Friday, August 28, 2009

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்....பாகம் 1

அன்று ஒரு பெரிய கடைக்கு சென்ற போது கவனித்தேன்

" பேபி , இதை எடுக்காதே .."

" பேபி , உனக்கு எத்தனை முறை சொல்வது?"

" பேபி....சொன்ன பேச்சு கேள்.."

" பேபி.................."

இப்படியாக அந்த அன்னை மிக அதிக தடவை குழந்தையை கண்டித்து கொண்டிருந்தாள்.

குழந்தையோ அதை சட்டையே செய்யாது தன் சேட்டையை தொடருது..

குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய சவால் ஒன்றுமில்லை..

சில திட்டங்கள், சில கண்டிப்புகள் ,சில பாராட்டுகள் , சில மணி நேரம் போதுமானவை..

பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சிறிது நேரம் அலட்சியப்படுத்தினால் போதும்..

நாம் செய்யாதே என்ற செயலை மீண்டும் மீண்டும் செய்வார்களாயின் ,

" இதை அடுத்த முறை நீ செய்தால் நீ தனியாக நிற்க வைக்கப்படுவாய், அல்லது ஏதாவது சின்ன

தண்டனை சிறிது நேரமாவது ( 10 நிமிடம் - அதிகமாய் 30 நிமிடம் வயதை பொறுத்து ) கொடுக்கலாம்

அந்த தண்டனை எப்படி இருக்கணும்.?..பேச்சில் ஏதும் திட்டாமல், செயலில் திட்டவட்டமாக இருப்பாதாக காண்பிக்கணும்..

ஒருவேளை குழந்தை மின்சார தொடர்புடைய சாதனங்களோடு விளையாடுது என வைப்போம்.

நாம் சொல்ல சொல்ல ஆர்வம்தான் கூடும் குழந்தைக்கு..

அவர்களுக்கு அதனால் வரப்போகும் பாதிப்பு ஒருபோதும் விளங்குவதில்லை..அனுபவித்ததில்
லை..

அந்த நேரம் அவர்கள் தொடும்போது , அதிகமாய் பேசாமல்,

" நான் சொல்லியபடி நீ கேட்கவில்லை அதனால் நீ இப்ப தனியாக இருக்கவேண்டிய சமயம் " என மட்டும் அழுத்தம் திருத்தமாக

குழந்தையின் கண்ணை பார்த்து சொல்லி குழந்தைக்கு தண்டனை தரவேண்டும்.. நேரத்தையும் சொல்லிடலாம் ஒரு புன்னகையோடே..

அடம்பிடிக்கும் குழந்தையும் பெற்றோரின் கண்டிப்பை புரிந்துகொள்ளும்..தண்டனை நேரம் முடிந்ததும் சரியாக விடுவிக்கணும்..

ஒரே பொருளுக்கு இரு குழந்தை சண்டை போடுமானால் , யார் பக்கம் நியாயம் என்றெல்லாம் யொசிக்க வேண்டாம் ,

அந்த பொருளை சிரித்துக்கொண்டே வாங்கி சென்றிடணும்..

இப்ப குழந்தை புரிவார் , நாம் சண்டையிடாமலாவது விளையாடி இருக்கலாம் , அம்மா வரை பிரச்னை இனி கொண்டு செல்லக்கூடாது என.

அல்லது இருவரும் சமாதானமாய் விளையாடுவதாய் சொன்னால் மீண்டும் தரலாம்..

கத்தும் குழந்தையை கண்ணை பார்த்துக்கொண்டே பொறுமையாய் காதை மூடிக்கணும்..

குழந்தை கத்துவதை நிறுத்தினால் மட்டுமே அன்னை கவனிப்பாள் என புரியணும் குழந்தைக்கு...

அடிப்பதோ, அன்னை மேலும் கத்துவதோ எடுபடாது வீணும்..தவிர்த்தலே நன்று..

இதே போல் வெளியில் செல்லும் போதோ, காரில் செல்லும்போதோ

தேவையற்ற நடவடிக்கை செய்தால் அதற்கான தண்டனை எது எனவும், நல்லபடியாக நடந்தால் அதற்கான பரிசு

என்ன எனவும் முன்கூட்டியே அறிவித்திடணும்..

தண்டனை கொடுக்க மறந்தாலும் மறக்கலாம், ஆனால் ஒருபோதும் பரிசை, பாராட்டை கொடுக்க மறந்துவிடாதீர்கள்..

அப்படியே மறந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டிடுங்கள் குழந்தையிடம்..

நாம் எப்படி நம்மிடம் குழந்தைகள் நடக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் அவர்களிடம் நடந்துகொள்ளணும்

ஈகோ ஏதுமின்றி.. எப்போதும் மன்னிப்பும் , தயவுசெய்து என்றும் சொல்ல பழகிக்கணும்..

சின்ன சின்ன உதவிகள் குழந்தை செய்யும்போது நன்றி சொல்லி அவர்களை பாராட்டுவது , கொஞ்சுவது

அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..அதுவே பெற்றோரின் கண்டிப்பான சமயத்துக்கும் மதிப்பளிக்கும்.

அடுத்து நாம் சொல்ல வேண்டிய பழக்கவழக்கத்தை கதை மூலம் எப்படி சொல்லலாம் என பார்ப்போம்..

******************************தொடரும் *********************

1 comment: