பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.
மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..
மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.
உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்..
Friday, August 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அப்பாவை வையாதே,
அவர் களைப்பில்!
அண்ணாவைக் கடியாதே,
அனுபவிக்கட்டும் வாலிபம்!!
வந்தும் வராததுமாய் ஏன்,
நீ என் எசமானி என்பதாலா?
//பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.//
கலைகள் பெண்ணிற்கு மட்டுமல்ல
//மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..//
இதன் இரண்டாம் பாகம் தவறு. கணவன் பேச்சை கேள் என்பதின் பொருள். அவர் சரியானதை சொல்வார் என்ற சிந்தனையில் தான். வயதிற்கு மூத்தவர்களை திருமணம் செய்து கொடுப்பதின் நோக்கம் இது தான்.
//மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.//
அதே போல் மாப்பிள்ளையும் தனது மனைவிக்கு பிடித்தமாதிரி நடந்துகொள்ள வேண்டும்.
//உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்//
ஒருவருக்கொருவர் ரசிக்கத் துவங்கி விட்டால் இருவருக்குள்ளும் என்றும் இல்லை சண்டை.
அன்புடன் என் சுரேஷ்
Post a Comment