Wednesday, August 25, 2010

புனைவு எழுதுபவர் குறித்து...சட்டம்


இது தகவலுக்கு


திரவிய நடராஜன் ஐயா இத்தகைய புனைவு பற்றி

விரிவாக இங்கே எழுதியுள்ளார்கள்..

http://lawforus.blogspot.com/2010/07/blog-post_14.html


நன்றி-


பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.

சரி இப்பொழுது நமது கதாநாயகன் திரு கருப்பன் அவர்களின் திருவிளையாட லை பார்ப்போம். இவர் தன் வலைப்பக்கத்தில் (வேதாளம்), பதிவர் சுப்பனை பற்றி மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தை யும் பாதித்துள்ளது.

திரு சுப்பன் சென்னையை சார்ந்தவர். அவர் தன்னைப்பற்றி அவதூறாக எழுதிய பதிவை, பிளாக்கிலிருந்து ஒரு காப்பி எடுத்து கொள்கிறார். தன்னைப்பற்றி அவதூறாக பதிவு போட்ட கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு புகார் மனுவை தயார் செய்து அத்துடன் பதிவின் காப்பியையும் இணைத்து சென்னையில் இருக்கும் சைபர் கிரைம் அலுவலகத்தில் பதிவு செய்கிறார்.

புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ். அதன் பின் தன்க்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர் யார்? அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும்.

Sec. 500.IPC
Punishment for defamation.
500. Punishment for defamation.--Whoever defames another shall be
punished with simple imprisonment for a term which may extend to two
years, or with fine, or with both.

மேலே குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் அவரின் குற்றச்செயல் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவற்றின் அடிப்படையில் அவருக்கு கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கும்

1. இரண்டு ஆண்டு வரையிலான சிறை தண்டனை
அல்லது
2. அபராதம் / நஷ்ட ஈடு
அல்லது
3. இவை இரண்டும் சேர்த்து.

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 2

தொடர்ச்சி -2
----------------


ஆரம்பத்திலிருந்தே ஆண்களோடான என் படிப்பு , என் கட்டட பொறியாளர் வேலை , அதன் பின் ஐடி வேலை எல்லாமே ஆண்களோடு மட்டும்தான்.

ஒரு நல்ல புரிதல் இருந்தது. சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களிடம் பழகுவது , கற்பது எளிதானது..

ஐடி வேலையில் தீயணைப்பு வீரனைப்போல எந்நேரமும் தயாராய் இருக்கணும் 24x7(x365 ).

இரவு நேர வேலைக்கு சென்று வந்தால் காதுபடவே ஏதோ பாலியல் தொழிலுக்கு சென்று வருவதை போல கிசுகிசு பேசும்

தமிழ்ப்பெண்கள் கூட்டம். ( பின்னர் அவர்கள் பிள்ளைகளுக்கு பாட விஷயமாக அணுகியதுமுண்டு )

வெளியூர் வேலை என்றால் பாஸ் கூட பயணம் செய்வது அவர் தங்கியிருக்கும் விடுதியில் தங்குவது என எப்பவோ நான் பெண் என்ற மன நிலை தாண்டியவள்.

42 வயதானவள்.. என் பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கப்படவில்லை. நல்ல மனிதாபிமானமுள்ளவர்களாக மட்டுமே.

( மகனை வளர்த்தது ஈழத்தமிழ் சகோதர சகோதரிகள் பலர் )


99% நிர்வாணமான பெண்களோடு நீச்சல் குளத்தில் குளிக்க முடிந்த என் பிள்ளைக்கு தமிழ்படத்தை பார்க்க முடிவதில்லை.

எது ஆபாசம்.?..எது வக்கிரம்?..என புரிய முடியாத குழப்பும் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி போகப்பொருளாய் வைத்துள்ளோம்.

பெண் திறமையாயிருந்தால் இங்கு எடுபடாது..

அவள் சமையல் குறிப்புகளை மட்டுமே எழுதிவிட்டு நல்ல பிள்ளையாய் ஒதுங்கிடணும்..

தப்புகளை தட்டி கேட்கக்கூடாது. கேட்டால் அவளைப்பற்றி கதை கட்டுவோம். ஓட செய்வோம்..

[ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . அவனை தட்டி கேட்டதிலிருந்து ஆரம்பித்தது இந்த துவேஷம்.)


இப்படி பல்வேறு தரப்பினரின் பிரச்னைகளை ஆழமாக அறிந்தவள்..

வாழ்க்கையின் பல பிரச்னைகள் எனக்கு துணிவையும் போராடும் சக்தியையும் தந்துள்ளது..

அதனால் மட்டுமே என்னால் ஒரு பாலியல் தொழிலாளியையும் , கொலைகாரனையும் சகோதர நேசத்துடன் பார்க்க முடிகிறது.

ஆனால் எனக்கே இப்படி ????.. !!!!!

ஆனால் இங்கு வலையுலகில் நடமாடும் சில நச்சு மனிதர்கள் அவர்களையெல்லாம் விட பன்மடங்கு கொடூரர்கள்..

இவர்களை சகித்துக்கொண்டோ, ஒதுங்கிக்கொண்டே போகலாம் தான்.

ஆனால் எத்தனை மன உளைச்சலை தருகிறது இவர்களின் நடவடிக்கைகள்..

எல்லாராலும் திரும்ப அடிக்க முடியாது என்கிற தைரியம்தானே?..

எல்லாரும் பொறுமையா செல்ல ஒரு காரணம் இருக்குது..குடும்பம் , வேலை இருக்குது என்ற இளக்காரம் தானே?..

" பூக்காரி" என்று எங்கு வாசித்தாலும் அந்த நியாபகம் வருதே வலி தருதே.வார்த்தைகள்...

அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் .?. நமக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அடி பட்டவருக்கு?...

சரி மன்னிப்போடு முடிந்தது என பார்த்தால் மன்னிப்பு கொடுத்ததுதான் தவறு என்பது போல இப்ப புதுசு புதுசா முளைக்கும் காரணம் ?..

அதைவிட என்னைப்பற்றிய அந்தரங்கங்களை வெளியிடுவதாய் மிரட்டல் வேறு..

என்னதான் செய்துவிடுவீர்கள் ?. உங்கள் நோக்கம் என்ன?.

என்னைப்பற்றிய தனிப்பட்ட விஷயத்தில் நுழையும் உரிமையை யார் கொடுத்தது ?..

நான் அப்படி என்ன கொடுமை செய்தேன்?.

மிஷ நரி என எழுதியதை கண்டித்தேனே அதற்காகவா?..

ஏழை எழுத்தாளர்களை எள்ளி " கெண்டைக்கால் மயிர் பிடுங்காதவன் " என நகையாடியதை கண்டித்தமைக்கா?

அருவருப்பான வக்கிரமான ஜோக்குகளை , கதைகளை பொதுவில் வாசிக்க நேர்ந்ததை சொன்னதற்கா.?( அதை பிரைவைட் வீயுவிற்கு வைக்கலாமே )


சமீபத்தில் என்னைப்பற்றி வந்த 2 புனைவு..


[[ மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்.
அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ்
கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே
இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
----------------------------------------------------------------------------
xxxxxxx பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு
போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு.
ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க.
நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.

]]

இதை குறித்து கருத்து சொல்ல அழைக்கிறேன்.. உங்கள் பெயர் பின்னூட்டத்தில் வராது....


இந்த மன உளைச்சல் இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 1




புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.

இணையத்தில் நுழையும்போது ஏதும் அறியாத வெகுளிச்சிறுமியாய் நான்..

என் 38 வயதில் நான் கற்றுக்கொள்ளாத விஷயங்களை நான் கடந்த 3 வருடத்தில் பன்மடங்கு கற்றுக்கொண்டேன்..

எத்தனை
நல்ல உள்ளங்கள் , ஆறுதல் தந்த இதயங்கள் , வழிநடத்திய ,
தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்..?

தனிமை
காரணமாக தமிழில் பேசினால் நல்லா இருக்குமே என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் நுழைந்தவள் நான்.


அதுவரை
குடும்பம் , குழந்தைகள் , வேலை மட்டுமே என் உலகமாயிருந்தது பரந்து விரிந்தது.


எத்தனை குழுமங்கள் , எத்தனை விஷயங்கள் , எத்தனை பெரியவர்கள்...? வயது வித்தியாசமின்றி எல்லோரும் குழந்தை போல பழகி, நம்மையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த , சிந்தனையை தூண்டிய ஆக்கபூர்வமான கருத்துகளை பறிமாறிக்கொண்டவை அளவிட முடியாதே..

முக்கியமா
சொல்லணும்னா , பாலர் பள்ளிக்கூடம் என்ற இழை அன்புடன் குழுமத்தில் ஆரம்பித்து 1000 தாண்டியும் ஓடிக்கொண்டே இருந்தது..
அதில் பங்கேற்ற சிறுவர்கள் யார் தெரியுமா?.. மதிப்பிற்குறிய சீனா ஐயா , கிரிஜா மணாளன் சார் , சக்தி ஐயா , சுரேஷ் அண்ணா, விசாலம் அம்மா , காந்தி அக்கா , தமிழ்த்தேனி ஐயா இப்படி எத்தனை அத்தனை பெரியவர்கள்..? ..

எங்கெங்கிருந்து
..
( அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ). என்றும் நீங்கா இன்பம் தரும் நிகழ்வு அது..

அடுத்து முத்தமிழ் குழுமத்தில் என்னை வளர்த்த வேந்தன் ஐயா, சீதாம்மா , செல்வன் , ஷைலஜா அக்கா, கீதாக்கா, சிவா , காமேஷ் இன்றும் தொடற்கிறது தமிழமுதம் குழுமம் மூலம்..( இங்கும் அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ).


நிற்க
..


இதெல்லாம்
ஏன் சொல்கிறேன் என்றால் இணையம் என்பது எனக்கு பாடசாலை... மிக அதிக பயனுள்ள இடம்.


1000 மடல்களை தாண்டி கருத்தாடல்கள் செய்த இடம்.. அதிகப்படியாக விரைவாக வாசிக்க கற்றுத்தந்த இடம்..
படிப்பதிலே போட்டியை வளர்த்த இடம்...

வேண்டாம்
என்று சொன்னாலும் வந்து குமிந்த நட்பு வட்டம்..

விடிகாலை
3 மணிக்கு விமானம் சென்னை வந்தாலும் குடும்பத்தோடு வந்து காத்துக்கிடந்த
நட்புகள்...

என் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே ரயிலில் கூட வந்த நட்புகள்..

என்னை பிரமிக்க மட்டுமல்ல திகைக்க , செய்தது செழிக்க செழிக்க தந்த அன்பு..

நான்
என்ன செய்தேன் அவர்கள் அன்பை பெற.?
மிஞ்சிப்போனால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருப்பேன் அவர்கள் பிரச்சனைக்கு..

வெளியில்
சிரித்து பேசும் பலருக்கு உள்ளே எத்தனை எத்தனை பூகம்பம் என அதிர்ச்சியடைந்துள்ளேன்..


இப்படி
பல சூழலில், சந்தர்ப்பங்களில் எழுத வரும் நட்புகளுக்கு வலையுலகில் இப்ப புதிதாக வந்துள்ளது தான் இந்த புனைவு என்ற சோதனை..


முக்கியமாய்
பெண்களுக்கு...


தொடரும்
.....