Monday, February 18, 2008

பாகம் -4

வேந்தனுக்கு , அப்பா மதுவுக்கு இவ்வளவு இடம் கொடுப்பது பிடிக்கவில்லை...என்ன விஷயம் என்றாலும் அவளைக்கலந்தாலோசித்து பின்னரே முடிவெடுக்கிறார்...சிலசமயம் அவள் சில முடிவுகளை நிராகரித்தால் அதற்கும் அப்பா ஒத்துபோகிறாரேஎன்று எரிச்சலாய் இருக்கின்றது வேந்தனுக்கு...

தன் அமெரிக்கப்படிப்பு , அனுபவம்,எல்லாம் அவளுக்குப் பின்னால்தானா?.. அவள் என்ன வெறும் M.Com.,, M.B.A தான்...என்ன இது சுத்த பைத்தியக்காரத்தனமாய் இருக்குது..சரி எல்லாம் அப்பா காலம் வரைக்கும் தான்... என்று பொறுத்தார்...இப்படித்தான் ஒருமுறை மதுரையிலுள்ள ஒரு ஃபாக்ட்ரியை மூடுவதன் பொருட்டு வக்கீல் மற்றும் ஆடிட்டர்அனைவரையும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்காக அப்பாவுடன் ஆலோசனை நடத்தும் கூட்டத்திலும் அவளையும் அழைத்தார் அப்பா..

எல்லா வற்றையும் கேட்டுவிட்டு 2 மணிநேரம் கழித்து
" நீ என்னம்மா சொல்ற மது .."
" அய்யா மன்னிக்கணும், அந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது.. அவர்களுக்கு வேறு வேலை தெரியாது...ஆகையால் மனிதாபிமான முறையில் அதை ஒரு தொண்டு நிறுவனமாக மட்டும் கணக்கில் கொண்டு மாற்று தொழில் ஏற்படுத்தும்வறை அதை மூடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.." என்று

அதற்குண்டான அனைத்து புகைப்படங்கள்பேட்டிகள், presentations( மன்னிக்க) எல்லாவத்தையும் விளக்கமாகத் தந்தாள்..அதைப்பார்த்த மாத்திரத்தில் ராமர் அய்யாவும் ,
" சரி இப்போதைக்கு இதனை மூட வேண்டாம் . தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிடுங்கள்.."என்று ஒத்தை வரியில் சொல்லிவிட்டு ,

" நன்றி அனைவருக்கும்.."என்று முடித்துவிட்டார்..வேந்தனுக்கும் மற்ற சகோதரருக்கும் பயங்கர அதிர்ச்சி...கிட்டத்தட்ட 2 மாதமாகசெலவழித்த அனைத்து வேலைகளும் , நேரமும் வீண்...

எல்லாத்துக்கும் காரணம் மது..தோல்வி என்று ஏற்கமுடியாமல் அவளுடைய அணுகுமுறையையும் ஒருகணம் வியந்தார்..எப்படி இத்தனை விவரங்களை ஆர்ப்பாட்டமின்றி விரல்நுனியில் வைத்திருக்கிறாள்..

எல்லோரும் சொல்வதுபோல் அவள் ஒன்றும் தெரியாதவள் அல்ல. என்ன பெண் என்றஒரு மனப்பான்மை , அனுபவக்குறைவு அவளை குறைத்து எடைபோடச்செய்கிறது,.குழப்பமாக யாரையும் தன்னை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் செல்ல நாய்களுடன் வேட்டைக்கு மலைக்கு பொழுதுபோக்க புறப்பட்டார்....அவருடைய உலகமே தனி.

.இயற்கையும், விலங்குகளும் , தனிமையும் ..அவருக்கு பிரியமானவை... அந்த தனிமையேபலவிஷயத்தை கத்துக்கொடுக்கும் குரு அவருக்கு..

.---------------------------------------------------------------------------------

ரகுவின் இறக்கமற்ற வார்த்தைகள் நொடிவிடாமல் மனதை கிழித்துக்கொண்டிருந்தாலும், அழுகையைமறந்து வருடங்கள் பல ஆனதால் மதுவுக்கு கண்ணீரும் கை கொடுக்கவில்லை.....

அசதியில் வந்த தூக்கம், துக்கமாய்தொண்டையையும் , அனைத்தையும் அடைத்தது....ரகுவின் கோபம் புதிதல்ல...

ஆனால் பிரிவென்பது...

அவன் தானே ஆசைப்பட்டான் இப்படி உயரத்துக்கு வரவேண்டுமென்று... M.Com மட்டுமே படித்திருந்த தன்னை, முதல் குழந்தை பிறக்கும்போதே M.B.A.. படிக்கச்செய்து அழகு பார்த்தான்.. பெண்கள் வேலைக்குப்போகணும்என்று விரும்பியவனும் , அதற்கான எல்லா சவுகரியமும் செய்து தந்தவன் ஆரம்பத்தில்...

ஆனால் இவ்வளவு சீக்கிரம் ராமர் அய்யா மதுவின் மேல் உள்ள நம்பிக்கையால் உயர்பதவி கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்...தன் சொந்த மகள் போல் அவளிடம் அனைத்து அலுவல் விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்து சொல்லுவார்..

எஸ்டேட்டுக்கு மதுவுடன் சென்று பழங்குடியினருடன் பழகுவார்.. . தொழலாளர்கள் கவலையை நேரில் கேட்பார்..மதுவும் எளிமை விரும்பி, அவரைப்போல் , அதுவே இருவருக்குள்ளும் நம்பிக்கைஏற்படுத்தியது...

----------------------------------

விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிய மதுவை,

" என்னம்மா ரொம்ப அசதியா.. கொஞ்சம் காஃபி அருந்திவிட்டு படுத்துக்கொள்ளேன்"

" அய்யய்யோ , மன்னிக்கணும் அம்மா...அதிகம் தூங்கிவிட்டேன்.."

" என்னம்மா கண்கள் வீக்கமாயிருக்கு..அதிக அலைச்சல் போல.. சரி தூங்கம்மா.."

" இல்லையம்மா.. பிள்ளைகள் பள்ளி போயாச்சா...சே வெக்கமாயிருக்கு பிள்ளைகளைகூட பாராமல்.."

" அடடே.. நாந்தான் தடுத்தேன்மா..நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம்..."அதற்குள் ரகு

" அம்மா அலுவலகம் செல்கிறேன்" அவளிடம் சொல்லாமல்...இதயமே வெடிப்பதுபோல்....ஏன் ரகு, கொஞ்ச நாள் அம்மாவிடமாவது நடிப்போமே...

அவர்கள் எப்படி இதை தாங்குவார்கள்.. ரகு , நீ என்னைத்தண்டிப்பதாய் எல்லோரையும் , ஏன் உன்னையும் சேர்த்துதண்டிக்கின்றாயே....எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்...சிரித்தமுகத்துடன்..
" அம்மா. உங்க கையால் காஃபி.. பிரமாதம்.. பாருங்க எவ்வளவு ஃபிரஷா ஆயிட்டேன்.."
ஒரு துள்ளலுடன் எழுந்து ஓடும் மதுவை புரியாமல் பார்க்கிறார், விசாலம் அம்மா...குளியலரைக்கு சென்றவள் கண்ணாடியில் முகம் பார்க்கும்போதுதான் தெரிகிறது அததனைசோகமும் முகத்தில் , கண்ணில்....

நேற்று ரகு சொன்னது நினைவுக்கு வருகிறது...

" பிரியாமல் இருக்கணும் என்றால் நீ வேலையைவிட வேண்டும்.. அதற்கு நீ ஒருபோதும்..சம்மதிக்கமாட்டாய்.. ஏனென்றால் என்னைவிட உனக்கு அந்த வேலைதான் முக்கியம்..."கேட்கும்போது சிரிப்புதான் வந்தது...

தூங்குபவனை எழுப்பலாம், துங்குபவன்போல் நடிப்பவனை?..நானே விரும்பினாலும் விடமுடியாத வேலையிது ..உனக்குத்தெரியாதா ரகு...ஒரு காலத்தில், பணத்துக்காக, அப்புரம் பெருமைக்காக, பின், பெரியவரின் அன்புக்காகஎன்று இருந்து, இன்று அவளைமீறிய பொறுப்புகள், ரகசியங்கள் அனைத்தும் அவள் மீது...

அவ்வளவு எளிதல்ல அதனைவிட்டு விலகுவதென்பது..அவளை ஒருகட்டத்தில் பங்குதாரராக நியமிக்க பெரியவர் எடுத்த முயற்சியை தடுக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாள்.. அதிலும் அவர் மனதிலும் கம்பெனியின் மூத்தா ஆடிட்டர்கள் மத்தியிலும் மிகவும் உயர்ந்துவிட்டாள்...மக்களுக்கு இந்த கம்பெனியின் மூலம் சேவைசெய்ய முடிவதே தன் பெரும்பாக்கியமாகக் கருதினாள்..

அதனால் அவளுக்கு அத்தனை வசதிகளையும் கம்பெனியே செய்து தந்தது...இதனோடு ஒன்றிவிட்டதால் தன் உயிர் உள்ளவரை அதனை விட்டு விலகுவதென்பது இயலாத ஒன்று..ரகுவிடம் என்ன பேசினாலும் பிரயோஜனமில்லை.. மேலும் வருத்தமே மிஞ்சும் என்று அமைதிமட்டும்காத்தாள்... அவனுக்கோ அவள் அமைதி கூட அழுத்தமாகத் தோன்றியது....

------------------------------------------------------------------------------------------

காரில் மதுவை இறக்கிவிட்டு, நண்பன் போன் செய்தான் ரகு..

." என்னடா மதுவைப்பற்றியா எல்லா டீடெய்ல்ஸும் ....."

" எல்லாம் விரல் நுனியில்.. ஆனா ஒவ்வொண்ணா தான் தருவேன்.. அதுக்கு விலை அதிகம்.."

" டேய் டேய் என்கிட்டேயெவா.. ம் . உனக்கு இப்ப நல்ல நேரம்..சரி சொல்லு.."
" மது தோழி நிஷாவிடம் பேசிவிட்டேன்.., அப்புரம், நாளை அவர்கள் குடும்ப டாக்டர் எனக்கு பழக்கம்..கோயிலில் அவரை சந்திக்கிறோம் நாம்.."

"ம் . அப்புரம் மதுவுக்கு ஒரு அண்ணன்.. மும்பையில்.. அவரிடமும் பேசச்சொல்லி என் மைத்துனனை அனுப்பியாச்சு.."

" அடேங்கப்பா.. என்னைவிட நீ வேகமா இருக்க.."

" பின்ன இல்லியா.. யான் பெற்ற இன்பம் பெறுக நீயும்...இல்லடா.. நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதித்ததே சந்தோஷம்.."

------------------------------------------------------------------------------------------
டாக்டர் சங்கர் கடவுள் மந்திரத்தை பாட்டாக பாடிக்கொண்டே கோயிலை சுத்தி வருகிறார்...சுந்தரைப்பார்த்துவிடுகிறார்.... அப்போதும் பாட்டைத்தொடர்ந்துகொண்டே கண்களாலும் கைகளாலும்

" இறுங்கோ வாரேன் என்கிறார்... இவர்களும் அவர் பின்னால் செல்ல ரொம்பவே குஷியாகி சத்தமாகப்பாடுகிறார்.

"நமஸ்காரம்.. நான் சங்கர்.. உங்களப்பத்தி சுந்தர் சொல்லியிருக்கிறார்...மிக்க மகிழ்ச்சி..."

"மது ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க அதிர்ஷ்டசாலி...என்ன கல்யாணம் வேண்டாம்னு ஒரே பிடிவாதம்...எல்லாம் இனி நான்பார்த்துக்கிறேன்..உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. கோயில் காரியமெல்லாம் எப்படி."

ரகுவிற்கு பக்தியுண்டு..தலையாட்டிவைத்தான்...அப்ப என்கூட இந்த மந்திரத்தை சொல்லுங்கோ ன்னு அவர் பாட்ட்டுடன் சுத்த ஆரம்பித்துவிட்டார்..

--------------------------------------------------------------------------------------------

No comments: