சந்தித்த அற்புதமானவர்கள் திரு . ஜி அவர்கள்..
2 மணி அன்புடன் சந்திப்புக்கு வேக வேகமாய் கிளம்பியும் 5 மணிக்குத்தான் சேர முடிந்தது...
இதற்கிடையில் காந்தி அக்கா, சுரேஷ் அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்புகள்...
ஜி அவர்கள் காத்திருப்பதாக..
அவர்கள் சந்திப்புக்கு வருவார்கள் என்றே எனக்குத்தெரியாது...
மிக சங்கடமாய் போயிற்று... எவ்வளவு பெரிய மனிதர்..
காக்க வைத்துவிட்டோமே என்று...
அரக்க பரக்க ஓடி போய் கீதாஞ்சலி சேர்ந்தால், இங்கு அப்படி ஏதும் பார்ட்டி நடக்கவில்லை என சொல்லிவிட்டார்கள்..
கார் எங்கு பார்க் செய்யப்பட்டுள்ளது என தெரியவில்லை... ஓட்டுனர் தொலைபேசியும் பதிலில்லை...
குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு ஆட்டோ பிடிக்கலாம் என எண்ணும் நேரத்தில், நிலா வந்தார் பைக்கில்... இதே இடம்தான் மாடியில் என்றார்...பாவம் மீண்டும் மீண்டும் கேட்டு குழப்பினேன்...தேகி மாடியில்தான் இருக்கிறார் என்றதும் திருப்தி.....
கீதாஞ்சலி ஹோட்டலில் வேலை பார்ப்பவருக்கே விவரம் தெரியவில்லை... ஆச்சர்யம்தான்..
உள்ளே புகுந்து , பெட்டியையும் குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு படி ஏறினால்......
தெய்வீக களையோடு ஒருவர்,,. அருகில் சேகர் அண்ணாவும், விசாலம் அம்மாவும்...
விசாலம் அம்மாவை புகைப்படத்தில் பார்த்துள்ளதால் உடனே கண்டுபிடித்துவிட்டேன்...
ஆனால் சேகர் அண்ணா புதிது...
என் திணறலை புரிந்து கொண்டவர்களாய், புன்னகையோடு அறிமுகம் செய்துகொண்டார்கள்..
அந்த முகத்தில் அப்படி ஒரு தேஜஸ், ஒரு ஒளி...
பதின் வயது பாலகனின் உடம்பும், கள்ளமில்லாத முகமும்....தீர்க்கமான அறிவு பெற்றுள்ள நிறைகுடமான பேச்சும்.பார்வையுமாய்...
என் மகனை ஆசீர்வாதம் வாங்கச்சொன்னேன்... அவன் குனிந்து எழுந்ததும்தான் தாமதம், அந்த முதல் அதிர்ச்சியைத்தந்தார்..
உடனே அவரும் என் மகன் கால் தொட்டு நமஸ்கரித்தார்... ஒரு நிமிடம் என்ன நடக்கிறதென்றே புரியாமல் , பின் அதிர்ந்தேன்... அவரோ நிதானமாய்...
எனக்குள் படபடப்பு... .ஏற்கனவே காக்க வைத்த குற்ற உணர்ச்சியோடு இப்ப என் அகங்காரம் எல்லாம் தவிடுபொடியாக்கும் சம்பவமாய்.......
உடனே சேகர் அண்ணா,ஜி அவர்கள் கையில் எதையோ தர, அவர் எனக்கு அதை அளிக்க,
" ஏன் எனக்கு மிகவும் கனம் கொடுக்கிறீர்கள்.. இதெல்லாம் எதற்கு ஐயா " என நான் பதட்டமாய் கேட்க,
" திறந்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் ." என்றார்கள் புன்னகையோடு..
நானும் திறந்து பார்த்தேன் .அடுத்த இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது...
உள்ளே வெள்ளியிலான மிக அழகான சிலுவை ஒன்று...
என்னால் நம்பவே முடியவில்லை ...
நான் கிறுஸ்தவள் என்று அவருக்கு தெரிந்துள்ளது...
அவர்கள் என்னை சந்திப்பார்கள் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை...
நான் ஏதும் மறுமொழி கூற இயலாது என் வாயை அடைத்துவிட்டார்கள்..
ஒரு நிமிடம் என்ன செய்யணும்னு தோணாது நான் தாய்லாந்திலிருந்து கொண்டு வந்த கையடக்க சுவாமி சிலைகள்
எடுத்து தந்தேன்... மறுக்காது பெற்றுக்கொண்டு என்னை கெளரவித்தார்கள்...
சின்னவன் டேனி சீக்கிரம் காலில் விழ மாட்டான்.. அவனையும் ஆசீர்வதிக்க சொன்னேன்..
" அவன் என்னைவிட அழகாய் இருக்கிறான்.." என அந்த நேரத்திலும் நகைச்சுவையோடு சொல்லிவிட்டு
அவன் தலைமேல் கைவத்து தடவிவிட்டு புன்னகையோடு வெளியேறினார்கள்..
அப்படியே இன்னும் அந்த அதிசய காட்சிகள் கண்முன்னே பிரம்மிப்பாய்...
பின்னர்தான் அவர்களைப்பற்றி பல விஷயம் தெரிந்துகொண்டேன்... அவர்கள் இமயமலையில்தான் அதிக நாள்
இருப்பார்களாம்... சென்னையில் இருப்பது மிக குறைவாம்..
கடவுளுக்கு நன்றி.. இப்படி ஓர் அற்புத மனிதரை சந்தித்தமைக்கு...அந்த பாக்கியம் பெற்றமைக்கு...:)
4 comments:
அட, இதை இவ்வளவு நாட்கள் கவனிக்கவில்லையே, சாந்தி!
அருமையான பதிவு
அருமையான ஒருவரைப்பற்றி....
அட, இதை இவ்வளவு நாட்கள் கவனிக்கவில்லையே, சாந்தி!
அருமையான பதிவு
அருமையான ஒருவரைப்பற்றி....
தான் என்ற அகந்தை இல்லாத/மிகவும் குறைந்த மனிதர்கள் அற்புதமானவர்களே. நான் கண்டவரை மிக எளிமையானவர்கள் தான் நல்லவர்களாக இருகின்றார்கள் (எளிமையாக வேசம் போடுபவர்கள் அல்ல )
அகந்தை இல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை.
Layman said...
தான் என்ற அகந்தை இல்லாத/மிகவும் குறைந்த மனிதர்கள் அற்புதமானவர்களே. நான் கண்டவரை மிக எளிமையானவர்கள் தான் நல்லவர்களாக இருகின்றார்கள் //
நிஜம்.. எளிமையா இருப்பது எளிதல்ல.. உலகத்துக்காக வேஷம் போட்டே ஆகணும். இல்லை புறக்கணிக்கப்படுவோம்..
Post a Comment