Friday, March 21, 2008

வேலாயி-பாகம் 11 - ஆரி ராரிராரி ராரி ராராரோ!*
*=============================================*
தீபா மருத்துவமனைக்குள் நுழைவதற்குள் வேலாயிக்கு அறுவை சிகிச்சைக்குண்டான அனைத்தும் தயாராக.
அவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்கிறாள்...தைரியம் தருகிறாள்..
" அம்மா முத்துவை நல்லா படிக்க வைக்கணும் .. பெரியா ஆளா வரணும் மா.."
" கண்டிப்பா வேலாயி.. நாம் இருவரும் சேர்ந்து நடத்துவோம்..அட என்ன இது இன்னும் 2 மணிநேரத்துல
மறுபடியும் வந்து முத்துவையும் , குழந்தைகளையும் பார்த்து கொஞ்சப்போற..தைரியமா இரு சரியா.. நான் உன்கூடவே இருப்பேன்.."
தன் கையிலிருந்த பிரசாதத்தை வேலாயிடம் தந்து தைரியம் தந்தாள்..விபூதி, குங்குமம் இட்டாள்.
மருத்துவர்களிடம் விசேஷ அனுமதிபெற்று தீபாவும் மருத்துவரின் உடை அணிந்து வேலாயிகூட உள்ளே..தைரியமாக இப்போது..
டாக்டர் சங்கர் தலலமையில் மருத்துவக்குழு ...மயக்கமருந்து குடுத்ததும் வேலாயியின் கைபற்றிக்கொண்டே தீபா..தலையைத்தடவி கொடுத்தாள்..
ஆனால் திரை போட்டிருந்ததால் சிகிச்சை ஒன்றும் இந்தப்பக்கம் தெரியாது..
சிறிது நேரத்திற்கெல்லாம் முதல் குழந்தை அழுகையுடன்..... பெண்குழந்தை... தீபாவிடம் காண்பிக்க கண்கள் பனிக்க
முத்தமிட்டாள்.. பின் அடுத்து சில நிமிடத்தில் ஆண் குழந்தை.... கண்கள் பொங்குது தீபாவுக்கு... கனவெல்லாம் நனவாயிற்றே..
வேலாயியை முத்தமிடுகிறாள்... கடவுளுக்கு நன்றி சொல்கிறாள் உடனே. வேலாயிகூடவே சிகிச்சை முடிந்தும் கண்விழிக்க அடுத்த அறையில் காத்திருக்கிறாள்..
குழந்தையைப் போய் பார்க்க கூட தோணவில்லை.. வேலாயி நல்லபடியாக எழுந்திருக்க வேண்டிக்கொண்டே இருந்தாள்..
கண்விழித்து அவளிடம் தகவல் சொன்னதும் பூரித்து போனாள் வேலாயி...
தீபா டாக்டர் சங்கருக்கு தன் மனமார்ந்த நன்றியை கண்ணீரோடு தெரிவிக்கிறாள்.. இதற்காகவே விசேஷமாக
அமெரிக்காவிலிருந்து வந்தவராயிற்றே..:-))
---------------------------------------------------------------------------­---------------------------------
வெளியில் சிவாவும் , மாமியாரும் மற்றவரும் பதட்டத்துடன் இருந்தார்கள்.. முத்து கார் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்..
கதவைத்திறந்து செவிலியர் குழந்தை இரண்டையும் காண்பித்ததும் அனைவர் கண்களிலும் கண்ணீர்...
பையன் அம்மாவைப்போல், பெண்ணோ அப்பாவைப்போல்... மாமியாருக்கு அதிக சந்தோஷம்...பெருமையும்..
மருத்துவமனியில் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார்கள்.. செவிலியருக்கு பரிசுப்பொருள்களும்..
---------------------------------------------------------------------------­---------------------------
குழந்தைகளும் , வேலாயியும் வீட்டுக்கு வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்...மாமியாரும் , தீபாவும்...
குழந்தைகளுக்கு வேலாயி தாய்ப்பால் கொடுப்பதில் கொஞ்சம் மனக்கஷ்டம் மாமியாருக்கு,,..
" தாய்ப்பால் குடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல அத்தை தாய்க்கும் கர்ப்பப்பை எளிதில் சுருங்குமாம்...ஆதலால், நாம்
அதை தடுக்கக்கூடாது.. முடிந்தவரை தரட்டும்"
வேலாயிக்கு தாய்ப்பால் குடுக்கும் சுகமான அனுபவத்தை பெற்றுத்தருகிறாள், வேலாயி மறுத்தும்..
வேலாயி, தாய்மையை முழுவதுமாக அனுபவிக்கிறாள்...
" அம்மா, 30 நாள் தாய்ப்பால் தருவேன், அதுக்குமேல வேண்டாம்மா.. மொகம் பார்க்க ஆரம்பிச்சா என்கிட்ட பாசம் வரும் கொழந்தைக்கு"
" அதனாலென்ன, எல்லாரும் சேர்ந்து தானே வளர்க்கப்போகிறோம் குழந்தையை..பாசம் வளரட்டுமே..நீ சும்மா இரு வேலாயி.."
மாமியாருக்குதான் உடன்பாடில்லை, வேலாயிமீது பாசம் வருமோ என்று பயப்படுகிறார்..
அனைவருக்கும் வீட்டில் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் அதிகமாகுது..குழந்தையை குளிப்பாடுவது, தூங்க வைப்பது, அழுகை சத்தம்,
என்று வீடே அல்லோகலப்படுகிறது.. இதில் வேலாயிக்கு பத்திய உணவையும் மறக்காது அன்போடு ,கண்டிப்போடு தருகிறாள்..
விருந்தினர்கள், ஊரிலிருந்து வருவதும் , குழந்தையைப்பார்ப்பதும் மாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி....
ஆனால் வேலாயியிடம் தாய்ப்பால் குடுப்பதை நிப்பாட்டமுடியலை.. 3 மாதம் ஆகிறது... 5 மாதம் முடிந்ததும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று
முடியெடுத்து பேர்வைக்கணும்... இதை சாக்காக வைத்து வேலாயியிடமிருந்து குழந்தைகளை பிரிக்க திட்டமிடுகிறார்..பயத்தில்..
வேலாயியிடம் மறைமுகமாக சொல்லவும் செய்கிறார்., தாங்கள் ஊருக்கு போவது பற்றி..வேலாயியும் சந்தோஷப்படுகிறார்..
வேலாயிக்கும் தன் சொந்த ஊருக்கு திரும்பி கடை போட்டு விவசாயம் பண்ணவே ஆசைப்படுகிறாள், கணவனுடன்..
இதையெல்லாம் கேள்விபட்ட தீபா அனுமதி தர மறுக்கிறாள்..
குழந்தைகள் இருவரும் கொழு கொழு என்று வளருகின்றாகள்.. தீபா எப்பவும் குழந்தையும் கையுமாக..அதேபோல் மாமியாரும்..
தன் மகன் ஜாடையில் குழந்தை இருப்பது கண்டு ரொம்பவே பெருமைப்படுகிறார் மாமியார்..
---------------------------------------------------------------------------­----------------------------
அடுத்த வாரம் கோவிலுக்கு போகணும், பல வேலைகள் பார்க்கணும்.. காலையிலேயே சென்று வேலாயியை
பார்க்க சென்றவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி... முத்து கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான்....வேலாயியையும், அவள் கணவரையும் காணவில்லை..
பதருகிறாள் தீபா...அருகில் ஒர் கடிதம்..
**************************************அடுத்த பாகத்தில் முடியும்*

No comments: