Monday, February 18, 2008

பாகம் - 3 தொடர்கிறது
..................................
உணவருந்தி முடித்ததும் தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்
" சார் நான் வீட்டுக்கு போகலாமென்று இருக்கிறேன்.."


" ஓ தாராளமா... நானே உன்னை விட்டுச்செல்கிறேன்.."

" இல்லை .. நான் ஒரு ஆட்டோ வைத்து சென்றுகொள்வேன்.. நன்றி..."

" நோ. நோ... எனக்கொண்ணும் சிரமமில்லை... நானும் அலுவலகம் போகவில்லை.."

பேசி தப்பிக்கவே முடியாது என்று சம்மதித்து இடத்தையும் சொல்கிறாள்..
வீட்டருகே வந்ததும் அதுவரை மெளனம் காத்த ரகு.,.


" மிக்க நன்றி.. நான் உன்னிடம் இருந்து விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்.."

ஒரு புன்னகையை மட்டும் மரியாதைக்காக அளித்துவிட்டு... நன்றி கூறி விடைபெறுகிறாள், தெரு முனையிலேயே...

---------------------------------------------------------------------------­--------

விமானம் சென்னை நிலையத்தில் இறங்கவும், மதுவின் உள்ளம் மகிழ்ச்சியால் பீறிடுகிறது...
1 மாதப்பயணம் முடிந்து எல்லோரையும் சந்திக்கப்போவதால்., முக்கியமாக குழந்தைகளை..
அலுவலக வண்டி வந்துள்ளது... சகல மரியாதையுடன் விடு சேருகிறாள்..
குழந்தைகள், விசாலம் அம்மா, எல்லோரும் , வேலையாட்களுடன் அவளை வரவேற்க..


ரகு மட்டும் மாடியிலிருந்து மரியாதைக்காக கையசைக்கிறான்..
வேலையாட்கள் ஒவ்வொருவரிடமும் அன்பாக விசாரித்துவிட்டு, குழந்தைகளுடன், 1 மணி நேரம் செலவிட்டு
, பின் விசாலம் அம்மாவிடம் பேசுகையில்..,


" ஒருவாய் சாப்பிட்டு படும்மா.. ரொம்ப அசதியில் இருப்பாய்..."

" இல்லம்மா, நான் விமானத்திலேயே சாப்பிட்டுவிட்டேன் "

கட்டாயப்படுத்தி சாப்பாடு எடுத்து வந்து பிடிவாதமாய் ஊட்டிவிடுகிறார்...

"என்ன தவம் செய்தேன் அம்மா " கண்கலங்குகிறாள்..

" சரி சரி.. நீ போய் உன் கணவனைக்கவனி..மீதி நாளைப்பேசலாம்..."கிண்டலாக..

------------------------------------------------

மாடிக்குச்சென்று ரகு இருக்கும் அறைக்கு செல்கிறாள்..

அவன் இவள் வந்தது தெரியாததுபோல் புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான்..
" நல்லா இருக்கீங்களா..?. வேலையெல்லாம் அதிக சுமையில்லையே?..."


புன்னகையோடு இவளே ஆரம்பிக்க..

" ..ம்.. இருக்கு. உன் பிரயாணம், கான்ஃபரன்ஸ் எல்லாம் நல்லபடியா இருந்திருக்கும் என நினைக்கிறேன்.."

". ம்.ம்."

வேறொன்றும் பேச விரும்பவில்லை என்று அவன் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது...

குளித்து உடுப்பு மாற்றி அவள் வரும்போது ரகு பால்கனியில் சிகெரட் புகைத்துகொண்டிருந்தான்..

இவள் போய் நின்றும் திரும்பி கூட பார்க்கவில்லை..

சரி தொந்தரவு செய்ய விரும்பாமல்...இவளும் பூஜயை முடித்துவிட்டு, மிகவும் அசதியாக
இருந்ததால் படுக்கச்சென்றாள்...


" உன்கிட்ட நான் பேசணும்....."

சந்தோஷமாக விருட்டென்று மலர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்தாள்...

" நாம் இருவரும் நல்லமுறையில் பிரியலாம் என்று நினைக்கிறேன்...".

ஒரு நிமிடம் அப்படியே இடி விழுந்ததுபோல் இருந்தது அவளுக்கு...

எவ்வளவு கனவுகளோடு வந்தேன் ரகு.....என்னுடைய கவலையெல்லாம் மறக்கலாம்
என்று நினைத்து வந்த எனக்கு இப்படி ஒரு பரிசா...
அழக்கூட முடியாமல், தோல்வியில் துவண்டு போனாள்..


ரகு தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.....

No comments: