Monday, February 18, 2008


பாகம் - 5

சனிக்கிழமை விடுமுறையாதலால் மது நிஷாவின் வீட்டுக்கு செல்வது வழக்கம்...குழந்தைகளுக்கு வேண்டியபொருள்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாகச்சென்றாள்..கதவைத்திறந்த நிஷா ஒப்புக்கு உள்ளே வா என்று சொல்லிவிட்டுசெல்ல, ஒருமாதிரியிருந்தது..

குழந்தையுடன் விளையாடிவிட்டு வரும்வரை அவள் சமையலிலே... என்னாச்சு இவளுக்கு.
" ஏய் என்னாச்சு.. நானும் வந்ததிலேருந்து பார்க்கிறேன்.. சரியாயில்லை நீ. ஏன்.."பதிலில்லை..
பின் கை இரண்டையும் பிடித்து அடுத்த அறைக்கு அழைத்து வந்து
"இப்ப நீ சொன்னாதான் உண்டு.."

" என்ன சொல்ல.. இன்மேல் நீ இங்கு வரவேண்டாம் மது.. நானே என்னைப் பார்த்துக்கொள்வேன்..."
" பைத்தியமா உனக்கு..."
" ஆமா . இவ்வளவு நாள் அப்படித்தான் போல. இப்பத்தான் தெளிஞ்சிருக்கேன்.."
" என்ன சொல்ற நீ.."
" ஆமா மது, நீ எனக்காகத்தான் திருமணம் செய்யாமலிருக்கிறாய் என்று ஊர் முழுக்க பேச்சு.."
" ஹஹஹஹ. இவ்வளவுதானா. அதுக்குதான் அம்மணி கோவமா..என் செல்ல நிஷா.." என்று அவளை இழுத்து அணைத்துக்கொள்ள,அவள் விலகி
" உண்மையாகத்தான் சொல்கிறேன் . நீ இனியும் திருமணம் செய்யாவிட்டால் இங்கு நீ வருவதை அனுமதிக்க மாட்டேன்.."
" . அவ்வளவுதானே.. சரிங்க நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளை பாருங்க..அதுவரைக்கும் வரலாம்தானே?.." சிரிப்புடன்..

" . ம். மாப்பிள்ளை ரெடி... நீதான் சரின்னு சொல்லணும்.."

" ஹாஹாஹா.. அட அதுக்குள்ளேயே.."விழுந்து விழுந்து சிரிக்கிறாள் விளையாட்டு என்றெண்ணி..

" சரி யாராம் மாப்பிள்ளை..?"
" ரகு.."அப்படியே அதிர்ச்சியில் மது நிஷாவை முறைக்கிறாள்..
" ஒஹோ . இங்கு வரைக்கும் வந்தாச்சா , விஷயம்...என்ன இதெல்லாம்..." சற்று கோவமாக...

"புரிந்துகொள் மது.. ரகு மிகவும் நல்லவர், நான் விசாரித்தவரையில்.."
" நிஷா.. தயவுசெய்து இனி அதைப்பற்றி யாரும் பேசவேண்டாம் என்னிடம்.. எந்த மாற்றமுமில்லை..."
" அப்போ நானும் தீர்மானமாய் சொல்கிறேன், நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. எனக்கெதுக்கு பழி.."அழுகையாய் வருகிறது மதுவுக்கு...
" நீயுமா என்னைப்புரியாமல்" என்று அவள் மடியில் படுத்துக்கொள்கிறாள்..அன்பாக அவள் தலை வருடியபடியே நாந்தான் முதலில் சந்தோஷப்படுவேன் மது உன் திருமணத்தைப்பார்க்க...
-------------------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்தால் அண்ணா போன் செய்த விவரத்தை அப்பா சொல்கிறார்...கீதாம்மா டாக்டர் சொன்னதாக ரகுவைப்பற்றி கேட்கிறார்.
" என்னம்மா சொல்ற நீ.. உன் விருப்பம் என்ன.. உன் அதிகாரியாமே..."அப்பா.

"எனக்கு இஷ்டமில்லைப்பா.. இத்தோடு விட்ருங்கப்பா.."

" சரி நாங்க பார்த்த மாப்பிள்ளைதான் பிடிக்கல. என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய் மனதில்..."கீதாம்மா கொஞ்சம் வருத்ததுடன்...

" புரிஞ்சுக்கோங்கம்மா. எனக்கு திருமணமே வேண்டாம்..."

" அதுதான் ஏன்.. எங்களுக்கு கடைமை இருக்கே...நீ ஒண்ணும் சம்பாதித்து எங்களைக்காப்பாத்த வேண்டாம்."

" அப்பா..." அழுகிறாள்... சரி விடு கீதா..குழந்தைகிட்ட நான் பேசிக்கிறேன் ..

" என்னமோ போங்க.. அவளுக்கு செல்லம் கொடுத்தே எல்லாம் அவள் இஷ்டப்படி..."மகளை ஆறுதல்படுத்தி மாடிக்கு அழைத்துச்சென்று அமைதியாக , விளக்குகிறார்..

பொறுமையுடன் அவள் கருத்தையும் கேட்கிறார்.. இறுதியில் அவர்கள் வீட்டார் வந்து பார்த்துவிட்டு மட்டும் செல்லட்டும் டாக்டருக்கு கொடுக்கும் மரியாதைக்காக என்று அவளின் அனுமதியும் பெறுகிறார்.

2 comments:

Anonymous said...

உரைநடை மூலமே நல்ல கதை சொல்லும் பாங்கைக் கண்டு நான் வியக்கிறேன். இதுதான் சாந்தியின் தனிச் சிறப்பு எனலாம். இன்னும் தலைசிறந்த கதையாசிரியராக வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

- சூர்யா

rahini said...

nalla karuthoodu oru kutti kathai paditheen
anpoodu
kavithaikuyil
rahini