Friday, March 21, 2008

வேலாயி -பாகம் 9 - கனா கண்டேனடி தோழி.. ===========================================*
போன் மருத்துவமனையிலிருந்து வந்தது.. சிவா பேசிவிட்டு தீபாவிடம் தருகிறான்.. உடனே வருவதாகக்கூறுகிறாள்..
வேலாயி மிகவும் தளர்ந்து போயிருப்பதாகவும், மேலும் இன்னும் 1 மாதம் தங்கி ஓய்வு தேவை என்றும் சொல்ல சம்மதிக்கிறாள்..
தீபா பகலில் கூட இருந்து கவனித்துக்கொள்கிறாள்.. மாலை வீடு திரும்பியதும் முத்துவை .. ஆளே மாறிவிட்டான் முத்து..
---------------------------------------------------------------------------­---------------
மாமியார் ஊரில், அலுவலுக்காக ஆண்கள் வெளியே சென்றுவிட, வீட்டில் 3 தம்பி மனைவியருடன்...அவர்கள் மருமகள்களுடன்..
தம்பி மனைவிமார் பயத்தில் , மரியாதை குடுத்தாலும், மருமகளில் ஒருத்திக்கு மட்டும் வாய் அதிகம்.. பட்பட் என்று எதையும்
பேசிவிடும் பழக்கமுள்ளவள்.. அவளுடன் ஒத்துப்போக கஷ்டமாக இருக்கிறது... மேலும் குழந்தைகளையும், அவர்கள் சேட்டைகளும்,
மாமியாருக்கு எரிச்சலூட்டுகின்றது...தன் வீட்டில் ராஜ்ஜியம் பண்ணியதுபோல் இங்கு பண்ண முடியவில்லையே.. தான் செல்லமாக வளர்ந்த வீடு.
ஒரே பெண் குழந்தை என்று செல்லமாக வளர்ந்ததென்ன , தம்பிமார், குடுத்த மரியாதை என்ன.. இப்ப யாருக்கு நேரம் இருக்கிறது என் பேச்சை உட்கார்ந்து கேட்க..
யாரிடம் புலம்ப.. இதற்கு தன் மருமகள் தீபாவே மேல் , 10 வருடத்தில் எதிர்த்து பேசியது இதுதான் முதல் தடவை... எப்படியும் இன்னும் 4 மாதத்தில் குழந்தை
பிறந்து விடுமாமே.. அட , நம் வீட்டுக்கும் ஒரு குழந்தை வரப்போகிறதே.. யாரை மாதிரி இருக்கும்.. சிவா மாதிரியா?.. இல்லை சிவா அப்பா போலவா?. இல்லை என்னை மாதிரியா?..
மனதுக்குள் சிரித்துக்கொள்கிறார்.. வேலாயியும் நல்லவள்தானே.. அதிக சுத்தம். , கடவுள் பக்தி...வெகுளி.. நம்மைத்தவிர யாரைத்தெரியும் அவளுக்கு..
சே, புள்ளத்தாச்சிகிட்ட கொஞ்சம் கரிசனமா இருக்கணுமே.. சாமி குத்தமாயிடுமே...என் குடும்ப வாரிசை சுமக்கிறாளே..
அன்றே தன் தம்பி வந்ததும் தன்னை ஊருக்கு அனுப்ப சொல்கிறார்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------------
வேலாயி அவுட் ஹவுஸில் பெட் ரெஸ்டில் வைத்து கவனமாகப்பார்த்துக்கொள்கிறாள் தீபா... முத்துவுக்கு அழகான சட்டை வாங்குவதும், அவனுடன்
விளையாடுவதும், வேலாயிக்காக விசேஷமாக சமைப்பதும், வரப்போகிற குழந்தைக்காக ஸ்வெட்டர் பின்னுவதும்.., தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு
முழுமையாக வாழ்கிறாள்.. அவளுடைய மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் கண்டு சிவாவும் மகிழ்ச்சியடைகிறான்...ஓவ்வொரு முறை ஷாப்பிங் செல்லும்போதும், அரைமணிநேரம்
குழந்தைகள் பகுதியில் நின்று ஒவ்வொன்றையும் ஆவலுடன் எடுத்து பார்க்கிறாள்.. மறுபடியும் வைத்துவிடுவாள்.. வாங்கி வைத்துக்கொள்ள சின்ன பயம்..
இணையத்தில் குழந்தைக்கான பெயர் தேடுகிறாள்.. 1000 பேர் எடுத்து சிவாவிடம் தேர்ந்தெடுக்க சொல்கிறாள்... தினமும் ஒரு கனவு காண்பதும் அதை சிவாவிடம் சொல்வதும்,சிவாவுக்கு சில
சமயம் எரிச்சலாக வந்தாலும், தீபாவின் குழந்தைதனத்தை பொறுத்துக்கொள்கிறான்...வேலாயிக்கு இப்ப 8 மாசம்.. சின்ன உடம்புக்காரி.. வயறு மட்டும் பெரிதாக
இருக்கிறது..சாப்பிட முடியவில்லை..தீபாவுக்கு மசக்கை வருகிறது அவளைப்பார்த்து..கெஞ்சுகிறாள், கொஞ்சுகிறாள், சாப்பிடச்சொல்லி..
" அம்மா, நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம சின்னம்மாவோ, சின்னாய்யாவோ, அவுகளுக்காக நான் சாப்பிடுவேன்மா.. பசி திடீரென்று வரும், திடீரென்று
ஒண்ணுமே சாப்பிட பிடிக்காது,.. நீங்கள் கவலைப்படாதீங்கம்மா. இன்னும் 2 மாதம் பொறுத்துக்கோங்க.. " சிரிக்கிறாள்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------
இன்று கோவிலுக்கு சென்று அர்ச்சனை பண்ணிவிட்டு வரலாம் என்று கிளம்பியவள், கார் வந்து நிற்பதைப்பார்த்து , அதிலிருந்து அத்தை
இறங்குவதைபார்த்து அதிசயிக்கிறாள். ஆனால் இந்த முறை பலாப்பழம், தேங்காய், கடலை, என்று ஏகப்பட்ட சாமான்கள்..
புரிந்துகொண்டாள்.. நல்லபடியாக தான் வந்துள்ளார்கள் என்று...
" தீபா வேலையாளை கூப்பிடம்மா, இத எடுத்துப்போகச்சொல்லு..."
" சரி அத்தை இதோ.."
பெரிய மாற்றம் தெரிகிறது அத்தையிடம், இந்த 6 மாத காலத்தில...
" அவ எப்படிம்மா இருக்கா?.."
" யார் அத்தை?."
" அதான் வேலாயி மா.."
" அத்....................தை..." விழிகள் பனிக்கிறது தீபாவுக்கு.. கடவுளே என் பிரார்த்தனை வீண்போகலை..
" இன்னும் 2 மாதம்தான் அத்தை... உங்கள் பேரக்குழந்தை வந்திடுவான்(ள்)..."
" இன்னிக்கு பத்தியக்குழம்பு நான் சமைக்கிறேன் நீ கவனி.. சரியா..?" அத்தையை அணைத்துகொள்ளத் தோன்றுகிறது..
" சரி அத்தை.. இதோ கோவிலுக்கு போய்விட்டு சீக்கிரமா வந்துவிடுகிறேன்.." சந்தோஷமாக துள்ளிக்குதித்து ஓடுகிறாள்..
சிவாவுக்கு என்ன நடக்குது, கனவா, நினைவா, ஒன்றுமே புரியவில்லை..
---------------------------------------------------------------------------­--------------------------------------
வேலாயிக்கு அதிகமாக வயிறு வலிக்குது அடக்கி அடக்கி பார்க்கிறாள் முடியவில்லை.. இதுவரை ஸ்கேன் பண்ணவே விடவில்லை..தீபா
குழந்தைக்கு ஏதும் ஆகிவிடும் என்ற பயம்..ஆரம்பத்தில் ஒருமுறை பண்ணியதோடு சரி...
மாமியாரே சென்று முதன்முறையாக, வயிற்றுவலிக்கு கைப்பக்குவமாக மருந்து தருகிறார், சூட்டினால் வலியோ என்று..
ஆனால் மீண்டும் வரவே மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.. தீபாவோ கோவிலில்...வீட்டுக்கு வந்தவளுக்கு ஆச்சர்யம்.. செல்போனை எடுத்துச்செல்லாதது
குறித்து வருந்துகிறாள்.. சிவாவை தொடர்பு கொள்கிறாள்..ஸ்கேன் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறான்..உடனே செல்கிறாள் மருத்துவமனைக்கு..
பின் மருத்துவர் அவளைத்தனியாக அழைத்து விஷயத்தை சொல்கிறார்..
வெளியே வந்தவள் கண்ணில் கண்ணீர் வழியுது....அப்படியே முகத்தை பொத்திக்கொண்டு கண்களை மட்டும் திறந்து சிவாவை பார்க்கிறாள்..
அழவா, சிரிக்கவா என்று தெரியவில்லை...தீபாவுக்கு.. சிவாவுக்கும் , மாமியாருக்கும் இப்ப அதிர்ச்சி...
*******************************************தொடரும்..***********************

No comments: