Monday, February 18, 2008

போட்டியிடும் வரட்டு கெளரவமும் ,பாசமும்..( முதல் கதை)


வாழ்க்கையின் யதார்த்தம்.. ------------------------------------------------
பள்ளி விடுமுரை வரப்போகுது, குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்..
குழந்தைகளுக்கு மட்டுமா, குமரிக்கும் தான்...வீட்டில் வெச்ச பேரென்னவோ லக்ஷ்மிகுமாரி, ஆனா நம்ம ராசா கூப்பிடுரதென்னவோ குமரிதான், அதாவது மனைவி எப்பவும் இளமை அவருக்கு..
இந்த மன்மத ராசாவுக்குதான் உள்ளுக்குள்ள ஒரே வருத்தமா போச்சு.. பொண்டாட்டி ஊருக்கு போனா சாந்தோசமா இருக்கிரவரில்லை நம்ம ராசா... ஆனாலும் வெளில காண்பிச்சுக்க மாட்டார்....
கிளம்புராங்கன்னதும் மூட் அவுட்..
"ஏனுங்க டெல்லியிலிருந்து சென்னைக்கு போக பிளைட் டிக்கெட் எடுத்தாச்சா"
" அதெல்லாம் நான் பாத்துக்கரேன்.. நீ மத்த வேலையைப் பாரு."..
" ஆமாங்க , ஷாப்பிங் போகணும்"
" ஏன் ஒவ்வொரு வாட்டியும் பொதி சுமக்கிர கழுதை மாதிரி இப்படி அள்ளிகிட்டு போர?. அங்கேயே எல்லாம் கிடைக்குது இப்ப..பாத்து செலவு பண்ணு.."
" இல்ல இந்த வாட்டி அண்ணி , அதான் உங்க அக்கா , நல்ல ஹேண்ட் பேக்,
அப்புரம் செருப்புகள், அலங்காரப் பொருள்கள் வாங்கி வரச் சொல்லிருக்காங்க..
இங்க தான் விலை மலிவு.."
" என்னவோ பண்ணுங்க.. ஏதோ கம்பெனிகாரன் இலவசமா டிக்கெட்
தாரான் , அத வெச்சு ஜாலியா போனமா, வந்தமான்னு இல்லாம.. நல்லவேளை நான் உன்கூட வரல.
மனுசன் தனியா இருப்பானேன்னு அக்கறையில்லை.. எல்லா லீவுக்கும் போயாகணுமா"
" ஹாஹா.. நீங்க வரலைன்னுதான் நானே கிளம்புரேன்... அங்கயுமா வந்து ? கொஞ்சம் நிம்மதியா 10 நாள்.."
" என்ன ரொம்ப அலுத்துக்கிர?..போ . போ... நான் 10 நாள் நிம்மதியா இருப்பேன்.."
ஒரு அசட்டுச் சிரிப்புடன், தன் ஷாப்பிங் லிஸ்டில் ஐக்கியமானாள்...
ஊர் கிளம்பும் முதல் நாள் வந்தது...
" ஏங்க கொஞ்சம் இந்த சாமானெல்லாம் பெட்டியில் மட்டும் அடுக்கிவிடுங்களேன், நீங்கதான் நல்லா செய்வீங்க"
" ஏன் உனக்கென்னவாம்" சொல்லிக்கொண்டே சென்றார். சரி இன்னிக்கு விட்டா அம்மணி இன்னும் 10 நாள் ஆகும்..
சந்தோசப்படுத்திருவோம்னு குஷியா அடுக்கச்சென்ற நேரம் பார்த்தா
பக்கத்து பிளாட் நவீன் உள்ளே வரணும்...????
" அண்ணா, உள்ளே வரலாமா?. என்ன சாம்பார் வாசனை மூக்கைத்தூக்குது?.. "
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்,, அய்யோ போனா வரமாட்டான், வந்தா சாப்டாம போமாட்டான்..
ஒருவேலையும் முடியாதே...
" ஏ , வாப்பா, என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்"
" ஆமா , அதிருக்கட்டும், அண்ணி ஊருக்கு போராங்களாமே,
அதான் இத அம்மாவுக்கு குடுத்து விடலாம்னு "
அப்படியே ஒரு சொல்லமுடியாத ?? பார்வை குமரியைப் பார்த்தார் ராசா...இருக்கிர
பார்சல் பத்தாது...இன்னும் எத்தனை பேருக்கு சொல்லீருக்கீங்க மேடம் ?? ங்கிர மாதிரி..
" அது வந்துங்க , அன்னிக்கு பார்டியில, நான் ஊருக்கு போரேன்னு எல்லார்கிட்டயும்
வழியனுப்பிட்டு வந்துட்டேன் .. நான் வேர சங்கத் தலைவியா, அதான்....
என்று சொல்லிவிட்டு, சமையலரைக்குள் தப்பித்துவிட்டாள்..
ஆமா இவ பெருசா இங்கிலாந்து மகாராணி போரா!! னு மனதுக்குள்
திட்டிக்கொண்டு, புன்னகைத்தார்...
அரதப்பழசான ஜோக்குகளையும், தன் பிளாக் புகழையும், தேவையில்லாத
உலகச்சந்தை பற்றியும், சலிக்காமல் நவீன் சொல்ல, கொட்டாவியுடன்
, டிவி சேனலை மாற்றிகொண்டே கேட்டார் ராசா...
இரவு படுக்கும் வரை பெட்டி அடுக்கவில்லை.. கோபம் வந்துவிட்டது குமரிக்கு..
"10 நாளைக்கு நீங்க பட்டினிதான் .. நான் ஒண்ணுமே செய்து வெக்கல உங்களுக்கு..."
அடபாவமே, நானா காரணம், உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா???
சரி சரி , நான் உதவுரேன் னு சொல்ல சொல்ல அழுதுகொண்டே சென்றுவிட்டாள்..
இனி அவள சமாதானப்படுத்தி, பெட்டிய அடுக்கி, ??? நடக்கிற காரியமா???
ரோசம் , ஏமாற்றம் கொண்ட ராசா, அப்படியே கட்டிலில் சாஞ்சுட்டார்...
கோவத்தோடே மறுநாளும் விடிந்தது... இவரோ லீவு போட்டு ,வழியனுப்ப ஒரு பந்தா பண்ணலாம்னா
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுராங்க அம்மணி...தானே போய்க்கொள்வதாய்..
" அப்புரம் ஏன் லீவு போடச்சொன்ன என்னய?"
" ம். அது அப்போ.. இப்போ நாங்களே போய்க்குவோம்..ரொம்ப நன்றிங்க"
இதுக்கு மேல் பிள்ளைகள் முன்னால் மரியாதை இழப்பது அவ்ளோ நல்லாருக்காதுன்னு,
" சரி, டிரைவர் அனுப்புரேன், "
' " அய்யோ உங்களுக்கெதுக்கு அவ்வளவு சிரமம்.. நன்றி.." அம்மணி கலங்கிய கண்களுடன்...
சிலசமயம் இந்த பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது...
10 நாள் ஊருக்கு போக என்னா பில்டப் தாங்க முடிலயே..னு நினைக்கும்போதே வழியனுப்ப தோழிகளோட, கணவன்மாரும்
மேடம் ஒண்ணும் கவலைப்படாதீங்க, செடி, நாயெல்லாம் எங்க பொறுப்பு...
அப்புரம் அந்த ஆனந்த் பவன்ல
" இருக்கு இருக்கு ஞாபகமிருக்கு"..னு சொல்லிகிட்டே,
அவள் டாக்ஸியில் செல்ல ராசாவை ஒரு குற்றவாளியைப்போல பார்த்துவிட்டு செல்கின்றனர்...
கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணி என்னாச்சுனு விசாரிக்கலாமென்றால், பதிலில்லை.
ஏர்போர்ட்டில் எல்லாம் முடிந்த பின், அவளிடமிருந்து போன்..அதுவும் மிஸ்ட் கால் மட்டுமே..
அவசர அவசரமாய், பாத்ரூமிலிருந்து வெளி வந்தவன்,
"சொல்லும்மா என்னாச்சு?. லக்கேஜ் எல்லாம் ஒகே யா?."
" ம்"
" டாக்ஸில பத்திராமா போய் சேர்ந்தீங்களோன்னு பயந்துட்டிருந்தேன்"
"ம்"
" பிள்ளைகள் நல்லா பாத்துக்க"
"ம்" கொஞ்சம் லேசா அவள் மனதில் ஏதோ
" ஏம்பா நல்லா செலவு பண்ணு என்ன?. யோசி....க்க்..காதே" ராசாவுக்கு தொண்டையில் ஏதோ...
போனை கூர்ந்து கவனிக்கிறாள்.கலக்கமாக.
"ம்..சரி குளிர்பெட்டியில் எல்லாம் தேதி போட்டு வெச்சுருக்கேன்.. ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுங்க"
" ஏன் இதெல்லாம் பண்ணின?.. சொல்லக்கூடாதா மொதல்லே?." அவர்..
" வேளைக்கு மாத்திரை சாப்பிடுங்க ..ம்க் ம்க் ..ம்க்.." விசும்பலுடன்..
"ஏய் என்ன அழுவுரயா என்ன?"
"ம்..ம்..ம்.. இல்ல.ம்ம்.."
" அட என்னம்மா நீ. . இரு நான் வரட்டுமா. இன்னும் நேரமிருக்கே???"
"....ம்கூம்....."
பிள்ளைகள் இருவரும் ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்கிறார்கள்..
" ஏய் . கண்ணதுடைச்சுக்கோ.. பசங்க பார்க்கப்போராங்க"
" ..ம் ... நான் திரும்பி வந்துடவா?"
" அட லூசு மாதிரி .. எப்பவும் ....." என்றவன் பல்லைக்கடித்துக்கொண்டான், அடுத்த சண்டையிலிருந்து தப்பிக்க.... ---------------------------------------------------------------------------