Tuesday, August 25, 2009

குழந்தையின் கும்மி.தொடர்ச்சி..













அம்மா
, அப்பா கூட ஒத்தையா ரெட்டையா மாதிரி கைக்குள் சின்ன குட்டி ரப்பர் பந்தை
ஒளித்து வைத்துக்கொண்டு விளையாடுவான்..

நாம கரீட்டா சொல்லணும் எந்த கைக்குள் பந்து இருக்குன்னு..
தப்பா சொல்லிட்டா ஒரே ஜாலிதான் போங்க...

இல்லையே னு சொல்லி இன்னொரு கையை திறப்பார்..
நம்ம ஆச்சர்யப்படணும், அதிசயப்படணும் , ணும்..ணும்...

ஆனா இதெல்லாம் அப்பாக்கு மட்டும் தான்..

என் முன்னால கையை நீட்டி காண்பிக்கும்போதே நான் , " பிங்கி பிங்கி பாங்கி..." சொல்ல ஆரம்பிப்பேன் ராகத்தோட..

சொல்லி முடித்தும் என்னால எளிதா முடிவெடுக்க முடியாம திணறுவேனாம்..பயத்தோட..


அந்த பிஞ்சு மனசு கேக்குமா.?.. அம்மா தோக்கலாமா..?


பந்து இருக்கும் கையை மட்டும் என் விரல் தொடும்படி வெகு அருகில் நீட்டுவார்..
நான் அதை சரியா தொடணும்.

தொட்டதும் ஒரே குஷி...
ஹே.. அம்மா சரியா சொல்லிட்டாங்க.. னு..

நான் வேணுமுன்னே தப்பா தொட்டாலோ , உடனே முகத்தை சோகமா வெச்சுக்கணும்.


அதுக்கு வருகிற ஆறுதல் இருக்கே...அப்பப்பா..
"

பரவால்ல மா.. நெக்ஸ்ட் டைம் நீங்கதான் வின்.."னு கன்னத்தை வருடி கேட்காமலே முத்தம் கொடுத்து..


இதுக்காகவே தோத்து போகலாம்தான்..



பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவோ , " நான் தோற்றபோது எனக்கு மட்டும் முத்தம் தரல நீ.?"

" பாவம் அம்மா.. அவங்க கேர்ல்.. கேர்ல்ஸ் ஆர் ஸாப்ட்.." னு சொல்லி தப்பிச்சுடுவார்..


இத்தனைக்கும் அந்த பந்து விரல்களுக்கிடையில், என்னைப்பார் என் அழகைப்பார் னு பளீச் கலரில் மின்னிக்கொண்டிருக்கும்...என்பதை நான் சொல்லித்தான் தெரியணுமா?..

அடுத்து தட்டாமாலை சுற்றணும் ..அலுவல் விட்டு வீடு நுழைந்ததும்..
ஒருவாட்டி சுற்றி முடிந்ததுமே , யார் யார் எங்க இருக்கா னு தெரியாது..வீடே சுற்றிக்கொண்டிருக்கும்..

ஆனா சின்னவர் அலட்டிக்கொள்ளாமல், இன்னொருவாட்டி ன்னு சொல்லி சொல்லி 10 முறையாவது சுற்ற வெச்சுட்டு , " வேண்டாம் தலை சுற்றும் " னு சொன்னா , " இல்ல பரவால்ல , ஒண்ணும் செய்யலை" னு சொன்னா என்ன செய்ய..

தலை அவருக்கா சுற்றும் நமக்குல்லா சுற்றும்...அத பத்தி அவருக்கு என்ன கவலை .. அதானே?..

---------------------------------------------


ஷாப்பிங் சென்ற போது ஒவ்வொரு ரேக் இடையில் சென்று அடிக்கடி காணாமல் போவான்..


ஆனா நம்ம கிட்ட வந்து ,
" ஏன் டேனியை காணாம போட்டீங்க..?" னு அதட்டல்..

" காணாம போடுறதுக்கு நீ என்ன சாமானா?.. எங்க காணாம போய்டீங்க னு சொல்லணும் . சரியா.?"


----------------------------------------------


" அப்பா உன்னை பேர் சொல்லிதானே கூப்பிடுறாங்க..?"
" ஆமா." நான்.. "
அப்ப நீங்க ஏன் அப்பாவை பேர் சொல்லி கூப்பிடல.?"


" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.." நல்ல கேள்வி...
---------------------------------------------

காரில் சென்ற போது ஒரு பூனை அடிபட்டு குற்றுயிராய் கிடந்தது...
நான் பார்த்துவிட்டு சட்டென்று அடுத்த லேனுக்கு மாறினேன்
அலறி..பின்னால் வந்த கார் முழுதுமாய் ஏறி சென்றது..

அதை முன்சீட்டில் உட்கார்ந்து பார்த்தவனுக்கு தாங்க முடியாத கோபமும் சோகமும்..
எத்தனையோ பேச்சு கொடுத்து மாற்ற பார்த்தாலும் முடியவில்லை.

" ஏன் அந்த பூனை அடிபட்டது?.."


" அது ஒடி விளையாடும்போது ரோட்டுக்கு வந்தது..தெரியாமல்."


" அந்த கார் ஓட்டின ஆள் லூஸா..?"

" அப்படியெல்லாம் பேசக்கூடாது மா. அது ஏன் குறுக்கே வந்தது..?"

" அவர் பிரேக் போடலாமே..?"
"ம்.."

" ஏன் செத்தது..?.. இப்ப என்னாகும் செத்ததும்..? "


" பரவால்ல அது செத்ததும் ஜீஸஸ் கிட்ட போயிருக்கும்...அவர் பாத்துப்பார் இனி.."

" எனக்கு ஒரு செத்த புஸி கேட் வாங்கித்தாங்க.."
" அட .. அதெப்படி..." கொஞ்ச நேர யோசனைக்குப்பின் ,

" ம்.சரி அலுவலில் சொல்லி வைக்கிறேன் .. வந்ததும் வாங்கித்தருகிறேன்.." இப்ப தினமும் கேட்கும் கேள்வி

" செத்த புஸி கேட் எப்ப வரும்..?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.."

*********************************தொடரும்*******************************************

1 comment:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பாப்பா பாஷையில் பாப்பா விளையாட்டு
சுகமான அனுபவம்
சாலையில் அடி பட்டு சிதைந்து கொண்டு இருக்கும் சின்ன சின்ன
மிருகங்களை பல நாள் அனுதாபத்தோடு பார்த்து நகர்ந்ததுண்டு
அதை அக்கறையோடு ரோட்டின் ஓரம் இழுத்து போடுபவர்களை சின்ன புன்சிரிப்போடு பார்த்து சென்றதுண்டு
அது சரி அது என்ன அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அன்புடன்