Friday, March 21, 2008

வேலாயி..- பாகம் 3..என்னமோ நடக்கிறதே..எல்லாம் பிடிக்கிறதே ============================================================= .
வெளியில் சென்று பார்த்த சிவாவுக்கு அதிர்ச்சியும் சிரிப்பும்.. எல்லோரும் சிவப்பு சீருடையில் ..ஆனாலும் கண்கள் தீபாவை தேடுது.... அதற்குள் மேனேஜர் கூப்பிட்டதால் உள்ளே சென்றான்...உட்காரவா முடியுது சீட்டில்...ஏதோ ஒரு பதில் தெரிந்தால் நலம்.. பரிட்சை மாணவனைப்போல பார்டரிலாவது பாஸாயிரணுமேன்னு ஒரு அசட்டு ஆசை..எதைப்பார்த்தாலும் தீபாவின் முகம்.. யார் வந்தாலும் தீபாவாக இருக்கக்கூடாதா என்று எட்டிப்பார்க்கிறது மனது...
சரி நம்ம தலையெழுத்து இவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு வேலையில் மூழ்கினான்...
12 மணியளவில் தீபா கல்லூரி பிரின்ஸிபாலும், அனைவரையும் விழாவுக்கு அழைக்க வந்தனர்...
பார்த்தால் தீபா நீல நிற பட்டு கட்டியிருந்தாள்..நிகழ்ச்சியை அவள் நடத்துவதால்..
ஆனால் சிவா பக்கம் திரும்பாமல், அலமேலுவிடம் மட்டும் அளவளாவிக்கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டாள்..
இதை எப்படி எடுத்துக்கொள்வது?. கொல்கிறாளே?..மனம் கொஞ்சம் வாடித்தான் போனது...
மதிய உணவின் போது அலமேலு தான் சொன்னார்கள், சிவாவை பற்றி ,ஊர் பற்றி விசாரித்தாள் என்று..
*வந்த பசியும் போய்விட்டது , அப்படி ஒர் மகிழ்ச்சி...கொண்டாட்டம், அப்போதே திருமணம் முடிந்த மாதிரி..கனவுக்குள் செல்ல ஆரம்பித்தான்....*
----------------------------------------------------
தீபாவுக்கோ, முன்தினம் சிவா கொடுத்த காகித்ததை பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த குழப்பம்...என்ன இது, இப்படி ஒரு வேண்டுதல் மாதிரி.. அதிலும் தகுதியிருக்கான்னு தெரியலை என்ற வார்த்தை அவள் மனசை அப்படியே புரட்டி போட்டது... என்ன பெரிய உத்யோகம்.. பெரிய மனிதன்.. மனதுக்குள் இப்படி ஒர் தாழ்வு மனப்பான்மையா?.
மிகவும் கஷ்டமாகிவிட்டது .. யாசிப்பதுபோல் அல்லவா?. அதுவும் நான் அவரைவிட எம்மாத்திரம் உயர்ந்தவள்?. நாள்முழுதும் வருத்தமும், எப்படி விளங்கவைப்பது என்ற யோசனையும்தான் வந்ததே தவிர, காதல் இல்லை என்று முடிவாயிற்று... இருந்தாலும் யாரையோ ஒருவரை திருமணம் செய்வதை விட தன்னை விரும்பும் சிவாவை மணக்கலாமே.. நல்லவரும் கூட...
அவர் தாழ்வு மனப்பான்மையை முதலில் போக்கணும்...பாவம் நாளை நீல கலரில் எதிர்பார்ப்பார்.. விழாவுக்காக எடுத்த புது பட்டுச்சேலை அரக்கு கலரில் இருக்க, நீலத்துக்கு எங்கே போவது.. இக்கட்டான சூழ்நிலை.. சிவாவை ஏமாற வைக்கக்கூடாது.. அம்மாவிடம் கேட்டு நீல நிற புடவையை ஒருநாளுக்கு வாங்கி உடுத்தினால் போச்சு..அழகாக அலங்காரம் செய்துகொண்டு, எப்படா வங்கி செல்லலாம் என்றிருந்தவளுக்கு பிரின்ஸிபால் அழைத்ததும் மறுக்காமல் சென்றாள்..
ஆனாலும் சிவாவை பார்க்க வெட்கம். புரிந்துகொள்ளட்டும் .இப்ப என்ன அவசரம்?.. அலமேலு மேடத்திடம் விசாரித்து அப்பாவிடம் சொல்லணும்.. முற்போக்கு எண்ணம் உள்ள அப்பாவுக்கு ஜாதியில் பிரச்சனையில்லை...நல்லவராய் கடவுள் பக்தியோடு இருக்கணும் அவ்வளவே...மெதுவாக சிவாவைப்பற்றி தெரிந்துகொண்டாள்.
---------------------------------------------------------------------------­----
அன்றே தன் தோழனை அனுப்பி தீபாவின் அப்பாவிடம் பேசச்செய்தான் சிவா...அவரும் ஒருவாராக சம்மதம் சொன்னாலும், சிவா பெரிய பண்ணையார் குடும்பம் என்ற புது விசயம் அதிர்ச்சியை தந்தது.. அவர்கள் வசதிக்கு நாம் சாதாரணமானவர்களே என்று.. தீபாவுக்கும் அப்படியே..அடுத்த வாரம் முழுவதும் நீல உடையில் வந்தாலும் சிவாவின் கவுண்டரை தவிர்த்து, அலமேலுவிடமே எல்லா வேலைகளும்..
அலமேலுவுக்கு சிரிப்பாக வந்தது, சிவாவின் பொறுமும் கோவத்தை பார்த்து.. " ஏன் மேடம் , என்ன சொக்குப்பொடி போட்டீங்க, இங்க வரவிடாம?.."
" அட, அதொண்ணுமில்லை சார்.. பெண்ணுக்கு வெட்கமாம்.. அதான் நீல நிறத்தில் வாராங்களே.. அப்புரம் என்ன?.."
பேச ஆசை.. ஆனால் எப்படி பேச, எங்கு பேச..என்ன பேச?..
" இதுக்கெல்லாமா டிரையினிங் தர முடியும்..என்ன இது பெண் மாதிரி வெட்கப்பட்டுக்கொண்டு?.."
" அய்யோ மேடம் எளிதா சொல்லீட்டீங்க.. பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.. எப்படி அழைக்க தீபாவை?.."
" சரி அப்ப என் வீட்டிற்கு அழைக்கிறேன் தீபாவை..அருகில், நடக்கிறதூரம்தானே.. நிச்சயம் ஆனதும் ,பேசுங்கள்.."
" மேடம்னா, மேடம்தான்.. எங்க வீட்டில்தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க என் முறைமாமன்மார்..அதையும் சமாளிக்கணும்.. "
ஒருவாராக, பெண்பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு வேன் நிறய ஆள்கள் வந்தார்கள்.. ஆடித்தான் போய்விட்டார்கள் தீபா வீட்டில்..
சிவாவின் அம்மா குடும்பம் பெரிய பண்ணையார்..மூன்று தம்பிமாருக்கு ஒரே அக்கா சிவாவின் தாயார்.. மிகுந்த வருத்தம் தன் தம்பியின் மகளை முடிக்காமல் சிவா தீபாவை பிடிவாதமாக விரும்புகிறானே என்று...
இஷ்டமில்லாமல் வந்தாலும் பெண்ணை என்னவோ பிடித்திருந்தது...பார்த்து முடித்ததும், சிவாவின் குடும்பம் ஒரு வேனில் சென்றதும், சிவாவின் மாமாமார், தீபாவின் அப்பாவிடம், திருமணத்தை சிறப்பாக செய்யும்படியும், சீர்கள் அனைத்தும் தங்கள் தரத்துக்கு செய்யவேண்டுமென்றும் சொன்னது பெரிய அதிர்ச்சி... அப்படியே வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவர்,
" *இந்த சம்பந்தத்தை மறந்துவிடு தீபா*.."
" *சரி அப்பா*.." எதுவுமே யோசிக்காமல்....தீபாவும்...


********************************************தொடரும்**********************

No comments: