நகர்ப்புற வாழ்க்கையில் எவ்வளவு இழக்கிறோம் என்பது கிராமப்புரத்தில் வாழ்ந்தவர்களுக்கே புரியும்..
விசாலமான தெருக்கள் , அருகிலேயே வாய்க்கால் , அதைத்தாண்டி வயல்வெளி , தோப்புகள் , என இயற்கையோடு குளிர்ச்சியாய் ஒன்றி வாழ்ந்தவருக்கு செயற்கையாய் கான்கிரீட் காடுகளின் வெப்பத்தில் , குழந்தை வளர்ப்பென்பது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது..
இங்கு வீட்டை ஒட்டியே பிரமாண்டமான சவ் பிரயா ( Chao-phraya )ஆறு அமைதியாக கப்பல்களையும் சுமந்து கொண்டு அசடுகள் ஏதுமின்றி ரம்மியமாக பாய்ந்தோடுவதை பார்ப்பதே மிகச்சிறந்த பொழுதுபோக்கு..
எனக்கு இரவு வந்தால் அதன் மீது பட்டுத்தெறிக்கும் விளக்கொளிகள் , நிலவு ஒரு சங்கீதம்..
பார்க்கும்போதே அதில் குதித்து நீந்தி அக்கறை சென்றிடமாட்டோமா என ஆவல் பிறக்கும்.
குட்டி குட்டி விசைப்படகுகள் மட்டுமே சீறிக்கொண்டு செல்வதும் , சில பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் கொஞ்சம் பெரிய படகுகளும் கப்பலில் வந்து சரக்குகள் இறக்கி வைக்கும் குடோன்களும் , ஆற்றின் அக்கறையில் இருந்து பாடலோடு எமை எழுப்பும் புத்த கோவில்களும் ஏதோ கனவு போல் தோன்றுவதோடு இக்காட்சியை பார்க்கும் ஒவ்வோரு பொழுதும் மறக்காது நன்றி செலுத்த தோணும் படைத்தவனுக்கு.
சரி ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டால் , ? இப்படி ஒரு ஆறு பக்கம் இருக்கும்போது யாருக்குத்தான் மீன் பிடிக்க ஆசை வராது..?
வரக்கூடாதே என நான் தவித்திருந்த வேளையில் வந்துவிட்டது அந்த மீன்பிடிக்கும் கம்புகள் கடையில் மகன் கண்ணில் பட்டதுமே..
தொடர்ந்து 2 வாரம் தொணதொணப்புகள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், மிரட்டல்கள், பேசாவிரதங்கள்... அப்பப்பா.. கணவர் பதில் எப்போதும் ரெடியாக "நோ" :)) ஒருவழியாக வாங்கியாகிவிட்டது..
வீடு வந்து பார்த்ததும் தான் அதன் கைப்பிடி உடைந்து போயிருப்பது தெரிந்தது..( அப்பாகிட்ட சொல்லலையே..) சரி என தாமே வேறொரு கடைக்கு சென்று தனியே வாங்கி வருவதாக சொன்னார் மகன்..
எங்குமே தனியாக ( பள்ளி தவிர ) செல்லத்துணியாதவன் மீன் பிடிக்க என்றதும் தனியாக பஸ் ஏறி செல்வதென்றால்..?.
பயத்தோடு அனுப்பி வைத்தேன் .மகிழ்வோடு வாங்கியும் வந்தாச்சு... சாயங்காலமாய் அருகில் உள்ள கறைக்கு சென்று மீன்பிடிப்பவரோடு இவனும் உட்கார்ந்துகொண்டான்..
முதலில் அப்பாவை மட்டும் அழைத்து சென்றான்.. 3 மணி நேரம் செலவிட்டும் ஒரு மீனும் மாட்டவில்லை.
ஆனால் அதற்குள் அங்குள்ளவர்களோடு நட்பாகி பல விஷயம் தெரிந்துகொண்டானாம்.. ( பின்ன , முள்ளில் புழுவை மாட்ட ஆள் வேண்டாமா?.. அதை தொடமாட்டாராம்..:).
அப்பா தான் செய்யணும் )
இப்படியே அடுத்த 3 நாளும் சென்றும் பொறுமையாக நாள் முடுதும் அமர்ந்தும் மீன் கிடைத்தபாடில்லை..
நாங்களும் ஒரு நாள் இரவு நிலா வெளிச்சத்தில் க்உடும்பத்தோடு சென்றோம்.. ம்ஹூம். எல்லோருக்கும் கிடைக்குது ஒன்றோ இரண்டோ ஆனால் இவனுக்கு மட்டும் கிட்டவில்லை..
அதற்குள் அங்குள்ள ஒருவர் இவன் மேல் பரிதாபம் கொண்டு நகர் விட்டு வெளியே ஓரிடத்தில் மீன் பிடிக்க என்றே பொழுதுபோக்க பல இடங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதாகவும் தானே அழைத்து செல்வதாகவும் சொல்ல அடுத்த கெஞ்சல் ஆரம்பமானது..
பள்ளி விடுமுறை தானே என நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் மொத்தமாக இப்படி ஈடுபடுவது ஏற்கமுடியவில்லைதான். அதற்குள் கூகிளில் தேடி தாய்லாந்தில் மீன் பிடிக்கும் இடங்களையும் வித்தைகளையும் கற்றதுதான் மிச்சம்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே பேச்சு மீன் பற்றியதாகத்தான் இருக்கும். ( அடேய் நெல்லைக்கு போகும்போது மாமா , மச்சான்ஸ் கிட்ட சொல்லப்டாதா ஜாலியா செய்வாங்களே, என்னை ஏண்டாப்பா படுத்துற..? )
என் வாயில் இருந்து சரி என சம்மதம் சொல்லும்வரை என்னை ஒரு வேலை செய்யவிடாமல் பின் தொடர்கிறான்.எல்லா அறைக்கும். இதுக்கு தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு.. ( அம்மா , சிங்கு பாவம் மா , பிளீஸ் மா- தம்பியார்.)
ஒருவழியா கடந்த ஞாயிறன்று சர்ச்சுக்கு கூட போகாமல் அந்த நண்பர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம் அவரை , மீன் பிடிக்கும் இடத்துக்கு..
-------------------தொடரும்..--
No comments:
Post a Comment