Friday, March 21, 2008

வேலாயி..- பாகம் 4.சஹானா சாரல் தூவுதோ?. ===========================================*
" இந்த சம்பந்தத்தை மறந்துவிடு தீபா.."
" சாரி அப்பா.." எதுவுமே யோசிக்காமல்....தீபாவும்... * *************************************************************************தொ­டரும்********************** *
*மறுநாள் சந்தோஷமாக வந்த சிவாவுக்கு அதிர்ச்சியாயிருந்தது.. தீபா தன்னை தவிர்ப்பதும், வங்கிக்கு வேறொரு ஆசிரியர்*
*வருவதும்...தாங்க முடியவிலை ஒரு வாரம்... பொறுத்துப்பார்த்து நேரே கல்லூரிக்கு சென்று விருந்தினர் அறையிலிருந்து அழைப்பு விடுத்தான்*
*தீபா சாதாரணமாக வந்து ஹலொ சொன்னது எப்படியோ வலித்தது.. அன்ன ஒரு அலட்சியம்..பின் திருமணத்தில் அப்பாவுக்கு விருப்பமில்லை*
*என்று தெரிந்ததும், அதற்கு இவள் சம்மதித்ததும் இடி விழுந்ததுபோலிருந்தது...தீபாவும் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறாளே..*
*தனக்கு நடந்தது எதுவும் தெரியாது என்றும் அப்பாவிடம் பேசுவதாகவும் சொல்லிசென்றவன் நேரே ஊருக்கு சென்றான்..*
*எல்லோரையும் ஒரு பிடி பிடித்து, தனக்கு ரிஜிஸ்டர் திருமணம் பண்ணமுடியுமென்றும், மரியாதைக்காகத்தான் அவர்களை அழைத்துச்சென்றதையும்*
*சொல்லி அடுத்த முகூர்த்ததுக்கு ஏற்பாடு செய்தான்....அங்கிருந்தே தீபா அப்பாவிடம் பேசி சம்மதமும் பெற்றான்.... அடேங்கப்பா காதல்தான் *
*என்ன வேகம், சக்தி கொடுக்கிறது..*
* ---------------------------------------------------------------------------­--------------------------------------------- *
*திருமணம் உறுதியானதும் தீபாவை முதன்முதலில் அலமேலு மேடம் வீட்டில் பார்த்ததும் பேச்சே எழவில்லை... மறுபடியும் வெட்கமா, தயக்கமா*
*பயமா?.. என்ன பேச எப்படி ஆரம்பிக்க.. மேடமும் தனியா பேசட்டுமேன்னு பலகாரம் எல்லாம் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்..*
*தீபா கடிகாரத்தைதான் பார்த்துக்கொண்டேயிருந்தாள்..*
*" எப்படியிருக்கீங்க?."*
*" ம். நலம்.. நீங்க..?."*
*".."தலையாட்டல்... " ".."*
*" வேலை எப்படியிருக்கு .?."*
*" ம். நல்லாருக்கு. உங்களுக்கு?.."*
*""*
*""*
*இப்படியே ஒரு மணிநேரம் ஆனதே தவிர இருவரும் பேசுவதாயில்லை...பேச , கேட்க ஆயிரம் விஷயமும், சந்தர்ப்பமிருந்தும் விடைபெற்றார்கள்..மனதில் ஆயிரம் கனவுகளை சுமந்து மட்டும்...*
* ---------------------------------------------------------------------------­---------------------------------------------------------- *
*திருமணம் தன்னுடய கிராமத்தில் வத்து நடப்பது சந்தோஷமாயிருந்தது சிவாவுக்கு ...தீபாவுக்கு எல்லாம் புதுசு.. அந்த மாட்டு வண்டிகள், பசுமை வயல்கள்,*
*தென்னைமரங்கள், நாற்று நடும் மக்கள், வாய்க்காலில் குதித்து விளையாடும் சிறார்கள்,எல்லாம் இயற்கையா அழகாக இருப்பதை ரசிக்கிறாள்..*
*மூன்று நாள் திருமணம்...ஆனால் சிவாவுக்கு தான் தீபாவை பார்க்கவோ பேசவோ முடியவில்லை..*
*எல்லா பெண்களும் சூழ்ந்துகொண்டு மஞ்சள் பூசுவதும், அவளை கிராமத்து பாணியில் அலங்கரிப்பதும், அவளுக்கு சிரிப்பாக இருக்கிறது..*
*தன்னை தொட இதுவரைக்கும் யாரும் தைரியமில்லை.. ஆனால் இங்கு எவ்வளவு உரிமையாக தன் கைபிடிக்கிறார்கள்..முகத்தில் , கால்களில் மஞ்சள் பூசுகிறார்கள்..கூச்சமாக இருக்கிறது..*
*ஒவ்வொரு சடங்கும் சம்பிரதாயங்களும் தெரிந்துகொண்டு ஆச்சர்யப்பட்டாள்.*
*திருமணப்பெண்ணுக்கே உள்ள நாணமும் வந்து சேர்ந்துகொண்டது.. யாரையும் தலை நிமிர்ந்துகூட பார்க்க முடியவில்லை.. எத்தனை நிகழ்ச்சி கல்லூரியில்*
*அசராமல் நடத்தியிருப்பாள்.. ஆனால் இதெப்படி ஒரு வெட்கம், யாரையும் பார்க்க முடியாமல்.. அதேபோல் தான் சிவாவுக்கும்.. மாப்பிள்ளை கோலத்தில்..,ஆளாளுக்கு அட்வைஸ்..பல்லுபோன தத்தா கூட காதில் கிசுகிசுத்து சிரிக்கிறார் ,தன் அனுபவத்தை சொல்லி கிளுகிளுப்பூட்டுகிறார்..*
*நண்பர்களின் , சொந்தங்களின் கேலியும் , கிண்டலும்.. ஆனாலும் இந்த நாள் எவ்வளவு சந்தோஷமான நாள்.. வாழ்நாளில் மறக்கமுடியாத நாள்..*
*தீபாவை ஒருமுறையாவது பார்த்து கண்ணால் பேசிடலாம்னு பார்த்தா, அவள் இந்த பக்கம் திரும்புவதாகக்கூட தெரியவில்லை...*
*அக்னியை வலம் வரும்போதும், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும்போதும், பரவசப்பட்டார்கள் இருவரும்...*
* *
*திருமணம் முடிந்தபோதே அசதியாகிவிட்டது தீபாவுக்கு..அனைத்து சடங்குகளும், வாழ்த்துகளும், அப்பப்பா..*
*பின் மறுவீடு என்றும், பாலும் பழமும் என்றும், ஆளாளுக்கு விளையாடினர்., இதுதான் சாக்கு என்று..*
*தலை முழுக்க ஆசீர்வாதமான விபூதி, அரிசி, இலைகளும் , பூக்களும்,நெற்றியில் குங்குமம், கைகளில் சந்தனம்..கைநிறய பணம்.*
*ஒருபுரம் ரசித்தாலும்,கொஞ்சம் கசகச என்றிருந்தது..புரோகிதர்கள் மந்திரம் சொல்ல திருமண சடங்கு நடந்தது.*
*அதன்பிறகு மதிய சாப்பாடு.. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிக்கொள்ள *
*வேண்டும்.. தீபாவுக்கு சிரிப்பாக இருந்தது.. இது என்ன விளையாட்டு என்று...பின் குடத்தில் மோதிரம் போட்டு யார் எடுக்கிறார்களோ, அவர்கள்*
*பலம் ஓங்கியிருக்கும் என்று ஒரு நம்பிக்கை.. அதில் பயிர்கள், அல்லது நெல்மணிகள் இருக்கும்... கை உள்ளே விட்டதும், முதன்முதலாக*
*தீபாவின் கைகளை பிடிக்கவும் , கொஞ்சம் வெட்கமும் வெளியில் காண்பிக்க முடியாத தயக்கமும் கொண்டாள்.. எல்லாரும் இரு *
*அணிகளாக சேர்ந்து சீக்கிரம் என்கிறார்கள்.. கையை விட்டால்தானே எடுக்க?.. *
*இப்படியாக, தேங்காய் உருட்டும் விளையாட்டு என்று ஓவ்வொன்றாக அடிக்கிக்கொண்டே இரவு வரை ஆயிற்று...*
*முழுவதுமாக அசதி தொற்றிக்கொண்டது தீபாவுக்கு... வழக்கம்போல் பாட்டுபாடி, புதுப்பெண்ணை முதலிறவுக்கு அனுப்பிவத்தார்கள்..தள்ளிவிட்டார்கள்.*
*வரும்போதே தலையை பிடித்துக்கொண்டு வந்தவள், கட்டிலில் உட்கார்ந்தே தூங்க ஆரம்பித்தாள்.. பாவமாயிருந்தது.. வசதியாக படுத்துக்கொள்*
*என்று சொல்லிவிட்டு தன் கனவில் தொந்தரவு செய்த தேவதை இப்ப அருகிலிருந்தும் பேசவோ எதுவுமே செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டே*
*தூங்கிப்போனான் சிவாவும்...*


*******************************************தொ­டரும்**********************

No comments: