


ஆண்மகனுக்கோர் கவிதை ...
அம்மா வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு
அருமையாய் பேசிவிட்டு என்னிடம் முகம் சுழிப்பு.
அக்கா வீட்டு விசேஷம் கூடமாட ஒத்தாசை.
எப்படியாவது தடுத்துவிட போடுகிறாய் பெரும் ஓசை.
மருத்துவமனையில் பக்கத்து வீட்டுக்கு சாப்பாடு.
உன்னைத்தவிர ஊராரைக்கவனிப்பதாய் கூப்பாடு.
உன் அக்கா குழந்தைக்குதானே காதுகுத்து
அரைப்பவுன் போதும் அதுக்கும் மேலென்றால் வீண் கத்து..
வேலைதேடும் கொழுந்தனுக்கு உபசரித்து கவனிப்பு
வேண்டாதவனாயிட்டேனா என ஒரு வீராப்பு...
எல்லாமே ஆண்சிங்கம், தானே முக்கியம் என்ற கர்வம்..
இருந்தாலும் காரியம் சாதிக்கிறேனே நீதான் என் தங்கம்...
No comments:
Post a Comment