிழ்ச்சியான வாழ்க்கையை காண்பவர் தாமும் அதே பாதை சென்றால் தனக்கும் அதே நிம்மதி கிடைக்கும் என்பது இதுதான்..


2. உளநலம் சிறப்படைகிறது..


ஒரு மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட நலம் எப்போதும் நல்ல வளர்ச்சியிலேயே உள்ளது...அதனால் அந்த தனிமனிதனை பின்பற்றுவோருக்கும் மன நலம் நன்றாகவே உள்ளது..நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பலம் படுத்தப்படுவதால் /வலுவூட்டப்படுவதால் உள நலத்துக்கு மிக உதவியாய் இருக்கின்றது..ஒருவரின் உள நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும்..


3. மதம் ஒரு நல்ல ஊடகம் , சாதனம் , நட்புக்கு.


எம்மதம் என்றாலும் பிராத்தனைக் கூட்டமோ ,ஒன்று கூடுதலோ ஒரு மிக சிறந்த நட்பு வட்டத்தை ஏற்படுத்தி தருகின்றது..ஒருவரின் பிரச்னை நேரம் பல ஆலோசனைகள் உதவிகள் கேட்காமலேயே தரப்படுகின்றது.. மனிதனின் அத்தியாவசிய தேவைகளை கூட இக்கூட்டம் பகிர்ந்து அளித்து உதவி இன்புறுகிறது... பொது நல சேவைகளை முன்னின்று நடத்தவும் ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கை உடையவராக மாற்றவும் இந்த நட்பு வட்டம் பெரிதும் துணை நிற்கிறது... மனிதனுக்கு செய்வது காண முடியாத அந்த இறை சக்திக்கு செய்வதாய் எண்ணச்செய்து மகிழ்ச்சியை தருகின்றது ....


4. ஆக்கபூர்வமான வேலைகளை ஊக்குவிக்கின்றது..

பிராத்தனை மூலமும் , பாட்டுக்கள் மூலமும், பிராத்தனை கூடங்களை சுத்தப்படுத்தும் செயல்கள் , அலங்காரப்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் பலரது படைப்புத்திறன் வெளிக்கொணரவும் கூட்டவும் முடிகிறது..இசையில் நாட்டமுள்ள ஒருவர் தன் திறனை இலவசமாக மேம்படுட்த்திக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது..இப்படி உருவான இசை அமைப்பாளர்களையும் நாம் அறிவோமே..அதே போல சிறு தொழில்கள் , கற்பித்தல் போன்ற பல நல்ல செயல்களை செய்ய பழக்கப்படுத்துகின்றது.. திறமைசாலிகளை உருவாக்கி சமூகத்துக்கு மிக உபயோகமாய் இருக்கின்றது...5.மனிதனின் இக்கட்டான நேரத்தில் அவனுக்கு துணிவை தருகிறது

மத நம்பிக்கை ஒருவனின் கெட்ட , துன்பமான நேராத்தில் ஒரு பிடிமானம் தருகின்றது.. அவன் நம்பிக்கை வைக்க ஒரு மதம் தேவைப்படுகின்றது .. அந்த நம்பிக்கையே அவனுக்கு தேவையான ஊக்கத்தையும் , பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியத்தையும் , தெம்பையும் தருகின்றது அவன் சோர்வடைந்துவிடாமல்..எத்தனையோ நீதிக்கதைகளும் , பிரச்னைகளையும் அவைகள் தீர்க்கப்பட்ட விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்கிறான்..மத நட்புகளின் ஆறுதல் , உதவி பெறுகின்றான்.. துணிவோடு எதிர்கொள்கிறான் மீண்டும் இந்த வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறான்..நம்பிக்கையோடு..அதுமட்டுமல்லாது மற்றவருக்கு துன்பம் நேருகையில் தனக்கு கிடைத்த ஆறுதலை , உதவியை திரும்ப அளிக்கின்றான்.. நன்றியோடு..


6. ஆழ்ந்த துக்கத்திலிருப்பவனுக்கு பரிவு தருகின்றது

தனிமையிலிருக்கும் ஒரு மனிதனுக்கும், பல்வேறு கவலையிலிருப்பவனுக்கும் உதவிடுது..தங்களின் மிக நெருங்கிய ஒருவரின் இழப்புக்கு பின் பலரின் மத நம்பிக்கை அதிகரித்துள்ளது.தனிமைப்பட்டிருக்கும்போது ,துன்பம் அடையும் போதும் மதமும் மத வசனங்களும் , பரிவு காட்டி அவர்களை அத்துன்பத்திலிருந்து மீள வழி செய்துள்ளது..பூரண அமைதியை தருகின்றது.. கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தருகின்றது...


7.. ஒருவரின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது..


மனிதனின் உடல்நலம் மத நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு இன்னும் அதிகமாய் மேம்பட உதவுது..ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, வழி முறைகளையோ பின்பற்ற ஆரம்பித்த பின் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிரூப்பதாய் ஆராய்ச்சிகள் சொல்கிறது..உடல் நலமில்லாவிட்டாலும் தம் உடல் விரைவில் நல்லபடியாக தேறும் என்ற நேர்மறை எண்ணம் மத நம்பிக்கையுள்ளவருக்கே அதிகம் இருக்கின்றதாம்...அந்த நேர்மறை எண்ண அலைகளே பலருக்கு ஆச்சர்யமூட்டும் , அதிசயிக்கும் வகையில் நலமும் தந்துள்ளதாம்..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆக இப்படி பல்வேறு நலன்கள் மதங்களில் இருப்பதனால் தான் இத்தனை ஆண்டுகள் இன்னும் மதம் அழியாமல் பின்பற்றப்பட்டுவருகின்றது...
இல்லையென்றால் இந்நேரம் மதத்தால் ஏற்பட்ட பிரச்னைகளால், போர்களால் எப்பவோ அழிந்து போயிருக்கக்கூடும்..


மதம் பின்பற்றாதவர்களெல்லாம் மோசமானவர்கள் என்று அர்த்தமில்லை..அதே போல மதம் பின்பற்றுபவரெல்லாம் நல்லவர்கள் என்றும் அர்த்தமில்லை.. அது அவரவர் வளர்ப்பு சூழலும் காரணம்..

நாம் இங்கே பார்ப்பது மத நம்பிக்கை உள்ளவனுக்கு மதம் எவ்வாறு உதவியாய் இருக்கிறதென்றே..


அடுத்து மதத்தால் ஏற்படும் நேர்மறை எண்ணம் , ஞானம் பற்றி அலசுவோம்..


----------------------------------------------------------------------------


தொடரும்...


படம் : நன்றி கூகுள்

------------------------

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மடல் இங்கே பகிற்கிறேன் அவரின் அனுமதியோடு..


மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.
--------------------------------------------


வணக்கம் மேடம்

சாந்தி தெரு பதிவு எதேச்சையாக எங்கள் தெருவில் நடந்த சம்பவத்தை நகைச்சுவை கலந்து எழுதிய பதிவு. உங்களை புண்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. முதலில் எனக்கு பதிவுலகில் யாரையும் தெரியாது. தெரிந்தவர் பகலவன் மட்டுமே. அவர் சொல்லித்தான் இப்போதுதான் உங்கள் பெயர் சாந்தி என்பது எனக்கு தெரியும்.

அந்த பதிவு எழுதும் போது சத்தியமாக உங்கள் பெயர் எனக்கு தெரியாதுங்க.

உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.

Really Sorry ....


--
yalini

jmms: இந்த மன்னிப்பை நான் பொதுவில் போடலாமா யாழினி அவர்களே..?.

yalini : சரிங்க..போட்டுக்கோங்க..

--------------------------

சாந்தி (சண்டை) தெரு http://yohannayalini.blogspot.com/2010/09/blog-post_9927.html

என்ற பதிவு பற்றி..

யாழினி உங்க பெருந்தன்மைக்கு என் வாழ்த்துகளும் பாராட்டும்..

நன்றி யாழினி.

யாழினியின் மேலும் பல படைப்புகள்..http://yohannayalini.blogspot.com/


Friday, October 1, 2010

மதமும் மனித உறவுகளும்..1

மதமும் மனித உறவுகளும்..


உளவியல் ரீதியாக கட்டுரை எழுதும் வரிசையில் பல விஷயங்கள் படித்தாலும் எதை எழுதுவது என்று நான் கேட்டிருந்த நேரத்தில்

நண்பரொருவர், " மதங்களும் மனித உறவுகளும் " என்ற தலைப்பில் எழுத சொன்னார்..

இது குறித்து தமிழமுதம் குழுமத்திலும் பல விவாதங்கள் நடத்தியுள்ளோம் 1000 மடல்களுக்கு மேல்..பல்வேறு மதத்தினரோடு , பார்வையோடு..

ஆக இதை எழுதுவதே ஒரு மகிழ்வான செயல்...

நன்றி அந்த நண்பருக்கு..

-------------------------------------------------------
"Doubling the rate of religious attendance raises household income by 9.1 percent, decreases welfare participation by 16 percent from baseline rates, decreases the odds of being divorced by 4 percent , and increases the odds of being married by 4.4 percent."


மதம் என்பது நான் இங்கு பொதுவாக மட்டுமே உபயோகிக்க போகும் வார்த்தை..

வாசிப்பவர்கள் அவரவருக்கு பிடித்த மதத்தை ( கவனிக்க அவரவர் மதத்தை அல்ல ) பற்றி நினைத்துக்கொள்ளலாம்.

மதம் என்பது மனிதன் உருவாக்கியது.. கடவுள் என்பது கட்டுக்கதை என்று நினைப்பவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் பல உள்ளது..

கடவுள் என்பது கட்டுக்கதை, கற்பனையா.?. இருந்துவிட்டு போகட்டுமே..

அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை .?.. தீமைகள் யாவை.?

எது அதிகம் என அலசுவோம்...

கேள்விகளை தொடுத்தால் தான் மற்றவரின் மாற்றுப்பார்வையை புரிந்துகொள்ள முடியும்..மாற்றுக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்..

கேள்விகள் கேட்காமலேயே தங்கிவிடுவதுதான் தோல்வியின் ஆரம்பம்.. எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கணும் என்ற கட்டாயமுமில்லையே.

மதம் தாண்டி அறிவியல் வளர்ச்சி அப்படித்தான் ஏற்பட்டது.. இருப்பினும் மதத்துக்கு ஏன் இந்த முன்னுரிமை தரப்படணும்.? அதைத்தான் நாம் அலச போகிறோம்.

மதம் அடுத்து சடங்குகள் , பழக்கவழக்கங்கள் என அக்காலத்துக்கு ஏற்ப பல நல்ல விஷயங்களை எழுதியும் செய்தும் வைத்துவிட்டு போனார்கள்..

சிலது எக்காலத்துக்கும் பொருந்தும்.. சிலது எல்லா மாற்றத்துக்கும் உள்ளாகும்...

அடிப்படையில் எல்லா மதமும் நல்ல விஷயங்களையே சொன்னாலும், நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் ..

இங்கு நாம் அறைத்த மாவையே அறைக்க வேண்டாம்.. மதத்தால் ஒரு தனிமனிதன் அடையும் உயர்வு என்ன..?

சிலர் ஏன் மதத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.. மதப்பற்று கூட மத வெறி ஆவது ஏன்.. அவர்களை எப்படி கண்டுகொள்ள?..

நாளொரும் ஏனியும் பொழுதொரு வண்ணமுமாய் கண்டுபிடிப்புகள் அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு

பயங்காட்டிக்கொண்டு மூலையில் உட்கார வைப்பதை தடுக்கணும்..அது எந்த மதம் என்றாலும்.. ஆனால் அதுவும் மென்மையான வழியில் , புரியவைத்து மட்டுமே..

கோபர்நிக்கன், டார்வின் கோட்பாடுகள் மனிதனுக்கு இயற்கையில் ஒரு முக்கிய இடத்தை அளித்திருந்தாலும் , மனிதனை மையமாகக் கொண்ட , மனித இனத்தையே இயற்கையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற ,மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற .விஷயத்தில் அதிகமின்றி , தனிப்பட்ட சுதந்திரம் உள்ளவனாய் , சிந்திக்க வல்லவனாய் படைக்கப்பட்டுள்ளான்..

அப்படியானால் எல்லாம் எனக்கே எனக்காய் படைக்கப்பட்டிருந்தால் , எது என் மகிழ்ச்சியில் குறுக்கிடுது.. ஏன் ..?

இங்குதான் மதச்சார்பற்றவரின் பார்வைக்கும் மதப்பற்றுடையவனுக்கும் உள்ள வித்யாசம் என்னென்ன உண்டு என பார்க்க போகிறோம்..

முக்கிய விஷயம் இது எல்லோருக்கும் பொருந்தும் என்பதல்ல.. அனேகருக்கு..என்கிறது ஆராய்ச்சிகள்..

ஒருவரை அவமானப்படுத்துவதில் கூட இதை காணலாம்.. ம.பற்றுடையவர் எளிதில் அவமானப்படுத்தமாட்டார். அதே நேரம் அவமானத்தை எளிதில் மன்னித்து

மறந்தும் விடுவார்..ம.சா.அற்றவரின் ஆசைகளும் கற்பனைகளும் எல்லையற்றவையாக இருப்பதினால் அவரால் தொடர்ந்து உயிர் வாழ்தல் என்பதே மிக வெறுப்பானதாகவும் கசப்புக்குறியதாகவும், திருப்தியற்ற வாழ்க்கையாகவுமே எல்லாவற்றையும் கேள்விக்குறிய ,சந்தேகத்துக்குறியதாக மாறிவிடுகிறது..

மாறாக ம.பற்றுடையவருக்கு , எதிர்பார்ப்புகள் அளவோடு இருந்தும், முதிர்ச்சியான புரிதலோடும், ஏமாற்றங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளும் தன்மையோடும் இருக்க பழக்கப்படுத்தப்படுகிறான்.


இரக்கம் , கருணை , தயவு போன்ற விஷயங்களில் ம.பற்றுடையவரின் சிந்தனை மிக உயர்வாக இருக்கும்..இத்தகைய குணநலன் பாரபட்சமின்றி அனைவருக்குமானது , என்ற நல்ல எண்ணம் இருக்கும்..

இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதே அடிப்படை மனித நேயம் என்று எண்ணுவர்.இவர்களை பொறுத்தவரை மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்து , பாவத்தோடே வளர்ந்து அதை ஏற்கும் மனப்பக்குவம் அடைகிறான்..தவறுவது இயல்பாகிறதால் மன்னிப்பும் இயல்பாகிறது இங்கே..

மாறாக ம.சா.அற்றவருக்கோ, பிறக்கும்போது மனிதன் நல்லவனாய் பிறந்து சூழலால் கெட்டவானாய் மாறுகிறான் என்பதால் , இது அவனவன் தலையெழுத்து , அவனவன் மட்டுமே பொறுப்பு என்று எண்ணிடுவான்..ஆக இரக்கம், கருணை, தயவு , மன்னிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்..

ஆக ம.சா.அற்றவர் மனித குலத்தை இரண்டாய் பிரிக்கிறார்.

1. பாதிக்கப்பட்டவர்.

2. பாதிப்பு உண்டாக்குபவர்..

ஆனால் ம.பற்றுடையவருக்கு இத்தகைய பிரிவினை ஏதுமில்லை.. ஒன்றேதான் மனிதகுலம்..அது தவறு செய்யும் , திருந்தும் , பின் தவறு செய்யும்.. இதில் விதிவிலக்கென்ற பேச்சுக்கே இடமில்லை.. எல்லாருக்கும் இது ஏற்படும் யாரும் விசேஷமில்லை..

அதனால்தான் ம.பற்றுடையவருக்கு தன்னைப்போல் சக மனிதனை பார்க்க முடிகிறது,. நேசிக்க முடிகிறது.. ஏன் மன்னிக்கவும் முடிகிறது...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்னையே இல்லை.. நரகமா சொர்க்கமா என்றும் அதுக்கு பயந்த வாழ்க்கை என்றும் கூட அதிகமா எண்ண தேவையில்லை..

இந்த வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது..?. சக மனிதன் , நம்மை சுற்றி இருப்பவன் எல்லோருமே ஒற்றுமையாய் இருந்தால்தான் நம் மகிழ்ச்சி..

ஆக இந்த ஒற்றுமையை எப்படி கொண்டு வருவது.?

அதனாலேயே உருவாக்கப்பட்ட நீதி கதைகள்.. கட்டுப்பாடுகள்.. ஒழுக்கங்கள் என்ற விதிகள்..

எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் நீதி ஒன்றுதான்.. உன்னை போல அடுத்தவனையும் நினை..

எனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான , திருப்தியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணும் என்ற எண்ணத்தை நல்லதொரு மதமும் அதன் செயல்பாடுகளும் விளக்கும் விளக்கணும்..

இதில் சிலர் அரசியல் செய்தமையால் பலருக்கு வெறுப்பு ஏற்பட்டே மதங்களை வெறுக்கின்றனர்..

அது அவசியமேயில்லை..

எல்லா மதத்திலும் நல்ல விஷயங்கள் ஆராவாரமில்லாமல் அமைதியாக விளம்பரமின்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நல்வழிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன..

ஆக அதை நாம் பார்க்கவேண்டும்.. நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏதும் தடை செய்யவும் வேண்டாம்..

கண்டிக்கப்படவேண்டியதெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் மட்டுமே..

ஏனெனில் மதம் குடும்ப வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றது.. தனி மனிதனுக்கு அதிக பொறுமையை , தியாகத்தை கற்று தருகின்றது..

அதிலுள்ள இன்பத்தை சொல்லி தருகின்றது...சக மனிதனின் துன்பம் நம்மையும் பாதிக்க செய்கிறது..

ம.பற்றுடையவர் என்பதை விட ஆன்மீகவாதியால் சமூகத்துக்கு அதிக தொந்தரவு ஏற்படுவதில்லை..

ஆனால் ஆன்மீகம் பற்றி சிந்திக்காதவர் ( தன்னை பற்றி தன் பிறப்பு ஏன் என்பது பற்றியும் கூட ) எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைகொள்ளாமல், பிடிவாதமாய்

இருப்பதால் அதிகளவு தவறான நடவடிக்கையில் ஒரு வித வெறுப்பு மனப்பான்மையோடு நடந்துகொண்டு உலகையும் கெடுத்து வைப்பதாக சொல்கிறது ஆராய்ச்சிகள்..

இத்தகையவர்தான் ஆன்மீகவாதி என்ற போர்வையில் மறைந்துகொண்டும் மற்றவருக்கு தொந்தரவு தருவதும்..

ஒரு குழந்தை நல்லதொரு ஆன்மீக சூழலில் வளரும்போதே இத்தகைய நல்ல குணநலங்களை எளிதாக பெற்று வளர வைக்கப்படுவார்கள் ஆசிரியர்களால் ( அல்லது மத குருக்களால் )

நாம் ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாவிட்டாலும் வளரும் குழந்தைக்கு , புதிதாக உலகத்தை பார்த்து கேள்விகளோடு பிரமித்தும் , குழம்பியும் போயிருக்கும் குழந்தைக்கு

இத்தகைய ஆன்மீக கதைகள் , வகுப்புகள் அவர்களை நல்வழியில் வளர்க்க உதவிடும்..

உதாரணத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது தப்பு.,. அடுத்தவரை காயப்படுத்தும் என சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் எச்சூழலிலும் அதை சொல்வதை தவிர்க்கும்..

மாறாக தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடையும்.. அதை வைத்தே மற்றவரை மாற்றிடவும் செய்யும்...

இதை ஆன்மீகமற்றவரால் செய்ய முடியாதா என்றால் ஒருபோதும் முடியாது என்பதல்ல. அப்படியான ஒரு சூழல் உருவாக்குவது மதத்தால் செய்வது எளிது என்பதுதான்..

காதல் என்றால் கற்பனையை ஏற்றுக்கொள்ளும் நம்மால் , மனித குல மேம்பாட்டுக்காக ,ஒரு நல்ல விஷயத்துக்காக கடவுள், அதை சார்ந்த மத கதைகளை கற்பனைகளையும் ஏற்றுக்கொள்ளலாமே.?.முக்கியமா குழந்தைப்பருவத்திலாவது....

கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமாய் இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக தீங்கற்றது...வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது ..


மேலும் பல்வேறு கோணத்தோடு தொடருவோம்..
படம் : நன்றி கூகுள்..