Monday, February 18, 2008

லேசா லேசா - பாகம் 2




*பகுதி -2 --
---------------
காற்றே என் சுவாசம் வந்தாய். மெதுவாகக்கதவு திறந்தாய் ==================================================

மது ரகுவின் அழைப்புக்கு உள்ளே செல்ல ஆயத்தமாகிறாள்... நேற்று நடந்ததை மனதில் அசை போடுகிறாள்... என்னவோ சொல்லி தப்பிவிட்டாலும், வீடு சேரும் வரை பஸ்ஸில் அதைப்பற்றியே நினைப்பு... " ஏம்மா டிக்கெட் எடுக்கலியா?. செக்கிங் வந்தா எங்களுக்குதான் திட்டு....இன்னாதான் யோசிப்பாய்ங்களோ" அவசரமாக சுய நினைவுக்கு வந்து பணம் கொடுத்தாள், மீதி வாங்காமல்... எவ்வளவு தைரியம் ரகுவுக்கு...

நேரில் எப்படி.. சொல்ல கூடும்.... அதுவும் இவரே முடிவு செய்துட்ட மாதிரி...ஆண் என்கிற திமிர். அதிகாரி என்கிற கர்வம்.. கோவமாய் வருகிறது... ஒரு பெண்ணால் இப்படி சொல்ல முடியுமா?.. அந்த முனீஸ் வேறு விளையாடுகிறான்... சே பெண் என்றால் இவர்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரம்..... இல்லையில்லை, ரகு கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தானே கேட்டார்... இல்லைன்னா இல்லை, ஆமான்னா, ஆமா.. நான் என்ன பெரிய அழகுராணி... என்னைவிட்டால் அவருக்கு வேற பெண்ணே கிடைக்காதா என்ன...

இருபுறமும் சிந்திக்கிறாள், உண்மையை....

இருந்தாலும் இனி தொடர்வது எப்படி , அந்த அலுவலகத்தில் இன்னும் 6 மாதம் காண்ட்ராக்ட் உள்ளதே.. சட்டென்று விலகவும் முடியாதே....அன்ன பதிலுறைக்க, எப்படி மனம் புண்படாமல் சொல்ல, மேலதிகாரியாயிற்றே...

யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது... இதுதான் சாக்கு என்று ஆளாளுக்கு திருமண அறிவுரை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்...சாப்பிட மனமில்லாது கீதாம்மாவிடம் பொய் சாக்கு சொல்லி தூங்கச்சென்றாள்..

-----------------------------------

மறுபடியும் தொலைபேசி அழைப்பு....

" மது உன்னை கூப்பிட்டு 15 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது..."

" மன்னிக்கணும் .. சார்.. இதோ வருகிறேன் சார்..."

" சரி. சீக்கிரம்..."

--------------------------------

கதவை தட்ட... " உள்ளே வரலாம்..." இருக்கையை காண்பித்து அமரச்சொல்கிறார்.. அவர் எழுந்து தான் குடித்துக்கொண்டிருந்த சிகரெட்டைத்தூக்கி அணைத்து ஆஷ் டிரேயில் போடுகிறார்...
" சாரி.. எனக்கு இந்த பழக்கமுண்டு..."
" பரவால்ல சார்...".. நிசப்தம்..
"..ம்.. பிரமோத் கம்பெனிக்கு ஆர்டர் அனுப்பியாச்சா?.."
". இல்ல சார். இன்னிக்கு. அனுப்பிரலாம் .. சார்.."
"..ம்..." "...ம்.. துபாய் ஷிப்மெண்ட் என்னாச்சு..?.."
".. அது இன்னும் 1 வரமாகுமாம் சார்.. LC ரெடி பண்ணிட்ருக்கோம்..."
"..ம்.."
".. விவேகா எண்டர்பிரைஸ்...."
". கிட்டத்தட்ட ரெடி சார்..."..
" என்ன எது கேட்டாலும் முடிக்காத மாதிரி பதில் தாரீங்க... எதுவுமே முடிக்கலயா?.."
". சாரி... சார்... என்கூட உள்ள மல்லிகா 1 வாரம் லீவு...அதான்..."
".. அதனாலயா.., இல்ல, முனீஸ் கூட அரட்டையா?..."

.. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது... ஓஹோ இப்ப புரியுது.. , அவன்கிட்ட பேசுவது தான் குழப்பத்துக்கு காரணமோ....
". வேலையை மட்டும் ஒழுங்கா பாருங்க... நான் மேலதிகாரிக்கு பதில் சொல்லணும்.."
" சரி.. சார்..." லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடலாமான்னு தோணுது...
" சரி நீங்க போகலாம்..." அவள் கதவருகில் செல்லும்போது ,

"..ம்.. மது... நேற்று நான்........".. ஏதோ நினைத்தவராய்....

".. சரி சரி.. நீங்க தொடருங்க... யூ கேரி ஆன்."..

அப்பாடா தொல்லை விட்டது என்றிருந்தது அவளுக்கு...

முனீஸ் வந்தான்..." "என்னம்மா முகம் சும்மா தீபாவளி அதிரசம் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..."

அவனை பார்க்காமலே.., " முனீஸ் , மேனேஜர்.., ரொம்ப கோவமாயிருக்கார்.. இங்க இனி வராதே...ப்ளீஸ்.."

". ஹ . ஹ்.. இங்க பார்ரா... எங்க வேலையத்தான் ஒழுங்கா செய்ரோம்ல... அப்புரம் ஏன் பயப்படணும்.." என்று பக்கத்தில் இருந்த மேஜைமேல் ஏறி குதித்து உட்காரவும், மேனேஜர் வெளியில் வரவும் சரியாக இருந்தது.. மதுவின் முதுகுப்பின் என்பதால் அவள் கவனிக்கவில்லை...

ஆனால் அவன் நெளிந்துகொண்டே மேஜையிலிருந்து இறங்குவதை ஆச்சர்யமா, பார்த்துக்கொண்டே, வேலையில் ஈடுபட,

" உன்னுடைய இடம் எது முனீஸ்.." ரகு...

". சாரி சார்.. ".. மெதுவாக ஓடிவிட்டான்..
"..ம்.."

"..ம்.. மது..."

" சார்..." எழுந்து நிற்கிறாள் , பயத்துடன்...உட்காருமாறு கைகாட்டி... ". மது 11.00 மணிக்கு ஹோட்டல் தாஜ்ல ஒரு மீட்டிங்... ரெடியாயிருங்க.."

"சரி சார்.." எதுவும் சொல்லமுடியாமல்... யோசித்துக்கொண்டிருக்க.. அதற்குள், செக்ரட்ரி, அதற்குண்டான
கோப்புகளைத் தருகிறாள்...அவசரமாக புரட்டிப்பார்க்கிறாள்... வரமுடியாது என்று சொல்ல கூட அவகாசம் இல்லையே...இன்னும் 1 மணிநேரம் இருக்குது.. அதில்பயணம் 30 நிமிடமாகும்...


இதற்குள் போன் வருகிறது நிஷாவிடமிருந்து.... நிஷா அவள் தோழி.. கல்லூரியில் ஒன்றாகப்படித்து, கல்லூரி நண்பனையே மணமுடித்து, பின் அவளையும் 2 குழந்தையும் விட்டு அமெரிக்கா சென்றுவிட்டான்....

அழகுக்காகவே திருமணம் செய்து குழந்தைபெற்றபின் அவள் குண்டாகிவிட்டதாலும், இன்னும் பல கெட்ட பழக்கங்கள் MNC வேலையில் தொற்றிக்கொண்டதாலும் அவளைப்பிரிந்தவன்.. அதிலேயே வெறுப்புற்றுவிட்டாள், மது.. நிஷா யாருமற்ற நிலையில் சாகப்போனவளை திட்டி தடுத்து, அவளுக்காகவே தான் வாழ்வதாக சொல்லி அவளை மீட்டவள் மது...அவள் குழந்தைகளுக்கோ மது என்றால் உயிர்...நிஷாவின் மனநோயை மாற்றி நல்ல மருந்தாக ஊக்கம், கொடுத்து, பழசை மறக்கச்செய்து வேலைக்குப்போகச்செய்தவள் மது....

போன் உறையாடல் கலகலப்பாயிருந்தது.. அதுவும் பிள்ளைகளின் சேட்டைகள் பற்றி... நேரம் போனதே தெரியவில்லை... மறு தொலைபேசியில்...

" மது தயாரா?.. கீழ் தளத்துக்கு வந்துவிடுங்கள்...நான் அங்கு இருப்பேன்.."

". சரி சார்..." அவசரமாக தன்னை தயார் செய்து கொண்டு போகிறாள்.... -

-----------------------------------------------

காரில் ஓட்டுனர் இருக்கையில் ரகு... எப்போதும் டிரைவர் தானே ஓட்டுவார்.. இன்று என்ன புதுசா என்று யோசிக்கையிலேயே, கண்ணாலேயே கட்டளை இடுகிறார் வண்டியில் ஏறும்படி...முன்னாலா, பின்னாலா.. குழப்பம்.. பின்னால் ஏறுவது மரியாதை இல்லை...

முனீஸ் வந்தால் அவன் முன்னால் ஏறினால், நான் பின்னால் இருக்கலாம்.. இப்போதோ வழியில்லை. அன்று முன்னாலேயே பக்குவமாக அமர்கிறாள்... ரகு மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான்..

" ம். காலையிலேயே அம்மணிய மிரட்டுனது , பின்னாளில் சொல்லி சொல்லி அவளிடம் விளையாடலாம்... சிரிக்கலாம்....அடேங்கப்பா என்னா பயம் ..இருந்தாலும் பாவமாயுமிருந்தது அவனுக்கு... அதற்காகவும் அவளிடம் சகஜமாக பேசவேண்டும் என்றும் சந்தர்ப்பம் எடுத்து காரில்... அவள் எங்கு பார்க்க என தெரியாமல் .. ஃபைலை புரட்டிக்கொண்டிருக்க., அப்பப்ப, அவளை ரசித்துகொண்டே வண்டி ஓட்டுகிறான் ரகு... அவளுக்கு பயமாக இருக்குது...

எங்கே மறுபடியும் கேட்டுவிடுவானோ என்று...

" ஃபைலில் எல்லா விவரமும் இருகில்லயா?." அவளை பேசவைப்பதற்காகவும், தன்னை கவனிக்கவும்...

" .. ம்.. ஆமா சார்..." ரகுவைப்பார்த்து பதிலழிக்க...

" உனக்கு டிரைவிங் தெரியுமா.."
" இல்ல சார்.."
" சீக்கிரம் கத்துக்கொள்.."
".ம்.."
" என்ன ..ம்.."
" அது எனக்கு எதுக்கு ன்னு......"
" ம். நான் விருப்பப்படுகிறேன் . நீ கத்துக்கொள்ளணும் என்று ..
சரியா?.." எரிச்சலாக இருக்கிறது அவளுக்கு... இறங்கி ஓடிவிடலாமான்னு தோணுது அவளுக்கு...

இருக்கட்டும் எல்லாத்துக்கும் நேரம் வரும் அப்போது குடுக்கலாம்... இப்ப ஃபைலை பார்ப்போம் என்று மனதை திசை திருப்பினாள்.. சடன் பிரேக் போட்டு வண்டிய நிறுத்தினான் ரகு

... -----------------------------------------------------------------------

விமானம் பயங்கர சத்தத்துடன் லண்டன் ஓடுதளத்தில் தறையிரங்க...

" பயணிகள் கவனத்திற்கு.................................." கொஞ்சம் சோம்பல் முறித்து தயாராக இருக்கிறாள் இறங்க ....

பக்கத்து நபர் இன்னும் குறட்டையில்.. ஏர்போர்ட் வந்ததும் தொலைபேசியெடுத்து ரகுவிற்கு பேச முயல...

" இந்த எண் தற்போது தொடர்பு கொள்ள முடியாது... சிறிது நேரத்துக்குபின் தொடர்பு கொள்ளவும்..." உடனே வீட்டுக்கு போன் போடுகிறாள்.. விசாலம் அம்மா எடுக்கிறார்....

" அம்மா நலமாம்மா.. நான் மது பேசுறேன்.. " " எப்படிம்மா இருக்க?. உன் வரவை தான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கோம்..." " சரிம்மா ரகு இல்லையா..?.."

" இதோ மாடிலதான் குழந்தைகளோடு இருக்கான்.. கூப்பிடவா.." " வேண்டாம் மா..நானே பேசிக்கொள்கிறேன் மா.." ஒரே குழப்பாமாயிருக்கு... ஏன் ரகு போன் கூட எடுக்காமல்... சரி ரொம்ப பிஸி போல தன்னையே சமாதனப்படுத்திக்கொண்டாள்... இன்னும் 12 மணி நேரப்பயணம் இருக்கே.. ஒய்வெடுக்கச்சென்றாள் விடுதியில்... பழைய இனிய ஞாபகமும் தொடர்ந்தது..
. --------------------------------------------------------

" கொஞ்சங்கூட பொறுப்பில்லை இப்படியா குழந்தையுடன் சாலையைக்கடப்பது.." திட்டிக்கொண்டே ரகு..
" ரொம்ப சமயோசிதமா பிரேக் போட்டீங்க சார். மிக்க நன்றி சார்..." முதன்முறையாக தன்னையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசும் மதுவை அச்சர்யமாக, சந்தோஷமாக பார்க்கிறார்...

கொஞ்சம் வெற்றிக்களிப்பு .. அதற்குள் ஹோட்டல் வந்துவிட...மீட்டிங் செல்கிறார்கள்... அதில் ரகு மிக உற்சாகமாகவும் அறிவுபூர்வமாகவும் பணிவாகவும் பேசுவது வியப்பாக உள்ளது.. கடைசியில் அவருக்கே வெற்றியும்.. காண்ட்ராக்ட் கையெழுத்தாகுது.. நேரம் 1. 30... .
"சரி வா சாப்பிடலாம்"

" வேண்டாம் சார்.. நான் அலுவலகம் போய் சாப்பிட்டுக்கொள்கிறேன்...".
" அதுவரையில் நான் பசி தாங்கணுமா..?.."
" இல்ல அப்படி சொல்லல சார்.. நீங்க சாப்பிடுங்க... நான் காத்திருக்கேன்..."
" அது முடியாதே..இன்னிக்கு உன் ராசின்னு நினைக்கிறேன் எல்லாம் ஜெயம்..." புன்னகையுடன்.. அவர் பாட்டுக்கு நடந்து லிப்டின் பொத்தானை அளுத்துகிறார்..
நிறய பேர் மத்தியில் மறுக்க முடியாமல் இவள்... நல்லா மாட்டிக்கொண்டோம்னு மட்டும் புரியுது.... உனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும் ன் கேட்டு ஆர்டர் பண்ணுகிறார்.. அந்த உயர் ரக ஹோட்டலில் கத்தி போர்க், கரண்டி,, எல்லாம் கொண்டு வத்து வைக்க மெதுவாக அழகாக விவரித்து அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார் இவள் எடுக்கும் வேகத்தில் கத்தி பறந்து ரகு அருகில் விழ, அவருக்கோ சிரிப்பு...

ரசிக்கிறார், இவள் செய்யும் வித்தைகளையும் போராட்டத்தையும் , நாடியில் கை ஊன்றியபடி.. வெட்கித்தான் போகிறாள்....உள்ளே கோபமிருந்தாலும்...

எனக்கு இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ." " ம்.." " ஏன்னு கேக்கமாட்டியா...."
" மொதல்ல உன்கூட தனியா வந்து, இப்படி லஞ்ச் சாப்பிடுரது..." சொல்லிவிட்டு அவள் முகத்தைப்பார்க்கிறார் .... அவளோ கரண்டிகொண்டு தட்டில் எரிச்சலாய் கோலம்போடுகிறாள்...

" அடுத்து சந்தோஷம் உனக்குத்தெரியும், இந்த காண்ட்ராக்ட் முடிந்தது.."

"ஆமா சார்.. நீங்க நல்லா , தெளிவா ,அழகா பேசினீங்க. எனக்கு பிடித்திருந்தது.." கொஞ்சம் தைரியமாய்.. சரி பேச்சை மாற்றலாம் என்று அவள்...

" ஹாஹாஹா.... உண்மையாகவா..."

"ஆமா சார்...." ஒன்றும் புரியாமல் ...

" ஹாஹாஹா ..உண்மையா உனக்கு என்னை பிடிச்சிருக்கா.. ஹாஹாஹா.." மாட்டிக்கொண்டாளே என்று.. ".........." இப்போது புரிகிறது அவரின் கில்லாடித்தனம்...

------------------------------------------------தொடரும்.. இப்போதைக்கு லேசா..லேசா..

No comments: