Monday, February 18, 2008

சோதனை மேல் சோதனை.. அலுவகலகத்தில்
=======================================

இன்று என் அலுவலகத்தில் முக்கியமான நாள்..ஒவ்வொருவரையாக என்
தலைமை அதிகாரி கூப்பிட்டு அனுப்பினார்... அதுதாங்க வருட பணிஆய்வுத்
தீர்ப்பு .(Yearly Performance Evaluation report).
நமக்கு சும்மா கலக்க ஆரம்பிச்சுருச்சு... அறையிலிருந்து வெளியே வருகிறவர்கள்
முகத்தை பார்த்தும் பார்க்காத மாதிரியும் ஒரு லுக் விட்டேன்..


காணோம் . ஒரு எக்ஸ்பிரஷ்னும் காணோம்...சந்தோசமா, வருத்தமா?. ம்கூம்
சரி நம்ப டர்ன் வந்தது.... கூப்பிட்டார்கள்.. நானும் என்னோட
குழும ஜன்னலை மூடிவிட்டு, கொஞ்சம் தண்ணிய குடிச்சுபுட்டு
ரிலக்ஸா போரமாதிரி பிலிம் காட்டிவிட்டு ( மனதுக்குள் ஆயிரம் கேள்வி ..+ பதிலோட)

அதிகாரி அறைக்குள் போனேன்...சிரித்துக்கொண்டே வரவேற்றவர்,
சாரி சாந்தி, லஞ்சுக்குப் பிறகு பார்க்கலாமா என்றார்..அட, இன்னும்
30 நிமிடம் இருக்கின்றதே அதற்கு என்று கேட்க நினைப்பதற்குள்,
இல்ல விலாவாரியாக பேசவேண்டும் என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிபோட்டார். அடப்பாவி, எல்லாருக்கும் 15 நிமிடம்,

என்னிடம் மட்டும் 30 நிமிடத்துக்கு மேலா?. இது நல்லால்ல, தாங்காது
நாட் பேஃர் என்று மனதுக்குள் திட்டினாலும், வாய் நிறைய சிரித்துக்கொண்டு
பரவால்ல பரவால்ல னு பல்லைக்கடித்துக் கொண்டு விடைபெற்றேன்..
நேரே சாப்பிடச்சென்றேன்.. ஒரே டென்ஷன்.. கூல் கூல் னு மனதுக்குள்
சொன்னாலும் மனம் கூலாவா ஆகுது... என்ன ஆர்டர் பண்ணினேன் , என்ன சாப்பிட்டேன்
என்று எனக்கே தெரியாது... இடையில் 2 போன்.. 1 குழந்தையிடமிருந்து..

" ஏன் என்னை ஸ்கூலில் விட்டுட்டுப்போனன்னு" சாரிம்மான்னு சமாதனம்
சொல்லிட்டு வைத்ததும் வூட்டுக்காரர்..அவர் பாட்டைப்படித்து முடித்தார்...
அய்யோ என் பாட்டை கேப்பார் இல்லியா.....
ஒருவழியா சீட்டில் வந்தமர்ந்ததும் , அவரா கூப்பிடட்டும்னு நான் சீன் விட
5 மினிட்ஸ் னு சொல்லிகினே அலங்கார அறைக்கு ( rest room ) சென்றுவிட்டு
15 நிமிடம் கழித்து வருகிறார். ரொம்பதான் பில்டப்...னு மனதில் திட்டிக்கொண்டே,
நான் அசடு வழிய ,சாரி சொல்லிட்டே கம் சாந்தி னு போரார் .

நான் பின் தொடர்கிறேன், பலி ஆடுபோல...
தொடரும்......உள்ளே சென்றதும் நாற்காலி காட்டி உட்காரச்சொன்னார்.. நான் வாயிற்புரம் அருகிலிருக்கும் நாற்காலி, சாரி முக்காலியில் நுனியில் அமர்ந்தேன். ( ரொம்ப மரியாதைதான்..) ரிலக்ஸ் என்கிரார்.. சிரித்து வைத்தேன்( சரிங்கோ, சிக்கிரம் உடைங்கோ சஸ்பென்ஸ னு திட்டிகிட்டே).

ஒரு பேப்பரை நிட்டினார்... பல அடித்தல் திருத்தல்.. பரவால்ல நம்ம மக்கள் ரொம்ப கக்ஷ்டப் பட்டிருக்காங்க நம்மள பத்தி எழுதன்னு புரிஞ்சுது.... அதென்ன அடியில் மார்க்கு தானே?. னு எட்டிப் பார்க்கையில், அவசரமா வாங்கிக்கொண்டார்.. அட ஜீஸஸ்..... ஏதோ 4 என்ற எண் தெரிந்தது... அட அப்போ 40 க்கு மேல் என்று சந்தோஷமாயிடுச்சு.. (" சாந்தீஈஈஈஈஈஈஈஈஈ நீ பாஸாயிட்டேன்னு ஒரு குரல்") கொஞ்சம் முக்காலியில் உள்ளே தள்ளி அமர்ந்தேன் இப்ப ரிலாக்ஸ்டாக...பேச ஆரம்பித்தார். தண்ணி குடித்தார்..

வேணுமான்னு கேட்டார்.. ( தெய்வமே அமிர்தம் குடுத்தாலும் வேண்டாம்) அட சீக்கிரம் அனுப்புங்கையா , இன்னும் மார்க் கன்பர்ம் ஆகலையே...
பத்து கேள்விகள் அதில். ஒவ்வொண்ணும் 1-5 மார்க்...
பத்து கேள்விகளையும் எனக்களிக்கப்பட்ட பதிலையும் நிதானமாக (???)விவரிக்க ஆரம்பித்தார்... ( யாருக்குங்க வேணும்???) கண்ணை மட்டுமல்ல பல்லையும் கட்டுதே!!!!.. ஹார்ட் பீட் எக்குத்தப்பா அடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது...

சிலவற்றிற்கு 3 மார்க். அதுக்கு எனக்கு ரொம்ப ஆறுதல் வேற சொல்ரார்.. ( நான் கேட்டேனா?. இல்ல நான் கேட்டேனா?) இதுக்கு எல்லாருக்குமே 3 மார்க் தான் என்று.. எவ்வளவு நேரம்தான் அசடு வழிய.. நான் பரவால்ல பரவால்லனு சொன்னாலும் விடமாட்டேங்கிறார்..

ஒருவழியா 42 மார்க்.. எனக்கு இப்ப உண்மையிலேயே தூக்கி வாரிப்போடுது.... அய்யோ என்ன இது... நான் முழிக்க, அவர் வியக்க , என் மனசாட்சி ஒத்துக்கொள்ள மறுக்கின்றது... கஷ்டம் வந்தாலும் தகுதியில்லா இன்பம் வந்தாலும் இப்டித்தான்..
ஒருவேளை
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " னு
பழிவாங்கிட்டாங்களோ னு எனகிப்ப நாணமா இருக்கு...

ஏதோ என் அத்ர்ஷ்டம் இந்த வருடம் கஸ்டம்ருகிட்ட அவ்ளோ கஸ்டமில்ல..
கடந்த 4 மாதமா எங்க வேலை செஞ்சேன்.. அப்பப்ப இரவு நேர வேலைக்கு மட்டும் மாட்டேன்னு சொல்லாம போவேன்.. அதுக்காக இப்படியா..

புலம்பித் தவிக்கிரேன் மனதுக்குள்...அவரோ அடுத்த புராஜக்ட் பத்தி விவரித்துகொண்டே போகிறார்...உடனே சபதம் எடுக்கிரேன்." சே , இந்த வருடம் என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி இந்த மார்க்குகளை உண்மை என நிரூபிப்பேன்.."அவர் சொல்கிறார், நாளை நம் முதலாளி மீட்டிங் வைத்துள்ளார்.. நீ விரும்பும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்று... கேள்வியா எனக்கா.. ஹாஹா. என்ன நினைத்தார்கள் என்னை..

அவ்வளவு தைரியசாலியா நான்?
"கேள்வி ஒண்ணுமில்லை நான் செல்லலாமா "னு ஓட ரெடியா இருக்கும் போது சிட் சிட் , புரமோஷன் என்று ஸ்லோமோஷனில் சொல்கிறார்...

அதுதான் வேண்டாம்னு இருக்கேனே ( ஊர் சுற்ற முடியாமல்...+ வேலைப்பழு அதிகம்.) . எனக்கு எந்த தனிப்பட்ட தேவையும் இல்லை சார் னு ஆளைவிட்டாப் போதும்னு ஓடி வந்துட்டேன் நாரதர் மாதிரி....சீட்டுக்கு வந்தும் படபடப்பு அடங்கலை...
போட்டேன் வூட்டுக்காரருக்கு போனை... வருட ஆய்வுல கவுத்துட்டாங்க ன்னேன். அப்டியா அதான் தெரிந்த விசயமே ன்னார். முழு விவரம் கேட்டபின், பிளீஸ் எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமான்னு என்கிட்டேயே கேக்கிறார்...என்ன தைரியம் ???

வெச்சுட்டேன் போனை.. என் இமேஜ் என்னாரது....
ஒண்ணுமே புரியல உலகத்துல....என்னவோ நடக்குது......மர்மமாயிருக்குது...
அதனால் இந்த வருடம் ஒழுங்கா வேலை செய்யலாம்னு இருக்கேன்.....
யாரங்கே சிரிக்கிரது??????????