Friday, March 21, 2008

*வேலாயி பாகம் 2-- மயிலிறகே, மயிலிறகே..விழியெல்லாம் உன் உலா..* ===============================================================

தீபாவுக்கு நாணமாயிருக்குது தன்னிடம் மட்டும் சிவா அதிகம் பேசுவது, மற்ற அசிரியரின் கிண்டல், கேலிகள்.
*ஆனாலும் ஒன்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அவள்..*
*சிவாவுக்கு தீபாமேலுள்ள மரியாதை இப்ப வேறு மாதிரி ஆகுவது கண்டு குழப்பமாயிருக்குது..தீபா ஒருநாள் வாராவிட்டாலும் கண்கள்*
*அவளைத்தான் தேடுது.. எதோ ஒன்றினை தொலைத்தவன் போல்...அவளின் பேச்சு, நடை, புன்னகை, எல்லாம் மனதில் மீண்டும் மீண்டும்..*
*இதை அழகாக கண்டுபிடித்துவிட்டார் பக்கத்து சீட்டு அலமேலு... கலகலப்பான ஆசாமி.. பதிவாக வங்கிக்கு தாமதமாக*
*வருபவர்.. குளித்து முடித்து, அள்ளிமுடித்தாற்போல் ஒர் கூந்தலில்,கதம்பத்தை சொறுகிக்கொண்டு, 9 மணிக்கு பதில் 9.30 குதான் வருவார்.*
*யாரும் எதுவும் கேட்டால், *
*" சார் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா. குழந்தைகள் இருந்தால் தெரியும்.." என்றோ மற்ற பதிலோ கூறி *
*சிரித்துக்கொண்டே சமாளித்துவிடுவாள்.. மற்றபடி வேலையில் கெட்டி.. *
*" என்ன சிவா சார்?. உங்க ஆள் இன்னிக்கு வரக்காணுமே ன்னு வங்கி புத்தகத்தில் கவனத்துடன், கேள்வி தொடுக்க,*
*" சும்மா இருங்க மேடம்.. கலாட்டா பண்ணாமல் வேலையப்.......பாருங்க..." என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், *
*ஏதோ ஒன்று தன்னுள் ஏற்படுவதை கண்டு அதிசயித்துதான் போகிறான் சிவா.. அதென்ன பெண் வாசனையே பிடிக்காமல் இருந்த *
*எனக்குள் இப்படி ஒரு போராட்டம்... சரி அலமேலு மேடத்திடம் பகிர்ந்து கொள்ளணும்..புரிந்துகொள்வார்கள்..*
*ஆனால் தயக்கம் , தான் தீபாவுக்கு தகுதியானவன் தானா என்று..அன்று மதிய இடைவேளியில் மேடத்திடம்*
*அவர்களே கிண்டல் பண்ணும்போது தன் விருப்பத்தையும் தயக்கத்தையும் கேட்டுவிட்டான்..*
*"அட என்ன சிவா , உங்களுக்கென்ன குறைச்சல்.. ஆணுக்கு எது அழகு..?. நல்ல உத்யோகம் புருஷ லட்சணம்.. நல்ல குடும்பம்.. எந்த கெட்ட*
*பழக்கமும் இல்லை... தீபா பற்றி மற்ற விபரங்களை சேகரித்து நான் தாரேன்..போய் பெண் கேளுங்க"*
*எல்லா விவரமும் சொன்னபடி வாங்கித்தந்தார்கள் .. அன்றிலிருந்து அலமேலுவுக்கு " அக்கா" ப்ரமோஷன்..*
*ஆனால் தீபாவுக்கு சம்மதம்னு எப்படி தெரிந்துகொள்வது.. , எப்படி கேட்பது...*
*சரி இன்னிக்கு எப்படியும் கேட்டுடணும்...இல்லாட்டி அலமேலு அக்கா சிரிப்பே எல்லாரிடமும் காட்டிக்கொடுத்துவிடும்..*
*ஒரு சின்ன காகிதத்தில்*
*" எனக்கு உங்களை திருமணம் பண்ணிக்கொள்ள விருப்பம்...எனக்கு அந்த தகுதியிருக்கா என்று தெரியவில்லை...*
*உங்களுக்கு விருப்பமிருந்தால் நாளை எனக்குப்பிடித்த நீல நிறத்தில் வாருங்கள்..பிடிக்காவிட்டால் மன்னியுங்கள்"*
*ஒரே படபடப்பு... எப்படி தருவது.. அல்மேலு அக்கா யோசனைப்படி எழுதினாலும், அவர்களிடம் காண்பிக்க கூச்சம்..*
*திட்டுவார்கள்..அது ஏன் தகுதியிருக்கான்னு கேட்கணும் சிவா?. என்று..*
*பதினோரு மணியளவில் தீபா உள்ளே நுழைந்து வரிசையில் டோக்கன் வாங்கி அமர்ந்திருக்க, *
*கண்டும் காணாததுபோல் சிவா, இருந்தாலும், வேலை ஒன்றுமே ஓடமாட்டேங்குது..பயத்தில்*
*முதல்முறையாக வேர்த்துக்கொட்டுகிறது... ஒருவேளை தன்னை எல்லார் மத்தியிலும் திட்டிவிட்டால்...*
*சே, அப்படிபட்ட பெண் இல்லையே...சொல்ல முடியாது பெண்களுக்கு எப்ப எதில் கோவம் வருமென்று..*
*எது பிடிக்கும் , பிடிக்காதென்று...*
*இருந்தாலும் நான் என்ன தவறாக எழுதியுள்ளேன்... விருப்பமிருந்தால் சரி.. இல்லாவிட்டாலும் மன்னிப்பு*
*கோரியுள்ளேனே...வெட்கமாக இருக்கிறது .. சே என்ன தாழ்வு மனப்பான்மையோ?.. இல்லை இப்படித்தான் எல்லோரும்*
*காதலிப்பார்களோ..யோசித்துக்கொண்டிருக்கும்போதே தீபா கவுண்டர் முன்..*
*" வணக்கம் மேடம்.."*
*" வணக்கம் சார்.." பணத்தை நீட்டுகிறாள்...*
*பெற்றுக்கொண்டு ரசீதுடன் அந்த சின்ன காகிதத்தையும் பதட்டமாக நீட்டுகிறான்...*
*ஒன்றும் யோசிக்காமல் வாங்கிவிட்டு கொஞ்சம் தொலைவில் சென்றுதான் பார்க்கிறாள்...*
*அவள் பார்ப்பதை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் , சட்டென்று அவள் திரும்பும்போது*
*அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க ஆரம்பித்தான்..*
*அதன்பின் அன்று மதியம் அலமேலு அக்காவிடம் சொல்லிவிட்டு ஒரே பதட்டம் அவர்களுக்கோ ஒரே சிரிப்பு..*
*" ஆமா ., நீங்க நல்ல சிரிங்க.. எனக்கில்லா இங்க வயற்றை பொரட்டுது.."*
*" அட என்ன சார் , நீங்க.. மொதல்ல சாப்பிடுங்க..ஹிஹி.."*
*அன்று முழுவதும் தூக்கமில்லை.. புரண்டு புரண்டு படுத்தான்...எப்படா விடியும் என்று காத்திருந்தான்...*
*சே என்ன மடத்தனம், அவள் திரும்பி பார்த்தபோது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், அவளுக்கு விருப்பமா, கோவமா என்று...*
*ஒரு நாள் கழிவது ஒரு யுகமாகத்தெரிவது இப்படித்தானோ?..இதுதான் காதலோ?..என்ன பாடு படுத்துகிறது?.*
*அலுவலகம் சென்றுவிட்டான் விரைவாக...*
*எப்பவும் போல் தாமதமாக வரும் அலமேலு கெக்கபிக்க னு சிரித்துக்கொண்டே வந்துரகசியமாக, *
*" ஹஹஹ வெளியே போய் பாருங்க சார்... "*
*" சொல்லுங்க , அக்கா ,பிளீஸ்.."*
*"ஹாஹா .. நீங்களே போய் பார்த்துக்கோங்க.. கிகிகிகிகீ..ஹஹஹ.."*
*வெளியே சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி, குழப்பம்....*
**************************************************************தொடரும்******­***

No comments: