பள்ளியில் முதல் நாள்
====================
இன்று டேனியை பள்ளியில் சேர்த்திடும் முதல் நாள்..ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், மற்றும் பயத்துடன் நுந்தைய நாள் தூக்கம் வரவில்லை.... யூனிவெர்சிட்டி தேர்வுக்கு கூட இவ்வளவு பயந்ததில்லை...
என்றும் 9 மணிவரை தூங்கும் குழந்தையை( 2 1/2 வயது) இன்று 6 மணிக்கு எழுப்பி சாப்பிட வைத்தால், தூங்குது...குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் தோழில் தூங்குது...
ஒருவழியா , பெரியவனை 6.30 மணி பள்ளி வாகனத்துக்கு கீழே அனுப்பிவிட்டு , நங்கள் 7 மணிக்கு கீழே வந்தால் பெரியவன் இன்னும் இருக்கான்.. என்னப்பா போகலையான்னு கேட்டால், அம்மா பிளீஸ் நானும் வருகிரேன், தம்பியை பள்ளியில் அனுப்ப என்கிறான்...எனக்கு வந்த எரிச்சலில், ஏன் உன் பிரமண்ட்ஸையும் கூப்பிடலாமே என்றேன்... குட் ஐடியா அம்மா, கூப்பிடவா என்கிறான்... உடனே மேலதிகாரியிடம்( வூட்டுகாரர் தாங்க) " ஏங்க கொஞ்சம் இவனை பாருங்கன்னு சொல்லி முடிப்பதற்குள், ஆள் லிப்டுக்குள் மாயம்... ( அப்பா உதவுரமாதிரி அம்மா உதவுரதில்லை போல..)..
ஒருவழியா பள்ளி சென்றபோது, ஏகப்பட்ட குழந்தைகள், பெற்றோர் தோழில் மலர்ந்தபடி...ஒவ்வொன்றும் ஒரு விதமான பொம்மைகளாய்..பிஞ்சு கை, கால்களுடன்,புன்னைகைத்துக்கொண்டு...
8.30 பெல் அடித்தவுடன், பல பெற்றோர், குழந்தையை மட்டும் விட்டு செல்ல, ஒரே அழுகை சத்தம் ஆரம்பித்தது..என் கண்கள் மற்ற பிள்ளைகளைப்பார்த்து கலங்க ஆரம்பித்தது...ரெடியா காகித்தத்தை ( டிஷ்யூ)கையில தருகிறார் என்ற வீட்டுக்காரர்.. ( இதுக்கொண்ணும் குரைச்சலில்லை , சினிமா பார்க்கும்போதும் இப்டித்தான்...) என் பையன் பற்றி பயந்திருந்த எங்களுக்கு ஆச்சர்யம் . விளையாட ஆரம்பித்துவிட்டான்...அதிக நாள், கழித்து, பிறந்ததாலோ, இல்லை, வேலைக்காரி வைத்து வளர்ப்பதாலோ, அடிக்கடி சுகவீனமடைவதாலோ ,அதிக செல்லம் கொடுத்து விட்டோம்....
அரைமணி நேரம் கழித்து போட்டோ அல்லாம் எடுத்து முடிந்ததும் என் கணவர், சரி நீ ஆபீஸ் கிளம்பலயா, எனக்கு நேரமாச்சு என்று கூசாமல் சொல்கிறார்... முரைப்பதை தவிர வேரொன்றும் செய்ய முடியல...எப்படி விட்டுச்செல்வது, குழந்தையை?.. தெரியாத ஆள்கள், பாஷை, இடம்.....குழந்தை எப்படி குழம்பிப்போவான்....எப்படித்தான் சில பெற்றோர்கள் விட்டுச்செல்கிறார்களோ?
5 நிமிடத்துக்கொருமுறை அம்மா இருக்கங்களான்னு செக் பண்ணுகிறன்.கலர் பண்ணவும், பேஸ்ட் பண்ணவும், பாட்டுப்பாடவும் சொல்லித்தந்தார்கள்.. இடையிடையே விளையாட்டு...பகிர்ந்துகொள்ள இன்னும் பழக்கப்படவில்லை... சண்டை பிடித்தான்... அடுத்த குழந்தையை தூக்கி நான் சமாதானம் செய்தேன்.. சாரி சொல் என்றால், தெளிவாக " சாரி சொல்ல மாட்டேன் " என்கிறான்...
எனக்கே இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது, என்னுடைய பேபி கிளாஸ் விஜயமும் , ஆசிரியை தொடையில் கிள்ளி என்னை உட்காரச்செய்ததும்...... ஆனால் அந்தளவு மோசமில்லை, இன்று...
இப்படியாக அவன் வரலாற்றில் முக்கிய தினம் நல்லபடியாக கழிந்தது...( இன்னும் நாளைக்கு,மற்றும் வரும் நாட்கள் என்ன பாடு படுத்தப்போகிறானோ???? )
Monday, February 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment