Friday, March 21, 2008

வேலாயி-பாகம் 7 -தவமின்றி கிடைத்த வரமே....இனி வாழ்வில் எல்லாம் சுகமே...!.. ================================================== *
*எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஓட்டுனரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றனர் தீபாவும், வேலாயியும்...அத்தையிடம் மார்க்கெட்டுக்கும் *
*செல்வதாக சொன்னதால் வேலாயி கூட போக சம்மதித்தார்...*
*கோவிலுக்குள் சென்று பூசாரியிடம் விசேஷ அர்ச்சனை செய்யும்போது, தீபா, முத்துவின் நட்சத்திரம் சொல்லி அவனுக்காகவும் விசேஷ அர்ச்சனை*
*பண்ணுகிறாள்.. அதிசயித்து மகிழ்கிறாள் வேலாயி... பின் பிரசாதம் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பி வந்து மரநிழலில் நிற்கும்போது,*
*" என்ன வேலாயி, ஒரே படபடப்பாய் இருக்கிறாய்... பூசாரிகிட்ட பூ போட்டு பார்த்தாய்..உங்க வீட்டில் ஏதும் பிரச்சனையா?. நான் ஏதும் உதவணுமா?.."*
*" இல்லம்மா எல்லாம் நல்ல விசயம்தான்மா...ஆனா நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான்..."*
*" சொல்லு. எதுவானாலும்..பரவால்ல.."*
*" நேத்து பூரா, ஒரே ரோசனை மா.. ரஞ்சிதம் மாதிரியே நானும் ஏன் உங்களுக்கு உதவலாமேனுதான்...."*
*"என்ன சொல்ற வேலாயி?.. " நெற்றியை சுருக்கிக்கொண்டு.. *
*"அய்யாவுக்கும் உங்களுக்கும் சம்மதம்னா நானே ஏன் உங்களுக்கு குழந்தையை பெற்றுத்தரக்கூடாது?.." தயக்கமாக..*
*"என்ன சொல்ற வேலாயி.. நீயா, முடியுமா உன்னால?. எனக்கு ஒண்ணுமே புரியலையே?." கலக்கமாக தீபா..*
*" அதான்மா கருவை நான் சுமந்து நல்ல படியாக பிள்ளைபெற்றுத்தரலாம்னு...எனக்கு ஒரு பைசா நீங்கள் தரவேண்டாம்மா.. எனக்கு உங்களுக்கு*
*உதவும் பாக்கியமும், உங்கள் அன்பும் கிடைத்தால் போதும்..முத்துவை உங்க பிள்ளை மாதிரி பார்த்துக்கிறீங்க... அந்த அன்புக்கு ஏதோ என்னால*
*முடிந்த சின்ன வொதவிம்மா.." கண்களில் முத்துக்களுடன், உதட்டில் புன்னகையுமாய்...வேலாயி..*
*" அதுக்கில்லை வேலாயி, உன்னால் எப்படி ?. நீயே எவ்வளவு பலவீனமா இருக்கிறாய்..உன் கணவன் வேறு பட்டாளத்தில்..எப்படி உன்னால் முடியும்..?.."*
*" அவர் பட்டாளத்துக்கு போனதே நீங்க அல்லாரும் என் மேல், முத்துகிட்ட , வெச்சுருக்கிற பிரியத்த பாத்துதான்..அவருக்கு கண்டிப்பா சம்மதம்தான்மா.."*
*"அய்யோ உனக்கு எப்படி நான் நன்றி சொல்லன்னே தெரியலை வேலாயி... சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு மனசு கேக்கலை...."*
*" நீங்க ஒண்ணும் கவலைப்பாடாதீங்கம்மா.. நான் பூ போட்டு பத்துட்டுதான் உங்ககிட்ட சொல்லுதேன்...எல்லாம், அந்த ஆண்டவன் பாத்துக்குவான்...*
*நீங்க வெரசா மருத்துவர பாருங்க.. அய்யாகிட்ட பேசுங்க..நாள் ஓடிடும்மா.. .அடுத்த வருசம் வேண்தடுதல நெறவேத்த வாறேன்னு சாமிகிட்ட*
*சொல்லிருக்கேன்... தெகிரியமா காரியத்த ஆரம்பிங்கம்மா.."*
*கோவிலில் வைத்து இப்படி ஒரு செய்தி கேள்விபட்டது அந்த அம்மனே வந்து அருள்வாக்கு தந்தது போலிருந்தது தீபாவுக்கு...நெகிழ்ச்சியுடன் *
*வேலாயியை அணைத்துக்கொண்டாள்...என் உடன்பிறந்தவளாயிட்ட வேலாயி...வேறென்ன சொல்ல..." கலங்கிய கண்களுடன்...*
* ---------------------------------------------------------------------------­------------------------------------------------------- *
*அன்றிரவு சிவாவிடம் மெதுவாக மறுபடியும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்..எல்லாவற்றையும் பொறுமையுடன் தீபா மனம் நோகாமல் கேட்டுக்கொண்டான்..*
*ஆனால் பதில்சொல்ல தெரியவில்லை.. குழப்பம்...அவளையும் வருத்தப்படுத்திரக்கூடாது...*
*" என்னங்க நான் பாட்டுக்கு சொல்லிகொண்டே இருக்கிறேன் பதிலில்லையே?.."*
*"....ம்...."*
*" சொல்லுங்க.. விருப்பமா , இல்லையான்னு?.."*
*"...ம்..."*
*" ஏதாவது சொல்லுங்களேன்..."*
*"...ம்..."*
*" நான் உங்களை கட்டாயப்படுத்தலை... இல்லை என்றாவது சொல்லுங்கள்.. தொந்தரவு செய்யமாட்டேன்..."*
*"....ம்.... உனக்கு விருப்பமென்றால் செய்யலாம் தீபா.."*
*" அப்படியென்றால் உங்களுக்கு விருப்பமில்லையா?..."*
*" அப்படியில்லை... அம்மாவை எப்படி சமாளிப்பதென்றுதான்...மேலும் பணவிவரம் பற்றி , எதிலும் மனவருத்தம் வந்துவிடக்கூடாது...*
*லாயரிடம் பேசணும்...."சிக்கலாகி விடக்கூடாது..."*
*இப்போது உண்மையிலேயே எரிச்சல் வந்தது தீபாவுக்கு..." ஏங்க இப்படியெல்லாம் சந்தேகப்படுறீங்க?..ஆண்களே இப்படித்தான்...வேலாயி என்கூடப்பிறந்தவ மாதிரி"*
*" அதுக்கில்லை தீபா, நாலையும் யோசிக்கணும்.. வேலாயி நல்லவள்தான்.. ஆனால் கடைசி நிமிடத்தில் சொந்தக்காரங்கன்னு யாரவது வந்து...பிரச்சனை.."*
*" போதும் நிறுத்துங்கப்ப... அப்படி பார்த்தா யாரையும் நம்பமுடியாது... "*
*" சரி சரி... உன்னை நான் குழப்பவில்லை.. லீகல் விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்...முதலில் அம்மாவை ஊருக்கு அனுப்பணும். *
*" எல்லாம் சரிசெய்து நாம் ஒரு முடிவுக்கு வந்தபின் தெரியப்படுத்திக்கொள்ளலாம்.. அதுவரை, மாமாவிடம் சொல்லி அழைத்துச்செல்ல சொல்லணும்.."*
*தீபாவுக்கு சந்தோஷமாக இருந்தது... தெளிவாக அதே சமயம், தன் விருப்பத்துக்கும் மதிப்பளித்து சம்மதித்தானே என்று..*
* ---------------------------------------------------------------------------­------------------------------------------- *
*மாமியாருக்கு ஆச்சரியம்.. ஏன் தன்னை மகன் ஊருக்கு அனுப்புகிறான்... இருந்தாலும் மகிழ்ச்சி.. ஊருக்கு போய் கொஞ்சம் அதிகாரமாய், ஆசையாய் *
*இருந்துவிட்டு வரலாமே என்று..அவர் ஊருக்கு சென்றதும் இங்கு வேலைகள் மும்மரமாக நடக்குது.. எல்லாவிதமான பரிசோதனைகளும்*
*நடந்தாலும், வேலாயி குறித்துதான் கொஞ்சம் கவலை, அவள் நோஞ்சான் உடம்பு தாங்குமா இன்னொரு பிரசவம்... ஆனால் அவள்*
*மனோதிடம் , ஒத்துழைப்பு கண்டு ஆச்சரியப்படுகிறார் மருத்துவர்.. எல்லவாற்றையும் தெளிவாக ஆசையுடன் கேட்டுக்கொள்கிறாள்...*
*ஒரே மாதத்தில் சோதனைக்குழாய் மூலம் சிவா, தீபாவின் கருவும் தயாராகி, வேலாயியின் கற்பப்பையினுள் வைக்கப்பட்டு , வெற்றிகரமாகிறது..*
*வேலாயி மருத்துவமனையிலேயெ ரஞ்சிதம் துணையுடன் 10 நாள் இருக்க, முத்துவை அருமையாக , கவனித்துக்கொள்கிறாள் தீபா... *
*வேலாயியிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள், தங்கள் வீட்டின் அவுட்வுஸிலேயே ,பிரசவம் வரையிலாவது தங்கவேண்டுமென்று...*
*அவளுக்கான வீடு தயாராகிறது... வீட்டையே அலங்கரிக்கிறாள் தீபா.. கல்லூரி வேலையையும் விட முடிவு செய்கிறாள்... தோட்டத்தில் பலவிதமான *
*பூச்செடிகள் கொண்டு சோலையாக்குகிறாள்.. சிவா இவளின் மாற்றத்தை பார்த்து அதிசயிக்கிறான்.. இவ்வளவு நாள் எங்கே இருந்தது அனைத்தும்...*
*குழந்தை போலல்லவா குதூகலிக்கிறாள்.. நாம்தான் தப்புபண்ணிவிட்டோமோ? *
*எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் வந்த செய்தி சிவாவையும் , தீபாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...*
* ******************************தொடரு­ம்..********************************

No comments: