மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2
ஒருவழியாக அந்த நண்பர் முன்னால் பைக்கில் செல்ல நாங்கள் பின்தொடர்ந்தோம்..
பின்தொடர்வது எம்புட்டு ரிஸ்க் அதுவும் ஹைவேயில்.?
அவர் பாட்டுக்கு சிக்னல் கிராஸ் பண்ணிவிட்டால் அவரை தேடோ தேடுன்னு ஆளாளுக்கு
ஒட்டகச்சிவிங்கி போல கழுத்தை நீட்டி " அதோ அவர்தான் நீல சட்டை.."
" இல்லை இங்கே போறார் " னு கன்னா பின்னான்னு லேன் மாறி மன்னிப்பு கேட்டு அசடு வழிந்து
ஒருவழியா போனால் நாங்க ஏற்கனவே சென்றுள்ள ஒரு பெரிய விளையாட்டு மால் பக்கம்..
இத மொதல்லே சொல்லிருக்கப்டாதா?.. இங்க சந்திச்சுருக்கலாமே..
அத தாண்டி இப்ப சிட்டிக்கு வெளியே சென்றார் சுமார் 10 கிமீ..
அட இதுதான் நான் ஓட்டுனர் உரிமம் வாங்கிய இடம் .. இதுவும் எனக்கு தெரியுமே...ப்ச்ச்...
அப்புரம் சின்ன சின்ன சந்துக்குள் புகுந்து ஒரு கடை முன் நிப்பாட்டினார்.. மீனுக்கான உணவு வாங்க...
ஒருவழியாக அந்த மீன் பிடிக்கும் இடம் அடைந்தோம்...
ஆங்காங்கே உப்பளம் போல தண்ணீர் தேக்கி வைத்து மீன் வளர்க்கிறார்கள் .. பெரிய பாத்தி கட்டி, தென்னை மர நிழலில் குடில் ( குடிசை )
போட்டுள்ளார்கள்.. அங்கே குடும்பம் குடும்பமாய் வந்து அமர்ந்து மீன் பிடிக்கின்றார்கள்..பெரிய பெரிய கார்களில் வந்து..
பார்த்ததும் ஆச்சர்யம்.. கார் பார்க் செய்ய இடமில்லாத அளவுக்கு கார்கள்... அட இப்படி கூட பொழுது போக்குவார்களா என்ன?..
ஒவ்வொரு தோட்டத்திலும் ஸ்பீக்கர் வைத்து மென்மையான இசையோடு பாடல்கள் வேறு..
தென்னை தோப்பில் அடிக்கும் காற்றுக்கு படுத்தால் தூக்கம் வந்துடும் .. அவ்வளவு சுகம்..( ஐயா கொஞ்சம் படுக்கலாம் னு பார்த்தாரே.. விடல்லையே..)
வரப்போரம் பல பூச்செடிகள், கத்திரி , மிளகாய் கீரை என பாத்தி போட்டிருந்தார்கள் வேறு..
முதலில் நுழையும்போது இவர் கடிந்து கொண்டார்தான்.. ஏன் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரணுமா என..
நாம் வளராத சூழ்நிலையா...?வாய்க்கால், வரப்பு என...
அதுக்கில்லை , இவர்களுக்கு புதிதாக பழகும்போது ஒத்துக்கொள்ளாதே என்ற கவலை.. ( சொன்னதுபோல்
வீடு வந்தததுமே தொடர்ந்து இருவருக்கும் வயற்று வலி..மருத்துவமனை, வாந்தி..இத்யாதி.)
தன்னுடைய உபகரணங்களை எடுத்து வைத்து அவர்கள் இருவரும் ஒரு குடிலில் செட்டில் ஆனார்கள்..
நாங்களும் அமர்ந்தோம்.. ஒரு நடை போய்விட்டு வந்து..
ஆனா எல்லோரும் ( சுமார் 50 பேர் ) பொறுமையா ஏதும் பேசாமல் மீன் பிடிப்பதை
பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருது.. என்னாலையும் டேனியாலும் இப்படி சும்மா உட்காரெல்லாம் முடியாதே..
பெரியவன் புரிந்துகொண்டான்.. " அம்மா நீங்க அந்த மால் க்கு தம்பியை கூட்டி சென்று விளையாட வையுங்கள்..
சாயங்காலமா வந்து என்னை கூட்டி செல்லுங்கள் என்று..
எங்களுக்கு பயம். அவனை தனியே அந்த ஆளோடு விட்டு செல்ல..
நல்ல அன்பானவராய் தான் தெரியுது.. பொதுவாகவே தாய் மக்கள் குழந்தைகளை
மிக நேசிப்பவர்கள்.. இருப்பினும் நாமும் கவனமாய் இருக்கணுமே..
தொலைபேசியை கொடுத்துவிட்டு பாதி மனதாக வெளி வந்தோம்..அடிக்கடி தொலைபேசச்சொல்லி..
அங்கேயே உணவு விடுதியும் இருக்கு..அதனால் உணவு பிரச்னையில்லை..
கிளம்பி வரும்போது அவர் சொன்னார் அருகில் ஒரு குரங்கு தோப்பு இருப்பதாக..
அதை பார்த்துவிட்டு செல்ல கிளம்பினோம்..
அப்பதான் முருங்கை மரம் ரோட்டோரமாய் கண்ணில் பட்டது...
மின்னலைக்கண்ட பிரகாசம்.. அடடா.. எத்தனை நாளாச்சு முருங்கை கீரை சாப்பிட்டு...
ஆனா இது யாருக்கு சொந்தம்..? ஆள் அரவமே இல்லையே.. ரோட்டில் இருக்கு.
பறிக்கலாமா கூடாதா என பல கேள்விகள்.. ஆனா கண்டிப்பா பறிக்கணும்னு மனம் சொல்லுது..
இங்கு முருங்கை கீரை சாப்பிட மாட்டார்கள்.. மார்க்கெட்டிலும் கிடைக்காது...
எனக்கோ எங்க வீட்டு மரம் நியாபகத்துக்கு வந்துவிட்டது.. அதுவும் அம்மா கை பக்குவ சமையல் வாசனையும்..
விட முடியுமா?.. வண்டியை ஓரமாக நிப்பாட்டி அக்காம் பக்கம் பார்த்தா ஒருவரையும் காணோம்..
சரி அப்படியே வந்தாலும் பணம் தரலாம் என முடிவோடு பறிக்க சொன்னேன்..
ஒரு ஐஸ் வண்டி வந்தது அவனிடம் கேட்டோம்.. பரிச்சுக்கோங்க என்றான்..
( அதனால அவன்கிட்ட நன்றியோடு ஐஸ் வாங்க வேண்டியதா போச்சு பாருங்க..)
அவரோ ஒரு சின்ன கொப்பை பறித்துவிட்டு சட்டென்று காரி ஏறி உட்கார.,
" அட இம்புட்டுதானா ?"
" பத்தாதா?. நீ உனக்கு மட்டும் கேட்கிறாய இல்லை உன் தோழிகளுக்குமா..?"
" அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கூட கொஞ்சம் பறிச்சா என்னவாம்..?"
" ம். என்னை மாட்டிவிடாம இருக்க மாட்ட.. " னு சொன்னாலும், ஏதோ வைர நகையே வாங்கி தருவது போல்
ரொம்ப பெருமையா பறிச்சுட்டார்..கொஞ்சம் அகத்து கீரையும் கிடைத்தது..
முருங்கை காயெல்லாம் முற்றி போய் இருக்க பரிதாபமாக பார்த்தேன்..
பேருக்கு 4 காய் மட்டும் கிடைத்தது..:(
அதை முடித்து குரங்கு பார்க்க சென்றோம்..அதோடு விளையாடிவிட்டு
மால் போய் குழந்தையை விளையாட விட்டு, உணவருந்திவிட்டு .. ( இப்ப தூக்கம் வருது..)
இதுல இடையில் அரைமணிக்கொருமுறை ரன்னிங் கமெண்ட்ரியாய் மீன் வந்துச்சா, னு விசாரிப்பு வேற..
சரியாக மணி 4 க்கு திரும்பி வந்தோம்..அவர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு.
மகன் மகிழ்ச்சியா சொன்னார் " அம்மா 3 மீன் பிடிச்சேன்" னு..
( யார் அதிகமா மீன் பிடிக்காங்காளோ அவர்களுக்கு பரிசும் உண்டாம்.. )
அப்பாடா வந்த வேலை நல்லபடியா முடிந்ததே..
இல்லாவிட்டால் அடுத்த நாட்டில் மீன் கிடைக்கும் அங்கே போகலாம்னு ஒரு புது பிளான் போடாமல் இருந்தானே..
மீனையும் அழகாக ஒரு பையில் நீரோடு போட்டு தந்தார்கள்..
கொடுத்த காசுக்கு ஏதோ..
அவன் மகிழ்ச்சியா அதை உள்ளே வைக்க போனான்..
நான் கத்தினேன்.." அதையேன் கொண்டு வார..? அத அவர்கிட்டயே கொடுத்திடு." னு
அவனுக்கு அதிர்ச்சி..
அட அது என்ன நீரோ அதெல்லாம் வேண்டாம்னு விளக்கம் அளித்ததும் ஏற்றான்.
ஆனாலும் கொஞ்சம் வருத்தம் அவனுக்கு..
திரும்ப வரும்போதும் முருங்கை கண்ணில் பட்டதே.. பக்கத்து வீட்டு
தோழிக்கு" என வாய் எடுப்பதற்குள் மகன் அட்வைஸ் ஆரம்பித்துவிட்டான்..
" அம்மா தப்பு " என..
ஆசையை அடக்கிக்கொண்டு , சோகமா ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு
திரும்பினோம்..
அடுத்த 2 நாள் அகத்து கீரை சமையல்..முருங்கைக்காய் சாம்பாரோடு.
ஆனா முருங்கை கீரை வரவே இல்லை.. 4 வது நாள் கேட்டால்,
" பாபி அந்த கீரை வாடி விட்டது தூக்கி போட்டேன் " னு வேலையாள் குண்டை போட்டா பாருங்க..
அதிர்ச்சியில் என் முகத்தை பார்த்தவர்,
" சரி விடு நான் அலுவலில் இருந்து வரும்போது ஒரு இடத்தில் பார்த்தேன் எப்படியாவது கேட்டு வாங்கி வருகிறேன்"
என
.
தோழிக்கு போன் பேசினால் ,
" கவலை படாதீங்க நான் ஒரு ரகசிய இடம் பார்த்து வெச்சுருக்கேன் .
உங்களை கூட்டி செல்கிறேன் . ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க " என
முருங்கைக்கு வந்த மவுசைப்பார்த்தீங்களா.?
எப்படியோ ஒரு வழியா மீன் பிடிக்க கத்துகிட்டான்...
இனி படிக்காட்டி எனக்கு திட்ட ஒரு வாக்கியம் கிடைச்சாச்சு..
மாடு மேய்க்க போக சொல்லாட்டியும் , நீ மீன் பிடிக்க தான் லாயக்குன்னு திட்டலாம் பாருங்க..
ஆனா ஒரு நாள் முழுதும் பொறுமையாய் தவம் போல மீன் பிடிப்பதை பார்ப்பதே ஆச்சர்யமாய் தான் இருக்கு.. நானெல்லாம்.. ம்ஹூம் .விடு ஜூட்...
Tuesday, August 25, 2009
மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment