Tuesday, November 6, 2007








கடைக்குட்டியின் கதை- பாகம் 1

-------------------------------------------

உதித்த அதிசயம்..

===============

பத்து வருடம் கழித்து,

பத்து மாதம் குடியிருக்க,

தவப்புதல்வனாம் தலைமகனின்,

இரண்டு வருட பிரார்த்தனைக்குபின்,

வேண்டுதலோடு ,அவதரித்தாய்..


பத்துமாதமென்ன பத்துவருடமாயினும்,

பத்திரமாய் தாங்கியிருப்பேன்!

.தலைக்குழந்தை கருவுற்றால்கணவரே தாயுமாவார்; புதிதல்ல!.

ஆனால் தம்பி வருவான் என்ற நம்பிக்கையில்,

என் தங்கமகன் நீயே எனக்கு தகப்பனானாய்.


அம்மா மருந்தெடுத்தீங்களா என ஒரு கண்டிப்பு!.

இனிப்பு சேக்காதீங்க டாக்டரிடம் சொல்வேன் என புன்சிரிப்பு!.

தம்பியோ?,தங்கையோ? பத்திரமாய் வரணும் என பரிதவிப்பு!.

அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியாத ஒரு பாதுகாப்பு!..


----------- தொடரும்..

search engine









யாரிவள்????????

===============
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.

எனக்கு ஒரு சந்தேகமா , குழப்பமா நீ இருப்பாய்.

வேலை பல இருந்தாலும், உன், நினைப்பு நீங்காது

கவலையோடு வந்தால் நொடிப்பொழிதில் செய்துகுடுப்பாய்..

என் புகழ் அனைத்தும் உன்னையே சேரும்.

உன்னைவிட்டு என்னால் இருக்கவே முடியாது....

ஆனால் உனக்கது பற்றி கவலையில்லை!.









தீபாவளி வெடிகள்!!!

=================
பென்சில் வெடியில் ஆரம்பித்து, சண்டையும் சரமாய் வெடித்துவிட்டது..

விருட்டென்று அலுவல் சென்றுவிட்டார் தடித்த வார்த்தையுடன்,

தனியே இவளும், அணுகுண்டாய் குமுறினாள், கடிதத்தில் திட்டிதீர்த்தாள்.

பேசவோ, அழவோ கூடாது இனி என வீராப்பு , வெறுப்புடன்,

உண்ணாமல் உறங்காமல் தரைசக்கரமாய் தன்னையே தண்டித்தாள்.


மாலைதிரும்பினார் வெடிக்காத புஸ்வானம் போல் காட்டிக்கொண்டு,

அழக்கூடாதுன்னு நினைக்கும்போதே வருது கண்ணீர் முட்டிக்கொண்டு,
பரிமார விடாது கைபற்றினார் முகம் பார்த்துக்கொண்டு.

ஒத்திகையனைத்தும் வீணாகுது மனம் இழக்கம்கொண்டு.


ஏறுவானேன் பின் இறங்குவானேன் ?.. என்னால் முடியாது

என முறைத்தாள் கடிந்துகொண்டு.

அதுதான் பெண்ணே உன் கவர்ச்சி , போற்றினான்

கண்களால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...


கடிதத்தை வாசித்து உன் அன்னைக்கு இதை அனுப்பவா??

என விளையாடினான் சிரித்துக்கொண்டு...

ஐயோ வேண்டாம் ! தடுத்த இரும்புக் கரங்களை

பிடித்துக் கெஞ்சினாள் மன்றாடிக்கொண்டு!!


வரட்டு கவுரவம், வீராப்பு தோல்வியோடு ராக்கெட்டாய்

வெளியேறியது பயந்துகொண்டு...

ஜெயித்தது நானே என காதல் மத்தாப்பாய்

சிதறியது வெட்கிக்கொண்டு.!








யாரிவன்???.
===========


மாட்டிக்கொண்டேன், இன்று..வசமாக..
பெரிய அழகனாயிருந்தாலும் என் கவலை அதுவல்ல.


உன் பார்வை சரியில்லை என்று எத்தனை நாள் விலகி சென்றேன்...
நீ இருக்கும் திசை கூட வரமாட்டேனே!.


எல்லாருக்கும் உன்னை பத்தி தெரியும்..

ஆனால் அவர்களுக்கு உன்னைப்பற்றி கவலையில்லை.


நீயும் அவர்களிடம் நல்லவன்போல் பாசாங்கு செய்கிராய்..

அவர்களுக்கு உறுதுணையாகி விடுகிறாய் சில சமயம்..


என்னை அப்படி முறைத்து பார்க்காதே!..

தாங்க முடியாது அழுதுவிடுவேன், அசிங்கமாயிருக்கும்!.


நான் போகும் பாதை குறுக்கே நின்று என்ன விளையாட்டிது?

இன்று ஒரு நாள் மட்டும் வழி விட்டு விலகிவிடு,


உனக்கு இன்று வேலையில்லை என்றால் எனக்கென்ன?

என்க்கு அலுவல் செல்ல வேண்டும் புரிந்துகொள்!...









பெத்த கடன்.


உன் பிஞ்சு பாதம் பட்டு என் நெஞ்சு நிறைந்தது அன்று.
என் அஞ்சு பேரப்பிள்ளைகளின் பாதம் வேண்டி நெஞ்சு வலிக்குது இன்று.
என் கல்லறையிலாவது வந்து ஏறிவிளையாடச் சொல்,காத்திருப்பேன் என்றும்!.